ஏப்ரல் 18 தவறாமல் இந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்போம் No ratings yet.

ஏப்ரல் 18 தவறாமல் இந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்போம்

திருச்சிற்றம்பலம்.
 
உருவம் பெயர் இல்லாத எட்டு குணங்களை உடைய பரம்பொருளாகிய இறைவன், உயிர்களுக்காக வேண்டி பெரும் கருணை கொண்டு, உயிர்கள் கண்களால் கண்டு உணர்ந்திட பல்வேறு உருவங்கள் எடுத்து நமக்காக அருள் புரிகிறான். இந்த உருவங்களின் மூலம், உருவமற்ற இறைவனை உணர்வதற்க்கே நாம் கோவில்கள் கட்டி தொழுகின்றோம். கோவில்கள் நம் சமயத்தின் மையமான முக்கிய பொருளாகத் திகழ்கிறது. நம்மிடம் உள்ள பழம் பெரும் கோவில்கள் போல உலகிலேயே இன்று வேறெங்குமே இல்லை. இத்தகைய கோவில்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
 
கடந்த கால வரலாற்றின் போக்கினால் இன்று நம் புராதண கோவில்களும் முக்கிய கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பின் கீழ் தமிழக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறாயின், கோவில்களை நிர்வாகம் செய்பவர்கள் இந்து உணர்வு உள்ளவர்களாகவும், இந்து சமயத்தின் வேத ஆகமங்களை நன்கு அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. நாம் அவற்றை இன்னொரு கட்டுரையில் ஆராய்வோம். ஆனால், இந்த கோவில்கள் இன்று தமிழக அரசினால் நிர்வகிக்கப்படுவதால், இந்து உணர்வுள்ளவர்களும் இந்து சமயங்களை ஆதரிப்பவர்களுமே இதன் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். மத்தியில் ஆளும் நிர்வாகமும் தமிழக அரசும் கோவில்களைப் பாதுகாப்பதில் மிகவும் உன்ன பொறுப்புள்ள அதிகாரமுள்ள அமைப்பாக இருக்கிறது. அவ்வகையிலே, வரும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து உணர்வுள்ள அரசாங்கத்தை நாம் தேர்ந்தெடுக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
 
இந்து உணர்வற்ற அரசு அமைவதால், கோவில்கள் பராமரிப்பில் மெத்தனம், கோவில்களை வியாபாரக் கூடம் போலவும், விளையாட்டு மைதானங்களாகவும், கார் பார்க்கிங், ஆட்டோ ஸ்டாண்டு, இன்னும் சொல்ல இயலாத எத்தனை எத்தனையோ வகையில் துஷ்பிரயோகம் செய்தும், சேதப்படுத்தியும் நம் கோவில்களின் மாண்பு குலைக்கப்படும். பல கோவில்களின் அரிய வகை சிலைகளைத் திருடி அதற்கு பதில் போலி சிலைகளை வைத்துள்ளனர். இந்துக்கள் கோவில்கள் பராமரிப்புக்காக வழங்கும் உண்டியல் பணம் வேறு சமயத்தினர் வெளிநாடு சென்று அவர்களுடைய புண்ணிய பூமியை தரிசிப்பதற்க்கும், அரசாங்கத்தின் வேறு பல திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்துக்களின் விழாக்களை சுந்திரமாக நம் நாட்டிலேயே கொண்டாட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இந்து விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பல்லாண்டு காலமாக கொண்டாடி வந்த விழாக்களை இன்று பல தெருக்களுக்குள்ளேயே செல்ல இயலாத நிலை உருவாகியுள்ளது. இந்த கோவில்களின் சொத்துக்கள் எண்ணிலாதவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்து கோவில்களுக்காக வழங்கப்பட்ட பல லட்சம் கோடி மதிப்புள்ள நிலங்கள் பல லட்சம் ஏக்கர்களில் மாற்று மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டும் கொள்ளையடிக்கப்பட்டும் இருக்கிறது. இவையெல்லாம் நெறிமுறைப் படுத்தி நம் கோவில்களைப் பாதுக்காப்பது நம் முதல் கடமை. முதலில், இவையெல்லாம் நம் கோவில்கள், நம் கோவில்களை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அறிய வேண்டும்.
 
இந்த காரணத்திற்க்காக, நாம் இந்து சமயத்தை ஆதரிக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும். அவர்கள் இந்து சமய தலைவர்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்ற வேண்டும். இந்து சமய குருமார்களுக்கு சீடர்களாக இருப்பவர்கள் கோவில்களை நிர்வகிக்க வேண்டும். இந்த மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும் என்றால், இந்து சமயத்தை ஆதரிக்கும் கட்சிகள் வெற்றி பெற வேண்டும். கோவில்களில் சிலைகளைத் திருடியவர்கள், இந்து அறநிலையத்துறையில் திட்டமிட்டு கிறிஸ்தவர், முஸ்லீம் மக்களை வேலைக்கு சேர்த்தவர்கள், சபரிமலை ஐதீகத்தை உடைக்க முயற்சி செய்தவர்கள், பர்வதமலை, அகத்தியர்மலை, சதுரகிரிமலை, அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் மலை என்று நம் மலைக் கோவில்கள் அத்தனையும் கிறிஸ்தவ தலமாக உருமாற்ற தொடர்ந்து முயற்சி செய்பவர்களையும், உண்டியல் பணத்தைத் திருடுபவர்கள், கோவில்களை ஆகம விதிகளின் படி அல்லாமல் தவறாகவும் வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்துபவர்கள் தோற்று காணாமல் போக வேண்டும். கோவில் திருடர்களாகிய அவர்கள் கூட்டணியினர் அனைவரையும் ஒன்றாக ஒற்றுமையோடு சேர்ந்து தோற்கடிக்க வேண்டியது இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு இந்துவின் கடமையாகும்.
 
ஆலயம் காக்க, இந்துக்களுக்கு ஆதரவான, வலுவான, உறுதியான தலைவரைத் தேர்தெடுப்போம். தவறாமல் குடும்பத்தோடு வாக்களிப்போம்.
 
செய்வீர்களா ? செய்வீர்களா ? இந்து விரோதிகள் முடியட்டும். புதிய இந்தியா பிறக்கட்டும்.
 
திருச்சிற்றம்பலம்.
 
பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் வஜ்ரகிரிவேலன் மலை கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிப்பு.
பர்வதமலை சிவாலயத்தில் சிலுவை நட்டு வைப்பு.
சபரிமலையில் பாரம்பரியத்தை சீர்குலைக்க இந்து-விரோத அரசாங்கமே போலீஸ் சக்தியை பயன்படுத்தி முயற்சி
சபரிமலை பாரம்பரியத்தை மீறுவதற்க்கு தமிழ்நாட்டிலிருந்து சில கட்சியினரால் அனுப்பப்பட்ட பெண்களின் படை
 
சபரிமலை பாரம்பரியத்தை மீறுவதற்க்கு தமிழ்நாட்டிலிருந்து சில கட்சியினரால் அனுப்பப்பட்ட பெண்களின் படை
 
 
 
 

Please rate this

Leave a Reply

Be the First to Comment!

Notify of
avatar
wpDiscuz
எங்களைப் பற்றி

இறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.

நீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.

More Info

Blog
எங்கள் முகவரி
  சைவசமயம்
  திருநந்திதேவர் திருக்கூட்டம்
  பள்ளிக்கரணை, சென்னை-600 042,
  தமிழ்நாடு, இந்தியா.
  saivasamayam.in@gmail.com