1.74 – திருப்புறவம் ( சீகாழி ) No ratings yet.

1.74 – திருப்புறவம் ( சீகாழி ) – Sirkazhi

பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
18) padhigam 1.74 – திருப்புறவம் ( சீகாழி )

Verses: 01_074 – naRavam niRai vaNdu pdf: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHUHBqTHBVLVN5UHM/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_074 01-03 naRavam niRai vaNdu – Part-1 – 2015-07-04 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHLUk4WGF6bllqaWs/view?usp=sharing

Discussion audio – Part-2: 01_074 04-11 naRavam niRai vaNdu – Part-2 – 2015-07-18 : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHU2lsMkEwWW13Ymc/view?usp=sharing

********
The discussion for padhigam 1.74 is available on YouTube:
All 2 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE8c9q0reo99-32qFC6-C4SM

Part-1: https://youtu.be/uzbEBw_8lrs
Part-2: https://youtu.be/XNq6lvLW48M
********

For English translation of this padhigam – 1.74 – naRavam niRai vaNdu – by V. M. Subramanya Ayyar – at IFP site: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_074.HTM

சீகாழி (சீர்காழி) (புறவம்) – Sirkazhi temple – பிரம்மபுரீஸ்வரர் கோயில் தகவல்கள் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495

==================== ===============

 

 

பதிகம் 1.74 – திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )

 

Background:

“நறவம் நிறை வண்டறை தார்” என்ற பதிகம் ஞானசம்பந்தர் தோடுடைய செவியன் பாடியபிறகு உடன் கோயிலினுட் சென்று உமாமகேசுரரைத் தரிசித்துப் பாடியது. இரண்டாம் பதிகம் “மடையில் வாளை” என்பதாகவே கற்றோரும் மற்றோரும் எண்ணி வருகின்றனர். இது பொருந்தாது என்பதைப் பின்வரும் சேக்கிழார் வாக்கால் தெளியலாம்.

`அண்ண லணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே

மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்

கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப்

புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலி னுட்புக்கார்`

 

`பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி

தங்கி யிருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே

இங்கெனை யாளுடை யான்உமை யோடும் இருந்தான்என்று

அங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்`

 

இப்பதிகத்துள் பாடல் தோறும் `இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே` என்பதால் இதுவே இரண்டாம் பதிகம் என்பதைச் சி.கே. சுப்பிரமணிய முதலியார் தம் பெரியபுராண உரைப்பேருரைக் குறிப்பில் அறிவித்துள்ளார். இஃது இத்துறையில் உள்ளார்க்கும் பெருவிருந்தாம்.

 

——–

 

#1986 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 88

பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி

தங்கியி ருந்தபெ ருந்திரு வாழ்வு தலைப்பட்டே

“யிங்கெனை யாளுடை யானுமை யோடு மிருந்தா”னென்

றங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்.

————–

 

பதிகம் 1.74 – திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )

 

பாடல் எண் : 1

நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தாற்

சுறவஞ் செறிவண் கொடியோ னுடலம் பொடியா விழிசெய்தான்

புறவ முறைவண் பதியா மதியார் புரமூன் றெரிசெய்த

இறைவன் அறவ னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 2

உரவன் புலியி னுரிதோ லாடை யுடைமேற் படநாகம்

விரவி விரிபூங் கச்சா வசைத்த விகிர்த னுகிர்தன்னாற்

பொருவெங் களிறு பிளிற வுரித்துப் புறவம் பதியாக

இரவும் பகலு மிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 3

பந்த முடைய பூதம் பாடப் பாதஞ் சிலம்பார்க்கக்

கந்த மல்கு குழலி காணக் கரிகாட் டெரியாடி

அந்தண் கடல்சூழ்ந் தழகார் புறவம் பதியா வமர்வெய்தி

எந்தம் பெருமா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 4

நினைவார் நினைய வினியான் பனியார் மலர்தூய் நித்தலுங்

கனையார் விடையொன் றுடையான் கங்கை திங்கள் கமழ்கொன்றை

புனைவார் சடையின் முடியான் கடல்சூழ் புறவம் பதியாக

எனையா ளுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 5

செங்க ணரவு நகுவெண் டலையு முகிழ்வெண் டிங்களுந்

தங்கு சடையன் விடைய னுடையன் சரிகோ வணவாடை

பொங்கு திரைவண் கடல்சூழ்ந் தழகார் புறவம் பதியாக

எங்கும் பரவி யிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 6

பின்னு சடைகள் தாழக் கேழ லெயிறு பிறழப்போய்

அன்ன நடையார் மனைக டோறு மழகார் பலிதேர்ந்து

புன்னை மடலின் பொழில்சூழ்ந் தழகார் புறவம் பதியாக

என்னை யுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 7

உண்ணற் கரிய நஞ்சை யுண் டொருதோ ழந்தேவர்

விண்ணிற் பொலிய வமுத மளித்த விடைசேர் கொடியண்ணல்

பண்ணிற் சிறைவண் டறைபூஞ் சோலைப் புறவம் பதியாக

எண்ணிற் சிறந்த விமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 8

விண்டா னதிர வியனார் கயிலை வேரோ டெடுத்தான்றன்

றிண்டோ ளுடலு முடியு நெரியச் சிறிதே யூன்றிய

புண்டா னொழிய வருள்செய் பெருமான் புறவம் பதியாக

எண்டோ ளுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 9

நெடியா னீடா மரைமே லயனும் நேடிக் காண்கில்லாப்

படியா மேனி யுடையான் பவள வரைபோற் றிருமார்பிற்

பொடியார் கோல முடையான் கடல்சூழ் புறவம் பதியாக

இடியார் முழவா ரிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 10

ஆலும் மயிலின் பீலி யமண ரறிவில் சிறுதேரர்

கோலும் மொழிக ளொழியக் குழுவுந் தழலு மெழில்வானும்

போலும் வடிவு முடையான் கடல்சூழ் புறவம் பதியாக

ஏலும் வகையா லிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 11

பொன்னார் மாட நீடுஞ் செல்வப் புறவம் பதியாக

மின்னா ரிடையா ளுமையா ளோடு மிருந்த விமலனைத்

தன்னார் வஞ்செய் தமிழின் விரக னுரைத்த தமிழ்மாலை

பன்னாள் பாடி யாடப் பிரியார் பரலோ கந்தானே.

============================= ============================

 

 

Word separated version:

#1986 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 88

பொங்கு ஒளி மால்-விடை மீது புகுந்து அணி பொற்றோணி

தங்கியிருந்த பெரும்-திரு வாழ்வு தலைப்பட்டே

“இங்கு எனை ஆள் உடையான் உமையோடும் இருந்தான்” என்று

அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.

————–

 

பதிகம் 1.74 – திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )

 

பாடல் எண் : 1

நறவம் நிறை வண்டு அறை தார்க்-கொன்றை நயந்து, நயனத்தால்

சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழி-செய்தான்,

புறவம் உறை வண் பதியா, மதியார் புரம் மூன்று எரி-செய்த

இறைவன், அறவன், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 2

உரவன் புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட-நாகம்

விரவி விரி-பூங்-கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால்

பொரு-வெங்-களிறு பிளிற உரித்துப், புறவம் பதியாக,

இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 3

பந்தம் உடைய பூதம் பாடப், பாதம் சிலம்பு ஆர்க்கக்,

கந்தம் மல்கு குழலி காணக், கரிகாட்டு எரி-ஆடி

அந்தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி

எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 4

நினைவார் நினைய இனியான், பனி-ஆர் மலர் தூய் நித்தலும்;

கனை-ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை திங்கள் கமழ்-கொன்றை

புனை வார்-சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதியாக

எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 5

செங்கண் அரவும், நகு-வெண்-தலையும், முகிழ்-வெண்-திங்களும்

தங்கு சடையன்; விடையன்; உடையன் சரி-கோவண-ஆடை;

பொங்கு-திரை வண்-கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியாக,

எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 6

பின்னு சடைகள் தாழக், கேழல் எயிறு பிறழப், போய்

அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி-தேர்ந்து,

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியாக,

என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 7

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம் தேவர்

விண்ணில் பொலிய அமுதம் அளித்த, விடை-சேர்-கொடி அண்ணல்;

பண்ணில் சிறை-வண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதியாக,

எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 8

விண்-தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான்-தன்

திண்-தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய

புண்-தான் ஒழிய அருள்-செய் பெருமான், புறவம் பதியாக,

எண்-தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 9

நெடியான் நீள்-தாமரைமேல் அயனும் நேடிக் காண்கில்லாப்

படியா மேனி உடையான்; பவள வரை-போல் திரு-மார்பில்

பொடி-ஆர் கோலம் உடையான்; கடல் சூழ் புறவம் பதியாக,

இடி-ஆர் முழவு ஆர், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 10

ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு-இல் சிறு-தேரர்

கோலும் மொழிகள் ஒழியக், குழுவும் தழலும் எழில்-வானும்

போலும் வடிவும் உடையான்; கடல் சூழ் புறவம் பதியாக,

ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 11

பொன்-ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதியாக

மின்-ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனைத்

தன்-ஆர்வம்-செய் தமிழின் விரகந் உரைத்த தமிழ்-மாலை

பன்-நாள் பாடி ஆடப் பிரியார் பரலோகம்-தானே.

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *