திருப்பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா No ratings yet.

திருப்பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

கோயில் திருப்பதிகம்
[9/இசை/19/6 – 28/05/18]

சிவதீபன்
9585756797

குறிப்பு: சோழ வளநாட்டில் காவிரியின் தென்கரையில் திருவையாற்றுக்கு அருகிலுள்ளது, திருப்பூந்துருத்தி என்னும் பாடல்பெற்ற சிவத்தலம்.

இத்தலத்தில் “அந்தணர் குலத்தில் தோன்றியவர், நம்பிகாடநம்பி நம்பி என்னும் பெயர், அந்தணர் குலத்தில் தோன்றியவர்கள் தங்கள் பெயருடன் அமைத்துக்கொள்ளும் சிறப்புப் பெயர். காடவர் என்ற சொல் இவர் பெயருடன் இணைந் திருத்தலை நோக்கி இவர் பல்லவர் மரபில் தோன்றியவர் என்பர்.

இவர்தம் திருவிசைப்பாப் பதிகங்களை நோக்கும்போது இவர், மூவர் பாடிய தேவாரப் பாடல்களை இடைவிடாது ஓதி இன்புறுபவர் என்பதும், கண்ணப்பர், கணம்புல்லர், சேரமான்பெருமாள் முதலிய நாயன்மார் களைப் போற்றுவதில் விருப்புடையவர் என்பதும் நன்கு புலனாகும்.

இவர் திருவாரூர் சிதம்பரம் என்ற இரண்டு தலங்களுக்கும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் அருளிச்செய்துள்ளார். திருவாரூர்த் திருப்பதிகத்துள் இரண்டு பாடல்களே உள்ளன.

கோயில் திருப் பதிகத்தைத் தேவாரத் திருப்பதிகங்களில் காணப்பெறாத சாளரபாணி என்ற ஒரு பண்ணில் இவர் பாடியுள்ளார்.

பாடல்
பண்: சாளரபாணி

அகலோக மெல்லாம் அடியவர்கள்
தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ
தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள்
நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச் சிற்றம்பலமே.

பொருள்

நீ புகுவதற்கு வேறு உலகம் உண்டு என்று நீ கருதாதபடி, மேல் உலகங்களை அடைவதற்கு உரிய நெறியானே எய்திய புண்ணியங்களால், இந்நிலவுலகம் முழுதிலுமுள்ள அடியவர் கள் உன்னைச் சூழ்ந்து நிற்க, அதனால் பொருந்திய சிறப்பினையுடைய சிவலோகமாகவே தில்லைத் திருப்பதியின் சிற்றம்பலம் அமைந்துவிட்டது.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

சிவதீபன்
📱9585756797

Please rate this

Leave a Reply

Be the First to Comment!

Notify of
avatar
wpDiscuz
எங்களைப் பற்றி

இறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.

நீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.

More Info

Blog
எங்கள் முகவரி
  சைவசமயம்
  திருநந்திதேவர் திருக்கூட்டம்
  பள்ளிக்கரணை, சென்னை-600 042,
  தமிழ்நாடு, இந்தியா.
  saivasamayam.in@gmail.com