செந்தமிழரசு கி.சிவகுமார் M.E. ஞானத்திரள் ஆசிரியர் மே 2017 No ratings yet.

ஞானத்திரள் ஆசிரியர்  செந்தமிழ் அரசு சிவதிரு கி. சிவகுமார் M.E. அவர்களின் மே 2017 மாத சொற்பொழிவு நிகழ்வுகளின் அட்டவணை.

Please rate this

சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை வகுப்பு 5/5 (2)

சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை தமிழ் சைவ வகுப்பு

கோடை விடுமுறையில் சிறிது நேரமாவது நம் பண்பாட்டையும் சமயத்தையும் அறியுமாறு கோடை விடுமுறை சைவத் தமிழ் வகுப்பு நடைபெற்றது சென்னை பள்ளிக்கரணை மற்றும் சித்தாலபாக்கத்தில். இந்த வகுப்புகளை எஸ். எஸ். பவுண்டேஷன் ட்ரஸ்ட், நமசிவாயா பிரார்த்தனை கோபுரம் மற்றும் திருநந்திதேவர் திருக்கூட்டம் இணைந்து நடத்தியது. இந்த ஆண்டின் கோடை கால வகுப்பு சிறுவர்களின் இனிய நிகழ்ச்சிகளோடு மே 28 ஞாயிறு அன்று நிறைவுற்றது.

சிறுவர்கள் மேடையில் போடும் வண்ணம் எழுதப்பட்ட மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் வசனம்.

https://drive.google.com/file/d/0B5oSXjiZfL5aRnlsQWRqQmxJeE0/view?usp=sharing

விழா மேடையமைப்பு

திருநந்திதேவர் திருக்கூட்டத்தின் கயிலாய வாத்திய இன்னிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

கடவுள் வாழ்த்து

இனிய கீர்த்தனை

பரதநாட்டியம்

சிறுதொண்டர் திருமுறைக் குழுவினரின் திருநாளைப்போவார் (நந்தனார்) நாடகத்தின் ஒரு காட்சி

63 நாயன்மார்களின் பெயர்களை உரைத்தலும் கண்ணப்ப நாயனார் மற்றும் பூசலார் நாயனார் ஆகியோரின் வரலாறு உரைத்தலும்

மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் ஒரு காட்சி

திருவாசகம் திருப்பொற்சுண்ணம் பாடலுக்கு கோலாட்டம் ஆடிய குழுவினர்

விடுமுறை வகுப்பில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கல்

ஆசிரியர்களை வாழ்த்திய போது

மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் காட்சிகள்

இந்த நிகழ்வுகள் போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற வேண்டும் என்று பிறப்பு இறப்பு அற்ற கருணைக் கடலாம் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்கிறோம். அதற்கு ஆவன செய்வீர்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

அப்பிபட்டி தேனி மாவட்டம் சைவத் திருவிழா No ratings yet.

அப்பிபட்டி தேனி மாவட்டம் சைவத் திருவிழா

அடியார் பெருமக்கள் திருப்பாதம் போற்றி

சைவத் திருவிழா அழைப்பிதழ்

வருகின்ற 28 / 05 / 2017 அன்று

மீனாக்ஷியம்மை உடனமர் ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் திருவருளாலும்..

கமலாம்பிகை உடனமர் வீதிவிடங்கப் பெருமான் திருவருளாலும்

நம்மை ஆளும் நாயகர் சிவகாமியம்மை உடனாடு தில்லை அம்பலவாணர் திருவருளாலும்….

சமய குரவர்கள், சந்தான குரவர்கள், குருமார்கள் குருவருளாலும்.

தேனி மாவட்டம் அப்பிபட்டி கிராமத்தில்..

பாரில் சைவம் தழைக்கும் பொருட்டு.. உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டு

சீர்போற்றும் அடியார் வழிபாடு மற்றும் சமய சொற்பொழிவு நடத்த பெருமான் திருவுள்ளம் கூடியுள்ளது..

ஈரோடு நசியனூர் திருமுறை திருக்காவணம் அறக்கட்டளை தலைவர் சிவதிரு. ஹரிஹர தேசிகர் அய்யா அவர்கள் அருளுரை ஆற்றவுள்ளார்..

மேலும் பல ஓதுவார் மூர்த்திகள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்..

திருமுறை பண்ணிசை வழிபாடு நடத்தப்பெற உள்ளது…

ஆகையால் அடியார் பெருமக்கள் வந்திருந்து விழாவில் கலந்து கொண்டு மனம் , மொழி , மெய்யினால் வாழ்த்தி எல்லாம் வல்ல கருணைமாக்கடல் சிவபெருமானின் திருவருளை பெற வேண்டுகிறோம்…

அடியார் பெருமக்கள் , ஆன்மீக மெய்யன்பர்கள் எழுந்தருளுக..

வழி : –

தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம், குமுளி, செல்லும் பேருந்தில் ஏறி சின்னமனூர் நிறுத்தத்தில் இறங்கவும்…

அங்கிருந்து அப்பிப்பட்டி ஷேர் ஆட்டோ வசதி உண்டு..

அலைபேசி :

சிவ. விஜய் கர்ணல் : 9597364320
சிவ. வெங்கடேஷ் குமார் : 9688925987

Please rate this

185 ஆவது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு No ratings yet.

185 ஆவது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு

மே 28, 2017 ஞாயிறு அருள்மிகு கைலாசநாதர் கோவில் வானகரம்

Please rate this

சளுக்கை மரகதவல்லி உடனுறை மனுகுல மகாதேவ ஈஸ்வரர் 5/5 (2)

சளுக்கை கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு மரகதவல்லி அம்மை உடனுறை மனுகுல மகாதேவ ஈஸ்வரர் ஆலயம்

திருக்கோவில் வழிபாட்டிற்கு இணை ஏதுமில்லை. ஆன்மீகத்தில் எவ்வகை பக்குவம் உடையவரும் திருக்கோவில் சென்று வழிபட வேண்டும். அவ்வாறு நாம் சென்று வழிபட பாடல் பெற்ற தலங்களும், வைப்புத் தலங்களும் மற்றும் எண்ணற்ற சிவாலயங்களும் உள்ளன.  அனைத்து சிவாலயத்திற்கும் சென்று வழிபட்டு ஈசன் திருவருள் பெறுவோம்.

                              திருச்சிற்றம்பலம்

சுவாமியின் பெயர்:   அருள்மிகு மரகதவல்லி அம்மை உடனுறை மனுகுல  மகாதேவ ஈஸ்வரர்.

ஆலய சிறப்பு;   இந்த ஆலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட கற்றலியாகும். ( மூலவர் விமானம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது ).

காலம்:  இந்த ஆலயம் கி.பி. 1055 க்கு முற்பட்டது. சோழர்கள் காலத்திய ஆலயம். ( முதலாம் ராஜேந்திர சோழனுடைய மகன் ராஜாதிராஜன் கல்யாணபுரம், கொல்லாபுரம் போரில் யானையின் மேல் கொல்லப்பட்டு, பிறகு அதே போர்க்களத்தில் 2-ம் ராஜேந்திர சோழன் கீழை சாளுக்கிய மன்னரை வென்று பட்டம் சூடிக்கொண்டான். இது கி.பி. 1054-இல் நடந்தது. இந்த செய்தி இந்த ஆலயத்தில் அவனது 2-ம் ஆண்டு கல்வெட்டில் ( 1055 ) குறிப்பிடப்பட்டுள்ளது ). எனவே இந்த ஆலயம் கி.பி. 1055-க்கு முற்பட்டது.

இருப்பிடம்: அக்னி தலமும், நினைத்தாலே முக்தி தரும் தலமுமான திருவண்ணாமலை மாவட்டம். வந்தவாசி தாலுக்கா, சளுக்கை கிராமம் ( பழைய பெயர் சோழகேரளபுரம் என்கிற சாளுக்கி )

வழித்தடம்: வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ சென்று அங்கிருந்து கிழக்கு திசையில் சுமார் 2 கி.மீ தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

பிற தகவல்கள்: இந்த ஆலயத்தில் சுமார் கி.பி.1119-இல் நாட்டிய மங்கை கொண்டு தினமும் நாட்டியம் நடந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் கி.பி.1518 வரை சிறந்து விளங்கியிருக்கிறது. பிறகு படிப்படியாக சிறப்புகள் குன்றி கேட்பாரற்று கி.பி.2002 வரை இருந்தது.

                ஆலயத்தின் பழைய புகைப்படம்.

 

தற்சமயம் அடியார் பெருமக்கள் மற்றும் ஊர் பொதுமக்களால் திருப்பணி செய்யப்பட்டு தற்சமயம் தினமும் 1 வேலை மட்டும் பூஜைகள் நடந்து வருகின்றன.

சுவாமியைப் பற்றி:  சுவாமி மனுகுல மகாதேவர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் காசியில் உள்ள அமைப்பை ஒத்து இருகிறார். இவர் ஞானகாரகன். ஞானத்தை வழங்குபவர். ஞானம் வேண்டுவோர் வந்து வழிபட வேண்டிய தலம் இதுவாகும். சுவாமி கிழக்கு பார்த்த முகமாக இருக்கிறார். ஆலயத்திற்கு கிழக்கு திசையில் ஒரு வாயிலும், தெற்கு திசையில் ஒரு வாயிலும் இருக்கிறது.

                  கல்வெட்டு தகவல்கள்: 183, Fin.(sep.rev)-B    Item No 465 முதல் 478  வரை.

 

              

திருச்சிற்றம்பலம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

மேலும் தொடர்புக்கு:

என்றும் இறைபணியில்,

ஏ.சிவநேசன்.  9751827124, 7667979032

Please rate this

பன்னிரு திருமுறை சிவபெருமானின் திருவுருவம் 5/5 (2)

பன்னிரு திருமுறை சிவபிரானின் திருவுருவம்.

தனக்கென்று எந்த தேவையும் இல்லாத சிவபிரான், உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு இரங்கி, தன் மேலான நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருவம், உருவம், அருவுருவம் என்று பல்வேறு நிலைகளில் உயிர்களுக்கு அருள் புரிகிறான். வேண்டுபவர்க்கு வேண்டிய உருவில் வந்து அருளும் தன்மையன் நம் தலைவன். நாதத்திலிருந்து தோன்றும் ஒலியாக அந்த ஒலியே மந்திரமாகவும் வந்து அருளுவன். இறைவன் புக முடியாத இடம் உண்டோ ? இறைவன் எடுக்க முடியாத உருவம் உண்டோ ?
 
 
இறைவன் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மந்திர வடிவமாகவும் உள்ளான். பன்னிரு திருமுறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில்
 

    மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர்

    இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்

    பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்

    அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார்

என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார்.

திருக்கோவில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசனத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான்.

 
 
நியாசம் = வைப்பு,

பிரதிட்டை = நிலை பெறுத்துவித்தல்.

 
திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மைகளை,
 

    சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
    அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
    இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
    கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே
    

என்று ஒரு பழம்பாடல் எடுத்தியம்புகின்றது. ஆகவே, மந்திரமாகிய திருமுறைகளை தினமும் ஓதுவோம். நன்மையே என்றும் நம்மைச் சேரும். வாழ்கை இன்பமான வழியில் பயணிக்கும். திருவருள் கூடி நிற்கும்.
 
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
     தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
     செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
     எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
     மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
திருச்சிற்றம்பலம்.

Please rate this