அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf
நம்முடைய குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோர்கள் நமக்கு எவ்வளவு தூரம் நம் சமயத்தை நமக்குக் காட்டுகின்றனரோ, அத்தனை தூரத்திலிருந்து நம் ஆன்மீக பயணமானது துவங்குகிறது. அவ்வகையிலே, நாம் நம் வாழ்வில் பயணித்த தூரத்தையும் அனுபவத்தையும் நம் குழந்தைகளுக்குக் காட்டி வளர்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அவ்வகையிலே, சைவ சமயம் பற்றிய அடிப்படை நுட்பம் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும் என்ற வகையிலே அந்த அடிப்படை நுட்பத்தை அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் சிறு சிறு துளிகளாக சேர்க்கும் முயற்சியில் இந்த அறிவோம் சைவ சமயம் என்ற புத்தகமும் ஒரு அங்கமாக சேர்த்துள்ளோம்.
நாம் யார், நம் இறைவன் யார், நம் கடமைகள் என்ன என்பதை அறியாமலேயே நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்று தங்களுக்கு வேண்டியவற்றை இறைவனிடம் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சைவத்தின் ஞான ஒளி பெற்று நம் பிறப்பு இறப்பில்லாத சிவபிரானை என்னென்றும் ஏத்தும் வண்ணம் ஆகும் முயற்சியில் இந்த புத்தகமும் ஓர் அங்கமாகத் திகழ எண்ணம் கொண்டு இங்கு அதன் அச்சிடக்கூடிய PDF வடிவம் பகிரப்படுகிறது. இது அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இது நம் வலைதளத்தினஅ பதிவிறக்கம் பகுதியிலும் சுட்டப்பட்டுள்ளது.
அறிவோம் சைவ சமயம் – PDF
https://drive.google.com/open?id=1IRzrkHEyYMoXsOutU_MSoGLr82LmCw4g
குழந்தைகளுக்கான சிறுவர் நாடம் – சண்டிகேசுவரர் நாடகத்தின் வசனத்தினையும் இங்கே பதிவேற்றியுள்ளோம்.
சண்டிகேசுவரர் சிறுவர் நாடகம் – PDF
https://drive.google.com/open?id=10nddS3thvI81X7za-rUYBbyTDkq6i1fu
உலகின் வீதிகள் தோறும் சைவ பாட சாலைகள் அமைப்போம்.
திருச்சிற்றம்பலம்.