இணைய வாருங்கள்

saivasamayam.in  – An initiative of திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை.

திருச்சிற்றம்பலம்.

நாம் ஒவ்வொருவரும் புதியதாக இவ்வுலகில் எதையும் கண்டுபிடிப்பதில்லை, கொண்டும் வருவதில்லை. மாறாக, இங்கு இருப்பதையே வெளியே கொண்டு வருகிறோம். அது விஞ்ஞானமாகட்டும், மெய்ஞானமாகட்டும். அவ்வாறு இங்கு இருப்பதை நன்கு உணர்ந்து அறிய பல காலமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த பிரபஞ்சத்தை ஆராய்ந்து மனித குலத்திற்க்குத் தேவையான நல்லவற்றை அறிந்துணர்ந்து, அதை நல்ல வாழ்கை நெறியாக உருவாக்கி, அதை கடைப்பிடித்து இன்பமாக வாழக் கோருவதே நம் முன்னோர்களின் பல்லாயிர வருடத்திய அனுபவ புதையலாகும். ஆகவே, நம் முன்னோர்கள் நமக்கு அருளிய புதையலை அறிந்துணர்ந்து நம் வாழ்வில் கடைப்பிடித்து இன்பமாக வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தொழில் நுட்ப தாக்கத்தால் வேகமாக மாறி வரும் உலகில், 14 ஆம் நூற்றாண்டிலிருந்து நாம் தொடர்ந்து அந்நியர்கள் படையெடுப்பில் துவண்டு போனதால், இன்று திருநீறு நாம் ஏன் நெற்றியில் இடுகிறோம் என்ற கேள்விக்குக் கூட சரியான பதிலைக் கூற முடியாத கீழ்நிலையில் இருக்கிறோம். நம் அளப்பரிய சமய செய்திகளையும் ஆழ்ந்த ஞானத்தையும் நம் கல்வி முறையில் இருந்து திட்டமிட்டு விலக்கிக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். நம் தாய் மொழியில் கூட முழுவதுமாக கல்வி பயில முடியாத இழி நிலையில் நம் சமுதாயம் நம்மை இட்டுச் செல்கிறது. இந்நிலையில், நம் முன்னோர்களின் அளப்பரிய புதையலின் அடிப்படை செய்திகளையாவது நாம் யாவருக்கும் எடுத்துச் செல்வது இன்றைய கால கட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இந்த கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த நோக்கத்திற்கு ஒரு சிறிய முயற்சியே இந்த வலை தளம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஒரு முயற்சியே saivasamayam.in வலைதளம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் பொது நோக்கம்

பாரத கண்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ள விலை மதிப்பற்ற முக்கிய கொடைகளுள் நம் சமயமும் வழிபாட்டு முறைகளும் ஒன்றாகும். உலகின் தலையாய சமயமாம் சைவ சமயத்தின் அடிப்படை தத்துவங்களையும் திருமுறை மற்றும் சித்தாந்த சாத்திரங்களையும் உலக மக்களுக்கு எடுத்துச் செல்வதும், பல்வேறு வகைகளில் திருத்தொண்டு புரிவதுமே  நம் திருக்கூட்டத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கத்தை சிரசின் மீது வைத்து, கீழ்கண்ட வழிகளில் பல்வேறு பணிகள் செய்து நோக்கத்தை அடைய முயற்சி செய்வோம்.

  1. சைவ சமயத்தின் அடிப்படை உண்மைகளையும், அருமை பெருமைகளையும்
    • சிறு புத்தகமாக அச்சிட்டு மக்களுக்கு கொடுப்பது
    • பல்வேறு சிவாலயங்களில் (தொடர்) சொற்பொழிவு வாயிலாக பல்வேறு மக்களுக்கு எடுத்து உரைப்பது
    • இணையதளம், கட்புலம், முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலமும் எடுத்துச் செல்வது
    • சைவ சமயத்தின் நெறிமுறைகளை எடுத்துக் கூறி, அதன் ஒழுக்கத்தைப் பின்பற்ற ஊக்குவிப்பது
  2. நம் சமயத்தைப் பற்றியே அறியாத மக்களிடம் நம் சமய அடிப்படை எடுத்துச் செல்வது.
  3. வேண்டுவோர்க்கு இலவசமாக உருத்திராக்கம் அணிவிப்பது
  4. திருவாசகம் மற்றும் திருமுறை முற்றோதுதல் நிகழ்வுகள் நடத்துவது, பங்கேற்பது
  5. சிவனடியார்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்வது, பங்கெடுப்பது
  6. கயிலாய வாத்திய இசை தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு
    • பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று கும்பாபிஷேகம், பிரம்மோத்சவம், திருத்தேர், பிரதோஷம், நாயன்மார்கள் குருபூசை போன்ற நிகழ்ச்சிகளிலும் திருவிழாக்களிலும் வாத்தியம் இசைப்பது.
  7. பொருளாதார நிலையில் நலிந்திருக்கும் சிவனடியார்களுக்கு உதவி செய்வது.
  8. நன்னெறிகளை போதிக்கும் சைவ திருமடங்களை நிறுவ உதவுவது, பங்களிப்பது
  9. திருக்கூட்டத்தை திருத்தல யாத்திரைகளுக்கு அழைத்துச் செல்வது
  10. சிவாலயங்களுக்கு உழவாரப்பணி செய்வது, ஆலய மேம்பாட்டுக்கு உதவி செய்வது
  11. பல்வேறு திருப்பணிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பது.

நீங்களும் எங்களோடு இணைந்து உயரிய சிவ தொண்டு புரிய வாருங்கள்.

பல்வேறு சிவப் பணிகளுக்கு நன்கொடை செய்ய:

வங்கி கணக்கு எண்:  270605000843
பெயர்:  THIRUNANDHI DEVAR SIVANADIYAR THIRUKOOTTAM ARAKATTALAI
IFSC Code:  ICIC0002706

எங்கள் முயற்சிகளில் சில:

பீடுடைய மார்கழி போற்றி – குழந்தைகளுக்கான திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் ஒப்புவிக்கும் போட்டி

திருவாவடுதுறை ஆதீனம் சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் அமைத்து வகுப்புகள் நடத்துதல்

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு – சென்னை பெரும்பாக்கம்

பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவில் குளத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுதல்

திருமுறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பக்க செய்தி துண்டு கொடுத்து பரவுதல்

மாதம் தோறும் முதல் சனிக்கிழமை, பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடத்துதல்

மாதம் தோறும் முதல் ஞாயிறன்று, பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில், திருவாவடுதுறை ஆதீனம் சைவத் திருமுறைப் பயிற்சி மைய வகுப்பு

சனிக்கிழமை தோறும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை சைவ நன்னெறி தழைத்தோங்குக என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில்.

திருமுறை வீதிஉலா மற்றும் சைவ சமய விழிப்புணர்வு வேளச்சேரி

திருமுறை வீதிஉலா மற்றும் சைவ சமய விழிப்புணர்வு கூடுவாஞ்சேரி ஆதனூர்

கயிலாய வாத்தியம் இசைத்தல் – பல்வேறு கோவில்கள், குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களுக்கு.

சடங்குகள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் செய்வித்தல்

மேலும் தொடர்புக்கு:

மின்னஞ்சல் saivasamayam.in@gmail.com

நமசிவாய.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.