காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கோவில்கள் கண்டுபிடிப்பு
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவுத் திட்டமானது, காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து கங்கையின் கரை வரை செல்ல நேரடியாக பாதை அமைக்கும் காசி-விசுவநாதர் சாலை திட்டமாகும். சென்ற 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய இந்த திட்டத்தைச் செயல் படுத்த, கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளும் நிலங்களும் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதில் இருந்த வீடுகளை இடிக்கும் பணியும் நடைபெறுகிறது.
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உள்ளே பழம்பெரும் கோவில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஒன்று இரண்டு அல்ல, மொத்தம் 43 கோவில்களை அடையாளம் கண்டிருப்பதாக தொல்லியல் துறையினர் (ASI) தெரிவித்துள்ளனர். இந்த வீடுகளை இடிக்கும் பணிகளின் போது, இது வரை 30 க்கும் மேற்பட்ட கோவில்கள் வெளி வந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாகவும், கந்த புராணத்தோடு தொடர்புடையதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
திட்டமிடப்பட்டுள்ள முதலாவது வாயிலின் அருகே பழம்கோவில் துந்திராஜ் விநாயகர் ஆலயம் என்ற கோவிலை புதியதாக கண்டுபிடித்திருப்பதாக இந்த காசி-கங்கை கரை சாலை திட்டத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு விஷால் சிங் தெரிவித்துள்ளார். இத்தனை கோவில்களும் இது நாள் வரை, காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீடுகளுக்குள் மறைந்து இருந்துள்ளன. புதியதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த 30 க்கும் மேற்பட்ட கோவில்களை அனைத்தும் இந்த திட்டத்தின் கீழ் புணரமைக்கப்படும்.
காளி மாதா கோவில், திரு கோனேஷ்வர் மகாதேவர் ஆலயம், திரு ராணி விஜயராஜ் மகோய்பா கோவில், திரு பிரமோத் விநாயகர் கோவில், திரு ருத்ரேஸ்வர் மகாதேவர் ஆலயம், ஷீட்லா மாதா கோவில் ஆகிய கோவில்கள் கண்டெடுக்கப்பட்ட கோவில்களில் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்தும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
Latest discovery of a beautiful temple near Dhundhiraj Ganesh ji temple at Gate no 1 of Shri Kashi Vishwanath Dham.#ShriKashiVishwanath #CorridorProject #Discovery #Temple #ShriKashiVishwanathTemple #Gate #Entrance #GaneshTemple #Dundhiraj #Found #Varanasi #CEO #VishalSingh pic.twitter.com/0YVwFurT5p
— Vishal Singh (@VishalS311) March 7, 2020
காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதைச் சுற்றிக் கிடைத்துள்ள பழம்பெரும் கோவில்களை அழகாகப் புணரமைத்தும், விசுவநாதர் ஆலயத்திலிருந்து கங்கையின் கரை வரை அழகான நடைபாதை அமைத்தும் இந்த கோவில் மிக அழகாகவும், புதுப் பொலிவுடனும், புனிதத் தன்மையுடனும் மின்னுவதைக் காணும் நாளை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.