கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே சமய விழிப்புணர்வு திருமுறை வீதி உலா
நாம் வாழும் வாழ்வை இன்பமாக வாழுமாறு செதுக்குவது நெறிகள். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இன்பமான வாழ்வைத் தரக் கூடியது ஒப்பற்ற நெறியாகும். அந்த ஒப்பற்ற நெறியை குற்றமில்லாமல் பெற வேண்டுமானால், அது இறைவன் ஒருவனால் மட்டுமே அருள முடியும். அவ்வாறாக குற்றமற்ற உயர்ந்த ஒப்பற்ற நெறியை இறைவனாகிய சிவபெருமான் நமக்கு உபதேசங்கள் மூலம் அருளப் பட்டது தான் சைவ சமய நெறி. அத்தகைய நெறியை ஒவ்வொருவரும் முதலில் அறிந்துணர வேண்டும். பின்னர், அதைத் தத்தம் வாழ்வில் முயற்சி செய்ய வேண்டும். பின்னர், அந்த நெறியே நம் வழி என்று தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அந்த ஒப்பற்ற நெறியை அனைத்து மக்களுக்கும் அறியச் செய்வது நம் தலையாய கடமையாகும்.
அவ்வண்ணமே, வீதிகள் தோறும் சென்று நம் தமிழ் வேத நூலாம் பின்னிரு திருமுறை என்பதை அறிவிக்கும் வண்ணமும், அந்த திருமுறையே நாம் வாழ பின்பற்ற தகுதியுடைய நெறியாகும் என்று எடுத்து உரைக்கும் வண்ணமும், திருமுறை வீதிஉலா உதவுகிறது. அத்தகைய திருமுறை வீதி உலா, நம் சென்னையின் தெற்கு கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே அமைந்துள்ள திருநீலகண்டேசுவரர் திருக்கோவிலில் விகாரி ஆனி 15 (௧௫) ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சென்னை பள்ளிக்கரணை திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினரும் கலந்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகள்.
திருச்சிற்றம்பலம்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலமெல்லாம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.