நான் கோவிலுக்குச் செல்வேன். சாமி கும்பிடுவேன். மற்றபடி வேறொன்றும் தெரியாது. இறைவன் யார் என்பது பற்றியும் நம் சமயம் பற்றியும் கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.
திருச்சிற்றம்பலம்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
—- குறள் 67, மக்கட்பேறு.
உலகமயமாக்கத்தில் பல்வேறு பண்பாடுகள் கலந்துவிட்ட நிலையில், இறைவனைப் பற்றி அறியாமல், பலர் திக்குத் தெரியாமல் அற்ப இன்பத்தில் அழுந்தி தம் பிறவியை வீணடித்து வருகின்றனர். அடிப்படையாக நாம் இன்பமாக வாழும் வழியை நாம் பல ஆயிரம் ஆண்டு ஆராய்ச்சியில் நன்கு கற்றிருந்தோம். அதை நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த அறிவு ஞானத்தை அறிந்து பின்பற்றி இன்பமாக வாழ முயற்சிப்பதே நம்மை நல்வழியில் சேர்க்கும்.
அப்படி நம் முன்னோர்கள் நமக்கு என்ன கொடுத்துவிட்டார்கள் என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழும். இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஆராய்ச்சியும், அதன் பல்வேறு பகுப்புகளும், அதன் தன்மைகளும், அதைக் கட்டிக்காக்கும் ஒருவனைப் பற்றியும், அதனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் வாழ்வின் குறிக்கோளை நாம் அறியவும், இனி, இப்பிறவியில் நாம் யாது செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவும், அதனால் நாம் இன்பமாக வாழவும் வழி செய்து கொடுக்கும் ஞானமே நமக்கு அருளிச் சென்றுள்ளார்கள். ஓரிரவில் அவற்றைப் படித்துவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கேட்டு, உணர்ந்து. உய்வடைவதே சாத்தியமானது. அதற்கு நாம் என்ன தெரிய வேண்டும் ?
இன்றைய தினங்களில், கண்டும், கேட்டும் அறிவது மிகவும் எளிதாக உள்ளது. மற்றும் மிகவும் அதிவேகமாக கற்கவும் முடிகிறது. உதாரணமாக, சொற்பொழிவுகள் கேட்டல், யூடியூப் காணொளிகள் பார்த்தல், ஞானகுருவிடம் உரையாடல், முறையான ஆதீன வகுப்புகள் என்று பல்வேறு வழிகளில் மிகவும் விரைவாகப் பயிலும் வசதிகள் உள்ளன. அவை அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு விரைவாக கற்கலாம்.
இனி, இந்த சைவ சமய அடிப்படைகளும் மேலும் முன்னேறி அறிய சில சுட்டிகளும் கொடுக்கிறேன்.
விரைவான சுருக்கம்:
சைவ சமய அடிப்படை நுட்பம் – http://www.saivasamayam.in/சைவ-சமயம்-அடிப்படை
காணொளி:
அறிவோம் சைவ சமயம் – நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய சைவ சமய அடிப்படை செய்திகள்
சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 1 –
சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 2 –
சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 3 –
சைவ சமயம் அடிப்படை நுட்பம் – பகுதி 4 – நிறைவு பகுதி
படம் பார்த்து கற்றல்:
சைவ சமய படக் காட்சி தொகுப்பு – http://www.saivasamayam.in/சிவபெருமானின்-மகிமைகள்
புத்தகம்/இணையம் வாசிக்க:
சைவ சமயம் – http://noolaham.net/project/18/1746/1746.pdf
சைவ சமயம் அறிமுகம் – http://noolaham.net/project/136/13535/13535.pdf
வினா விடை மூலம் கற்றல் – http://www.shaivam.org/siddhanta/shp_vinavidai.htm
பன்னிரு திருமுறைகள் படிக்க – http://www.shaivam.org/siddhanta/thiru.html
பன்னிரு திருமுறைகள் பொழிப்புரையோடு – http://www.thevaaram.org
63 நாயன்மார்கள் வரலாறு – http://www.shaivam.org/baktas/nayanmar-tamil.htm
சைவ சித்தாந்தம் மிக எளிய விளக்கத்துடன் http://temple.dinamalar.com/special.php?cat=581
சிவவழிபாடு புத்தகங்கள் http://www.ssivf.com/ssivf_cms.php?page=203
மின் புத்தக தொகுப்பு http://senthilvayal.com/e-books/
மிகப் பழைய அரிய நூல்கள் http://www.noolaham.org
சிவபூசை செய்வது எப்படி http://chellathangatrust.org/SivaPoojai.html
உயிரைப் பறிக்க வந்த எமதூதர்கள், தடுத்த சிவகணங்கள் http://rightmantra.com/?p=5102
நம் உயிர் உய்வு பெற உழவார்பணி http://www.shaivam.org/uzhavaram/uzavara_pani.htm
மணிவாசகர் அருட்பணி மன்றம் பதிவுகள் http://manivasagar.in/index.php
சைவ சமயம் வினாடி வினா http://www.aruljyothi.com/2016/08/online-quiz-on-saiva-samayam.html
கேட்டு அறிய
பெரிய புராண சொற்பொழிவு – https://drive.google.com/open?id=0B5oSXjiZfL5aNFJBU0ZDal9NNFE
சொற்பொழிவுகளும் திருமுறை பண் இசையும் – Shaivam.org Audio Gallery – http://www.shaivam.org/gallery/audio/audio.htm
24 மணி நேர ரேடியோ – Shaivam.org internet radio – http://www.shaivam.org/radio/radio.htm
திருவாசகம் mp3 http://palaniappachettiar.com/?p=121
திருமுறைகளை பண்ணோடு இசைக்க இலவச பயிற்சி http://www.shaivam.org/gallery/audio/tis_sat_cls.htm
அடுத்து செய்ய வேண்டியன:
1. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகிய ஆதீனங்களால் திருமுறை வகுப்புகள், சைவ சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் நேரடியாகக் கலந்து கொண்டு பன்னிரு திருமுறைகளையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் குற்றமற கற்க வேண்டும்.
2. சைவ நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கும்பாபிஷேகம், சிவபூசைகள், சைவ மாநாடுகள் என்று பல்வேறு சைவ நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கலந்து கொள்ள, மேலும் பல சிவனடியார்கள் தொடர்பும் கிட்டும்.
3. 276 பாடல் பெற்ற தலங்களை அதன் வரலாறு அறிந்துப் பின்னர் சென்று வழிபடலாம்.
4. உழவாரப் பணிகளில் கலந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு சிவ தொண்டை ஏற்று வழுவாமல் செய்து வாருங்கள்.
இறைவனின் திருவருள் இன்றி அவனை வணங்குதலும் கூட கைகூடாது. இறைவனின் திருவிளையாடல் மிகவும் ஆனந்தமானது. அற்புதமானது. அதனை அறிய நாம் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த மனித உடல் எதற்கு ? இந்த மானுட பிறவி நமக்கு எதற்கு ? நாம் யார் ? நம் தலைவன் யார் ? என்பதை குற்றமற அறிந்து நம் பயணத்தைத் தொடங்குவோம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.