அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு 5/5 (2)

அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னையிலிருந்து தெற்கே உள்ள நகரங்களுக்கு செல்வபர்கள் கண்ணில் படமால் போகாது இந்த அச்சரப்பாக்க மலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம். இது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை உள்ள அச்சரப்பாக்கம் ஊரில் உள்ள மலையாகும். இந்த மலையில் பன்நெடுங்காலமாக சிவாலயம் ஒன்று உள்ளது. மேலும் இந்த மலையைச் சுற்றி கிரிவலமும் மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான 55 ஏக்கம் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிமித்து மலைமாதா கோவில் என்ற கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டது. மலைகளை வெடி வைத்துத் தகர்த்தும், விதிகளை மீறி படிக்கட்டுகளை அமைத்தும், கட்டப்பட்டுள்ளது. மேலும் கடைகளும் பல வைக்கப்பட்டுள்ளது. இது காரணமாக அந்த மலைப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அவை ஊருக்குள் வர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மலைமாதா கோவிலையும் அதன் அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் ஆர். கேமலதா மற்றும் எம். சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசு, தொல்லியல் துறை மற்றும் மலைமாதா தேவாலய நிர்வாகம் ஆகியோர் உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Please rate this

சிவபெருமானுக்கு ஓர் இருக்கையோடு காசி மகாகல் எக்ஸ்பிரஸை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி 5/5 (6)

சிவபெருமானுக்கு ஓர் இருக்கையோடு காசி மகாகல் எக்ஸ்பிரஸை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலில் சிவபெருமானுக்கு ஓர் இருக்கை அமைப்பு

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலை நேற்று ஞாயிறன்று பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் காசியிலிருந்து துவக்கி வைத்தார்கள். இந்த ரயிலானது இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று ஜோதிர்லிங்க சிவாலயங்களை இணைத்துச் செல்வதாகும்.

இந்த ரயிலில் உயர்தர சைவ உணவு வழங்கும் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ள உணவறை உள்ளது. மேலும் நல்ல படுக்கை வசதி, நல்ல பராமரிப்பு வசதி மற்றும் பயண காப்புத்திட்டம் என்று பயணம் இனிமையாக அமைய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலானது இந்தூர் அருகிலுள்ள ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க தலம், உஜ்ஜயினி மாகாளேஸ்வரர் திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைத்துச் செல்லும்.

இந்த ரயிலில் சிவபெருமானுக்கு என்று தனியாக ஒரு இருக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு ரயிலில் இறைவனான சிவபெருமானுக்கு ஒரு இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருக்கையின் மீது கோவில் படம் வரையப்பட்டுள்ளது. யாரும் அறியாமல் அந்த இருக்கையில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, என்று வடக்கு ரயில்வே செய்தியாளர் திரு தீபக்குமார் தெரிவித்தார்.

மெல்லிய தெய்வீக பாடல்களுடன், ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பாதுகாவலர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சைவ உணவு மட்டும் தான் வழங்கப்படுகிறது. மேலும், ரயில் முழுவதும் 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்க்கும் மூன்று முறை வாரணாசியிலிருந்து இந்தூர் வரை செல்கிறது.

Please rate this

தமிழும் ஆரியமும் 5/5 (2)

தமிழும் ஆரியமும் – ஐயா, திரு கோமல் கா. சேகர் அவர்கள்

ஓம்
சிவ சிவ !
===
தமிழும் ஆரியமும் .
=======
முதலில் சிவத்தை அடைய வேண்டும்; அல்லது அவரது அன்பைப் பெற்றுத் தீதகன்று நல் வாழ்வினை இப் பிறவியிலேயே பெற வேண்டும் என விழைவோர்  சாதி, குல, இன, மொழி, ஏழை, செல்வந்தன், வலியவன் எளியவன் என்ற பாகுபாட்டு மனப்பாங்குகளில் இருந்து, உடைத்துக் கொண்டு வெளி வரவேண்டும் !

ஒரு அன்பர் தமிழின் தொன்மை பற்றிக் கடுமையாக உழைத்துக் கால ஆராய்ச்சியெல்லாம் செய்து,  நேரத்தை வீணடித்து பதிவிட்டிருந்தார் . அந்தக் கால எல்லைகள்நம்பகத் தன்மையுடையன அல்ல !  இறைவன் எப்போது உலகத்தைப் படைத்தாரோ,  அன்றே நம் செந்தமிழும், ஆரியமும் தோற்றிவிக்கப்பட்டுவிட்டன என அறிக ! எல்லா மொழிகளும் இறைவனன்றிப் படைக்கப்பட்டன அல்ல ! இறைவன் விரும்பி செவி சாய்க்கும் மொழிகள் செந்தமிழும்  ஆரியமும் ! ஆரியம் எந்தப் பகுதிக்கோ ,எந்த இனத்துக்கோ சொந்தம் என ஒதுக்கி , அதன் மேல் சைவர்களுக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுத்தல் அறிவுடைமையல்ல ! எனக்கு ஆரியம் தெரியாது ! திருமுறைகள் , சாத்திரங்களைக் கற்ற அளவில் சுமார் ஆயிரத்துக்கும் கீழ் ஆரியக் கலைச் சொற் பதங்களுக்கு மட்டுமே பொருள் அறிவேன் ! திருமுறைகளையும் , தமிழ் வழியில் சைவ சாத்திரங்களையும் கற்று ,சிந்தித்துத் தெளிந்து, உணர்ந்து ,இறைவன் மீது அன்பு பூண்டாலே போதும் என்ற கொள்கையே என் கொள்கை !

ஆரியமும் வழிபடும் மொழியே ! அதை வெறுக்கக் காரணம் என்ன ?

அதை ஏன் சில குறிப்பிட்டக் குல சாதியினரிடம் சேர்த்து அடையாளப் படுத்தி ,நம் உரிமையை இழக்க வேண்டும் ? இத்தகைய நிலை நம் ஆச்சாரியர்கள் கொண்ட கொள்கைக்கு , மாறானது ! இப்படிப் பட்டப் பொருந்தா எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் பலர் இறையருளை இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவர் ! திருமுறைகளிலும் சிறிதளவு , ஆரிய சொற்பதங்கள் கலந்தே உள்ளன ! சைவ சாத்திரங்களிலும் பெருமளவு ஆரியம் கலந்தே உள்ளது ! நம் ஆச்சாரியார்கள் எவரும் ஆரியம் கற்றால் தான் இறைவனை அடைய முடியும் என நம்மை ஆற்றுப் படுத்த வில்லையே ! ஏனெனில் அது இறைவனது உள்ளக் கிடைக்கை இல்லை ! அவர்கள் தம்மைத் தமிழோடு அடையாளப் படுத்தி அக மகிழ்பவர்கள் ! ஆனால் வட சொல்லையும் மதிப்பவர்கள்.! ஏனெனில் அதுவும் இறைவனுக்கு ஏற்புடைய
மொழி என்பதால் !

இதுதான் உண்மை நிலை !
இதை மறைத்து அறியா மக்களை இருளில் தள்ளி ஒருக் கூட்டம் தம் வாழ்வை வளப்படுத்தி வருவதே உண்மை !  இதைப் படிக்கும் எவரும் அறியாக் கருத்தை நான் இங்குக் கூறவில்லை ! நமது ஞானாசிரியர்கள் செந்தமிழும், வட மொழியும் சம அளவில் இறைவனுக்கு ஏற்புடைய மொழியே என அருளிய மெய்த் திரு வாக்குகளை இங்குப் பதிவிடுகிறேன் !

படித்து மனத்திருத்தி , சிந்தித்துத் தெளிக !
திருஞான சம்பந்தப் பெருமான் அருளியவை ~
‘” தமிழ் சொலும் வட சொலும்
தாள் நிழல் சேர “~ 01.77.04

‘”தென் சொல் விஞ்சமர் வட சொல் திசை மொழி எழில் நரம்பு எடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூர்””
~02.73.05

“ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர் “”
03.39.04

திருநாவுக்கரசு பெருமான் அருளியவை !
“”ஆரியம் தமிழோடு இசையானவன்” ”~05.18-03

‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் “‘~ 06-23.05

“முத் தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் “~06-23-09

“”செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை ‘”~06-46-10

“வட மொழியும் தென்தமிழும்
மறைகள் நான்கும் ஆனவன் காண் “”~06-87-01

சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது
“அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப ”( கயிலைக்கு ஏகும் போது
கேட்ட மொழிகள் )07-100-08

திருமூலர் அருளியவை

“ஆரியமும் தமிழும் உடனே
சொலிக் காரிகையார்க்குக்
கருணை செய்தானே ” திருமந்திரம் / ஆகமச் சிறப்பு -08

“தமிழ்ச் சொல் வட சொல் எனும் இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே ‘” ௸ ஆகமச் சிறப்பு -09
“”என்னை நன்றாக இறைவன்
படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே ”
~௸ பாயிரம் 20
சிவ பெருமானே தமிழ் ; தமிழன் / சிவ பெருமானே
ஆரியம் ; ஆரியன் / சிவ பெருமானே நான் மறைகளும்
ஆகமங்களும் / சிவ பெருமானே சைவத் திருமுறைகளும் ,
சைவத் தமிழ்
சாத்திரங்களும் / ஆரியமும்
தமிழும் சிவ பெருமானின் இரு கண்களுக்கு ஒப்பானவை ! இரு மொழிகளுமே சிவ பரம் பொருளை உணர்த்த வல்லவைகளே ! இது நம் அருளானர்கள் வாக்குகள் ! மாதவம் செய்த தென் திசையில் பிறந்த நாம் ,சைவத் திருமுறைகளையும் ,சாத்திர புராண நூல்களையும் ஐயம் திரிபுஅறக் கற்றாலே போதும் ! நம் பெருமானை எளிதில் எய்தி விடலாம்.  பிற மொழியைத் தாழ்த்தி நம் செந்தமிழை உயர்த்த வேண்டிய அவசியமில்லை ! மக்களே ஆலய பூசைக்கு வட மொழியை ஏற்கும் போது நமக்கு என்ன ?  எத்தனை பேர் தமிழில் அருச்சனை செய்யக் கோருகிறோம் ?  தமிழ் மொழியின் தொன்மைக்கு ஏன் நம்பத் தகா ஆதாரங்களை எல்லாம் நாட வேண்டும். ? சேக்கிழார் வழி இறைவனார் அருளிய இப் பாடலை உற்று நோக்குக !

~ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய /
ஞான முதல் நான்கும் அலர் நல் திருமந்திர மாலை / பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்று ஆகப் பரம் பொருளாம் / ஏன எயிறு அணிந்தாரை “ஒன்றவன்தான் ” என எடுத்து ~~திருத் தொண்டர் புராணம் / திரு மூலநாயனார் புராணம் |~ பாடல் எண் 26

இப் புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்து ,ஆண்டுக்கு ஒன்றாக
ஒரு பாடல் வீதம் திருமூலர் அருளியதாக உறுதி செய்யப் பட்டுள்ளது. திருமூலர் இப் புவியில் இறுதியாக 1700 ஆண்டுகளூக்கு முன் வாழ்ந்ததாக் கணிக்கிறோம் !

“சிவ சிவ என்கிலர் தீவினையாளர்” என்பது போன்ற மிக எளிமையானப் பாடல்களை இலக்கணத்தோடு ஒத்து  இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் பாடியிருக்கிறார் எனின் ,அந்த அளவுக்கு செம்மை மொழியாக ஆக ,அதற்கு முன் எத்தனை காலத்துக்கு முன் நம் மொழி தோன்றி இருக்க முடியும் ! கால எல்லையை எவரும் அறுதியிட்டுச் சிந்தித்தனரா ? சேரமான் பெருமாள் நாயனார் தமிழ் மொழியில் தம் முன் பாடியத் திருக்கயிலை ஞான உலாவைப் பெருமான் செவி மடுத்து இன்புற வில்லையா ?
திருக்கயிலையே தமிழும் ஆரியமும் வழங்கும் புனிதத் தலம் எனபதை சிந்திக்க வேண்டாமா ?  திருமூலர், தான் , தம் வரலாறு/ பாயிரம் பாடல் 15 -ல் “சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் “, என தாம் இவற்றை உணர்ந்ததைக் குறிப்பிடுகிறார் !  இவர் நந்தியிடம் கற்ற காலம் என்ன ? நந்திக்குத் தமிழை கற்பித்தது எப்போது ? ஆகவே உலகத் தோற்றத்தின் போதே ,சுத்த மாயைத் தலங்களில் வாக்குகள் எழுந்த போதே தமிழும் , ஆரியமும் இறைவனால் வகுக்கப் பட்டது என அறிக ! இறைவனால் அருளப் பட்டதாலேயே தமிழ் திருமுறைகளாக வெளிப்பட்டு இவற்றிலேயே இறைவன் அட்ட மூர்த்தியாக விளங்கி நிற்றல் என்றப் பயனால் ,உணர்க !

ஆகவே தமிழ் இறை மொழி என ஓர்க !
ஆரியமும் இறைவனே பொருளாக நிற்கும் வேத ,ஆகமங்களைத் தாங்கி நிற்றலால் நம் ஆச்சாரியார்கள் அதனை சமமான இறை மொழியாக  மதித்தமையை ஓர்க ! ஆகவே மொழி பேதச் சிறுமையிலிருந்து வெளி வருக ! முதலில் தற்கால சமுதாயம் இறை மொழியான  நம் செந்தமிழை முற்றும் கற்றிருக்கிறோமா எனத் தன் ஆய்வு செய்வோம் !
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்பது தற்பெருமை பேசியதல்ல !

அசுத்த மாயையிலிருந்து பிரபஞ்சம் தோன்றும் முன் சுத்த மாயையிலிருந்து இறைவனால் தோற்றிவிக்கப் பட்ட இனிய மொழி நம் தமிழ் மொழி ! அதைப் பயின்று வாழ்ந்த தொன்மை உடையோர் நம் முன்னோர் !
உலகில் அனுபவிக்கும் இன்பங்களில் , தமிழ் மொழியை முற்றும் உணர்ந்து அனுபவிப்பதை விட ஒப்பது ஏதும் இல்லை ! இப் பெரும் பேற்றை இழந்து நிற்கும் , இக் காலத்தவர் உணர வேண்டும் !
~ கோமல் கா சேகர் / 9791232555 /25.02 17/மீள் பதிவு 23-01-20

Please rate this

இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ? 5/5 (7)

இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ?

ஓம்
சிவசிவ
========
புனித நூல் !
=============
சிவமே விளங்கும் புனித நூல் ; பொருள் சிவமே !
ஐயா, இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்கவேண்டும் என பதிவு செய்திருக்கிறீர்களே ? தயவு செய்து இது எதனால் என்றும் எந்த அருளாளர் இப்படி தெரிவித்துள்ளார் என தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்..
ௐௐௐௐௐ
சிவ சிவ :
===== =====

தவறு ! தவறு ! தவறு !
===== ===== =====

இறந்தவர்கள் இல்லத்தில் அடியார்கள் சென்று திருவாசகம் தேவாரப் பதிகங்கள் பாடுகின்றனர். இது சரியா ? தவறா ?
××××× ××××× ×××××
இது அன்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில் படிக்கலாம் எனக் கருத்திட்டவரிடம் வினவிய வினா !  இதை விடத் திருமுறைகளை இழிவு படுத்த எவராலும் இயலாது !

இந்தக் கொடிய வழக்கம் தென் மாவட்டச் சைவர்கள் இல்லங்களில் எப்படியோ , எப்போதோ தொடங்கி , பரவலாக நடை முறைக்கு வந்து விட்டது ! திருமுறைகளில் பற்றும் பயிற்சியும் உள்ள ஒரு சிவனடியார் , இறப்புக்கு முன் நினைவு தவறும் முன்பாக , அவர் செவியில் ஏறுமாறு திரு முறைகளைப் பாடுதல் தவறில்லை !
அதைக் கேட்பவர் சிவ சிந்தையே நிறைவாகிட , இறை நினைவுடன் மட்டும் உடலை நீங்குதல் , உயர் பதம் அடைவதை விளைவிக்கும் .

பல ஆலயங்களுக்குத் தல புராணங்களை வகுத்தளித்து அருந் தொண்டாற்றிய ,
சிவ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நினைவாற்றல் நீங்கு முன் ,அவரது சீடர்
சிவ. உ. வே . சுவாமி நாத ஐயர் அவர்கள் திருவாசகம் ஓதிக் கொண்டிருக்க , கேட்டுக் கொண்டே , கண்களின் இருபுறமும் நீர் வழிய ,அவர் உயிர் நீத்தது வரலாறு ! உயிர் நீங்கிய பிறகு ,தொடர்ந்து பாடவில்லை ! உயிர் நீங்கிய பின் பாடுதல் வேதத்தை அவமதிப்பதாகும் !
திருமுறைகளின் பெருமைகளை அறியாதார் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள் ! ஆலய வழிபாடே அறியாத , திருமுறைகளையே அறியாத , பெரிய தனவந்தர்கள் இறந்த வீடுகளிலும் , பொருள் பேசி திருவாசகம் ஓதுவதில் போய் நின்றுள்ளது இன்றைய அவல நிலை !

இதற்காக ,
இறைவனாரால் அருளாளர்கள் மீது மேலோங்கி நின்று , அருளப் படவில்லை இந்த மெய்ஞ் ஞானப் பாடல்கள் ! பல்வேறு படி நிலைகளில் உள்ள மக்களும் பயின்று பயன் கொள்ளும் நோக்குடனும் , உயிர்களைப் படி முறையில் வளர்த்தெடுத்து, சிவத்தை நோக்கிச் செலுத்திடவும் வகை செய்யும் பனுவல்கள் இவை ! ; ஞான பாதம் !
வாழ்வியல் சுப ,அசுப காரியங்களுக்காகப் படைக்கப் பட்டவை அல்ல !

ஏன் படிக்கக் கூடாது ?
தீட்டாவது ஒன்றாவது ? என்பர் பிழைப்பாளர்கள் !எப்படித் தெளிவிப்பீர்கள் ?
நல்ல வினா !

இறந்தவர் வாரிசு ஒருவர் ,உடனே திருவாசகத்தை எடுத்துக் கொண்டு ,
சிவாலயத்துக்குள் புகுந்து ,இறைவன் திருமுன் , இறந்தவர் சிவ பதம் அடைய வேண்டும் என்று திருவாசகம் படிக்கத் துணிவாரா ? எது தடுக்கும் ? கடுமையான வினாக்களாக உளவே ? பித்தம் உறைந்து போன சித்தத்தவரை தெளிவிக்க , இது போன்றக் கடுங் கசப்பு மருந்து கொடுத்தால்தான் தெளியும் ! திருமுறைகளின் ஒவ்வொரு பாடலிலும் சிவமே வரி வடிவாக உறைந்திருக்கிறார் ! ஓதும் போது ஒலி வடிவில் வெளிப்படுகிறார் ! பொருளறிந்து உருகி ஓதின் , இறையாற்றல் ஓதுபவரின் ஆன்மாவைப் பக்குவப் படுத்தும் ! துன்ப நீக்கத்துக்கும் ,இன்ப ஆக்கத்துக்கும் வகை செய்யும் !

திங்களூர் , திருமருகல் ஆகிய தலங்களில் இறந்தவரை எழுப்பப் பாடப் பட்ட நிகழ்வுகள் நடந்ததே ?

அந்த சூழல்கள் வேறு !
அவர்கள் இறந்திருப்பினும் , விதிப்படி , இவர்களைக் கருவியாக வைத்து ,உயிர்பிக்கப் பட முன்னை விதியுடையோர்.  எழுப்பிய அருளாளர்கள் வழி இறைவனாரே நிகழ்த்திய அருள் திருவிளையாடல்கள் அவை ! எழுப்பிடக் கருவியாக நின்றோர் ,நாம் பொறி புலன்களைப் பயன்படுத்துதல் போல் செயல் படத்தாமல் , பதி கரணமாக நின்று , அதாவது அவர்கள் உயிரறிவு இறையறிவில் அடங்கிட , சிவம் ஒன்றே அவர்களது உருவில் மேலோங்கி நின்று நிகழ்த்திய நிகழ்வுகள் அவை ! பொருள் விழைவாளர்களுக்கு இது விளங்காது ! இது சிவ ஞானப் புகலுடையோருக்கே விளங்கும் !  இறந்த உடலாக அங்கு எஞ்சி இருப்பது பஞ்ச பூதக் கலவையான சட நிலையில் உள்ள உடல் மட்டுமே என அறிக ! சுவர் பயன் பெறட்டும் என அதன் முன் நின்று ஓதுவதை ஒப்பதே இது ! இறந்தவருக்கு எந்தப் பயனும் விளையாது என அறிக !
தூய்மையற்ற இடம் என்பதையும் அன்பர்கள் கருத்தில் கொள்க !

25000 / = கட்டணம் பேசி ,திருமுறைகள் ஓதி ,கரும காரியம் செய்யப் பட்ட நிகழ்வு ஒன்றை , திரு நெல் வேலிப் பயணத்தின் போது அறிவிக்கப் பட்டு அதிர்ந்தேன் !
திரு முறைகளில் பெருமைகளை உள்ளவாறு உணர்ந்தோர் இவ்வாறு செய்யத் துணியார் ! இது வரை எவரும் இதைப் பற்றி எல்லாம் எவரும் வாய் திறக்கக் கூட இல்லையே !
துணிவு இல்லாததே ஒரே காரணம் ! தாங்கள் ?
இறைவனையே உள்ளத்தில் தாங்கி ,திருவருளே உணர்த்தக் கருவியாக நின்று பதிவு செய்கிறேன் !
~சிவோஹம் ~
~கோமல் கா சேகர் /9791232555/ 060418.
சிவ சிவ :
திருச்சிற்றம்பலம்.
கோமல் /260120-(74/20)

Please rate this

விதியை வெல்வது எப்படி ? இந்த பிறவியில் இது தான் அனுபவிப்பாய் என்று விதித்த பின், அதை வெல்ல முடியுமா? 4.6/5 (15)

விதியை வெல்வது எப்படி ? விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள்.

கருவாகி உருவாகி குழந்தையாய் குமரி குமரனாய் வாலிபனாய் இல்லத்து அரசனாய் பக்குமுற்று பெரியோனாய் நாம் திருவாகிச் செல்லும் முன்னர் தான், நாம் சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை ? எத்தனை விதமான பிரச்சனைகளை நாம் வாழ் நாள் முழுவதும் துரத்திச் செல்கிறோம் ? வாழ்நாள் முழுவதும் நாம் பிரச்சனைகளைே துரத்திக் கொண்டிருந்தால், நம்மைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சிந்திப்பது எப்போது ?

அற்பமான இவ்வுலக இன்ப துன்பங்களைத் துரத்தவா நாம் பிறந்து வந்துள்ளோம் ? அதிசயமான அற்புதமான மனித பிறவியை நாம் அற்பமான பொருளில் வீணாக்கலாமா ? நம்மையும் இறைவனையும் உணர வேண்டுமானால், நாம் நம் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாம் நிம்மதியான வாழ்கையும் இன்பமான வாழ்கையும் வாழ ஆரம்பித்தால் தான், நாம் இறைவனைப் பற்றி சிந்திப்போம். வழிபாடுகளில் உழன்று இறையனுபவமான பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.

அவ்வாறாயின், முதல் படியாக, நாம் இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நம் வினைகள் நம்மைத் துரத்தி வந்து துன்பங்கள் கொடுக்கும். முதலில் புதிய வினைகள் செய்யாமல் இருக்க சபதம் ஏற்க வேண்டும். பின்னர், பழைய வினைகளைக் கழிக்க வேண்டும். பழைய வினைகள் நம்மை வாட்டி வதைக்கும். ஊழ் வந்து நம்மைத் துரத்தும். அதிலிருந்து விடுபட்டால் தான் நாம் இறை சிந்தனையில் திளைத்து சிவ புண்ணியங்களைச் சேர்க்க முடியும்.

அப்படி இவ்வுலத் துன்பங்களிலிருந்து விடுபட ஏதாவது வழி அல்லது கருவி இருக்கிறதா அல்லது மந்திரம் இருக்கிறதா ? இருக்கிறது. அது தான் பன்னிரு திருமுறைப் பதிகங்கள். இவை அனைத்தும் மந்திரங்கள். நாம் திருமுறை ஓதும் ஒலியானது நம் துன்பங்களைப் போக்கும் வலிமையுடையது. அருமருந்தானது. நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் சந்திக்கும் துன்பங்களுக்கு ஒவ்வொரு மருந்து உள்ளது. அந்த மருந்துகளின் பட்டியல் தான் பலன் தரும் திருமுறைப் பதிகங்களாகும்.

இந்த பதிகங்களை உள்ளன்போடு நம்பிக்கையோடு இறைவனின் திருமுன் பாடி வந்தால், அந்த துன்பங்கள் காணாமல் போகும். இது நம் குருமார்களின் வாக்கு. இது வேத வாக்கு. இது இறைவனின் திருவாக்கு. இவ்வாறு நம் துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழியைக் கற்றுக் கொண்டு விட்டால், நாம் நம் கணிசமான நேரத்தை இறை வழிபாட்டில் செலுத்தி சிவ புண்ணியங்களைச் சேர்க்கலாம் அல்லவா ? இப்பிறவியில் வரும் துன்பத்தை வெல்லும் ரகசியம் அறிந்தால் தானே, அடுத்து பிறப்பு இறப்பு என்னும் மா துக்கமாகிய பெரும் துன்பக் கடலை கடக்கும் வழியைத் தேடிச் செல்வோம் ?

ஆகவே, இவ்வுலகில் இப்பிறப்பில் நமக்கு வரும் துன்பங்களைப் போக்கவும், எளிதாக கடக்கவும் ஓத வேண்டிய பதிகங்களின் பட்டியல் இங்கே உள்ளன. இதை அனைவரும் அறிந்து படித்து ஓதி துன்பங்களிலிருந்து விடுபட்டு சிவபிரானின் வழிபாடுகளில் உங்கள் காலத்தைச் செலவிடுங்கள்.

இந்த பதிகங்கள் அனைத்தும் YouTube இல் பார்த்து படித்தும் கூடவே பாடியும் ஓதலாம். இந்த பட்டியில் உள்ள அனைத்து பதிகங்களைையும் காண:

விதியை வெல்வது எப்படி ? YouTube Playlist

விதியை வெல்வது எப்படி பதிகங்களின் பட்டியல்

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

சைவ சமயம் அடிப்படை தெரியுமா? அப்படின்னா இந்த கேள்விகளை முயன்று பாருங்கள். 5/5 (2)

சைவ சமயம் அடிப்படை தெரியுமா? அப்படின்னா இந்த கேள்விகளை முயன்று பாருங்கள்.

சைவ சமயம் என்பது பெருங்கடல் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அவற்றில் அடிப்படை செய்திகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது நமக்கு நாமே சுயபரிசோதனை செய்வது மிக நன்று. அவ்வகையிலே, சுயபரிசோதனை செய்து கொள்ள ஒரு முப்பது கேள்விகள் கொண்ட தேர்வு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.

மொத்தம் மூன்று தேர்வுகள். முதல் தேர்வு 30 மதிப்பெண்கள். இரண்டாவது 30 மதிப்பெண்கள். மூன்றாவது 40 மதிப்பெண்கள். மொத்தம் 100 மதிப்பெண்கள். சில கேள்விகள் கடினமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விடைகளை நீங்கள் தேடுவதன் மூலம் அப்பகுதி சமயத்தையும் அறிய வேண்டும் என்ற நோக்கோடு சில கடினமான கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

சைவ சமயம் அடிப்படை அறிதல் தேர்வு  (50 கேள்விகள்)

தேர்வு ௧ ஒன்றுக்குச் செல்க  (30 கேள்விகள்)

தேர்வு ௨ இரண்டுக்குச் செல்க  (30 கேள்விகள்)

தேர்வு ௩ மூன்றுக்குச் செல்க   (எளிமையான 40 கேள்விகள்)

சைவ சமய அடிப்படை என்ற தேர்வில் பெரும்பாலான கேள்விகளுக்கு கீழ்காணும் காணொளியில் பதில் இருக்கிறது. சைவ சமய அடிப்படையை அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு ஒன்றரை மணி நேரம் செலவு செய்து இந்த அடிப்படையை அனைவரும் குற்றமில்லாமல் தெரிந்து கொள்ளுவோம்.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே சமய விழிப்புணர்வு திருமுறை வீதி உலா No ratings yet.

கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே சமய விழிப்புணர்வு திருமுறை வீதி உலா

நாம் வாழும் வாழ்வை இன்பமாக வாழுமாறு செதுக்குவது நெறிகள்.  உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இன்பமான வாழ்வைத் தரக் கூடியது ஒப்பற்ற நெறியாகும். அந்த ஒப்பற்ற நெறியை குற்றமில்லாமல் பெற வேண்டுமானால், அது இறைவன் ஒருவனால் மட்டுமே அருள முடியும். அவ்வாறாக குற்றமற்ற உயர்ந்த ஒப்பற்ற நெறியை இறைவனாகிய சிவபெருமான் நமக்கு உபதேசங்கள் மூலம் அருளப் பட்டது தான் சைவ சமய நெறி. அத்தகைய நெறியை ஒவ்வொருவரும் முதலில் அறிந்துணர வேண்டும். பின்னர், அதைத் தத்தம் வாழ்வில் முயற்சி செய்ய வேண்டும். பின்னர், அந்த நெறியே நம் வழி என்று தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அந்த ஒப்பற்ற நெறியை அனைத்து மக்களுக்கும் அறியச் செய்வது நம் தலையாய கடமையாகும்.

அவ்வண்ணமே, வீதிகள் தோறும் சென்று நம் தமிழ் வேத நூலாம் பின்னிரு திருமுறை என்பதை அறிவிக்கும் வண்ணமும், அந்த திருமுறையே நாம் வாழ பின்பற்ற தகுதியுடைய நெறியாகும் என்று எடுத்து உரைக்கும் வண்ணமும், திருமுறை வீதிஉலா உதவுகிறது. அத்தகைய திருமுறை வீதி உலா, நம் சென்னையின் தெற்கு கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே அமைந்துள்ள திருநீலகண்டேசுவரர் திருக்கோவிலில் விகாரி ஆனி 15 (௧௫) ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சென்னை பள்ளிக்கரணை திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினரும் கலந்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகள்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

 

Please rate this

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு) சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை No ratings yet.

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு)

சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை

எண் குணங்களை உடைய சிவபெருமானுக்கு உயிர்களாகிய நாம் எப்படி ஆளாவது ? அடிமையாவது ? அவனுக்கு என்ன பணி செய்வது ?

திருநீறு அணிந்தால் போதுமா ?

உருத்திராக்கம் அணிந்தால் போதுமா ?

பஞ்சாக்கர மந்திரம் சொன்னால் போதுமா ?

கோவில் சென்று வழிபட்டால் போதுமா ?

இவையெல்லாம் செய்து கொண்டு, பொய் பேசுதல், உயிர்க்கொலை செய்தல்,  ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாமா ?

என்ன செய்தால் சிவபிரான் திருவடிகளை நாம் அடைய முடியும் ?

ஆளாவது எப்படியோ ?

மயிலாடுதுறை சிவதீபன்ராஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் கோடை சிறப்பு தமிழ் பயிற்சியின் நிறைவு விழா ஆகியவற்றின் போது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

திருநீற்று இயல் – திருநீறு பற்றிய அனைத்து முக்கிய தகவல்கள். திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 5/5 (1)

திருநீற்று இயல் – திருநீற்றின் மகிமை

திருநீற்றின் பெருமை வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் என்று எங்கும் குறிப்பிடப்படுகிறது. அவையெல்லாம் பல ஆண்டுகள் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றிலிருந்து சில பெருமைகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சிவ தொண்டு செய்ய விரும்புபவர்கள் இந்த திருநீற்றின் பெருமை சொல்லும் இரண்டு பக்க கோப்பினை அச்சிட்டு, அவர்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப 50, 1000, ஒரு லட்சம் என்று பிரதிகள் அச்சிட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கும், உங்கள் தெருவில் மற்றும் அடுக்ககத்தில் இருக்கும் அன்பர்களுக்கும் வழங்கலாம்.

https://drive.google.com/open?id=1EiYg8mskN0Q8BFsiwudRl31iUfSkvSlD

பொதுவான பதிப்பு:

https://drive.google.com/open?id=1jwymrjxhpx6Ez580zpeWVpB63o4co41E

திருநீற்றின் சில பெருமைகளை எடுத்துரைக்கும் சொற்பொழிவு:

சிவமயம்

திருநீற்று இயல்

சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

        திருநீறு

திருநீறாவது யாது?

        பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

        வெள்ளை நிறத் திருநீறு.

திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

        பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

        வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

        நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநமஎன்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

    சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.

திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

        கூடாது.

திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

  தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.

ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

        விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

        முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

        இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.)

திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

        ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

   தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

        பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

அவைக ளுண்டான வகை எப்படி?

        பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

அதனை அணிவதனால் பயன் என்ன?

        மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

        நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும்.

அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

        காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

உபகற்ப விபூதியாவது யாது?

        இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

    வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?

        புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

திருநீற்றின் பெருமை சொல்லும் திருஞானசம்பந்தர் பதிகம் யாது ?

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருல வாயான் திருநீறே.

இந்த பாடல் மிகவும் மந்திர ஆற்றல் வாய்ந்தது. சிவபெருமான் மீது மிகுந்த அன்பு செலுத்தி, இந்த பதிகத்தை ஓதி, நெற்றி நிறைய திருநீறு இட்டால், எல்லா நோய்களும் உடனே குணமாகும். திருநீறு எல்லா செல்வங்களையும் விட மிகப் பெரிய செல்வமாதலால், பணம் பொருள் வந்து குவியும். எல்லா கவலைகளும் நீக்கிப் போகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  திருச்சிற்றம்பலம்.

 

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

யார் சைவர்கள் ? – சிவசித்ரா அம்மையார் 5/5 (1)

யார் சைவர்கள் ?

சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம்.

யார் சைவர்கள் ?

சைவர்கள் அல்லாதவர்கள் யாவர் ?

சைவத்திற்கு வெளியே ஏதாவது பொருட்கள் உண்டா ?

அத்தனைக்கும் கதாநாயகன் யார் ?

உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் ஏன் கைதட்ட கூடாது ? 5/5 (1)

சண்டிகேசுவரர் என்பது ஒரு பதவி. சிவனுக்கும் சிவன் கோவிலுக்கும் உரிய சொத்துக்களை கணக்கு வழக்கு பார்ப்பதும் முக்கிய பணி. இந்த பணியை விசாரசருமர் என்பவருக்கு சிவபெருமானே அவர் தலையில் கொன்றை மாலை சூடி அணிவித்து அளித்தார். சண்டிகேசுவரர் ஆழ்ந்த தியானத்தில் சிவசிந்தனையில் இருந்தாலும், அந்த சிந்தனையிலேயே அவருடைய பணியை செம்மையாகச் செய்ய வல்லவர். அவரின் ஞானத்திலேயே கணக்கு வழக்குகளை முடிப்பவர். இருப்பினும் சிவனை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட பிரியாது இருக்க வேண்டும் என்று தியானத்தில் இருப்பவர்.

அவ்வாறு ஆழ்ந்த தியானத்தில் இருப்பவரை நாம் கை தட்டி அவரின் தியானத்தை கலைக்கலாமா ? ஒரு போதும் கூடாது. நாம் சிவாலயத்தை விட்டு செல்லும் முன்னர், இந்த ஆலயத்திலிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை நாமே உணர்வுபூர்வமாக அறிந்து செல்லவே சண்டிகேசுவரர் ஆங்கே எழுந்தருளியுள்ளார். ஒரு நொடிப்பொழுது நம்மை நாமே சரி பார்த்துக் கொண்டு, சிவாலயத்திலிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்ந்து அதை அவருக்கு அறிவிக்கும் வண்ணம், ஓசை வராமல், கைகளை தடவிச் சென்றாலே போதுமானாது. ஆகவே, சண்டிகேசுவரர் ஆலயத்தின் முன் கை தட்டாதீர்கள். ஓசை எழுப்பாதீர்கள். திருச்சிற்றம்பலம்.

Please rate this

இறைவன் யார் ? நாம் யாரை வழிபட வேண்டும் ? 4.38/5 (8)

திருச்சிற்றம்பலம்.

 

இறைவன் யார் ? நாம் யாரை வழிபாடு செய்யவேண்டும் ?

சமூக ஊடகங்களில் திகழும் பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியும், உள்ளதை உள்ளவாறு தெளிவுபடுத்தவும் முயலும் பதிவு இது.

ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் பாதமலரை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாதமலர்களை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

மெய்கண்ட சாத்திரங்கள் கொடுத்தருளிய மெய்கண்டார் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

நாம் யார், இறைவன் யார், நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, நாம் யாரை வணங்க வேண்டும் என்பதை தெளிவுற அறிவதற்கு முன்னர், சில வார்த்தைகளை தெளிவு பெற அறிந்து கொள்வது அவசியம்.

 

வணங்குதல் என்றால் என்ன ?

வணக்கம் என்ற சொல் தமிழில் பல பொருளைத் தரும் சொல்லாக விளங்குகிறது. பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றார் போல் அது வேறு வேறு பொருளைத் தரும். இது வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் என்று பல்வேறு பொருளைத் தருகிறது. ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வரும் போது, அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அது அவரை வரவேற்பதற்கு. இங்கு வணக்கம் வரவேற்பைக் குறிக்கிறது. ஒருவர் வீட்டில் விருந்து சாப்பிட்டு கிளம்பும் போது வணக்கம் சொல்கிறோம். அது நன்றியைத் தெரிவிக்கிறது. கோவிலில் கடவுளை வணங்குகிறோம். அது தொழுதலைக் குறிக்கிது. தெருவில் செல்லும் போது நண்பரைப் பார்க்கும் போது வணக்கம் சொல்கிறோம். அது வாழ்த்துதலைக் குறிக்கிறது. ஆகவே, வணங்குகிறோம் என்ற சொல் எந்த இடத்தில் எந்த அர்த்தம் கொடுக்கிறது என்பதை தெளிவாக உணர வேண்டும்.

 

வழிபாடு செய்தல் என்றால் என்ன ?

வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதாகும். இறைவனைப் பூசிப்பதாகும். இறைவனை எப்படித் தொழ வேண்டும் என்றும் திருக்கோவில் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் நம் ஆகமங்கங்கள் உரைக்கின்றன. இறைவனை வழிபடுவதற்குப் பல்வேறு நியம நியதிகள் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு குலத்தினர் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள். வழிபாடு இறைவனுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. செய்யப்பட வேண்டும்.

 

இறைவன் எத்தனை பேர் ? யாரெல்லாம் அவர்கள் ?

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் தெளிவாக விளக்குகிறது. அவன் பாலுக்கு அப்பாற்பட்டவனாதலால், அவனைப் பரம்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஓர் உருவும், ஓர் நாமம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் பல்வேறு பெயர்களையும் உருவங்களையும் நாமே கொடுத்து வழிபடுகிறோம். பொதுவான அந்த பரம்பொருளை நாம் சிவபெருமான் என்ற பெயரைக் கொடுத்து நாம் மனதில் எண்ணுவதற்கு எளிதாக அதற்கு ஒரு இயல்பான உருவத்தையும் கொடுத்துக் கொண்டுள்ளோம். உருவமில்லாத அந்த பரம்பொருள் உயிர்களுக்கு உதவுவதற்கு வேண்டி, உயிர்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு உருவத்தைத் தானே எடுத்து தன்னை உயிர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறது. பிறப்பு இறப்பு இல்லாத அந்த பரம்பொருள் எல்லையற்ற சக்தியைக் கொண்டது. அந்த சக்தியைக் கொண்டு தான் பல்வேறு செயல்களைச் செய்கிறது. நாம் எளிதாக புரிவதற்கு வேண்டி, அந்த சக்திக்கு மனித பெண் உருவம் கொடுத்து பார்வதி, மீனாட்சி, காமாட்சி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் சூட்டி மகிழ்ந்து கொள்கிறோம். சில காரணங்களுக்காக சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்ட சக்தியை விநாயகர் என்றும், முருகப் பெருமான் என்றும், இவர்கள் சிவசக்திக்கு குழந்தைகள் போன்றும் கற்பனையான வடிவம் கொடுத்தும் வைத்துள்ளோம். இதனால், நாம் எளிதாக மனதில் இந்த உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்ய முடியும். ஆகவே, சிவபிரான், பராசக்தி, முருகன், விநாயகர் என்பது ஒரே பரம்பொருளைக் குறிக்கிறது. இந்த பரம்பொருளைத் தான் பதி என்று சைவ சிந்தாந்தம் குறிப்பிடுகிறது. இது அநாதியானது. அதாவது, பிறப்பு, இறப்பு, அழிவு என்று எதுவும் இல்லாதது.

 

நாமெல்லாம் யார் ?

அநாதியான இறைவனைப் போல, அநாதியாக இன்னும் இரண்டு பொருட்கள் உள்ளது. அது தான் எண்ணற்ற உருவமில்லாத உயிர்களும், தளை அல்லது பாசம் எனப்படும் அருவப் பொருளும் ஆகும். உயிர்களின் இயல்பு, அறிவு, இச்சை (விருப்பப்படுதல்), செயல் இந்த மூன்றும். உயிர்களுக்கு அறிவு உண்டு. அந்த அறிவு செயல்படாத வண்ணம், தளையாகிய ஆணவ மலம் மூடியிருக்கிறது. (ட்யூப் டேப்லட்டுக்குள் மருந்து இருப்பது போல்). உயிர்களின் அறிவை செயல்பட வைக்கவே, இறைவன் கருணை கொண்டு, அதற்கு தன்னுடைய மாயை என்ற சக்தியிலிருந்து இந்து உலகையும் பிரபஞ்சத்தையும் படைக்கிறான். (ஒரு நுண்ணிய விதைக்குள்ளிருந்து பெரிய ஆலமரம் முளைத்து வருவது போல், மாயை என்று அருவ நுண்பொருளில் இருந்து இந்த பிரபஞ்சம் விரிந்து வளர்ந்து வருகிறது.) நம்மை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி நம் அறிவை விளங்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துகிறான் இறைவன். பக்குவப்பட்ட உயிர்களுக்கு வீடுபேறு (முக்தி) அளித்து தடையற்ற பேரின்பத்தை வழங்குகிறான். இந்த அறிவு விளங்க விளங்க, நாம் இறைவனை அடையாளங் கொண்டு அவனுக்கு நன்றி உரைத்து, அவனைப் போற்றி வழிபட வேண்டும்.

 

திருமால், பிரம்மன், இந்திரன், அக்னி இவர்கள் எல்லாம் யார் ?

படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை இறைவன் செய்து, இந்த பிரபஞ்சத்தை இயக்கி, உயிர்களை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி அறிவை விளங்க வைக்கிறான். இந்த தொழில்கள் அனைத்தையும் அவனே செய்ய வல்லவனாயினும், உயிர்களுக்கு அறிவு விளங்குதற் பொருட்டு மேன்மை பெற்ற உயிர்களுக்கு இந்த தொழிலைச் செய்யும் தகுதியை வழங்கி அவற்றை உய்வடையச் செய்கிறான். திருமால், பிரம்மன் போன்ற அனைத்தும் இறைவன் கொடுத்துள்ள பதவியாகும். மேன்மை பெற்ற உயிர்கள் குறிப்பிட்ட காலம் வரை இந்த பதவி வகிக்கும்.

 

நாம் யாரை வணங்க வேண்டும் ?  யாரை வழிபாடு செய்ய வேண்டும் ?

வணங்குதல் என்பது நாம் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும் என்பதை முன்னமே பார்த்தோம். வழிபாடு என்பது இறைவனைப் போற்றித் துதிப்பது. நாம் அனைவரும் வழிபாடு செய்ய வேண்டியது அந்த ஒரேயொரு பரம்பொருளை மட்டும் தான். வேறு எவருக்கும் வழிபாடு செய்யப்படும் தகுதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் வணங்கலாம். அதாவது மரியாதை நிமித்தமாக, வரவேற்கும் நிமித்தமாக, நன்றி சொல்லும் நிமித்தமாக, வாழ்த்தும் நிமித்தமாக என்று இத்தனை பொருளிலும் நாம் யாரையும் வணங்கலாம். ஆனால் தொழுதல் மற்றும் வழிபாடு இறைவனாகிய பரம்பொருள் ஒருவனுக்கு மட்டுமே. நம் தாய் தந்தையர், நம் குலதெய்வம், நம் ஊரைக் காக்கும் சாமி, நம் ஆசிரியர், குரு என்று எவரையும் வணங்கிக் கொள்ளலாம்.

 

இதில் இன்னுமொரு பக்குவ நிலை உள்ளது. இது மிகவும் அளப்பரியது, நுட்பமானது. உயிர்களாகிய நமக்கு சிற்றறிவு சொந்தமாக இருந்தாலும், இறைவனாகிய பரம்பொருளின் உதவியினாலேயே நமக்கு உடல் கொடுக்கப்பட்டு, அதற்கு இயக்கமும் கொடுக்கப்பட்டு, அதனால் வரும் அறிவையும் நமக்கு இறைவனே உணர்த்தி நம்மை இயக்குகிறான். அதாவது, அந்த பரம்பொருள், நம்மோடு ஒன்றாகவும், உடனாகவும் நம் உயிரில் கலந்து இருக்கிறான். நம் உயிரில் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலனாது இறைவன் நமக்கு அளித்த கொடை. அல்லது அருள். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால், அது அந்த உயிர் செய்த வினைகளின் காரணமாக, இறைவன் அந்த உயிருக்கு அளித்த அருள். இதனாலேயே இறந்து போன எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பிய திருஞானசம்பந்தருக்கு பூம்பாவை இறைவனின் அருளாகத் தோன்றினாள். ஆகையாலே, அவளை மணக்கவும் மறுத்தார். இறைவனாகிய பரம்பொருள் எங்கும் வியாபித்திருப்பதால், வைகை ஆற்றில் கிடந்த உருண்டைக் கற்கள் அனைத்தும் திருஞானசம்பந்தருக்கு சிவலிங்கத் திருமேனியாய்த் தோன்றியது. அவர் ஆற்றைக் கடக்காமலேயே நின்று பதிகம் பாடினார். மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தின் மறைந்தது பார்முதல் பூதம் என்கிறார் திருமூலர்பிரான். அருவமான உயிர்களும், மூன்று மலங்களை உள்ளடக்கிய பாசமும் தவிர, மற்ற யாவும் சிவபிரானின் திருவருளால் உருவானது. அவை யாவும் சிவனின் திருவருள். அந்த ஞானிகளில் பக்குவ கண்களுக்கு அவை அனைத்தும் சிவபிரானின் அருளாகவும் சிவபிரானாகவுமே தோன்றும். அவர்கள் எங்கும் வியாபித்திருக்கும் சிவபிரானையே வணங்கித் தொழுவார்கள். சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்குவர்.

 

இனி வரும் நாட்களில் நாம் செய்ய வேண்டியது யாது ?

  1. இல்லறவாசிகள் இல்லற கடமைகள் அனைத்தும் சரியாக செய்ய வேண்டும்.
  2. தினமும் திருமுறை அறிந்துணர்ந்து ஓத வேண்டும்.
  3. திருமுறை மற்றும் சாத்திர நூற்களைக் கற்க வேண்டும்.
  4. சிவஞானத்தைத் தேட வேண்டும். தேடத் தேடஅது பிடிபடும். தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே என்பது திருமூலர் வாக்கு. சிவ சொற்பொழிவுகள் கேட்க வேண்டும். திருவிழாக்கள் பார்க்க வேண்டும்.
  5. சிவன் மீதும் சிவனடியார்கள் மீதும் மிகுந்த அன்பு கொள்ள வேண்டும். சிவனடியார்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்கள் கூட்டத்திலேயே இருக்க வேண்டும்.
  6. திருக்கோவில்களை சிவனாகவே எண்ணி தினமும் வழிபட வேண்டும்.
  7. சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்க வேண்டும். நம்மால் இயன்ற தொண்டுகளை, சிவன் கோவிலுக்கும் சிவனடியார்களுக்கும் செய்ய வேண்டும்.
  8. நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள். அவ்வாறு தமது வாழ்கையையே வழிபாடாக இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் நாயன்மார்கள். அவர்களின் வரலாற்றை படித்து அவர்களைப் போலவும் வாழ முயற்சி செய்ய வேண்டும். நம் சமயத்தைப் பாதுகாத்திட வேண்டும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ முழக்கம் எவை ? உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள் 5/5 (2)

சைவ முழக்கங்கள் எவை ?

உலகின் உயர்ந்த சமயமாம் சைவ சமயத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவர் கடமையாகும். நம் எண்ணங்களே செயல்களாக உருவெடுக்கும். ஆகையால், தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களையே சிந்தித்து மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.

சிவம் என்றாலே பேரானந்தம். அந்த சிவனையே சிந்தித்து இருக்கும் போது நாமும் சிவத்தோடு ஒன்றி பேரானந்தம் காண்போம். அவ்வாறாக, நாம் காணும் இடமெல்லாம் சிவம் தெரிந்தால், நம்மை விட பாக்கியசாலி யார் உளர் ? சைவ முழக்கங்களையும், சைவ சிந்தனைகளையும் நாம் காணும் இடம் எங்கும் வியாபித்திருந்தால், நம் சிந்தனைகளை அது நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும் அல்லவா ?

நம் இல்லங்கள், பொது இடங்கள், கோவில்கள், கார், மோட்டார் வாகனங்களின் முன் பின் பக்கங்கள் என்று சைவ முழக்கங்களை நாம் எழுதி வைக்க, அது நம்மைத் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும். மேலும், நமக்கு மட்டுமின்றி காண்போர் யாவருக்கும் அது அதே சிந்தனை அனுபவத்தைத் தந்து பல்கிப் பெருகும். அவ்வாறாக எழுதி வைக்க சில வாசகங்கள் இங்கே. எழுதுங்கள், ஒட்டுங்கள், படியுங்கள், சிந்தியுங்கள், அனுபவியுங்கள், இன்பமாய் இருங்கள். திருச்சிற்றம்பலம்.

சிவனொடு ஒப்ப தெய்வம் தேடினும் இல்லை.

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

திருமுறையே வாழ்வியல் வெளிச்சம்.

திருமுறையே வாழ்வின் நெறிமுறை.

திருமுறையே சைவ நெறிக் கருவூலம்.

63 நாயன்மார்களே நமது வாழ்வின் வழிகாட்டி

நால்வர் நெறியே நமது கொள்கை.

இறைவன் ஒருவன் ஒருவனே. அவனே சிவபெருமான்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியே சிவம்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே.

சிவசிவ என்றிட தீவினை மாளும்

நாதன் நாமம் நமசிவாயவே.

ஆளாவது எந்நாளோ திருக்காளத்தி அப்பனுக்கே

63 நாயன்மார்கள் மலரடிகள் போற்றி போற்றி

நால்வர் மலரடிகள் போற்றி போற்றி

சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி போற்றி

திருக்கோவில் தூய்மை செய்வோம். அகக்கோவில் தூய்மை அடையும்.

சைவ சமயமே உலகின் சமயம்.

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

கங்காளன் பூசும் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வீரே.

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்.

பன்னிரு திருமுறையே தமிழ் வேதம்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே.

பிறப்பு இறப்பு முதலும் முடிவும் இல்லாத சிவபெருமான் ஒருவனே இறைவன்.

சிவாயநம என்பாரை அபாயம் என்றும் நெருங்காது.

இறைவன் உயிர்களோடு ஒன்றாய் உடனாய் வேறாய் இருக்கிறான்.

மானுடப் பிறவி சிவபெருமானைத் தொழுவதற்கே.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் சிவபெருமான்

சிவாலயங்களை சேவிப்போம். செல்வம் வளரும் குறையாது.

அரகர நமப் பார்வதி பதையே 

    அரகர மகாதேவ நமக

தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!     

    பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி!

    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!    

    சீரார் திருவையாறா போற்றி!

தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி!  

    இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!

குவளைக் கண்ணி கூறன் காண்க!

    அவளுந் தானும் உடனே காண்க!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

    கண்ணாரமுதக் கடலே போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி

    கயிலை மலையானே போற்றி போற்றி!

சிவசிவ சிவசிவ சிவசிவ

படிப்போம் – தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருக்குறள் திருமுறை

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம்.

Please rate this

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ? 5/5 (3)

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ?

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.

2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.

3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது

4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.

5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.

6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.

7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.

8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

Please rate this

சிவஞானபோதம் சிந்தனைகள் சில 4.75/5 (4)

சிவஞானபோதம் சிந்தனைகள் சில…

சிவஞானபோதம் இன்று நம் கைகளில் இருப்பது எப்படி ? சிவஆகமங்கள் எங்கிருந்து நமக்கு வந்தது ?
சைவ சமயம் அரிய பெரும் அளவிலா ஞானமுடைத்து என்பதை நாம் அறிவோம். காலச் சுழலில், இன்றைய நாளில் ஓர் எறும்பாய் உயிர்பெற்று அலைந்து கொண்டிருக்கும் நமக்கு அரிய பெரும் பரிசாக சிவஞானம் பற்றிய உண்மைகள் கிடைத்துள்ளது. இவற்றை நமக்கு அருளியது யார் ? எப்படி நமக்கு கிட்டியது ?

பிறப்பு இறப்பும் முதலும் முடிவும் இல்லாத பரமசிவனார் உயிர்கள் மீது பெரும் கருணை கொண்டு சிவஞானத்தை போதித்தார். சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவரது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம். சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

திருநந்திதேவர் சிவாகமங்களின் உண்மையை சனற்குமார முனிவருக்கு உபதேசித்தார். அவர் அவற்றை சத்தியஞானதரிசினிகளுக்கும், அவர் தம் மாணவர் பரஞ்சோதி முனிவருக்கும் உபதேசித்தனர். திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் தேவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அகச்சந்தானக்குரவர் எனப்படுவர்.

பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண வரும் போது 2 வயது குழந்தையாகிய மெய்கண்டாருக்கு திருவருளின் படி உபதேசித்தார். மெய்கண்டாரின் சீடரானவர் சகலஆகம பண்டிதரான அருணந்திசிவம். அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். அவரின் சீடர் உமாபதிசிவம். இவர்கள் நால்வரும் பூதபரம்பரையை சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் புறச்சந்தானக்குரவர் எனப்படுவர். உமாபதிசிவத்தின் சீடர் அருள்நமச்சிவாயர். அவரது சீடர் சித்தர் சிவப்பிரகாசர். அவரது சீடர் நமச்சிவாய மூர்த்திகள். இவரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவி, இன்றும் குருபரம்பரையாக சைவ சமயத்தை உய்வித்து வருகின்றனர். மறைஞான சம்பந்தரின் சீடரான மச்சுச்செட்டியார் என்பவரின் 8 ஆவது வழி சீடரான குருஞானசம்பந்தர் என்பவர் தருமபுரம் ஆதீனத்தை நிறுவினார். இவர்களும் சைவ சமயத்திற்கு தலைமுறை தலைமுறையாக அரும் பெரும் தொண்டாற்றி வருகின்றனர்.
அகச்சந்தான குரவர்களும் அவர்களின் சீடர்களும் நமக்கு அருளிச் செய்ததே 14 சாத்திர நூல்களாகும். கிடைத்தற்கரிய ஞான புதையல்களை நாம் அறிந்து படித்து பயன்பெறுவோம்.

சிவஞானபோதம் நூலின் நோக்கம்

வரும் சில மாதங்களில் உலகிலேயே தத்துவ துறையில் தலைசிறந்த அறிவு நூலாகிய, சைவ சித்தாந்தத்தின் கருத்துக்களை முழுமையாக நமக்கு உணர்த்தக்கூடிய சிவஞான போதம் என்னும் நூலில் இருந்து பல கருத்துக்களை சிந்திக்க இருக்கிறோம். சைவ சமயத்தில் 14 சாத்திர நூல்களுள்ளும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தலையாய நூலாகும். இந்நூலை தொட்டு அறிவதற்கே மிகப் பெரும் புண்ணியம் செய்திருந்து சிவனருள் பெற்றிருக்க வேண்டும் என்பர் சான்றோர். அவ்வாறாயின் இந்நூலின் பெருமையை நம்மால் ஒருவாறு யூகிக்க இயலும். இந்நூல் அளவில் மிகவும் சிறியது. சொல் சுருக்கமும், பொருள் பெருக்கமும் உடையது.
இந்த நூலைச் செய்தவர் மெய்கண்டார். ஆசிரியர் மெய்கண்டார் இந்நூலின் பெயர் இது என்று எங்கும் சுட்டவில்லை. அவரது மாணவராகிய அருள்நந்தி சிவம் தம் ஆசிரியப்பிரானாகிய மெய்கண்டாரையும் அவரது நூலையும் தம் நூலிற் குறிப்பிடுகிறார்; ஆயின் நூற்பெயரைக் கிளந்து கூறாமல் மெய்கண்டான் நூல் என்றே கூறிச் செல்கிறார்.

அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.

உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.

அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.

Please rate this

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ? 5/5 (3)

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ?

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.

2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.

3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது

4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.

5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.

6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.

7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.

8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

Please rate this

மாகேசுரர்கள் யார் ? மாகேசுர பூசை என்றால் என்ன ? 4.75/5 (4)

சிவமயம்

மாகேசுர பூசை என்றால் என்ன ?

மாகேசுர பூசை – பெயர் விளக்கம்
ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூசை மகேஸ்வர பூசை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மாகேசுரர் எனப்படுவர். அத்தகைய பெருமை உடைய மாகேசுரர்களுக்கு செய்யும் பூசை மாகேசுர பூசை.

மாகேசுர பூசையின் பெருமை
புண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மாகேசுர பூசை.
மாகேசுர பூசை எப்படி செய்யப்படுகிறது ?
மாகேசுர பூசையாவது, மாகேசுரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மாகேசுரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும். சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை வசதியான இடத்தில் அமரச் செய்து, பூசை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும்.  சிவதருமோத்தரம், “புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே.” அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.

இத்தனை பெரும் சிறப்பு பெற்றது மாகேசுர பூசை. இந்த மாகேசுர பூசையை தினம் தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மாகேசுர பூசை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர்புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரேஎன்று சிவனை  சிறிதும் நோகாமல் தொடர்ந்து மாகேசுர பூசை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையாளன் சிவபெருமான்.

உருத்திராக்கங்களை பல்வேறு அபிசேடங்கள் செய்து அதை இறைவனுக்கு ஆவாகனம் செய்யும் போது, சிவபெருமானே அதை ஏற்றுக்கொண்டு தன் அருளை வழங்குகிறார்.

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

மாகேசுர பூசையின் பெருமை

Please rate this

சிலந்தி அரசனானது எப்படி ? 4/5 (1)

சிலந்தி அரசனான வரலாறு

மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலே. ஆனால் ஏனைய பிறவிகள் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட உடல், கருவிகள், உலகம், அனுபவங்கள் வாயிலாகப் பக்குவ முதிர்ச்சி பெற்று பின்னர் மேலான மனிதப்பிறவியில் பிறந்தே இறையை அடைதல் வேண்டும். ஆனாலும் இதற்கு விதி விலக்குகளும் உள்ளன. ஈ இறைவனை வழிபட்டு நற்கதி அடைந்த தலம் ஈங்கோய் மலை. யானையும் சிலந்தியும் வழிபட்டு நற்கதி அடைந்த தலம் திருவானைக்கா. திருவிளையாடற் புராணத்தின் நாரைக்கு உபதேசித்த படலமும், கரிக்குருவிக்கு முத்தி கொடுத்த படலமும் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த படலமும் விலங்குகள், பறவைகள்கூட இறையை அடைவதற்கும் புண்ணிய பாவ காரியங்களுக்கும் விதி விலக்கல்ல என்று நமக்கு கூறுகின்றன.

திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம்தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.
இங்கு முன்னர் ஜம்பு முனிவர் பூசை செய்த லிங்கத்துக்கு மேலே அங்கிருந்த சிலந்தி தினமும் விதானம் போல வலை பின்னி அதையே தன் வழிபாடாகச் செய்து வந்தது. அங்கு ஓர் யானையும் தினமும் நீரினால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. யானையின் நித்திய வழிபாடு சிலந்தி பின்னிய வலையைத் தினமும் சிதைத்தது. இதனால் ஆற்றாது கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையில் துதிக்கையினுள் புகுந்து கடிந்துவிட்டது. வலி தாங்காத யானையும் துதிக்கையை அடித்து மோதி இறந்தது. அதனுள் இருந்த சிலந்தியும் மாண்டது. இச் சிலந்தியே அடுத்த பிறப்பில் சோழ இராஜ குடும்பத்தில் பிறந்தது.

இவன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாக்க் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழ்ந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இன்றைய மருத்துவத்தில் காலந்தாழ்த்திப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இச் செங்கண்ணை Sub-conjunctival haemorrhage என்று கூறுகின்றனர். இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை ரெக்தாக்ஷ சோல என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள். இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.

பெரியாழ்வார், நாச்சியார் கோயில் (திரு நறையூர்) பெருமாளைப் பாடும்போது எழுபது சிவாலயங்கள் எழுப்பிய சோழனால் கட்டப்பட்ட ஆலயம் என்று சிறப்பித்துப் பாடுகின்றார். இவ்வாறு பல வேறு வகையான கோவில் கட்டட அமைப்புகளைப் பற்றி பின்வரும் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலும் கூறுகின்றது.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
     திருநாவுக்கரசர் தேவாரம்-


அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

 

Please rate this

63 நாயன்மார்கள் செய்த தொண்டு யாது ? 4.56/5 (16)

சிவமயம்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக்கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர். இன்றும் எண்ணற்றவர் உள்ளனர். வரும் காலத்திலும் இருப்பர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விரித்து, சேக்கிழார் சுவாமிகள் 12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார். 12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம். இங்கு ஒரு வரி குறிப்பே தரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் நாயன்மார்களின் வரலாறு முழுமையும் சேக்கிழார் சுவாமிகள் கூற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது பெரியபுராணம் புத்தகம் வாங்கி படிக்க வேண்டும். திருச்சிற்றம்பலம்.

  1. தில்லைவாழ் அந்தணர்: தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் 3000 பேர்.
  2. திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.
  3. இயற்பகை நாயனார்: யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
  4. இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் மாகேசுவர பூசை செய்து அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.
  5. மெய்ப்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.
  6. விறன்மிண்டர்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.
  7. அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.
  8. எறிபத்த நாயனார்: சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.
  9. ஏனாதிநாத நாயனார்: வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்..
  10. கண்ணப்பர்: சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.
  11. குங்கிலியக் கலயனார்: நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.
  12. மானக்கஞ்சாறன்: தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.
  13. அரிவாட்டாயர்: நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்.
  14. ஆனாய நாயனார்: பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
  15. மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்.
  16. முருக நாயனார்: தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.
  17. உருத்திர பசுபதியார்: நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.
  18. திருநாளைப் போவார் (நந்தனார்): பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
  19. திருக்குறிப்புத் தொண்டர்: தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.
  20. சண்டேசுவரர்: சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.
  21. திருநாவுக்கரசு சுவாமிகள்: சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.
  22. குலச்சிறை நாயனார்: கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
  23. பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
  24. காரைக்காலம்மையார்: சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும் சைவத்திற்கும் பங்களித்தார்.
  25. அப்பூதியடிகளார்:திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்.
  26. திருநீல நக்க நாயனார்: ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தியை வாயில் ஊதிய மனைவியை துறக்க முயன்றவர். திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோகிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
  27. நமிநந்தியடிகள் நாயனார்: தினமும் திருவாரூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.
  28. திருஞானசம்பந்தர்: பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர்.
  29. ஏயர்கோன்கலிக்காமர்: சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை நீங்கப்பெற்ற வேளாளர்.
  30. திருமூல நாயனார்: கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்.
  31. தண்டியடிகள்: திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி தொண்டு செய்தவர்..
  32. மூர்க்க நாயனார்: சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.
  33. சோமாசி மாற நாயனார்:சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
  34. சாக்கிய நாயனார்: புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.
  35. சிறப்புலி நாயனார்:திருவைந்தெழுத்து ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.
  36. சிறுதொண்டர்: சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.
  37. கழறிற்றறிவார்: உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்.
  38. கணநாதர்: சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.
  39. கூற்றுவ நாயனார்: பஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.
  40. பொய்யடிமையில்லாத புலவர்: சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.
  41. புகழ்ச் சோழர்: எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.
  42. நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்.
  43. அதிபத்தர்: நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.
  44. கலிக்கம்பர்: தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
  45. கலியநாயனார்: தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.
  46. சத்தி நாயனார்: சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
  47. ஐயடிகள் காடவர்கோன்: ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.
  48. கணம்புல்ல நாயனார்: சிவாலயத்தில் திருவிளக்கேற்றி தோத்திரம் செய்து வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.
  49. காரி நாயனார்: “காரிக் கோவை” நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.
  50. நின்றசீர் நெடுமாறன்: கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.
  51. வாயிலார்: சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர்.
  52. முனையடுவார்: கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.
  53. கழற்சிங்க நாயனார்: போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.
  54. இடங்கழி நாயனார்: சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.
  55. செருத்துணை நாயனார்: கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.
  56. புகழ்த்துணை நாயனார்: சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.
  57. கோட்புலி நாயனார்: சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.
  58. பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.
  59. பரமனையே பாடுவார்: சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள், பிற தெய்வத்தைப் பாடாத தொகையடியார்கள்.
  60. திருவாரூர்ப் பிறந்தார்: திருவாரூரில் பிறந்த அனைவரும் திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர்.
  61. முப்போதும் திருமேனி தீண்டுவார்:மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.
  62. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.
  63. முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.
  64. அப்பாலும் அடிசார்ந்தார்: முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள சிவனடியார்கள்.
  65. பூசலார் நாயனார்: மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர்.
  66. மங்கையர்க்கரசியார்: நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.
  67. நேச நாயனார்: சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.
  68. கோச்செங்கோட் சோழ நாயனார்: திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.
  69. திருநீலகண்ட யாழ்ப்பாணர்: திருஞானசம்பந்தரின் திருக்கூட்டத்தோடு இணைந்து யாழ் இசைத்துப் பாடிய பாணர்.
  70. சடைய நாயனார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.
  71. இசை ஞானியார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்.
  72. சுந்தர மூர்த்தி நாயனார்: சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

ஓம் நமசிவாய

சிவனடியார்களும், சிவதொண்டு புரிந்தவர்களும் சாதிபேதம் பார்க்கவில்லை. இந்த 63 நாயன்மார்கள் 9 தொகை அடியார்களும் பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்கள். நிலையில்லாத இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி ஓடும் நாம், நிலையான வீடுபேற்றையும் இன்பத்தையும் பெற சிவதொண்டு புரிவோம். சிவனருள் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.

63 நாயன்மார்கள் செய்த சிவதொண்டுகள்

Please rate this

சைவ சமயத்தின் தலையாய நூல்கள் எவை ? 4.76/5 (17)

சைவ சமயத்தின் தலையாய நூல்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா ?

சைவ சமய நூல்கள் தொகுப்பு.

எந்த ஒரு கிறிஸ்தவரைக் கேட்டால், பைபிள் தான் எங்கள் நூல், புனிதமான நூல் என்பார். ஒரு முசுலீமைக் கேட்டால் குரான் என்பார். நம் நூல்கள் எவை என்று தெரியாமலேயே இன்று பெரும்பான்மையோர் உள்ளனர். அறியாமையின் தாண்டவத்தைப் பார்த்தீர்களா ?

நம் சமயத்தைப் பற்றிய அடிப்படை அறிவு/கல்வி இல்லாமையினாலேயே நமக்கு இந்த இழி நிலை. அதனால் தான் உரக்க கூறுகிறேன், கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன். சமயகல்வி இல்லாதவன் உயிர் இல்லாதவன். நம் சமயங்களின் நூல்கள் எவை என்று நாம் அறிந்து கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக படித்து ஞானத்தைப் பெறுவது நாம் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களில் ஒன்று. நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப் பட்டவை. இவை எவற்றிலும் கீழ்த்தரமான வார்த்தைகள் ஒன்று கூட கிடையாது. யாரையும் அழிக்கச் சொல்லும் தீமையான வார்த்தைகளோ, வாக்கியங்களோ ஒன்று கூட கிடையாது. இவை எக்காலத்தையும் சாராமல், காலத்தை வென்றவை. அதாவது எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மையை கொண்டவை. இனி வரும் ஆயிரமாயிரம் காலத்திற்கும் இது பொருந்தும். இது போன்று எந்த சமயங்களிலும் கிடையாது. இது இறைவனின் திருவருள் ஒன்றினாலேயே கூடும். அப்படிப்பட்ட பெருமையுடைய, என்றைக்கும் பொருந்தக்கூடிய, இதுவரை ஒரு சிறு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே இன்றைக்கும் பொருந்துவதாக அமைந்த நூல்கள் அத்தனையும் படிக்க நாம் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் ? அந்த நூல்கள் எவை என்று அறிந்து கொண்டு அவற்றை படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

அநாதியானதும், அநாதியான முதல் நூல்களை உடையதும் எனக் கொள்ளப்படும் சைவ சமயத்தின் பிரமாண நூல்கள்

திருநெறி

  • வேதம் 4 – அருநெறிய மறை: உலகிற்கு வேண்டிய பொது அறம் சொல்வது
  • சிவ ஆகமம் 28 – பெருநெறி: சத்திநிபாதத்திற்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது

திருமுறை சார்ந்த நூல்கள்

பன்னிரு திருமுறை 12 – தோத்திரம்
திருக்கடைக்காப்பு (திருமுறை 1,2,3 திருஞானசம்பந்தர்)

  • தேவாரம் (திருமுறை 4,5,6, திருநாவுக்கரசர்)
  • திருப்பாட்டு (திருமுறை 7, சுந்தரர்)
  • திருவாசகம், திருக்கோவையார் (திருமுறை 8, மாணிக்கவாசகர்)
  • திருவிசைப்பா, திருப்பல்லாண்டு (திருமுறை 9, 9 ஆசிரியர்கள்)
  • திருமந்திரம் (திருமுறை10, திருமூலர்) பிரபந்தம் (திருமுறை 11, 12 ஆசிரியர்கள்)
  • பெரியபுராணம் (திருமுறை 12, சேக்கிழார்)
  • திருத்தொண்டர் புராணசாரம்
  • திருப்பதிக்கோவை
  • திருப்பதிகக்கோவை
  • திருமுறை கண்டபுராணம்
  • சேக்கிழார் புராணம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை

சைவ சமய சாத்திர நூல்கள்

  1. திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
  2. திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
  3. சிவஞானபோதம் – மெய்கண்ட தேவநாயனார்
  4. சிவஞான சித்தியார் – திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
  5. இருபா இருபஃது – அருள்நந்திசிவாசாரியார்
  6. உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்
  7. சிவப்பிரகாசம் – உமாபதிசிவாசாரியார்
  8. திருவருட்பயன் – உமாபதிசிவாசாரியார்
  9. வினாவெண்பா – உமாபதிசிவாசாரியார்
  10. போற்றிப்பஃறொடை – உமாபதிசிவாசாரியார்
  11. உண்மைநெறி விளக்கம் – உமாபதிசிவாசாரியார்
  12. கொடிப்பாட்டு – உமாபதிசிவாசாரியார்
  13. நெஞ்சுவிடுதூது – உமாபதிசிவாசாரியார்
  14. சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவாசாரியார்

புராண நூல்கள்

  • திருவிளையாடற் புராணம்
  • மதுரைக் கலம்பகம்
  • மதுரைக் கோவை
  • மதுரை மாலை
  • காஞ்சிப் புராணம்
  • கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
  • கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
  • சிதம்பர மும்மணிக் கோவை
  • திருவாரூர் நான்மணி மாலை
  • சிதம்பர செய்யுட் கோவை
  • காசிக் கலம்பகம்
  • திருக்குற்றாலக் குறவஞ்சி
  • பிரபந்தத்திரட்டு
  • இரட்டைமணி மாலை
  • கந்த புராணம்
  • பிற நூல்கள்
  • சித்தாந்த சாத்திரம்
  • சொக்கநாத வெண்பா
  • சொக்கநாத கலித்துறை
  • சிவபோக சாரம்
  • முத்தி நிச்சயம்
  • சோடசகலாப் பிராத சட்கம்
  • திருப்புகழ்
  • முத்துத்தாண்டவர் பாடல்கள்
  • நீலகண்டசிவன் பாடல்கள்
  • நடராசபத்து

வீரசைவ நூல்கள்

  • சித்தாந்த சிகாமணி
  • பிரபுலிங்க லீலை
  • ஏசு மத நிராகரணம்
  • இட்டலிங்க அபிடேகமாலை
  • கைத்தல மாலை
  • குறுங்கழி நெடில்
  • நெடுங்கழி நெடில்
  • நிரஞ்சன மாலை
  • பழமலை அந்தாதி
  • பிக்ஷாடன நவமணி மாலை
  • சிவநாம மகிமை
  • வேதாந்த சூடாமணி
  • திருத்தொண்டர்மாலை
  • ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்

ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பட்டினத்தார், தாயுமானார், சிவப்பிரகாசர், குமரகுருபரர், சைவத் திருமடத்து தலைவர்கள், அருளாளர்கள், ஔவையார், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், கிருஷ்ணபாரதி, சுத்தானந்த பாரதி, 18 சித்தர்கள் ஆகியோரது நூல்கள்

இன்னும் எண்ணற்ற நூல்களும் உள.

இணைத்துள்ள படங்களை B4 தாளில் அச்சிட்டு உங்கள் கோவில்களில் ஒட்டி வையுங்கள். இதுவும் ஒரு சிவதொண்டே. நமசிவாய.

அச்சிட ஏதுவான கருப்பு வெள்ளைப்படம்.

சைவ சமய சாத்திர நூல்கள்

வண்ணப்படம்

சைவ சமய சாத்திர நூல்கள்

திருச்சிற்றம்பலம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

உண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும் 4.57/5 (7)

 

உண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும்

உண்மை விளக்கம் பற்றி சைவ சித்தாந்த வகுப்பு ஆசிரியர் 51 கேள்விகள் கொடுத்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த அதன் விடைகளை இங்கு தொகுத்துள்ளேன். நான் இதற்கு விடை அளித்தாலும், நீங்கள் உண்மை விளக்கம் புத்தகத்தை படித்து. 54 செய்யுள்களையும் அனுபவித்து நாம் கூறும் பதிலும் சரிதானா என்று பார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். வேறு கருத்துக்கள் இருந்தாலும் கூறுங்கள்.

  1. உண்மை விளக்கம் என்பதில் உண்மை என்பதன் பொருள் என்ன ?

பதில்: சைவ சமயம் என்றும் அழியாப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். இறை, உயிர், தளை என்பதே அந்த மூன்று பொருள்கள். இவற்றை பதி, பசு, பாசம் எனவும் கூறுவர். இந்த மூன்றுமே அநாதியானது. உண்மை என்பது வடமொழியில் தத்துவம் எனப்படும். எப்பொருளையும் இரு வகையாக அறியலாம். ஒன்று அதன் பொதுத் தன்மையை உணர்வது. மற்றொன்று, அதன் உண்மை தன்மையை உணர்வது. முப்பொருளின் உண்மையை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆகவே, உண்மை என்பது முப்பொருளின் உண்மை தன்மையை குறிக்கிறது.

  1. இந்நூலின் ஆசிரியர் யார் ? அவருடைய ஆசிரியர் யார் ?

உண்மை விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் மணவாசகங்கடந்தார் என்பவர். அவருடைய ஆசிரியர், சந்தான குரவர்களில் முதற்குரவராகிய மெய்கண்டார் அல்லது மெய்கண்ட தேவ நாயனார். இவர் வரலாறு தெரியவில்லை. அவரது ஊர் திருவதிகை என்பது மட்டும் குறிப்பு உள்ளது.

  1. இந்த நூலின் தனிச் சிறப்பு என்ன ?

முப்பொருளின் இயல்புகளை ஏனைய சாத்திர நூல்களும் விளக்குகின்றன. இருப்பினும் உண்மை விளக்கம் நூலின் தனிச்சிறப்பாவது, அம்பலவாணர் ஆடும் அருட்கூத்தின் உண்மையை விரிவாக விளக்கிக் காட்டுகிறது. இது ஏனைய நூல்களில் விளக்கப்படாதது. இதுவே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

  1. இந்த நூல் எதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது ?

“வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா உண்மைவிளக்கம் உரை செய்ய”  என்பதன் மூலம், சிவாகமங்கள் கூறும் உண்மைகளை வழுவாமல் அப்படியே உரைக்கப் புகும் நூல் உண்மை விளக்கமாகும். உபநிடதங்களின் தெளிபொருளை விளக்குவது சிவ ஆகமங்கள். அந்த சிவாகமங்களில் உணர்த்தப்படும் முப்பொருள் உண்மையை வழுவாமல் அப்படியே உணர்த்த முற்படுவது இந்த நூல்.

  1. விநாயகரை “அந்தி நிறத்தன்” என்று கூறுவதன் பொருள் என்ன ?

செவ்வானம் போன்ற சிவந்த ஒளியை உடையவர் விநாயகர் என்பது பொருள்.

  1. தம் ஞானாசிரியரின் தன்மைகளாக இந்நூலாசிரியர் கூறுவது யாது ?

இந்த உலகம், உடம்பு, முப்பத்தாறு தத்துவமுமே மெய் என்று எண்ணுவது உயிரின் இயல்பு. ஆனால், அவை உண்மையன்று. அவை பொய். அந்த பொய்யை பொய் என்று நமக்கு உணர்த்த வல்லவர் தமது ஞானாசிரியன். நிலையில்லாத அந்த பொய்யான தோற்றங்களைக் கடந்த இறைவனே மெய். பொய்யை அகற்றினால் மெய் வெளிப்படும். அந்த மெய் மிகுந்த ஆனந்தப் பொருளாம். அந்த பொய்யை அகற்றி மெய்யை உணர்த்த வல்லவர் தமது ஞானாசிரியன். இவையே தமது ஞானாசிரியரின் தன்மைகளாக நூலாசிரியர் கூறுகிறார்.

  1. சுத்தவினா என்பதன் பொருள் என்ன ?

முழுவதுமாக அறியாமை இருளில் அழுந்தியிருக்கும் போது உயிர்கள் கேவல நிலையில் உள்ளன. அவ்வாறு உள்ள உயிர்கள் இறைவன் கருணையினால் மாயையின் உதவியோடு மயக்கம் சிறிது நீங்கி, இயக்கம் பெற்று சகல நிலையை அடைகிறது. இந்த நிலையில் உலகியல் இன்ப துன்பங்கள் அனுபவிக்கிறது. இவ்வாறு சகல நிலையில் உள்ள உயிர்கள் இறைவன் திருவருளை அறிந்துணர்ந்து மலங்கள் யாவும் நீங்கப் பெற்று இறைவன் திருவருளோடு கூடியிருக்கும் நிலை சுத்த நிலை. அவ்வாறான சுத்தநிலையை எய்தும் விருப்பத்தால் ஆசிரியரிடம் வினாக்களை எழுப்பி பதில் பெற்று அந்நிலையை எய்த விளைவதனால், அவை சுத்தவினா எனப்பட்டது.

  1. ஆறாறு தத்துவங்கள் எதனுடைய காரியப்பாடு ?

மாயை. கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் மாயை. அது இறைவனின் வைப்பு சக்தியாகும். இந்த மாயையிலிருந்து தோன்றியவை தான் முப்பத்தாறு தத்துவங்களும். ஆகவே, முப்பத்தாறு தத்துவங்கள் மாயையின் காரியப்பாடு ஆகும்.

  1. தம் ஞானாசிரியரிடம் கேள்விகள் கேட்கும் போது ஆன்மாவைப் பற்றி என்ன குறிப்பிடுகிறார் ? அதன் பொருள் என்ன ?

ஆசிரியர் “தன்னை” ஆன்மா என்று உணர்ந்து அந்த ஆன்மாவின் தன்மையை விளக்க கேட்கும் போது, “நான் ஏது” என்கிறார். நான் என்பது ஆன்மாவைக் குறிக்கிறது. இவ்வாறு ஆன்மாவின் தன்மையை விளக்குமாறு கேட்கிறார். இந்த ஆன்மாவானது ஆணவம் கன்மம் ஆகிய பாசத்தோடு வேறாகாமல் பிணைந்து இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார்.

  1. தான் ஏது என்பதன் பொருள் என்ன ?

தான் என்பது முக்தியைக் குறிக்கிறது. முக்தியின் இயல்புகளை விளக்குமாறு ஆசிரியர் தன் ஞானாசிரியரிடம் வினவுகிறார்.

  1. இந்திரியங்கள், உறுப்புகள் இரண்டும் ஒன்றா ? வெவ்வேறா ? விளக்குக.

இந்திரியங்கள் வேறு. உறுப்புகள் வேறு. உடலில் புறத்தே இருப்பவை உறுப்புகள் எனப்படும். உதாரணம், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு. செவி கேட்கும் தொழிலைச் செய்யும். கண் பார்க்கும் தொழிலைச் செய்யும். இந்திரியங்கள் என்பது இந்த உறுப்புகளில் நின்று அப்புலன்களின் அறிவனவாகிய ஆற்றல்களேயாகும்.  செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவியிந்திரியம் ஆகும். கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண்ணிந்திரியம் ஆகும். இந்திரியங்களே அந்த உறுப்பின் ஆற்றலை உயிருக்கு அறிவிக்கச் செய்யும். ஒரு சிறு உதாரணத்தின் மூலம் இந்த இரண்டையும் எளிதாக உணரலாம்: உயிர் இல்லாத பிணத்தில் உறுப்புகள் இருக்கும், ஆனால், இந்திரியங்கள் இருக்காது. பிணத்தில் கண் இருக்கும். ஆனால் ஒளியை உயிருக்கு அறிவிக்கும் கண்ணிந்திரியம் இருக்காது.

  1. பஞ்ச (தூல) பூதங்களின் குணம், தொழில் யாவை ?
  2. ஆகாயம் – ஓசை
  3. காற்று – ஊறு, ஓசை
  4. நெருப்பு – ஒளி, ஊறு, ஓசை
  5. நீர் – சுவை, ஒளி, ஊறு, ஓசை
  6. நிலம் – நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசைபூதங்கள் குணம் தொழில்
    மண்    திண்மை    பொருளைத் தாங்குதல்
    நீர்    குளிர்ச்சி    பொருளை மென்மைப்படுத்துதல்
    தீ    வெம்மை    பொருளை நீறாக்கி ஒன்றுபடுத்துதல்
    காற்று    அசைவு    பொருளைத் திரட்டுதல்
    வான்    வெளியாதல்    பொருளில் ஊடுருவி நிறைந்து நிற்றல்
  1. தன்மாத்திரை என்றால் என்ன ? அவற்றின் பெயர்களைக் கூறுக.

பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்காக முதலில் சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்ற அந்தக்கரணங்கள் தோன்றுகின்றன. இதில் அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும்: சாத்துவிக குணக்கூறு, இராசத குணகூறு மற்றும் தாமத குணக்கூறு. இதில் பூதாதி அகங்காகரம் எனப் பெயர் பெறும் தாமத குணக்கூறிலிருந்து தன்மாத்திரைகள் தோன்றும்.  அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. இந்த ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து பின்னர் ஐந்து பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் பூதங்கள் பருமையானவை.

தன்மாத்திரை என்ற சொல்லுக்கு *அதனளவில் நிற்பது* என்று பொருள். உதாரணமாக, சுவையை சுவை என்று நேரடியாக அறிய முடியாது. மாறாக, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்று ஏதாவது ஒரு வடிவில் தான் அறிய முடியும். அதே போல, ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது, வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு போன்ற சிறப்பு தன்மையினாலே உணரப் பெறும். இவ்வாறு நிற்கும் பொது நிலையிலேயே அவை தன்மாத்திரைகள் எனப்படுகின்றன.

  1. ஐம்புலன்கள் என்றால் என்ன ? அவற்றின் பெயர்களைக் கூறுக.பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்காக முதலில் சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்ற அந்தக்கரணங்கள் தோன்றுகின்றன. இதில் அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும்: சாத்துவிக குணக்கூறு, இராசத குணகூறு மற்றும் தாமத குணக்கூறு. இதில், தைசத அகங்காரமாகிய சாத்துவிக குணக்கூறிலிருந்து மனம் தோன்றும். அதன் பின்னர் புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும். செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன ஞானேந்திரியங்களாகும். இவை, ஐம்புலன்கள் அல்லது, ஐம்பொறிகள் அல்லது அறிகருவிகள் என்றும் பெயர் பெறும்.
  2. ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் யாவை ?

ஞானேந்திரியங்கள் தோற்றம் பற்றி மேலே பார்த்தோம். செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியன ஞானேந்திரியங்கள். இவை உயிர்க்கு அறிகின்ற ஆற்றலைக் கொடுப்பதனால் ஞானேந்திரியங்கள் என்ற பெயர் பெற்றன. வைகாரிக அகங்காரமாகிய இராசத குணகூறிலிருந்து தோன்றுவது கன்மேந்திரியங்கள். அவை, வாய், கால், கை, கருவாய், எருவாய் என்பன. இவற்றை தொழிற் கருவிகள், செயற்கருவிகள் எனவும் கூறுவர். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன.

  1. இந்திரியங்கள் புலன்களை நுகர்வதால் நமக்கு என்ன பயன் ?

பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்க்காக முதலில் அகக் கருவிகள் தோன்றும். அவை சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக்கரணங்கள். அகங்காரத்தின் சாத்துவிக குண கூறிலிருந்து மனம் தோன்றும். பின்னர் ஞானேந்திரியங்கள் தோன்றும். மனம் அகக்கருவி. ஞானேந்திரியங்கள் புறக்கருவி. மனமாகிய அகக்கருவி, இந்திரியங்களாகிய புறக்கருவிகளை பற்றி நிற்கிறது. இந்திரியங்கள் புலன்களை நுகர்ந்து அதன் மூலம் பெறும் அறிவாற்றலை மனம் பெறுகிறது. மனம் அதை அகக்கருவியாகிய நம் புத்திக்கு தருகிறது. இதனால் நம் ஆன்மாவாகிய உயிர் புலன்களின் மூலம் பெறும் அறிவைப் பெற்று இயக்கம் பெறுகிறது.

  1. அந்தக்கரணங்கள் மூன்றா அல்லது நான்கா ?

அந்தக்கரணங்கள் நான்கு. அவை, சித்தம், புத்தி, அகங்காரம், மனம் ஆகியவையாகும். இவை நான்குமே அகக் கருவிகள் எனப்படும்.

  1. அந்தக்கரணங்களின் துணையால் ஆன்மா பெறுவது என்ன ?

புறத்தே உள்ள புலனை (உதாரணம் கண்) அதற்குரிய பொறியானது கவர்ந்து தர, அதனைப் பற்றி நிற்கும் மனம் அதை புத்திக்கு தர, புத்தி இஃது இன்னது என்று அகங்காரம் இச்செயல்களுக்கு அடிநிலையாக அமைந்து முன்னும் பின்னும் யான் செய்வேன் என்று முந்தியெழும் சித்தம் உற்ற அப்பொருளைப் பற்றி மீள மீள சிந்திக்கும் ஆற்றலை ஆன்மா பெறுகிறது. சுருங்கக் கூறின், ஆன்மா இந்த நான்கு கருவிகளையும் பற்றி நின்று, சிந்திக்கும் ஆற்றல் பெற்று உலகப் பொருட்களை சிறப்பாக உணந்து அவற்றில் அழுந்துகிறது.

  1. மூலப் பிரகிருதி / குணதத்துவம் – இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு ?

பிரகிருதி மாயை மூன்று குண வடிவாய் உள்ளது. சாத்துவிகம், இராசசம், தாமதம் என்பன அந்த மூன்று குணங்கள். பிரகிருதி மாயை இந்த மூன்று குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். நாற்றத்தினை உள்ளடக்கி நிற்கும் அரும்பு போல இது நிற்கும். இந்த மூன்று குணங்களும் வெளிப்படாமல் சூக்குமமாய் உள்ளடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை ஆகும். பின்னர் அம் மூன்று குணங்களும் வெளிப்பட்டுத் தம்முள் சமமான நிலையினதாக நிற்கும். இந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். மூன்று குணங்கள் வெளிப்பட்டு நிற்கும் நிலையை வியத்தம் என்றும், வெளிப்படாமல் நிற்கும் நிலையை அவ்வியத்தம் என்றும் கூறுவர். குண தத்துவத்திற்கு வியத்தம் என்றும் பிரகிருதிக்கும் அவ்வியத்தம் என்ற பெயரும் தெளிவு. இந்த குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும்.

  1. பஞ்ச கஞ்சுகம் என்பவை எவை ? அவற்றின் தொழில் என்ன ?

கஞ்சுகம் என்றால் சட்டை. உயிர்கள் முதலில் ஆணவ மலத்தில் முழுவதுமாக அழுந்தி இருக்கும். உயிர்கள் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டாலன்றி, உலக போகத்தை அறிந்து, அவற்றை நுகர இச்சித்து அதை அடைய முயற்சி செய்யாது. ஆகவே, உயிர்களை ஆணவ மலத்திலிருந்து விடுவிக்க சில கருவிகள் தேவைப்படுகிறது. அவை அசுத்த மாயையிலிருந்து தோன்றுகின்றன. மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் மற்றும் புருடன் என்பன. மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் தாம் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பன.  இவற்றில் அராகம் ஆன்மாவிற்கு இச்சா சக்தியையும், வித்தை ஞான சக்தியையும், கலை கிரியா சக்தியையும் கொடுத்து ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என்று வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனை காலம் நுகர்க என்று எல்லைப்படுத்தும். இந்த ஐந்து கருவிகளும் ஆன்மாவிற்கு இன்றியமையாதனவாய் ஆன்மாவோடு நீங்காமல் சட்டை போல ஒட்டியே இருக்கும். இதுவே பஞ்சகஞ்சுகம் என்று பெயர் பெறும்.

  1. புருடன் என்பது எதைக் குறிக்கிறது ? அது ஒரு தத்துவமா இல்லையா ?

பஞ்சகஞ்சுகம் எனப்படும் ஐந்து சட்டைகளையும் ஆன்மா அணிந்து நிற்கும் நிலையில் புருடன் எனப்படும். இந்நிலையே புருடதத்தவம் எனப்படுகிறது. தத்துவம் என்று கூறப்பட்டாலும் இது ஏனைய தத்துவங்களைப் போல தனித் தத்துவம் அன்று. ஆகவே புருடன் என்பது தனித்தத்துவம் அன்று. அது ஆன்மாவின் நிலை.

  1. ஆன்மா எப்பொழுது பொது வகையில் வினைப் போகத்துக்குத் தகுதி பெறுகிறது ? அது எப்பொழுது சிறப்பு வகையான தகுதி பெறுகிறது ?

பஞ்சகஞ்சுகமாகிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகியவற்றை ஆன்மா அணிந்து நிற்கும் போது புருடன் எனப்படும். இந்த நிலையிலேயே ஆன்மா பொதுவகையில் வினைப் போகத்தை நுகரும் தகுதி பெறுகிறது. பின்னர், பிரகிருதியோடு தொடர்பு கொள்ளும் போது சிறப்பு வகையான தகுதி பெறுகிறது. பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது. அதனால், ஆன்மா பிரகிருதியோடு பொருந்தும் போது புருடனாம் நிலையை சிறப்பாகப் பெறுகிறது. இதனால், காலம் முதலிய ஐந்தினாலே வரும் தகுதி பொதுத் தகுதி என்றும், பிரகிருதியினாலே வரும் தகுதி சிறப்புத் தகுதி என்பதும் விளங்கும்.

  1. வித்யா தத்துவங்கள் எத்தனை ? அவை யாவை ? அவற்றின் தொழில் என்ன ?

வித்யா தத்துவங்கள் ஏழு. தத்துவங்களும் அவற்றின் தொழில்களும்:

தத்துவம்  –  தொழில்

  1. காலம்

இறந்த காலம் – எல்லை

நிகழ் காலம் – பலம்

எதிர் காலம் – புதுமை

  1. நியதி – எப்போதும் நிச்சயித்தல்.
  2. கலை – கிரியை விளங்கச் செய்தல்
  3. வித்தை – அறிவு விளங்கச் செய்தல்
  4. அராகம் – ஆசை விளங்கச் செய்தல்
  5. புருடன் – ஐம்புலனும் ஆரவரும் காலம்
  6. மாயை – மயக்குதல்.

உயிருக்கு வினைப் பயன்களை இத்துணைப் பொழுது என வரையறுப்பது காலம் அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றாகி நிற்கும். அவற்றுள் இறந்தகாலம் வினைகளை நுகர்ச்சியினால் கழியச்செய்து உயிரை அவ்வினையினின்றும் பிரிக்கும். இதுவே எல்லை எனப்பட்டது. நிகழ்காலம் உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகர்விக்கும் இதுவே பலம் எனப்பட்டது. எதிர்காலம் வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்யும். இதுவே புதுமை எனப்பட்டது.

  1. சுத்த தத்துவங்கள் யாவை ?

சுத்த தத்துவங்கள் 5. அவையாவன.

  1. சிவதத்துவம்முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

    2. சத்திதத்துவம்

    இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப்பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில்
    அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

    3. சதாசிவ தத்துவம்

    இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியா சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.

    4. ஈசுர தத்துவம்

    ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.

    5. சுத்த வித்தியா தத்துவம்

    கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி
    நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக  வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த
    மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்.) ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சா சத்தி
    என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞான சத்தியும் கிரியா சத்தியும் தனித்தனியாயும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றலாயின எனச் சுருக்கமாகக் கூறலாம்.

  1. வாக்குகள் எத்தனை வகைப்படும் ?

வாக்குகள் ஐந்து வகைப்படும்

1.சூக்கும வாக்கு . ‍சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது

2.பைசந்தி வாக்கு . சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது

3.மத்திம வாக்கு. உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை

4.சூக்கும வைகரி வாக்கு‍. சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை

5.தூல வைகரி வாக்கு. தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும் படியாகப் பல், நாக்கு,கண்டம்,வயிறு என்ற உறுப்புகளின் மூலம் தோன்றுவது.

  1. ஆணவம் என்பதற்கு மனவாசகங்கடந்தார் தரும் விளக்கம் என்ன ?காணும் தன்மையுடைய கண் பொருள்களைக் காணவொட்டாதபடி இருள் என்ற பொருள் அக்கண்ணை மூடி மறைக்கின்றது. கண் பொருள்களை அறியாத தன்மை இருளால் உண்டாவது. கண்ணை மறைக்கின்ற புற இருள்போல உயிரோடு பொருந்தி அதனை மறைத்திருக்கின்ற அகவிருள் ஒன்று உள்ளது. அதுவே ஆணவமலம் எனப்படுவது. பிறவித்துயர். வினை, திருவருள் முதலிய அறியத்தக்க பல பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்வது ஆணவ இருளேயாகும். அறியாமையைத் தருவது ஆணவமலம்.
  2. மாறா வினை” என்பது என்ன ? கன்மத்தை இவ்வாசிரியர் எவ்வாறு விளக்குகிறார் ?

மாறா வினை என்பது ஆன்மாவை விட்டு நீங்காமல் தொடர்ந்து வரும் கன்மம், மாயை ஆகிய மலங்களாகும்.
ஆணவத்தின் காரணமாக உண்டாவது கன்மம் எனப்படும் வினையாகும். ஆணவத்தினால் வினை எப்படித் தோன்றுகிறது என்பதைக் காண்போம். உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளேயாகும். ஆயினும் சுதந்திரமான அறிவுடையதல்ல. அறிவதற்குத் துணை ஒன்றே வேண்டாது தானே அறிவதே சுதந்திர அறிவாகும். அத்தகைய சுதந்திர அறிவு உயிருக்கு ஏது? பிறந்தது முதற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், நூல்கள் முதலிய துணையைக் கொண்டு தானே அறிவு விளங்குகிறது. மேலும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிவதற்கு ஐம்பொறிகள் அல்லவா துணை செய்கின்றன? இவ்வாறு பொறிகளின் துணையில்லாமல் யாதொன்றையும் அறிய மாட்டாத உயிர்க்குச் சுதந்திர அறிவென்பது ஏது? உயிருக்குச் சுதந்திர அறிவு இல்லாமை போலவே சுதந்திரமான செயலும் இல்லை. சுதந்திரமான செயலாவது எத்தடையுமின்றி நினைத்ததை நினைத்தவாறே செய்து முடித்தலாகும். இத்தகைய செயல் உரிமை உயிருக்கு இருக்கிறதா?

இறைவனையின்றி ஆன்மா எதனையும் தானே அறியவும்மாட்டாது; எதனையும் தானே செய்யவும் மாட்டாது. ஆயினும் ஆணவ மலம் உண்டாக்குகிற மயக்க உணர்வால் ஆன்மா எச்செயலுக்கும் தன்னையே வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழும். அவ்வாறு எழுந்த ஆன்மா ஆணவ சத்தியின் தூண்டுதலால் உலகப் பொருள்களை நோக்கி அவற்றின் மேல் இச்சை கொள்ளும். அவ் இச்சையினால் தனது அல்லாத அப்பொருள்களை எனது எனது என்று சென்று பற்றும். எனது என்பது புறப்பற்றும், யான் என்பது அகப்பற்றும் ஆகும். இவ்விரு பற்றுக்களின் வழியே செய்யும் முயற்சியே வினை அல்லது கன்மம் எனப்படும்.

  1. வேறு ஆகா என்னை” என்பதன் பொருள் என்ன ?

முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும், ஆணவம், வினை என்ற இரு மலங்களின் தன்மைகளையும் ஆசிரியர் உரைக்க கேட்ட மனவாசகங்கடந்தார் ஆசிரியரின் அருளால் அவற்றை உணர்ந்து கொண்டார். இதுகாறும் இத்தத்துவங்களோடு கூடி இவையே நான் என்று மயங்கியிருந்தேன். ஆணவம், வினை இவற்றின் விளைவுகளாகிய அறியாமையையும் இன்ப துன்பங்களையும் என் இயல்புகள் என்று தவறாகக் கருதியிருந்தேன். இம் மயக்கவுணர்வு நீங்கி நான் யார்? என்பதை உணரும்படி என் உண்மையான இயல்பை எனக்கு உணர்த்தியருள்க. இவ்வாறு மாணாக்கர் வேண்டுகிறார்.

  1. இறைவன் உயிர்களுக்கு வேறாய், உயிர்களுடன் ஒன்றாய், அவற்றோடு உடனாய் நிற்றற்க்கு கூறப்படும் உவமைகள் யாவை ?
  2. இறைவன் வேறாய் நிற்றல்

கண்ணொளி தனியாக தானே நின்று பொருட்களைக் காண முடியாது. அவ்வாறு காண வல்லதாயின், இருளிலும் பொருட்களை காண முடிய வேண்டும். ஆகவே, வேறொரு ஒளியின் துணையைப் பெற்றே கண்ணொளி பொருட்களைக் காணும் திறனைப் பெறுகிறது. பகலில் சூரியனின் ஒளியைத் துணையாகக் கொண்டு கண்ணொளி பொருட்களைப் பார்க்கிறது. கண்ணொளி வேறு. சூரிய ஒளி வேறு. இரண்டும் கலந்தால் தான் கண்ணுக்கு பொருட்களைப் பார்க்கும் தன்மை கிடைக்கிறது. இது போலவே இறைவன் உயிர்களுக்கு வேறாய் நிற்கிறான்.

  1. இறைவன் ஒன்றாய் நிற்றல்ஐம்பொறிகள் தாமாக அறியா. இது எப்படித் தெரிகிறது? உயிர் நீங்கிய உடம்பில் கண், காது முதலிய பொறிகள் கெடாமல் நல்ல நிலையில் இருந்தாலும் அவை அறிதலாகிய தொழிலைச்
    செய்வதில்லை. அவை தாமே அறியா என்பதும், உயிர் தம்மோடு பொருந்தி நின்றபோதே அவை அறியும் என்பதும் இதனால் விளங்கும். அந்த ஐம்பொறிகளின் நிலையில்தான் உயிரும் உள்ளது.
    உயிரும் தானாக அறிவதில்லை. உயிருக்கு உயிராக இறைவன் பொருந்தி நின்று அறிவிக்கும்போதே உயிர் யாதொன்றையும் அறியும் வன்மையைப் பெறுகிறது. எவ்வாறு ஐம்பொறிகள் உயிரால் அறிகின்றனவோ, அவ்வாறே உயிரும் இறைவனால்  அறிகின்றது. இவ்வகையில் ஐம்பொறிகள் உயிருக்கு உவமையாகின்றன.
  2. இறைவன் உடனாய் நிற்றல்.ஒலிக்கும் முயற்சிகளுள் முதல் முயற்சி வாயைத் திறத்தல். அந்த முதல் முயற்சியிலேயே வாயைத்திறந்த அளவிலேயே உண்டாவது அ என்னும் ஒலி. மற்றைய ஒலிகள் வாயைத் திறப்பதோடு வேறு சில முயற்சிகளும் செய்யப் பிறப்பவையாகும். வாயைத் திறத்தல் ஆகிய அம்முதல் முயற்சியின்றிப் பிற முயற்சிகள் நிகழா என்பது தெளிவு. அம்முதல் முயற்சியோடு கூடியே பிற முயற்சிகள் நிகழ்கின்றன. எனவே முதல் முயற்சியில் பிறப்பதாகிய அகர வொலியோடு கூடியே பிற முயற்சிகளில் பிறப்பனவாகிய மற்றைய ஒலிகள் எழுகின்றன என்பதும், அகரவொலியின்றிப் பிற எழுத்தொலிகள் இல்லை என்பதும் புலனாகும் எனவே எழுத்துக்களுக்கெல்லாம் அடி நிலையாய் இருப்பது அகர வுயிரேயாகும். அதுபோல இறைவனே எப்பொருளின் இயக்கத்திற்கும் முதலாய் நிற்கின்றான்.
  3. இறைவன் நடம் செய்வதற்குரிய இடம், உருவம் குறித்து இந்நூல் கூறுவது என்ன ?திருக்கூத்து நிகழும் இரண்டு இடங்கள்

    இறைவன் எங்கும் அருவாய் நின்று ஆடுகின்றான். எல்லா இடங்களும் அவன் நடம் புரியும் இடமேயாயினும் அவற்றுள் இரண்டு இடங்களைச் சிறந்தனவாக எடுத்துக் கூறுவர். ஒன்று உயிர்களின் அறிவும், மற்றொன்று தில்லைச் சிற்றம்பலமும் ஆகும்.

    தில்லை மூதூர் ஆடிய திருவடி
    பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி என்று திருவாசகம் இவ்விரண்டிடங்களையும் குறிப்பிடும்.

    உயிர்களின் அறிவில் நின்று அவன் இடைவிடாது உணர்த்தி வருகின்றான். அச்செயல் அதிசூக்கும ஐந்தொழில் எனப்படும். அதனைப் பரநடனம் எனக் குறிப்பிடுவர். புருவ நடுவில் நிகழ்வதாகிய இந்நடனம் இல்லையேல் உயிர்களுக்கு அறிவு விளங்குதல் இல்லை. ஒருநாமம், ஓருருவம், ஒன்றும்
    இல்லாத இறைவன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான். உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான்.

    இறைவன் கொள்ளும் அருள்திருமேனி

    இறைவன் கொள்ளுகின்ற உருவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாயையினால் ஆனதன்று. உயிர்களாகிய நாமெல்லாம் மலம் உடையவர் ஆதலின் மலங்களில் ஒன்றாகிய மாயை நமக்கு உடம்பாக வந்து பொருந்துகிறது. இறைவன் மலம் இல்லாதவன் ஆதலின் மாயை அவனுக்கு உருவமாய் அமைதல் இல்லை. தூயதாகிய அவனது அறிவே அவனுக்கு உருவமாய் அமையும். அறிவின் இயல்பாவது
    பிறர் நிலைக்கு இரங்குதல்; கருணை கொள்ளுதல், அருளுதல், இறைவனது அறிவு பெருங் கருணையாயும், பேரருளாயும் நிற்கும். அது பற்றியே அவனது அறிவை அருள் என்றும், கருணை
    என்றும் குறிப்பர் பெரியோர். இறைவன் தனது அறிவினால் கொள்ளுகிற உருவம் எல்லாம் அருள் திருமேனி எனப்படுகிறது. அவனது திருமேனி அருள். ஆதலினால் அத்திருமேனியிற்
    காணப்படும் ஆடை, அணிகலம், படைக்கலம் முதலியனவும் அருளேயாம்; அவன் காட்சி தந்து நிற்கின்ற இடமும் அருளேயாம். இறைவனது உடம்பு அங்கம் எனப்படும். திருவடி, திருக்கரம்
    முதலிய உறுப்புக்கள் பிரத்தியங்கம் எனப்படும். அங்கத்துடன் கூடியுள்ள சூலம், மழு, பாம்பு, அபய முத்திரை, நெருப்பு முதலியவை சாங்கம் எனப்படும். அங்கத்தின் சார்பிலிருக்கும் ஆடை, அணிகலம், மாலை. அமரும் இருக்கை முதலியவை உபாங்கம் எனப்படும். அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் ஆகிய இந்நான்கும் அருளேயாம். இறைவனது திருமேனி உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகைப்படும். அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க, இறைவன் அத்திருமேனிகளில் நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.

    மந்திரத்தைத் திருமேனியாகக் கொள்ளுதல்

    இனி, இறைவனுக்கு மந்திரம் சிறப்புத் திருமேனியாகச் சொல்லப்படுகின்றது. இதுபற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இறைவன் அனைத்து உலகங்களிலும் கலந்து அவையேயாய் நிற்கின்றான். உயிர் உடலெங்கும் கலந்து தான் சிறிதுந் தோன்றாமல் உடலேயாய் நிற்பது போன்றது இது.
    அவ்வாறு கலந்திருக்கும் உயிருக்கு உடம்பு வடிவமாய் அமைகிறது. அதுபோல எல்லாவற்றிலும் கலந்திருக்கும் இறைவனுக்கு அவையனைத்துமே வடிவமாய் அமைகின்றன.

    எனவே எல்லாப் பொருள்களுமே இறைவனுக்குத் திருமேனிகள்தாம் என்று சொல்லலாம். ஆயினும் அவற்றுள்ளும் மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனியாய் நிற்கின்றன. எவ்வாறெனில், சொற்களும் சொற்றொடர்களும் ஆகிய மந்திரங்கள் சுத்த மாயையில் தோன்றியவை. இறைவன் சுத்த மாயையை இடமாகக் கொண்டு நின்றே அசுத்த மாயையின் காரியமாய் உள்ள பொருள்களையெல்லாம் இயக்கி நிற்பான் என்பது நாமறிந்தது. இம்முறையில் அவன் மந்திரங்களைத் தனக்கு நேரே இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகத் தவத்தோர்க்குப் புத்தி,  முத்திகளாகிய பயன்களைத் தருவான். இறைவனுக்கு மந்திரங்கள் சிறந்த வாயில் ஆதலாலும், இறைவன் அவற்றைப் பற்றி அவையேயாய் நிற்பன் ஆதலாலும், அம்மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனிகளாய்ச் சொல்லப்படுகின்றன. கல், மண், பொன் முதலிய பொருள்களும் இறைவன் அவற்றில் கலந்துள்ள கலப்பினால் அவனுக்கு வடிவமேயாயினும், மந்திர வடிவம் அவற்றினும் சிறந்தது என்பது உணர்தற்குரியது. மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரமாகும். அதுவே ஞானத்தைத் தருவது. கூத்தப்பெருமான் திருவைந்தெழுத்தைத் தனது திருவுருவமாகக் கொண்டு ஆடல் புரியும் அருட்பெருமையை ஆசிரியர் இப்பகுதியில் விளங்கக் காட்டியுள்ளார்.

  4. இறைவன் நடம் புரிவதற்கு உண்மையான இடமும் திருமேனியும் எது ?

உயிர் ஆகிய ஆதாரத்தில் நின்று இறைவன் திருநடனம் செய்கின்றான். சிவபெருமான் சிவாயநம என்னும் பஞ்சாக்கரத்தால் திருமேனி கொண்டருளி, உயிர்களின் துன்பத்திற்கு காரணமான பிறப்பு அறும்படி, தன் திருவடியை ஊன்றி திருநடனம் புரிகின்றான். சிவபெருமான் திருமேனி ஐந்தெழுத்தில் அமைந்துள்ளது. பெருமான் நடனம் புரிதற்கு இடம் ஆன்மா என்றும், அவனுக்குத் திருமேனியாய் அமைவது ஐந்தெழுத்து மந்திரம் என்றும் மேலே பார்த்தோம். இவ்வாறு சொல்லப்படினும், உண்மையில் அவனுக்குத் திருமேனியாவது அவனது அருளேயாகும். அவனுக்கு இடமாவதும் அருளேயாகும்.

  1. தூல பஞ்சாக்கரம் ஓதுபவர் நடராஜர் திருவுருவை எப்படிக் காண வேண்டும் ?

நடராஜர் திருவடி “ந” காரமாய் இருக்கும். திருவயிறு “ம” காரமாய் இருக்கும். உயர்ந்த திருத்தோள் “சி” காரம் ஆகும். தேதாகமங்களை அருளிய திருமுகம் “வ” காரமாகும். திருமுடி “ய” காரமாய் இருக்கும்.

  1. சூக்கும பஞ்சாக்கரம் ஓதுபவர் நடராஜர் திருவுருவை எப்படிக் காண வேண்டும் ?

உடுக்கு ஏந்திய வலது திருக்கரத்தில் “சி” காரம் அமையும்.

தூக்கிய திருவடியைக் காட்டும் இடது திருக்கரத்தில் அருளைச் சுட்டும் “வ” காரம் அமையும். “அஞ்சேல்” என அபயக்குறி காட்டும் வலது திருக்கரத்தில் ஒளிபெற்ற “ய” காரம் அமையும். அக்னி ஏந்திய இடது திருக்கரத்தில் “ந” காரம் அமையும். முயலகனை அழுத்திப் பொருந்தியிருக்கும் வலது திருக்காலில் “ம” காரம் அமையும்.

  1. ஊன நடனம், ஞான நடனம், மோன நடனம் விளக்குக.

ஊன நடனம்

தூலம், சூக்குமம், அதிசூக்குமம் ஆகிய மூவகை ஐந்தொழில்களும் ஊன நடனம் என ஒன்றாய் வைத்துச் சொல்லப்படும். இத்தொழில்களால் உயிர்க்கு உண்டாவது உலக நுகர்ச்சியும், சிற்றறிவும் ஆகும். இவற்றால் உயிர் உலக வாழ்விற் கட்டுண்டு நிற்கிறது. இது பற்றியே இறைவனது செயல் ஊன நடனம் எனப்பட்டது. ஞான நடனம் என மற்றொன்று இருத்தலால், ஊன நடனமாகிய இதில் உள்ள ஊனம் என்பது ஞானம் இல்லாமையைக் குறித்தது.

ஞான நடனம்

முதல்வன் உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான். அவற்றுள் பிறப்பைத் தருவது ஊன நடனம் ஆயிற்று. வீட்டைத் தருவது ஞான நடனம் ஆகும்.ஊன நடனத்தின் பயனாக உயிர் உண்மையை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணரும்; பின்பு, தான் சித்தப் பொருளாயினும் தானே அறியும் சூக்கும சித்து அன்று, அறிவித்தால் அறியும் தூல சித்து எனத் தனது உண்மையை உணரும். அதனால், தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும்
சூக்கும சித்து தலைவனாகிய சிவன் என அறியும். இவ்வறிவு நூலறிவாய்  அபர ஞானமாய் நில்லாது, அதனை அனுபவமாக  பர ஞானமாகப் பெறும்.  இதுவே பக்குவம் முதிர்ந்த நிலையாகும். தன்னையும் தலைவனையும் உணர்ந்த நிலையாகும். தலைவனை உணர்ந்தவர் அவனே தமது வாழ் முதல் எனக் கொள்வர். தம் வழியில் நில்லாது அவன் வழியில் நிற்பர். முதல்வன் அவரை மும்மலம் நீக்கி அருள் நிலையில் வைத்துப் பேரின்பத்தை நுகரச் செய்வன் இவ்வுதவியும் ஐவகைத் தொழில்களாக வைத்துச் கூறப்படும். இது ஞான நடனம் எனப் பெயர் பெறுகிறது

மோன நடனம்

இவ்வுலகில் பக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்தி நிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற கூத்து இதுவாகும். மோனம் ஆகிய முடிநிலையில் நிற்கும் சிறந்த முனிவர்கள் மும் மல வாதனையை முற்றிலும் நீக்கி, தற்போதம் அற்ற நிலையில் விளங்கித் தோன்றும் பேரின்பமாகிய அமுதத்தைத் கண்களாலும் மொண்டு அருந்தும் படியாக இறைவன் வெளியே திருச்சிற்றம்பலத்துள் புலப்பட நின்று ஆடுகிறான். ஆனந்த நடனம் பரமுக்தி நிலையில் முத்தர்க்குச் செய்யும் உபகாரம் ஆகும்.

  1. மிகு பஞ்சாக்கரம் என்பது என்ன ?

மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மேலானதாகிய திருவைந்தெழுத்தால் திருமேனி தாங்கி, அவ்வருளே தனக்கு அரங்காகக் கொண்டு உமையம்மை காணுமாறு திருநடனம் புரிகிறான். மிகு பஞ்சாக்கரம் இறைவன் திருமேனியையும் அருளையும் குறிக்கிறது.

  1. இறைவன் நடனத்தை அம்மை காண்கிறாள் என்பதன் பொருள் என்ன ?

    ஞாயிறு உலகத்தோடு தொடர்பு கொள்வது தன் ஒளி மூலமாகவேயாம். அதுபோல இறைவன் உலகத்தோடும் உயிர்களோடும் கொண்டுள்ள தொடர்பு அவனது சத்தியாகிய அருள் வழியாகவேயாம். உமையம்மை காணும்படி நின்று சிவபெருமான் திருக்கூத்து இயற்றுகிறான் என்பதை வரைமகள் தான் காணும்படி என்று இந்நூலும், இவ்வாறே பிற நூல்களும் கூறிச் செல்லும். அதன் பொருள்தான் என்ன? சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தல் என்று பொருள் கூறுவர். இதனை மேலும் விரித்துக் கூறினால்தான் பொருள் இனிது விளங்கும். நாம் செய்யும் செயல்களுக்கு, நமக்கு வாய்த்துள்ள உடல், கருவி முதலியவை உடனின்று உதவுகின்றன. நாம் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், நம் உடம்பானது இயங்கி அச்செயலை நிறைவேற்றுகிறது. நாம் ஒருவருக்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றால் நம் கைகள் இயங்கி அச் செயலை முற்றுவிக்கின்றன. உடம்பும் கருவிகளும் இவ்வாறு உதவினாலும் அச் செயல்கள் நம் செயல்களே. கொடுத்தலையும், எடுத்தலையும் செய்தவர் நாம். அதற்குக் கருவிகள் உடனின்று உதவின. அதுபோல, இறைவன் செய்யும் செயல்களுக்கு அவனது சத்தியே தனு, கரணம் முதலிய எல்லாமாய் நின்று செயல்களை முற்றுவிக்கும்.நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறோம். அதுபோல, நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான். முதலில் உள்ள நங்கை என்பது நம் கை எனப்பிரிந்து பொருள்தரும். பின்னுள்ள நங்கை என்பது பெண் எனப் பொருள்பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும். இதனால், இறைவனே செயலைச் செய்பவனாக, சத்தி அதனை முற்றுவிக்கும் துணையாக உள்ளமை விளங்கும். எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் என்பது அறியத்தகும். ஞானத்தை உணர்த்தி வீடு அளித்தல் இறைவனது செயல். அச் செயலைச் சத்தியே உயிர்களிடத்தில் உடனாய் நின்று செய்கிறது. முன்னர் அது திரோதான சத்தி என்ற பெயரும் நிலையும் கொள்கிறது. மலங்களைச் செயற்படுத்தி அவற்றின் வழியில் நின்று உயிர்களைச் செலுத்துகிறது. பிறப்பு இறப்புக்களையும் இன்பத் துன்பங்களையும் மாறி மாறிக் கொடுக்கிறது.

    திரோதான சத்தி எல்லாவுயிர்களிடத்திலும் ஒரே வகையாகச் செயற்படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் பக்குவ நிலையில் வேறுபாடு உடையது. ஆதலால், அந்தந்த உயிரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் அறியாமையைச் சிறிது சிறிதாக நீக்கி அறிவைப் படிமுறையில் வளர்த்து வருகிறது. குமர குருபர சுவாமிகள் இதற்கு ஓர் அருமையான எடுத்துக் காட்டுத் தருகிறார். கைக்குழந்தை நோய்வாய்ப்படுகிறது. அந்நோய்க்குரிய மருந்தை நேரே கொடுத்தால் மென்மையான அக்குழந்தையின் பசுங்குடல் அம்மருந்தின் வேகத்தைத் தாங்காது. அதனை உணர்ந்த தாய் அம்மருந்தைத் தான் உண்டு பால் வழியாக அம்மருந்தின் பயனைக் குழந்தை பெறும்படி செய்கிறாள்.

    பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென
    நோயுண் மருந்து தாய்உண் டாங்கு (சிதம்பர மும்மணிக் கோவை, செ.2)

    திரோதான சத்தியாகிய தாய் இதுபோன்ற செயலைத் தான் செய்கிறாள். அறியாமைதான் உயிர்களிடமுள்ள நோய். மெய்யறிவுதான் அதற்குரிய மருந்து. அம் மெய்யறிவை ஒரே காலத்தில் ஒருங்கே அளித்தால் உயிர் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. உயிரின் பக்குவக் குறைபாடே
    அதற்குக் காரணம். ஆதலால் உலக நுகர்ச்சியாகிய பால் வழியாக மெய்யுணர்வைச் சிறிது சிறிதாகப் புகட்டி, அதன் அறியாமையைப் போக்கி, உண்மையைப் படி முறையில் உணரும்படி செய்கிறாள். எனவே, கூத்தப் பெருமானின் பக்கலில் நின்று ஆடல் காணும் அம்மை சிவகாமவல்லி திருக்கூத்தை முற்றக் கண்டு அதன் பயனாகிய ஞானத்தைப் பல்லுயிர்களுக்கும் அவற்றின் பக்குவ நிலைகளுக்கு ஏற்றவாறு ஊட்டி, அவற்றின் பாசப் பற்றை அறுத்து, உணர்வைவளர்த்து வரும் தாய் ஆவாள் என்பது உளங் கொள்ளுதற்குரியது.

  1. ஐந்தெழுத்தின் பொருள் என்ன ?

இறைவனின் திருவருளாக நிற்கும் மந்திரம் என்றும் அழியாத நமசிவய என்னும் திருவைந்தெழுத்து மந்திரம். அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும். அதன் பொருள்:

ந – இறைவனது மறைப்பாற்றல் – திரோதன சக்தி

ம – மும்மலங்கள் – ஆணவ மலம்

சி – இறைவன் சிவபெருமான் (பதி)

வ – திருவருள் (சக்தி)

ய – உ.யிர் (ஆன்மா)

தூல பஞ்சாட்சரம்:

நமசிவய என்பது தூல பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் உலக இன்பங்களைப் பெறலாம். இறைவனின் மறைப்புச் சக்தியால் மும்மலங்களும் நீங்கி சிவபெருமானின் திருவருளால் உயிர்கள் உய்வு பெறும்.

சூக்கும பஞ்சாட்சரம்:

சிவயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் முத்திப்பேறு கிட்டும். சிவபெருமான் திருவருளால் ஆன்மா ஆன்மா இறைவனின் மறைப்புச் சக்தியால் மலம் நீங்கப் பெற்று உய்வு பெறும்.

  1. சிவஞானம் பெறுதற்கு ஐந்தெழுத்தை எவ்வாறு ஓத வேண்டும் ?உலகப்பற்று அற்று ஞானத்தில் வேட்கை கொண்டு ஞானநெறியிற் செல்லும் பக்குவர்க்கு உரியது முத்தி பஞ்சாக்கரம். நகாரம் மகாரம் ஆகிய பாச எழுத்துக்கள் நீங்க நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். அதிசூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும். ஞானாசிரியர் நிருவாண தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற பக்குவ ஆன்மா அம்மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு, அதன் பொருளில் தன் அறிவை இடைவிடாது நிறுத்தி அப்பொருளை உணர்ந்து உணர்ந்து நிற்கும். அதனால் வினை நீங்கும். வினை நீங்கவே திருவருள் இனிது விளங்கும்.
  2. ஆதி மலம் இரண்டும் ஆதியா ஓதினால்”ஆதி மலம் என்றால் என்ன ?

ஆதி என்பது மறைப்பாற்றல் (திரோதான) சக்தியைக் குறிக்கும். இது திருவைந்தெழுத்தில் நகரத்தைக் குறிக்கும். மலம் என்பது மும்மலங்களையும் குறிக்கும். திருவைந்தெழுத்தில் இது மகரத்தைக் குறிக்கும். ஆதி மலம் இரண்டும் என்பது திருவைந்தெழுத்தில் நம என்பதைக் குறிக்கும்.

  1. விதிப்படி ஓதுதல் என்றால் என்ன ?

உயர்ந்த திருவைந்தெழுத்தை நமசிவாய என ஓதினால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் உயிரிடமிருந்து களையப்பட மாட்டாது. இந்த மூன்று மலங்களையும் உயிரிடமிருந்து களைந்து சிவத்தை சேர வேண்டுமானால், சிவத்தை முதலாவதாக வைத்த சிவயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தையே ஓத வேண்டும். இதுவே விதி. பஞ்சாக்கரத்தை இவ்வாறு ஓதினால் இவ்வுலகத்தில் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ்வதோடு, வீடுபேறு பெற்றுப் பேரின்பத்தோடும் வாழலாம்.பாசத்தைக் களைந்து பதியிலே சேர்தலாகிய முக்தி பஞ்சாக்கரத்தை உணர்ந்து ஓதுவதே, விதிப்படி எனப்பட்டது.

  1. முத்தியில் ஆன்மா இறைவனோடு கலந்திருப்பதற்குக் கூறப்படும் மூன்று உவமைகள் யாவை ?முத்தி நிலையில் உயிரும் சிவமும் உள்ளன ஆயின் பிரித்தறியவாராது ஒன்றாய் உள்ளன. உயிர் சிவனது திருவருள் வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது நிற்றலே உயிர் சிவத்தோடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல் ஆகும். உயிரானது சிவத்தோடு ஒன்றாகி இல்லாமற் போய்விடவில்லை. உயிர் சிவத்தோடு ஒன்றி நின்று அதனையே இடையறாது உணர்ந்து அனுபவிக்கின்றது. அவ்வாறு ஒன்றி நிற்பது எது போலும் என்று காட்டுதற்குப் பல உவமைகளை
    எடுத்துக்கூறுகிறார் ஆசிரியர்.

    1. பேரின்ப முத்தியை அடைந்த பெருமக்கள் பழத்திற் சுவைபோலவும், பூவில் மணம் போலவும், நெருப்பில் வெம்மை போலவும், வீணையில் இன்னிசை போலவும் சிவ முதற் பொருளோடு ஒன்றிப் பிரியாது இயைந்து நிற்பர். இவ்வாறு சிவாகமங்கள் கூறும்.

    2. உயிர் எப்போதும் தனித்து இருக்காது. மலங்களை பற்றி இருக்கும், அல்லது சிவத்தை பற்றி இருக்கும். கட்டு நிலையில் உயிருக்கு உதவும் கருவிகளாக வந்த தத்துவங்கள் எல்லாம் உயிருக்கு வேறாய் நில்லாமல், உயிரே என்னும்படி இயைந்து ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன. அதுபோல, முத்தி நிலையில் மலம் நீங்கிய ஆன்மாக்கள் சிவத்திற் பொருந்தித் தாம் வேறாய் நில்லாமல் சிவமே எனும்படி அதனோடு ஒன்றி இயைந்திருப்பர். இவ்வாறு ஆகமங்கள் உறுதிபடக் கூறும்.

    3. பொழுது விடிந்து சூரியன் புறப்பட்டவுடன் அதன் பேரொளி முன், வானத்திலுள்ள தேய்பிறையாகிய நிலவின் ஒளி அடங்கிப் போய் விடுகிறது. நிலவின் ஒளி இருந்தும் இல்லையாய் நிற்கிறது. அதுபோல முதல்வன் திருவடியை அணைந்த உயிர் வெள்ளமெனப் பெருகும் இறையின்பத்தில் மூழ்கித் தான் என வேறு நில்லாது, தான் சிறிதும் தோன்றாது, அடங்கி நின்று
    இன்புறும்.

  2. பாடல் 46 இல் சித்தமலம் என்பதன் பொருள் என்ன ?

சித்த மலம் என்பது உயிர் அறிவைப் பற்றியிருக்கும் மும்மலத்தையும் (அல்லது பொதுவாக சொல்லும் ஆணவமலம்) குறிக்கும்.

  1. முப்பொருளும் நித்தம் என்றால் முத்தியில் பாசம் நீங்கியதா இல்லையா ?முத்தியில் ஆணவ மலத்தின் நிலை என்ன? இத்தை விளைவித்தல் என்பதன் மூலம் மலமும் முத்திக் காலத்தில் நித்தமாக இருக்கிறது என்பது தெரிகிறது. அது எவ்வாறு இருக்கும் என்பதை நோக்குவோம். உயிரிடத்தில் திருவருள் ஒளி மேலிடுதலால் ஆணவ இருள் அதன் கீழ்ப்பட்டு அடங்கி விடுகிறது. மந்திரத்தால் நெருப்பின் ஆற்றலைக் கட்டுப்படுத்த வல்லவர் நெருப்பின் நடுவில் நின்றாலும் அஃது அவரைச் சுடுதல் இல்லை. அப்பொழுது நெருப்பினது சுடும் சத்தி எங்கே போயிற்று? அச் சத்தி எங்கும் போய் விடவில்லை. இல்லாமற் கெட்டொழிய வில்லை. இருந்தும் இல்லாததாய் அவரிடத்தில் செல்ல மாட்டாமல் மடங்கி நிற்கிறது. அது போல முத்திக் காலத்தில் ஆணவ மலம் இருந்தும் அதன் மறைப்பு சிவமே எனும்படி ஒன்றாய் நிற்கும் உயிரிடத்துச் செல்ல மாட்டாமையால், அது தன் சத்தி மடங்கி இல்லாதது போல் நிற்கும். நடராச வடிவத்தில் முயலகனைத் திருவடிக்கீழ் அழுத்தி வைத்திருப்பதிலிருந்து முத்தியில் ஆணவ மலம் அடக்கப்பட்டுள்ளதேயன்றி இல்லாமற் போகவில்லை என்று தெளியலாம். இவ்வாறு மல சத்தி மடங்கி நிற்றலையே மலம் கெடுதல் என்றும், மலம் நீங்குதல் என்றும் நூல்கள் கூறும். பெத்தத்தில் இறையின்பம் உயிரிடத்து விளையவொட்டாது தடுத்து நின்ற ஆணவ மலம் முத்தியில் அங்ஙனம் செய்ய மாட்டாமல் இருக்கும். இங்ஙனம் மலம் தான் மடங்கி நிற்றலால் இறையின்பம் உயிரிடத்தே விளைவதற்கு இவ்வகையில் காரணமாயிற்று. இதனைக் கருதியே இத்தை விளைவித்தல் மலம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். இதுவரை கூறியவற்றால், முத்தியில் ஆணவ மலம் உண்டு; ஆயினும் அதனால் உண்டாகும் பந்தம் இல்லை என்பது புலனாகும். இந்நிலையை விடுபட்ட நிலை என்று கூறலாம் தானே.
  2. முத்தியில் முப்பொருளின் நிலை என்ன ?நன்மாணாக்கனே, பரமுத்தியில் முப்பொருள்களும் உள்ள முறைமையைக் கூறுகிறோம். கேள். தூய பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பது உயிர். அவ்வின்பத்தை இடையீடின்றிக் கொடுத்துக் கொண்டிருப்பவன் இறைவன். அப்பேரின்பத்தை விளைவித்து நிற்பது மலம். இவ்வுண்மையை உணர்ந்து கொள்.
  3. இத்தை விளைவித்தல் மலம்” என்பதன் பொருள் யாது ?

43 ஆம் பதிலிலேயே இதுவும் விளக்கப்பட்டுள்ளது. மலம் உயிரை விட்டு நீங்கி அல்லது விலகி நிற்றலால் உயிருக்கு முத்தி கிடைக்கிறது. இவ்வாறு மலம் நீங்கி நிற்றலாலேயே உயிருக்கு பேரின்பம் கிடைத்ததால், இத்தை விளைவித்தல் மலம் எனப்பட்டது.

  1. முத்தி நிலை உயிருக்கு இயற்கையா, செயற்கையா ?

முத்தி நிலை உயிருக்கு இயற்கை.

  1. முத்தியில் சிவம் சென்று ஆன்மாவைச் சேர்ந்ததா ? இல்லை ஆன்மா சென்று சிவத்தைச் சேர்ந்ததா ?உயிர் சென்று சிவனோடு ஒன்றும் எனில் எங்கும் நிறைந்துள்ள பூரணத்தன்மை சிவனுக்கு இல்லை என்று கொள்ள நேரும். அது கூடாது. இனிச் சிவனே சென்று உயிரோடு பொருந்துவான் எனில், சிவன் உயிருக்கு வேறாய் இருந்தான் என்று கொள்ள நேரும். அதுவும் கூடாது. இவனும் சென்று அவனை அடைதல் இல்லை. அவனும் வந்து இவனை அடைதல் இல்லை. மற்று இருவரும் இயைந்து நிற்கும் முறைமைதான் யாது எனில், குருடனது கண்ணின் குற்றமாகிய படலம் நீங்க, அக்கண்ணொளியும், சூரியவொளியும் தம்முள் இயைந்து நிற்றல் போன்றதே அவனும் இவனும் பிரிப்பின்றி நிற்கும் முறைமை.
  2. முத்தியை அடைவதற்குரிய வழி யாது ?

குரு வழிபாடு, இலிங்க வழிபாடு, சங்கம வழிபாடு ஆகிய இம்மூன்று திருவருள் நிலைகளே முத்திக்கு உரிய வாயில்கள் ஆகும். இவ்விடங்களில் இறைவனை இடைவிடாது நினைந்து தொழுது இறைஞ்சுபவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

  1. முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றி அறிவதால் நமக்கு என்ன பயன் ?

முப்பத்தாறு தத்துவங்களை நாம் அறிவதால், நாம் யார், நமக்குரிய கருவிகளை எவை, அவை எதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன, இறைவன் யார் என்பதை உணராலம். இதனால், இக் கருவிகளை பயன்படுத்தி இறைவனை வணங்கி முத்தி நிலை அடையலாம்.

  1. திருவைந்தெழுத்தை ஓதும் முறை, நிற்கும் முறை யாது ?திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வொரு பொருள் அமையும்.
    திருவருளைப் பெற விரும்புவோன் உலகியலில் நின்று நகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் வெளிப்படாது. உலகியலிலிருந்து நீங்கி, வீட்டு நெறியில் அறிவை நெறிப்படுத்தி நின்று, சிகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும். ஆகலின் நீ அவ்வாறு நின்று, அவ்வாறு ஓதுக.

    திருவெழுத்து ஐந்தையும் அண்ணலாகிய சிவனைக் குறிக்கும் சிகாரம் முதலாக வைத்து இடையறாது எண்ணி வந்தால், திருவருள் வெளிப்பட்டு உயிரைக் கேவலமும் சகலமும் நீங்கிய அருள் நிலையில் சேர்க்கும்; எல்லையற்ற சிவானந்தத்தை நுகரச் செய்யும்; அந்நிலையில் இருளான ஆணவ மலம் பற்றறக் கழியும்.

  2. தாத்துவிகங்கள் என்பது என்ன ? அவை எத்தனை ?தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.

*உண்மை விளக்கம் கேள்வி பதில் தொடர் நிறைவுற்றது.*

திருச்சிற்றம்பலம்.

பல்லாண்டு எனும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே !
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ? No ratings yet.

சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ?

சைவ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலிருந்தே இறைவனை அடையாளம் காட்டி, அவன் மீது அன்பு வைத்திருக்கும் அவசியத்தையும், நம் சமயத்தின் ஆணி வேரை விதைக்கும் முக்கிய கடமையையும் செய்ய வேண்டும்.

1. குழந்தைகளை வாரம் ஒரு முறை தவறாமல் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் தினமும் கூட்டிச் செல்லலாம். கோவிலில் நாம் கும்பிடும் முறைகள், ஏன் எதற்கு செய்கிறோம் என்பதை அவர்கட்கு புரியும் வகையில் கட்டாயம் சொல்லித் தர வேண்டும். அவர்களின் வினாக்களுக்கு தகுந்த விடையளிக்க வேண்டும். (அதற்கு முன்னர், அந்த கேள்விகளுக்கு நமக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும் !!!)

2. குழந்தைகள் எளிதில் பாடல்களை மனனம் செய்து விடுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு சிவபுராணம் முதலிய திருமுறை பாடல்களை, புத்தகங்களை படிக்க கொடுத்து, தினமும் காலையில் சில பதிகங்கள் ஓதி, தோப்புக்கரணம் போட்டு பூசை செய்ய சொல்ல வேண்டும். இதற்கு 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை தான் ஆகும். ஆனால், இது மிக முக்கியமானது.

3. சமயகல்வி மிகவும் இன்றியமையாதது. சைவப் பாடம் என்ற பாடம் முன்பு நம் பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டு வந்தது. தற்போது பெற்றோர்கள் தாம் தம் குழந்தைகளுக்கு போதிய சமயகல்வி கொடுப்பது இன்றியமையாததாகிறது. பன்னிரு திருமுறை, சமய குரவர்கள், நம் சின்னங்கள், 63 நாயன்மார்கள் வரலாறு, நம் சமய நூல்கள் எவை, சமய சின்னங்கள் எவை போன்ற அடிப்படை கல்வி அனைவருக்கும் அவசியம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2-4 மணி நேரம் சமயகல்வி வகுப்புக்கு அனுப்புவது மிக மிக அவசியம்.

4. திருவிளையாடல், திருவருட்செல்வர், அகத்தியர், ராஜராஜ சோழன், பட்டினத்தார், ஔவையார், காரைக்கால் அம்மையார், நந்தனார், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், சம்பூர்ண ராமாயணம் போன்ற எண்ணற்ற அருமையான சினிமா படங்கள் உள்ளன. அவ்வப்போது குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் அவர்களுக்கு அந்த கதைகளை பற்றி உரையாடிக் கொண்டே பாருங்கள்.

5. தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக உரையாட கற்றுக்கொடுங்கள். தமிழில் ஆங்கிலத்தை கலப்பது வேண்டவே வேண்டாம். ஆங்கிலம் கலக்காமல் தமிழ் நன்றாக தெரிந்து பேச வேண்டும். இரண்டையும் கலந்து பேசுவது கூடாது.
6. சுற்றுலாக்களுக்கு செல்லும் போதும், மற்ற விடுமுறை நாட்களின் போதும், திருவண்ணாமலை, சிதம்பரம், சீர்காழி, மதுரை, திருநெல்வேலி, அவிநாசி, திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலை, திருவாலங்காடு, குமரனின் 6 படை வீடுகள் என்று எண்ணற்ற தலங்கள் உள்ளன. அவ்வாறான புகழ்பெற்ற தலங்களுக்கு அழைத்து சென்று அதனோடு தொடர்புடைய புராண வரலாறுகளையும் தலவரலாறுகளையும் அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.
7. உங்கள் குழந்தைகள் புறசமயத்தினர் பள்ளிகளில் படிக்கும் போதோ, புறச்சமய நண்பர்களுடன் பழகும் போதும், அவர்களோடு எவ்வாறு பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை தேவையுள்ளவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
8. முடிந்த மட்டில் கிறிஸ்தவ / முஸ்லிம் பள்ளி கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்காதீர்கள். பெரும்பாலானவர்களின் குறிக்கோளே, கல்வி மூலம் மதமாற்றம் செய்வது.  வேறு வழியின்றி அவ்வாறு சேர்க்கும் நிலை ஏற்பட்டால், நம் சமய வழிமுறைகளை வலுவாக தினமும் பின்பற்றக் கூறி, கடைப்பிடிக்கவும் வேண்டுமாறு செய்திடுங்கள்.
திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவர்கள் இன்று செய்யவேண்டியது யாது ? 5/5 (3)

சைவர்கள் செய்ய வேண்டியது யாது ?

உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. அவற்றில் உண்மைகள் இல்லாமையே அதற்கு மூல காரணம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல, மதமாற்றம் செய்பவன் அதே மதமாற்றத்தால் அழிந்துள்ளான். புற சமய நடவடிக்கைகளைப் பார்த்து கோபப்படும் முன்னர், நம் சமயத்தை நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை நாம் ஆராய வேண்டும். முதலில் நம் சமயத்தை ஆழமாக அறிந்து கொண்டு, அதன் தத்துவங்களை உணர வேண்டும். புற சமய சிந்தனையை விட மிக முக்கியம், நம் சமயத்தை ஆழமாக உணர்வது. ஆகையால், நம் சமயத்தை உணர்ந்து அதை பரவுவதில் நேரத்தை செலவிடல் வேண்டும்.  சரி, நம் தலைப்புக்கு வருவோம்.

1. ஆனந்தமாக நெற்றி முழுவதும் திருநீறு இடுங்கள். வேலை செய்யும் இடத்திலும் சரி, மக்கள் கூடும் இடங்களிலும் சரி, வீட்டிலும் சரி,  விழாக்களிலும் சரி. எங்கும் நீறணியுங்கள்.
2. உருத்திராட்சம் அணிந்திடுங்கள். பிறரை அணிய ஊக்குவியுங்கள்.
3. தினமும் காலையில் உங்கள் வீட்டில் விளக்கேற்றி, திருமுறை பாடல் ஓதி, சிவபெருமானை எழுந்தருளச் செய்யுங்கள்.
4. தினமும் திருக்கோவில் சென்று அப்பனை தரிசனம் செய்யுங்கள்.
5. தினமும் ஓரிருவரிடமாவது சைவ சமய விடயங்களை பேசுங்கள். சிவபெருமானின் புகழ் பேசுங்கள்.
6. சைவ நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அறிந்து அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுங்கள். (வீட்டில் வெட்டியாக இருக்கும் நேரம் அனைத்தும், தொலைக்காட்சி பார்க்கும் நேரமும், இதற்கு மாற்றப்படலாம்.)
7. ஆங்கில வார்த்தைகள் பேசுவதை தவிர்த்து பிழையில்லாத தமிழில் பேசுங்கள், எழுதுங்கள். தமிழில் கையெழுத்து போடுங்கள். பொது இடங்களில் தமிழில் எழுதுங்கள்.
8. சைவ நூல்களை படியுங்கள். சொற்பொழிவுகள் கேளுங்கள். ஒவ்வொரு மாதமும் நம் சைவ ஞானம் வளர்ந்து கொண்டே போக வேண்டும்.
9. அனைத்து சிவ பூசைகளும், குரு பூசைகளும், குடமுழுக்குகளும்,  பண்டிகைகளும், திருவிழாக்களும் ஒன்று விடாமல் கலந்து கொள்ளுங்கள்.
10. சிவ தலங்கள் யாத்திரை செய்து கொண்டே இருங்கள். தேவார பாடல் பெற்ற தலங்கள் 276 உம், சிவமலை கோவில்களும், திருவாசக தலங்களும், வைப்புத் தலங்களும் சென்று தரிசனம் செய்யுங்கள்.
11. உங்கள் வீட்டில் உங்கள் வசதிக்கேற்ப, சிவபூசை நடத்துங்கள். திருவாச முற்றோதல்கள், திருமுறை விண்ணப்பம், கூட்டு வழிபாடு, மாகேசுவர பூசை போன்று தொடர்ந்து நடத்துங்கள்.
12. உழவாரப்பணி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு சிவதொண்டை இடைவிடாது செய்து வாருங்கள்.

 

இந்த 12 உம் செய்து வந்தால், இப்பிறவியில் மிகுந்த பேரின்பமும், சிவபெருமான் தரிசனமும், திருவடிப்பேறும் உங்களுக்கு கிட்டுவது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்.


நாத்திகர்கள் யார் ?

கடவுள் இல்லை என்று சொல்பவன் மட்டும் நாத்திகன் அல்ல. வேத நெறியை ஏற்காத யாவரும் நாத்திகர்களே. இன்றைய உலகில், கடவுள் இல்லை என்று சொல்பவன், புத்தர்கள், முகம்மதியர்கள், கிறிஸ்தவர்கள் என்று யாவரும் நாத்திகர்களே. அன்று சமணர்கள் என்னவெல்லாம் சூழ்ச்சி செய்தார்களோ, அதே போன்றும், அதை விடவும் கொடிய பொய்களை பரப்பவும் தயங்காதவர்கள். இன்று பல பொய்களை பரப்பியும் வருகிறார்கள். இனியும் இவர்கள் புதுப்புது பொய்களையும் உருவாக்குவார்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது திருக்குறள். அறிவு உள்ளவர்கள், யார் எதைக் கூறினாலும் அப்படியே நம்பி விடமாட்டார்கள். மாறாக, அதில் என்ன உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து மெய்ப் பொருளைக் காண்பவர்கள். இந்த அடிப்படை பகுத்து அறியும் அறிவு நம்மிடம் இல்லாமையால் தான் பல்வேறு விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுபவர்களும், மதம் மாறுபவர்களும் இன்று இருக்கிறார்கள். இந்த அடிப்படை பகுத்தறிவு இருந்தமையால் தான் இந்தியாவில் கடந்த சில நூற்றாண்டுகளில் பல்வேறு தலைவர்கள் மதம்மாறவில்லை. அநாதியான சனாதன தர்மத்தை உணர்ந்து போற்றி வந்துள்ளனர். ஆனால், நாத்திகர்கள் வெளிநாட்டவர் தூண்டுதலாலும், தம் சொந்த பகுத்தறிவு இன்மையாலும், தங்களுக்கு தெரிந்த பொய்களை பரப்புவர். ஆனால், நாம் என்றும் அடிப்படை பகுத்தறிவை விடாமல் தெளிவாக இருந்து ஞான மார்க்க வழியில் செல்ல வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this