FAQ

நான் சைவ சமயத்திற்கு புதியவர். சைவ சமயம் பற்றி சொல்லுங்கள் ?

Publish on Comments(0)
நான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி. நம் சமயம் பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக சொல்லுங்கள். திருச்சிற்றம்பலம். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.         ---- குறள் 67, மக்கட்பேறு. என்பது தெய்வப்புலவர் வாக்கு. ஒரு தந்தை தன்னுடைய மகனுக்கு இவ்வுலகில் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு யாதெனில், அவனை கற்றவர்கள் இருக்கும் அவையில் முதல்வனாக இருக்க யாது செய்ய…
Categories: Opinion, கட்டுரைகள்
Tags: சைவசமயம் Shaivism Fundamentals சிவம் கல்வி

சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் ஏன் கைதட்ட கூடாது ?

Publish on Comments(2)
சண்டிகேசுவரர் என்பது ஒரு பதவி. சிவனுக்கும் சிவன் கோவிலுக்கும் உரிய சொத்துக்களை கணக்கு வழக்கு பார்ப்பதும் முக்கிய பணி. இந்த பணியை விசாரசருமர் என்பவருக்கு சிவபெருமானே அவர் தலையில் கொன்றை மாலை சூடி அணிவித்து அளித்தார். சண்டிகேசுவரர் ஆழ்ந்த தியானத்தில் சிவசிந்தனையில் இருந்தாலும், அந்த சிந்தனையிலேயே அவருடைய பணியை செம்மையாகச் செய்ய வல்லவர். அவரின் ஞானத்திலேயே கணக்கு வழக்குகளை முடிப்பவர். இருப்பினும் சிவனை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட பிரியாது இருக்க வேண்டும் என்று தியானத்தில் இருப்பவர்.…
Categories: கேள்வி-பதில்

உண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும்

Publish on Comments(0)
  உண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும் உண்மை விளக்கம் பற்றி சைவ சித்தாந்த வகுப்பு ஆசிரியர் 51 கேள்விகள் கொடுத்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த அதன் விடைகளை இங்கு தொகுத்துள்ளேன். நான் இதற்கு விடை அளித்தாலும், நீங்கள் உண்மை விளக்கம் புத்தகத்தை படித்து. 54 செய்யுள்களையும் அனுபவித்து நாம் கூறும் பதிலும் சரிதானா என்று பார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். வேறு கருத்துக்கள் இருந்தாலும் கூறுங்கள். உண்மை விளக்கம் என்பதில் உண்மை என்பதன் பொருள்…
Categories: கேள்வி-பதில்

சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ?

Publish on Comments(0)
சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ? சைவ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலிருந்தே இறைவனை அடையாளம் காட்டி, அவன் மீது அன்பு வைத்திருக்கும் அவசியத்தையும், நம் சமயத்தின் ஆணி வேரை விதைக்கும் முக்கிய கடமையையும் செய்ய வேண்டும். 1. குழந்தைகளை வாரம் ஒரு முறை தவறாமல் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் தினமும் கூட்டிச் செல்லலாம். கோவிலில் நாம் கும்பிடும் முறைகள், ஏன் எதற்கு செய்கிறோம் என்பதை அவர்கட்கு புரியும் வகையில் கட்டாயம்…
Categories: கேள்வி-பதில்

சைவர்கள் இன்று செய்யவேண்டியது யாது ?

Publish on Comments(0)
சைவர்கள் செய்ய வேண்டியது யாது ? உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. அவற்றில் உண்மைகள் இல்லாமையே அதற்கு மூல காரணம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல, மதமாற்றம் செய்பவன் அதே மதமாற்றத்தால் அழிந்துள்ளான். புற சமய நடவடிக்கைகளைப் பார்த்து கோபப்படும் முன்னர், நம் சமயத்தை நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை நாம் ஆராய வேண்டும். முதலில் நம் சமயத்தை ஆழமாக அறிந்து கொண்டு, அதன் தத்துவங்களை உணர வேண்டும். புற சமய சிந்தனையை…
Categories: கேள்வி-பதில்
எங்களைப் பற்றி

இறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.

நீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.

More Info

Blog
எங்கள் முகவரி
  சைவசமயம்
  திருநந்திதேவர் திருக்கூட்டம்
  பள்ளிக்கரணை, சென்னை-600 042,
  தமிழ்நாடு, இந்தியா.
  saivasamayam.in@gmail.com