நம் தமிழ் எண்கள் அறிவோம், பயன்படுத்துவோம்
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
என்பார் ஔவையார்.
குறள் 392:.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. அத்தகைய கண்கள் போன்ற நம்முடைய தமிழ் எண்களை நாம் இன்று பயன்படுத்துகிறோமா ? முதலில் அந்த எண் வடிவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோமா ? உலகின் மூத்த மொழி என்ற பெருமை உடைய நம் தமிழ் மொழியின் எண்களை நாமே பயன்படுத்தாவிட்டால், அமெரிக்கர்களும் உருஷ்யர்களுமா பயன்படுத்துவார்கள் ? இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்கே கேட்டுக் கொண்டு, அதற்கான நம் கடமைகளை உணர்ந்து செய்ய வேண்டும். ஆகவே, தமிழ் எண்களின் உருவங்களை அறிந்து கொண்டு, அதை எளிதாக மனனம் செய்வதற்குரிய வழிகளைப் பின்பற்றி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், நம் எண்களுக்கு உயிர் வந்து விடும். இந்த முயற்சியை நம்மிலிருந்தே தொடங்குவோம். அதற்கான கருவி தான் இந்த காணொளியும், படங்களும்.
இந்த காணொளியில் பயன்படுத்தப்பட்ட படங்கள். எளிதாக கற்பதற்க்கும், பயிற்சி பெற்று பயன்படுத்துவதற்க்கும்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
திருச்சிற்றம்பலம்.