சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் ஏன் கைதட்ட கூடாது ? 5/5 (1)

சண்டிகேசுவரர் என்பது ஒரு பதவி. சிவனுக்கும் சிவன் கோவிலுக்கும் உரிய சொத்துக்களை கணக்கு வழக்கு பார்ப்பதும் முக்கிய பணி. இந்த பணியை விசாரசருமர் என்பவருக்கு சிவபெருமானே அவர் தலையில் கொன்றை மாலை சூடி அணிவித்து அளித்தார். சண்டிகேசுவரர் ஆழ்ந்த தியானத்தில் சிவசிந்தனையில் இருந்தாலும், அந்த சிந்தனையிலேயே அவருடைய பணியை செம்மையாகச் செய்ய வல்லவர். அவரின் ஞானத்திலேயே கணக்கு வழக்குகளை முடிப்பவர். இருப்பினும் சிவனை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட பிரியாது இருக்க வேண்டும் என்று தியானத்தில் இருப்பவர்.

அவ்வாறு ஆழ்ந்த தியானத்தில் இருப்பவரை நாம் கை தட்டி அவரின் தியானத்தை கலைக்கலாமா ? ஒரு போதும் கூடாது. நாம் சிவாலயத்தை விட்டு செல்லும் முன்னர், இந்த ஆலயத்திலிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை நாமே உணர்வுபூர்வமாக அறிந்து செல்லவே சண்டிகேசுவரர் ஆங்கே எழுந்தருளியுள்ளார். ஒரு நொடிப்பொழுது நம்மை நாமே சரி பார்த்துக் கொண்டு, சிவாலயத்திலிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்ந்து அதை அவருக்கு அறிவிக்கும் வண்ணம், ஓசை வராமல், கைகளை தடவிச் சென்றாலே போதுமானாது. ஆகவே, சண்டிகேசுவரர் ஆலயத்தின் முன் கை தட்டாதீர்கள். ஓசை எழுப்பாதீர்கள். திருச்சிற்றம்பலம்.

Please rate this

2 thoughts on “சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் ஏன் கைதட்ட கூடாது ?”

    1. அதாவது நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்ற குறிப்பை மட்டும் சண்டீசருக்கு அல்ல, நமக்காக நாம் உணர்த்தினால் போதும். ஒலிகள் எழுந்து யாரையும் தொந்தரவு செய்யும் அளவுக்கு அல்ல.

Leave a Reply to kumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *