சைவ சமய தேர்வு ௩ மதிப்பெண்கள் 40

குறிப்பு

இந்த வினாக்கள் நாயன்மார்கள் மற்றும் திருத்தொண்டர்கள் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த வினாக்களுக்கு விடைகளை அளித்து விட்டு, பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களை சமர்ப்பிக்கவும் என்ற பட்டனை அழுத்தினால், உங்கள் தேர்ச்சி மதிப்பெண்ணும், எல்லா வினாக்களுக்குமான விடைகளும் கொடுக்கப்படும்.

தேர்வு ௧ ஒன்று செல்க

தேர்வு ௨ இரண்டு செல்க

முதல் பக்கம் திரும்புக

தேர்வு மூன்று ௩

  1. 63 நாயன்மார்களின் வரலாற்றை விரித்து உரைக்கும் நூலை எழுதியவர் யார் ?

  2. சிவபெருமான் திருநடனம் ஆடிய தலங்களும் இதுவும் ஒன்று.

  3. ஆடி அமாவாசை அன்று யாருக்காக சிவபெருமான் கயிலைக் காட்சி அருளினார் ?

  4. திருஞானசம்பந்தர் மட்டிட்ட புன்னை என்று துவங்கும் பாடலைப் பாடி சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவையின் எலும்பிலிருந்து பூம்பாவையை உயிருடன் எழுப்பி அற்புதம் செய்த திருத்தலம் எது ?

  5. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூசை எப்போது அனுட்டிக்கப்படுகிறது ?

  6. திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் எது ?

  7. அடர்ந்த இருட்டு மழையிலும், ஏழ்மை நிலையிலும், சிவனடியாருக்காக நெல் முளைகளை எடுத்து வந்து, விறகு இல்லாத காரணத்தினால் வீட்டின் மேற் கூரை வரிச்சுகளை உருவி எரித்து சமைத்து உணவு பரிமாறியவர் யார் ?

  8. சமணத்தில் இருண்டிருந்த பாண்டிய நாட்டிற்க்குச் சென்று அனல்வாதம் புனல்வாதம் செய்து பாண்டிய மன்னனை நின்றசீர் நெடுமாற நாயனாராக மாற்றியவர் யார் ?

  9. பிறவி குருடாக இருந்தும் சமணர்கள் ஆக்கிரமித்த திருக்குளத்தைச் சீர் செய்தவர் யார் ?

  10. திருநாளைப்போவார் என்று எந்த நாயனார் குறிப்பிடப்படுகிறார் ?

    நந்தனார்
  11. திருத்தொண்டத்தொகையில் பேயார்க்கும் அடியேன் என்று சுந்தரர் யாரைக் குறிப்பிடுகிறார் ?

  12. வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லன் என்று பட்டினத்து அடிகள் யாரைக் குறிப்பிடுகிறார் ?

  13. சூரிய உதயத்திற்கு முன்னே சென்று கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்று நால்வகை பூக்களைக் கொய்து திருமாலை செய்து இறைவனுக்கு சாற்றி தொண்டு செய்தவர் ?

  14. சிவபூசைக்கு இடர் செய்தவரைத் தந்தை என்றும் பாராமல் காலைத் துணிந்த நாயனார் யார் ?

  15. குங்கிலியக்கலயநாயனார் எத்தலத்தில் சாய்ந்திருந்த இறைவன் சிவலிங்க திருமேனியை நிமிர்த்த முயற்சித்தார் ?

  16. திருவிளக்கேற்ற எண்ணெய் கேட்ட போது பரிகசித்த சமணர்களை எண்ணி வருந்திய நமிநந்தியடிகள், எப்பொருளை வைத்து விளக்கேற்றினார் ?

  17. அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு என்று தைரியமாக உரைத்தவர் யார் ?

  18. திருக்காளத்தி மலையிலே அருள்புரிந்த குடுமித் தேவரை வணங்குதற்குச் சென்ற திண்ணனார் யார் ?

  19. சிவவேடத்தையே சிவனாக எண்ணி வணங்க வேண்டும் என்ற உயிரிய உண்மையை நமக்கு உணத்துகிறது இவரின் வரலாறு.

  20. திருநாவுக்கரசர் தண்ணீர்ப்பந்தல் என்று திருநாவுக்கரசரின் பெயரிலேயே பல சிவதொண்டுகள் செய்தவர் யார் ?

    அப்பூதியடிகள்
  21. துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் என்ற பஞ்சாக்கர பதிகத்தை அருளியவர் யார் ?

  22. திருவீழிமிழலையில் படிக்காசில் இருந்த குற்றத்தை நீக்கியருள திருஞானசம்பந்தர் எந்த பதிகத்தை பாடியருளினார் ?

  23. திருஆலவாய் என்பது எந்த ஊரின் பெயர் ?

  24. செய்யனே திருஆலவாய் மேவிய எனத் துவங்கும் பதிகத்தைப் பிள்ளையார் எத்தருணத்தில் அருளினார் ?

  25. வெள்ளை யானையின் மீது ஏறி கயிலாயம் சென்றவர் ?

  26. தம்பிரான் தோழர் என்று எந்த நாயனார் அழைக்கப்படுகிறார் ?

  27. மற்றுப்பற்றெனக் கின்றி எனத் துவங்கும் நமசிவாய பதிகத்தை எத்தலத்து இறைவரை நோக்கி சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளினார் ?

  28. சொற்றுணை வேதியன் என்ற திருப்பதிகத்தை எத்தருணத்தில் திருநாவுக்கரசர் பாடினார் ?

  29. வயிற்று வலியால் துடித்த திருநாவுக்கரசருக்கு திருநீறு கொடுத்து சைவ சமயத்தை அனுட்டிக்கச் செய்தவர் யார் ?

  30. சிவபூதமானது திருநாவுக்கரசருக்கு சூலக் குறியும் இடபக் குறியும் பொறித்த தலம் ?

  31. அதிபத்த நாயனார் எத்தொழில் செய்து வந்தார் ?

  32. சிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைக் குதிரைகளாக்கி திருவிளையாடல் புரிந்த நாள் எது ?

  33. மங்கையர்க்கரசி நாயனாரின் கணவர் யார் ?

  34. சிவனடியார்களை இகழ்ந்து பேசும் அதிபாதகிகளுடைய நாக்கைத் தண்டாயத்தால் இடுக்கித் தமது கையிற் கத்தியினால் அரிதலாகிய தொண்டைச் செய்தவர் யார் ?

  35. சிவபெருமானுக்காக, மாடக் கோவில்கள் உட்பட, எழுபதுக்கும் அதிகமான கோவில்களைக் கட்டுவித்த மன்னன் யார் ?

  36. போதிய பொருள் வசதி இல்லாமையால், இறைவருக்கு மனத்திலேயே கோவில் கட்டத்துணிந்து மனோபாவனையிலேயே முழுக்கோவில் கட்டுவித்து குடமுழுக்கும் செய்த நாயனார் ?

  37. திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களை யாழிலே இட்டு வாசித்து, சம்பந்தரைப் பிரியாமல் அவருடனேயே இருந்து, திருநல்லூர்ப்பெருமணத்திலே திருஞானசம்பந்தருடனேயே சிவபதத்தை அடைந்தவர் ?

  38. திருஞானசம்பந்தர் இறைவனுடன் சோதியில் ஐக்கியமான தலம் ?

  39. 63 நாயன்மார்களில், தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளது எவரின் குடும்பம் ?

  40. 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர் ?

    திருத்தாண்டகவேந்தர்

தேர்வு ௧ ஒன்று செல்க

தேர்வு ௨ இரண்டு செல்க

முதல் பக்கம் திரும்புக