சைவ சமய தேர்வு ௨ மதிப்பெண்கள் 30

குறிப்பு

தெரிந்த வினாக்களுக்கு விடைகளை அளித்து விட்டு, பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களை சமர்ப்பிக்கவும் என்ற பட்டனை அழுத்தினால், உங்கள் தேர்ச்சி மதிப்பெண்ணும், எல்லா வினாக்களுக்குமான விடைகளும் கொடுக்கப்படும்.

தேர்வு ௧ ஒன்று செல்க

தேர்வு ௩ மூன்று செல்க

முதல் பக்கம் திரும்புக

தேர்வு இரண்டு ௨

  1. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இறைவனை நோக்கி பாடியவர் யார் ?

  2. 'ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுவது போல்' என்ற பழமொழி யாரால் உருவானது ?

  3. பூழியர் கோன் வெப்பொழித்த என்று துவங்கும் நால்வர் துதி பாடலை இயற்றியவர் யார் ?

  4. வயிற்று வலியால் அவதிப்பட்ட அகத்தியருக்கு இறைவன் காட்சி கொடுத்து, மருந்தும் கொடுத்து, உபதேசமும் செய்து அருளிய தலம் எது ?

  5. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழமொழி யாரைச் சார்ந்து உருவானது ?

  6. சனற்குமாரர் மாமுனிவருக்கு ஆசாரியர் யாவர் ?

  7. மந்திரசெபம் செய்யும் போது செய்யக்கூடாதது எது ?

  8. திருக்கோவிலில் இருக்கும் சிவலிங்கத் திருமேனி இறைவனின் எத்தகைய உருவமாகும் ?

  9. திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் எத்தனை ?

  10. நந்தி விலகி நிற்கும் தலம் எது?

    திருவல்லம்
  11. சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்த தலம் ?

  12. தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூலை இயற்றியவர் யார் ?

  13. தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தைப் பெற்றவர் யார் ?

  14. திருமுகம் என்பது யாது ?

  15. விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்ற பிரபந்தம் பாடியவர் யார் ?

  16. திருமூலரின் ஞானாசிரியர் யார் ?

  17. 'இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?' என்று திருக்கயிலையில் இறைவன் யாரைப் பார்த்து வினவினார் ?

  18. திருநெல்வேலி நெல்லையப்பர் சன்னதியில் நின்று 'நெல்லையப்பா' என்று அழைக்க, இறைவர் அமைதி காக்க, 'இங்குக் கடவுள் இல்லை போலும்' என்று சினந்து கூறியவர் யார் ?

  19. உருவம் இல்லை. (அருவ வழிபாடு). கொடி மரம் இல்லை. பலிபீடம் இல்லை. நந்தி இல்லை. எந்த சிவாலயம் ?

  20. மாணிக்கவாசகர் திருஉத்தரகோசமங்கைக்குச் சென்று அங்கு தம் குருநாதரைக் காணாமல் வருந்தி பாடிய பதிகம் எது ?

    பிடித்த பத்து
  21. சிவாலயத்தில் சிவபெருமானுக்கு மிக அருகில் இருக்கும் நந்தி. இவரது மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டே இருக்கும் ?

  22. விரட்டப்பட்ட அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க, போருக்கு ஆயத்த நிலையில் வாயிலை நோக்கிய நந்தி எங்குள்ளது ?

  23. சமணர்கள் தாழியால் மறைத்து வைத்த சிவலிங்கத்திருமேனியை உண்ணாவிரதம் இருந்து மீட்டெடுத்த நாயனார் ?

  24. புத்திரப்பேறு இல்லாத முசுகுந்த சக்கரவர்த்தி எந்த தலத்து இறைவரை வணங்கி புத்திரப்பேறு பெற்றார் ?

  25. சந்தான குரவருள் ஒருவர் ?

  26. மதுரை ஆதீனம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது ?

  27. கொடிக்கவி என்ற சாத்திர நூல் பாடப்பட்ட தலம் எது ?

  28. திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய நூல் ?

  29. தேவாரம் என்ற நூலை இயற்றியவர் யார் ?

  30. இறைவனை நினையாமல், வீணே பொழுதைப் போக்குவோரின் கணக்கை எத்தலத்து இறைவன் எழுதுவதாக அப்பர் பெருமான் பாடுகிறார் ?

தேர்வு ௧ ஒன்று செல்க

தேர்வு ௨ இரண்டு செல்க

தேர்வு ௩ மூன்று செல்க

முதல் பக்கம் திரும்புக