சைவ சமய தேர்வு ௧ மதிப்பெண்கள் 30

குறிப்பு

தெரிந்த வினாக்களுக்கு விடைகளை அளித்து விட்டு, பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களை சமர்ப்பிக்கவும் என்ற பட்டனை அழுத்தினால், உங்கள் தேர்ச்சி மதிப்பெண்ணும், எல்லா வினாக்களுக்குமான விடைகளும் கொடுக்கப்படும்.

தேர்வு ௨ இரண்டு செல்க

தேர்வு ௩ மூன்று செல்க

முதல் பக்கம் திரும்புக

தேர்வு ஒன்று ௧

 1. இறைவன் செய்யும் தொழில்கள் எத்தனை ?

 2. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று சொன்னவர் யார் ?

 3. சூரியனை முழு முதற் கடவுளாக வழிபடுவோர் யார் ?

 4. சண்டேசுவர நாயனார் நின்ற நெறி

 5. திருப்பாட்டு என்ற நூலைப் பாடியவர் யார்?

 6. சிவபெருமானின் குணங்கள் எத்தனை ?

 7. திருத்தொண்டர் புராணம் என்ற நூலின் முதல் நூல் எது ?

 8. பன்னிரு திருமுறை நூல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டியது யார் ?

 9. இறைவனை நினைந்து வணங்காமல் பிற உயிர்களுக்கு அன்னதானம் போன்ற உதவிகளைச் செய்பவர்கள் இறந்த பின்னர் எந்த உலகம் செல்வர் ?

 10. தோற்றமும் முடிவும் இல்லாதவர் (அநாதி) என்று சைவ சித்தாந்தம் யாரைக் குறிப்பிடுகிறது?

  விஷ்ணு மட்டும்
 11. மெய்கண்ட தேவநாயனாரின் ஆசாரியர் யார் ?

 12. திருநீற்றை எந்த திசை நோக்கியவாறு தரித்தல் வேண்டும் ?

 13. உருத்திராக்கம் தரிப்பதற்க்குத் தகுதியுடையவர் யாவர் ?

 14. சூக்கும ஐந்தெழுத்து மந்திரமாவது எது?

 15. சக்கரம் வேண்டி சிவனை நோக்கி தினம் 1000 தாமரைப் பூக்களை வைத்து பூசை செய்த திருமால், ஒரு நாள் ஒரு பூ குறைய தன் கண்ணை பிடுங்கி வைத்து வழிபட்டு அருள்பெற்ற தலம் எது ?

 16. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையின் தோலை பெருமான் உரித்து அணிந்த வீரட்ட தலம் எது ?

 17. சிவபெருமான் உமாதேவியரோடும் சுப்பிரமணியசுவாமியோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே காட்சி அளித்தது யாருக்கு ?

 18. தாடகை என்ற பெண் பூசித்தமையால் தாடசேச்சுரம் என்று பெயர் பெற்ற ஊரின் தற்போதைய பெயர் என்ன ?

 19. சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர் யார் ?

 20. ஞானப் பெருவெளி அல்லது அறிவுப் பெருங்கடலாக விளங்கும் திருத்தலம் எது ?

  திருக்காளத்தி
 21. சிவாலயத்தில் பலிபீடம் எதைக் குறிக்கும் ?

 22. சிவாலயத்தில் ஸ்தூல லிங்கம் என்பது எதைக் குறிக்கும் ?

 23. மகோத்சவம் அல்லது பிரம்மோத்சவம் என்பது எதைக் குறிக்கும் ?

 24. திருநாவுக்கரசரின் இன்னொரு பெயர் என்ன ?

 25. சிவாலயத்தில் எப்பொழுதும் யோக நிலையில் இருக்கும் மூர்த்தி யார்?

 26. தோத்திரத்தில் சாத்திரம் என்று எந்த நூலைக் குறிப்பிடுவர் ?

 27. பெருமான் பெண்ணொருத்திக்காக இரசவாத சித்தராகத் தோன்றி இரும்பு, செம்பு, பித்தளையெல்லாம் பொன்னாக மாற்றிக் கொடுத்த ஊர் எது ?

 28. மகாபலி சக்கரவர்த்தியை அழித்த பாவத்தைத் தீர்க்க, திருமால் சிவபெருமானை வழிபட்ட தலம் எது ?

 29. அடையவளைந்தான் என்ற திருப்பெயரைக் கொண்ட திருக்குளத்தைக் கொண்ட கோவில் எது ?

 30. மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று என்ற வாசகம் எத்தலத்து இறைவனுக்குரியதாகும் ?

தேர்வு ௧ ஒன்று செல்க

தேர்வு ௨ இரண்டு செல்க

தேர்வு ௩ மூன்று செல்க

முதல் பக்கம் திரும்புக