சளுக்கை மரகதவல்லி உடனுறை மனுகுல மகாதேவ ஈஸ்வரர் 5/5 (2)

சளுக்கை கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு மரகதவல்லி அம்மை உடனுறை மனுகுல மகாதேவ ஈஸ்வரர் ஆலயம்

திருக்கோவில் வழிபாட்டிற்கு இணை ஏதுமில்லை. ஆன்மீகத்தில் எவ்வகை பக்குவம் உடையவரும் திருக்கோவில் சென்று வழிபட வேண்டும். அவ்வாறு நாம் சென்று வழிபட பாடல் பெற்ற தலங்களும், வைப்புத் தலங்களும் மற்றும் எண்ணற்ற சிவாலயங்களும் உள்ளன.  அனைத்து சிவாலயத்திற்கும் சென்று வழிபட்டு ஈசன் திருவருள் பெறுவோம்.

                              திருச்சிற்றம்பலம்

சுவாமியின் பெயர்:   அருள்மிகு மரகதவல்லி அம்மை உடனுறை மனுகுல  மகாதேவ ஈஸ்வரர்.

ஆலய சிறப்பு;   இந்த ஆலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட கற்றலியாகும். ( மூலவர் விமானம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது ).

காலம்:  இந்த ஆலயம் கி.பி. 1055 க்கு முற்பட்டது. சோழர்கள் காலத்திய ஆலயம். ( முதலாம் ராஜேந்திர சோழனுடைய மகன் ராஜாதிராஜன் கல்யாணபுரம், கொல்லாபுரம் போரில் யானையின் மேல் கொல்லப்பட்டு, பிறகு அதே போர்க்களத்தில் 2-ம் ராஜேந்திர சோழன் கீழை சாளுக்கிய மன்னரை வென்று பட்டம் சூடிக்கொண்டான். இது கி.பி. 1054-இல் நடந்தது. இந்த செய்தி இந்த ஆலயத்தில் அவனது 2-ம் ஆண்டு கல்வெட்டில் ( 1055 ) குறிப்பிடப்பட்டுள்ளது ). எனவே இந்த ஆலயம் கி.பி. 1055-க்கு முற்பட்டது.

இருப்பிடம்: அக்னி தலமும், நினைத்தாலே முக்தி தரும் தலமுமான திருவண்ணாமலை மாவட்டம். வந்தவாசி தாலுக்கா, சளுக்கை கிராமம் ( பழைய பெயர் சோழகேரளபுரம் என்கிற சாளுக்கி )

வழித்தடம்: வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ சென்று அங்கிருந்து கிழக்கு திசையில் சுமார் 2 கி.மீ தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

பிற தகவல்கள்: இந்த ஆலயத்தில் சுமார் கி.பி.1119-இல் நாட்டிய மங்கை கொண்டு தினமும் நாட்டியம் நடந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் கி.பி.1518 வரை சிறந்து விளங்கியிருக்கிறது. பிறகு படிப்படியாக சிறப்புகள் குன்றி கேட்பாரற்று கி.பி.2002 வரை இருந்தது.

                ஆலயத்தின் பழைய புகைப்படம்.

 

தற்சமயம் அடியார் பெருமக்கள் மற்றும் ஊர் பொதுமக்களால் திருப்பணி செய்யப்பட்டு தற்சமயம் தினமும் 1 வேலை மட்டும் பூஜைகள் நடந்து வருகின்றன.

சுவாமியைப் பற்றி:  சுவாமி மனுகுல மகாதேவர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் காசியில் உள்ள அமைப்பை ஒத்து இருகிறார். இவர் ஞானகாரகன். ஞானத்தை வழங்குபவர். ஞானம் வேண்டுவோர் வந்து வழிபட வேண்டிய தலம் இதுவாகும். சுவாமி கிழக்கு பார்த்த முகமாக இருக்கிறார். ஆலயத்திற்கு கிழக்கு திசையில் ஒரு வாயிலும், தெற்கு திசையில் ஒரு வாயிலும் இருக்கிறது.

                  கல்வெட்டு தகவல்கள்: 183, Fin.(sep.rev)-B    Item No 465 முதல் 478  வரை.

 

              

திருச்சிற்றம்பலம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

மேலும் தொடர்புக்கு:

என்றும் இறைபணியில்,

ஏ.சிவநேசன்.  9751827124, 7667979032

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *