opinion

உழவாரப்பணியின் மகிமை

Publish on Comments(0)
உ சிவமயம் உழவாரத் திருப்பணியின் மகிமை அறிவோம். உழவாரம் செய்வோம். ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப்படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும், அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.  இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த அவன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது. மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து…
Categories: M1, M2

மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்

Publish on Comments(0)
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பன்னிரு திருமுறையில் சிவபுராணம் தமிழின் தொடக்க கால இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள், பதினெட்டு மேல்தொகை, பதினெட்டு கீழ்த்தொகை என தொகுக்கப் பெற்றன. அவை சமுதாயம் பற்றியும் அறம் பற்றியும் கூறும் நூல்கள். பக்தி இலக்கியம் அகநிலை இலக்கியம். பன்னிரு திருமுறையே தமிழ் வேதம். பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருஞானசம்பந்தர் அருளியது. 4, 5, 6 அப்பர் என்ற திருநாவுக்கரசர் அருளியது. சுந்தரர் அருளிய தேவாரம் 7 ம்…
Categories: M1, M2

சைவ சமயம் அடிப்படை நுட்பம்

Publish on Comments(1)
சைவ சமயம் – அடிப்படை நுட்பம் 1. அடிப்படை நுட்பம்       2. சைவநெறி நூல்கள் 3. சைவ சின்னங்கள்       4. சமயக் குரவர்கள் 5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள் 1. அடிப்படை நுட்பம் இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர்…
Categories: M1, M2
Tags: சைவ சமயம் சிவம்

திருக்கயிலாய வாத்தியம் சிவ வாத்தியம் பஞ்ச வாத்தியம்

Publish on Comments(0)
திருக்கயிலாய வாத்தியம் - சிவ வாத்தியம் - பஞ்ச வாத்தியம் தனி ஒரு மனிதரால், எக்காலத்திலும் தோற்றுவிக்கப் படாமல், இறைவன் திருவருளால் தொன்று தொட்டு வரும் ஒரே சமயம் சைவ சமயம் ஆகும். சைவ சமயம் மட்டுமே அநாதியானது. சைவ சமயத்தைத் தழுவியோ, எதிர்த்தோ, பகுதியாகக் கொண்டோ, உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. உலகின் அனைத்து சமய தத்துவங்களும் சைவத்திற்குள் அடக்கம். எனவே,, சைவ சமயமே சமயம். அத்தகைய சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது.…
Categories: M1, M2

சமயக் கல்வியின் இன்றியமையாமை

Publish on Comments(0)
இன்று, ஒரு வானஊர்தியை எடுத்துக் கொண்டு உலகை சுற்றி வந்தால்.... மலேசியாவில் பத்துகுகை முருகன் கோவில் உள்ளது. சிங்கப்பூரில் கல்லாங் சிவன் கோவில் உள்ளது. பிரான்ஸில் சிவன் கோவில்கள் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது, அமெரிக்காவில் இருக்கிறது, இங்கிலாந்தில் இருக்கிறது, உலகம் முழுவதும் நம் சைவ கோவில்கள் இருக்கின்றன இன்று. கோவில்கள் இல்லாத நாடே இல்லை எனலாம் என்னும் அளவிற்கு நம் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியமாயிற்று ? இவற்றில் பெரும்பான்மையான கோவில்கள் இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்டது.…
Categories: M1

சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ? இறைவன் திருவுருவ விளக்கம் சில

Publish on Comments(0)
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாலூட்டி வளர்த்தாலும் பாம்பு தீண்டத்தான் செய்யும் என்பார்கள். பாம்புகளை செல்ல பிராணியாக யாரும் வளர்ப்பதில்லை. பாம்புகள் வலையில் உள்ள எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளின் நண்பன் என்பார்கள். இத்தகைய குணங்களை கொண்ட பாம்பு ஏன் சிவனின் கழுத்தில் வந்தது. இந்த கேள்விக்கான விடை தேடினேன். இந்த கேள்விக்கு பதில் கொடுத்ததோடு சிவன் தன் உருவம் முழுவதிற்குமான விளக்கத்தை எனக்கு அளித்து என் மனதினுள் புகுந்து விட்டான். ஓம் நமசிவாய.…
Categories: M1