தமிழ் ஞானப்பரவல்
தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதுவதற்கு ஊக்குவிக்கும் வண்ணமும், சைவ நெறிமுறைகளை அழுந்தி கடைப்பிடிக்கவும், திருமுறை தொகுப்பு புத்தகங்கள், நாயன்மார்கள் வரலாறு போன்ற புத்தகங்களை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கும் ஒரு சிறு முயற்சி.
அவ்வகையிலே, விளம்பி ஆண்டு மாசி மாத முழுநிலவு நன்நாளிலே, சென்னையில் ஒரு கிரிவலம் அரசன்கழனி அருள்மிகு பெரியநாயகி உடனுறை பசுபதீசுவரர் ஆலயத்தில் ஔடதசித்தர் மலையை மலைவலம் (கிரிவலம்) வந்த அன்பர்களுக்கு குலுக்கல் முறையில் கரு முதல் திரு வரை திருமுறை தொகுப்பு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
இந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்