திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில்
இறைவனால் நமக்கு அருளப்பட்ட ஞான ரத்தினமாகிய திருமுறை மற்றும் சைவ சமயத்தை உலகெங்கும் மக்களின் நன்மைக்காக எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டில் அறத்தை நிலை நாட்டி மாமழை பெய்து மக்களை இன்பமாக வாழச் செய்யும் வழியாகும். அவ்வழியே, சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் (TNHB) அமைந்துள்ள அண்ணாமலையார் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்திலும் அதை ஒட்டியுள்ள விநாயகர் ஆலத்தில் குடமுழுக்கு 48 நாள் நிறைவு விழாவிலும் ஆனி 1 முழுமதி நாளன்று, சைவ சமயம் மற்றும் திருமுறை விழிப்புணர்வு வீதிஉலா நடத்தப்பெற்றது.
கயிலாய வாத்தியம் முழங்க திருமுறை வீதிஉலாவும், சைவ சமயம் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளும் அந்த கோவிலைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அறிவோம் சைவ சமயம் என்று நூலும் அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.