திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு
சென்னை, மேடவாக்கம் அருகில் உள்ள ஊர் பெரும்பாக்கம். அங்கே, சைவத்தின் மேன்மைகளை எடுத்து இயம்பும் பொருட்டும், ஆதியும் அந்தமும் இல்லாத சைவ சமயத்தினை அனைவரும் தெரிந்து, வாழ்வில் கடைப்பிடித்து போற்றி உய்வடையும் பொருட்டும் பெரும்பாக்கம் இந்திரா நகரில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் அவர்களின் திருவடிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இது கார்த்திகை மாதம் 9 ஆம் நாள், நவம்பர் 25 ஞாயிறன்று நடைபெற்றது.
கயிலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமிக்கு அபிடேகம் செய்யப்பட்டது. பின்னர் பன்னிரு திருமுறை ஓதப்பட்டது. பன்னிரு திருமுறை நூல்களை சென்னியில் வைத்து வீதிஉலாவாக அடியார்கள் புடை சூழ, வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. அடியார்களுக்கு காலை அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. அதிலிருந்து சில காட்சிகள் கீழே.