பன்னிரு திருமுறை 1.12 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) No ratings yet.

1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – thirumudukundRam (Vriddachalam)

பதிவு ஆசிரியர் சிவதிரு வி. சுப்ரமணியன் அவர்கள்.

25) பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) thirumudukundRam (Vriddachalam):
சம்பந்தர் தேவாரம் – sambandar thevaram
1.12 – மத்தாவரை நிறுவிக்கடல்

Verses: 01_012 – maththAvarai niRuvikkadal – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHaWNDY0dzeFVrYTg/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_012 01-03 maththAvarai niRuvikkadal – Part-1 – 2015-12-19 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHX24tcjZqSGxDSjg/view?usp=sharing

Discussion audio – Part-2: 01_012 04-11 maththAvarai niRuvikkadal – Part-2 – 2016-01-09 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHYVBaZmNweVR6bzg/view?usp=sharing

For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_012.HTM

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – விருத்தகிரீஸ்வரர் கோயில் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493

V. Subramanian
========================

(Verses in original Tamil version & word separated Tamil / Devanagari / Roman scripts) – print only those pages you need)

சம்பந்தர் தேவாரம் – Sambandar thevAram –

பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

 

Background:

சிதம்பரத்தைத் தரிசித்து, அருகுள்ள மற்ற தலங்களையும் தரிசித்துப், பின் மீண்டும் சிதம்பரத்தைத் தரிசித்தார் திருஞானசம்பந்தர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், “அடியேன் பதி முதலியவற்றையும் வணங்கிப் போதல்வேண்டும்” என்று விண்ணப்பிக்கப், பிள்ளையார் அங்ஙனமே தந்தையார், பரிசனங்கள், பாணர், மதங்கசூளாமணியார் இவர்களுடன் நிவாநதியின் கரைவழியே, மேற்றிசையிற்போய்த் திருஎருக்கத்தம்புலியூரை அடைந்தார்.

திருஎருக்கத்தம்புலியூரை வணங்கிப் பதிகம்பாடிப் புறப்பட்ட ஆளுடைய பிள்ளையார் இடையிலுள்ள தலங்கள் பலவற்றையும் வணங்கித் துதித்துத் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தை அடைந்தார் . போகின்ற வழியிலேயே முதுகுன்ற நாதருடைய அருட்செயல்களும் , ஆட்கொள்ளுந் திறனும் , இயற்கை வளமும் , நதியின் செலவும் மனத்தைக் கவர அவற்றை அமைத்து “மத்தாவரை நிறுவி” என்னும் பதிகத்தைத் தொடங்கி, “முத்தாறு வந்தடி சூழ்தரு முதுகுன்றடைவோம்” என அருளிச் செய்கின்றார்.

திருமுதுகுன்றம் செல்லும்போது வழியில் அருளியது இப்பதிகம்.

 

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – தலச்சிறப்பு :

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=176

நடுநாட்டுத் தலம்.

திருமுதுகுன்றம் – தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சமஸ்கிருதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.

 

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தில் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு.

 

இத்தலத்தின் பெயரில் ‘குன்றம்’ என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை – முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் – பழமை, அசலம் – மலை).

 

மிகப்பெரிய கோயில்.

——–

 

#2078 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 180

அங்கு நின்றெழுந் தருளிமற் றவருட னம்பொன்மா மலைவல்லி

பங்கர் தாமினி துறையுநற் பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்,

துங்க வண்டமிழ்த் தொடைமலர் பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்

செங்க ணேற்றவர் திருமுது குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்,

 

#2079 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 181

“மொய்கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ் முதுகுன்றை யடைவோ”மென்

றெய்து சொன்மலர் மாலைவண் பதிகத்தை யிசையொடும் புனைந்தேத்திச்

செய்த வத்திரு முனிவருந் தேவருந் திசையெலா நெருங்கப்புக்

கையர் சேவடி பணியுமப் பொருப்பினி லாதர வுடன்சென்றார்.

————–

 

பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

(“தானாதன தானாதன தானாதன தான” – என்ற சந்தம்.

சீர்கள் 1, 2, 3 – “தானாதன” என்பது “தனனாதன” என்றும்,

சீர் 4 – “தான” என்பது “தனன” என்றும் வரலாம்)

 

பாடல் எண் : 1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட

தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம்

கொத்தார்மலர் குளிர்சந்தகி லொளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 2

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்

இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் *

மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்

முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

(* “இனிதாவுறை யிடமாம்” என்றிருக்கவேண்டுமோ?)

 

பாடல் எண் : 3

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்

தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்

களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு

முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 4

சுரர்மாதவர் தொகுகின்னர ரவரோதொலை வில்லா

நரரானபன் முனிவர்தொழ விருந்தானிட நலமார்

அரசார்வர வணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்

முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 5

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்

கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்

மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு

முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 6

ஏவார்சிலை யெயினன்னுரு வாகியெழில் விசயற்

கோவாதவின் னருள்செய்தவெம் மொருவற்கிட முலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்

மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 7

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர்

மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்

விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை

முழவோடிசை நடமுன்செயு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 8

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்

கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்

மதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா

முதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 9

இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய

செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்

புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே

முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 10

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்

மருகன்வரு மிடபக்கொடி யுடையானிட மலரார்

கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 11

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்

புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த

நிகரில்லன தமிழ்மாலைக ளிசையோடிவை பத்தும்

பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.

============================= ============================

 

 

Word separated version:

#2078 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 180

அங்குநின்று எழுந்தருளி மற்று அவருடன் அம்பொன்-மா-மலைவல்லி

பங்கர் தாம் இனிது உறையும் நற்பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித்,

துங்க வண்-தமிழ்த்-தொடை-மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்

செங்கண் ஏற்றவர் திரு-முதுகுன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்,

 

#2079 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 181

“மொய்கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ் முதுகுன்றை அடைவோம்” என்று

எய்து சொல்-மலர்-மாலை வண்-பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திச்

செய்தவத் திரு முனிவரும் தேவரும் திசை-எலாம் நெருங்கப் புக்கு

ஐயர் சேவடி பணியும் அப்-பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்.

————–

 

பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

(“தானாதன தானாதன தானாதன தான” – என்ற சந்தம்.

Seers 1, 2 & 3 – “தானாதன” & “தனனாதன” are interchangeable,

Seer 4 – “தான” & “தனன” are interchangeable)

 

(To illustrate the chandam, the first song is shown in both ‘seer split’ and ‘word separated’ forms.)

பாடல் எண் : 1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட

தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம்

கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

**********

 

பாடல் எண் : 1

மத்தா-வரை நிறுவிக்,-கடல் கடைந்தவ்-விடம் உண்ட

தொத்து-ஆர்தரு மணி-நீள்-முடிச் சுடர்-வண்ணனது இடம்-ஆம்

கொத்து-ஆர்-மலர் குளிர்-சந்து-அகில் ஒளிர்-குங்குமம் கொண்டு

முத்தாறு-வந்து அடி-வீழ்தரு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 2

தழை-ஆர்- வடவிய வீதனில் தவமே-புரி சைவன்

இழை-ஆர்-இடை மடவாளொடும் இனிதா-உறைவு இடம்-ஆம் *

மழை-வானிடை முழவவ்-எழில் வளைவாள்-உகிர் எரி-கண்

முழை-வாளரி குமிறும்-உயர் முதுகுன்று- அடைவோமே.

(* “இனிதா உறை இடமாம்” என்றிருக்கவேண்டுமோ?)

 

பாடல் எண் : 3

விளையாதது-ஒர் பரிசில்-வரு பசு-பாச-வேதனை ஒண்

தளை-ஆயின தவிரவ்-அருள் தலைவன்னது சார்பு-ஆம்

களை-ஆர்தரு கதிர்-ஆயிரம் உடையவ்-அவனோடு

முளை-மா-மதி தவழும்-உயர் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 4

சுரர்-மாதவர் தொகு-கின்னரர் அவரோ- தொலைவில்லா

நரர்-ஆன-பன் முனிவர்-தொழ இருந்தான்-இடம் நலம்-ஆர்

அரசார்-வர அணி-பொற்கலன் அவை-கொண்டு-பன் நாளும்

முரசு-ஆர்வரு மண-மொய்ம்பு-உடை முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 5

அறை-ஆர்-கழல் அந்தன்-தனை அயில்-மூவிலை அழகு-ஆர்

கறை-ஆர்-நெடு வேலின்-மிசை ஏற்றான்-இடம் கருதில்

மறை-ஆயின பல-சொல்லி-ஒண் மலர்-சாந்து-அவை கொண்டு

முறையால்-மிகு முனிவர்-தொழு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 6

ஏ-ஆர்-சிலை எயினன்-உரு ஆகி-எழில் விசயற்கு

ஓவாத- இன்னருள்-செய்த-எம் ஒருவற்கு-இடம் உலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமே-மிக உடையார்

மூவாத-பன் முனிவர்-தொழு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 7

தழல்-சேர்தரு திரு-மேனியர் சசி-சேர்-சடை முடியர்

மழ-மால்-விடை மிக-ஏறிய மறையோன்-உறை கோயில்

விழவோடு-ஒலி மிகு-மங்கையர் தகும்-ஆடக சாலை

முழவோடு-இசை நடம்-முன்-செயும் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 8

செதுவாய்மைகள் கருதிவ்-வரை எடுத்த-திறல் அரக்கன்

கது-வாய்கள்-பத்து அலறீயிடக் கண்டான்-உறை கோயில்

மதுவாய-செங் காந்தள்-மலர் நிறையக்-குறைவு இல்லா

முது-வேய்கள்-முத்து உதிரும்-பொழில் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 9

இயல்-ஆடிய பிரமன்-அரி இருவர்க்கு-அறிவு அரிய

செயல்-ஆடிய தீ-ஆர்-உரு ஆகி-எழு செல்வன்

புயல்-ஆடு-வண் பொழில்-சூழ்-புனல் படப்பைத்-தடத்து அருகே

முயல்-ஓட-வெண் கயல்-பாய்தரு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 10

அருகர்-ஒடு புத்தர்-அவர் அறியா-அரன் மலையான்

மருகன்-வரும் இடபக்-கொடி உடையான்-இடம் மலர்-ஆர்

கருகு-குழல் மடவார்-கடி குறிஞ்சி-அது பாடி

முருகன்னது பெருமை-பகர் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 11

முகில்-சேர்தரு முதுகுன்று- உடையானைம்-மிகு தொல்-சீர்ப்

புகலிந்நகர் மறை-ஞான- சம்பந்தன்-உரை செய்த

நிகர்-இல்லன தமிழ்-மாலைகள் இசையோடு-இவை பத்தும்

பகரும்- அடியவர்கட்கு-இடர் பாவம்- அடையாவே.

================== ==========================

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *