புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்
அன்புடையீர் வணக்கம்,
நம் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது முன்னோர்களின் கைவண்ணங்கள் நமது மண்ணிலே தெரிந்தும், தெரியாமலும் புதைந்து , சிதைந்து கிடக்கின்றன, அப்படி சிதைந்து கிடக்ககூடிய ஆலயம்தான் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதை கோட்டை என்றே அழைக்கிறார்கள்.
1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.
தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பிரதோஷம்,தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது.
ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றது .ஆய்வு முழுவதும் நிறைவு பெற்றதும் புங்கம்பாடி கிராமம் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் முழு வரலாறு கிடைக்கப்பெறும்
கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 14 கி.மீ., சென்றால் புங்கம்பாடி கோயிலை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கரூரில் இருந்து ஆத்துமேடு செல்லும் நகர பேருந்து செல்கின்றது.
அல்லது
அரவக்குறிச்சியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ளது.
https://www.facebook.com/karurphotographer/posts/1028360567176671