1.23 – திருக்கோலக்கா – Thirukolakka
19) padhigam 1.23 – திருக்கோலக்கா
பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
1.23 – மடையில் வாளை பாய
Verses: 01_023 – madaiyil vALai – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHZFEzTUlJc0tyQms/view?usp=sharing
Discussion audio – Part-1: 01_023 01-02 madaiyil vALai pAya – Part-1 – 2015-08-08 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHYVI0T3Z3bUJmOGc/view?usp=sharing
Discussion audio – Part-2: 01_023 03-11 madaiyil vALai pAya – Part-2 – 2015-08-15 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHZ3JIanZJVE9IV1U/view?usp=sharing
********
The discussion for padhigam 1.23 is available on YouTube:
All 2 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE_NkDD4IUU9L0lKFRS5bAQt
Part-1: https://youtu.be/RD0GtJfSFWA
Part-2: https://youtu.be/yc8Epm619qA
********
For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_023.HTM
திருக்கோலக்கா – திருத்தாளமுடையார் கோயில் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=509
==================== ===============
(Verses in original Tamil version & word separated Tamil / Devanagari / Roman scripts) – print only those pages you need
பதிகம் 1.23 – திருக்கோலக்கா ( பண் : தக்கராகம் )
Background:
திருஞானசம்பந்தர் சீகாழிக் கோயிலில் வீற்றிருக்கும் தமது காழித் தந்தையாரையும் ஞானப்பால் தந்த தாயாரையும் வணங்கிப், பக்கத்திலுள்ள திருக்கோலக்காவிற்கு வழிபடச் சென்றார் . அங்கே கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானை ‘மடையில் வாளை பாய’ என்னும் பதிகத்தைக் கைத்தாளம் இட்டுப் பாடி வணங்கினார். அதனைக் கண்ட இறைவன் கனிந்து, திருஐந்தெழுத்து எழுதிய செம்பொற்றாளத்தை அவருக்கு ஈந்தருளினார். வையம் எல்லாம் உய்ய வரும் மறைச்சிறுவர் கைத்தலத்தில் தாளங்கள் வந்தன. அவற்றைப் பிள்ளையார் கையேற்றுத் திருமுடிமேல் வைத்து ஏழிசையும் தழைத்தோங்க இன்னிசைப் பதிகம் பாடியருளினார் .
#2000 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 102
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை, வேணி மீது
பைந்நிறைந்த வரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளு வானை,
மைந்நிறைந்த மிடற்றானை, “மடையில்வா ளைகள்பாய” வென்னும் வாக்காற்
கைந்நிறைந்த வொத்தறுத்துக் கலைப்பதிகங் கவுணியர்கோன் பாடுங் காலை,
#2001 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 103
தாளம் பெறுதல்
கையதனா லொத்தறுத்துப் பாடுதலுங் கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்த மஞ்செழுத்து மெழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளா லெடுத்தபா டலுக்கிசைந்த வளவா லொத்த
வையமெலா முய்யவரு மறைச்சிறுவர் கைத்தலத்து வந்த தன்றே.
#2002 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 104
காழிவரும் பெருந்தகையார் கையில்வருந் திருத்தாளக் கருவி கண்டு,
வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி, மனங்களிப்ப மதுர வாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க வின்னிசைவண் டமிழ்ப்பதிக மெய்தப் பாடித்
தாழுமணிக் குழையார்முன் றக்கதிருக் கடைக்காப்புச் சாத்தி நின்றார்.
————–
பதிகம் 1.23 – திருக்கோலக்கா ( பண் : தக்கராகம் )
பாடல் எண் : 1
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
பாடல் எண் : 2
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டா னஞ்சை யுலக முய்யவே.
பாடல் எண் : 3
பூணற் பொறிகொ ளரவம் புன்சடை
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.
பாடல் எண் : 4
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே.
பாடல் எண் : 5
மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
பாடல் எண் : 6
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாத மடைந்து வாழ்மினே.
பாடல் எண் : 7
நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலான் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே.
பாடல் எண் : 8
எறியார் கடல்சூ ழிலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியாற் றொழுவார் வினைகள் நீங்குமே.
பாடல் எண் : 9
நாற்ற மலர்மே லயனு நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாத மேத்தி வாழ்மினே.
பாடல் எண் : 10
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.
பாடல் எண் : 11
நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே.
——————-
Here is a reference in Sundarar thEvAram regarding Siva giving thALam to Sambandar
சுந்தரர் தேவாரம் – 7.62.8
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
.. ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
.. தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
.. அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்
.. கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
============================= ============================
Word separated version:
#2000 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 102
மெய்ந்-நிறைந்த செம்பொருள் ஆம் வேதத்தின் விழுப்பொருளை, வேணி மீது
பைந்-நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து-அருளுவானை,
மைந்-நிறைந்த மிடற்றானை, “மடையில் வாளைகள் பாய” என்னும் வாக்கால்
கைந்-நிறைந்த ஒத்து-அறுத்துக் கலைப்-பதிகம் கவுணியர்-கோன் பாடும் காலை,
#2001 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 103
தாளம் பெறுதல்
கை-அதனால் ஒத்து-அறுத்துப் பாடுதலும் கண்டு-அருளிக் கருணை கூர்ந்த
செய்ய-சடை வானவர்-தம் அஞ்செழுத்தும் எழுதிய நற்செம்பொற்றாளம்
ஐயர்-அவர் திரு-அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம்-எலாம் உய்ய வரும் மறைச்சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே.
( நற்செம்பொற்றாளம் = நல் செம்பொன் தாளம் )
#2002 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 104
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திருத்தாளக் கருவி கண்டு,
வாழிய தம் திருமுடிமேல் கொண்டு-அருளி, மனம் களிப்ப, மதுர வாயில்
ஏழிசையும் தழைத்து-ஓங்க இன்னிசை வண்-தமிழ்ப்-பதிகம் எய்தப் பாடித்
தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக்-கடைக்காப்புச் சாத்தி நின்றார்.
————–
பதிகம் 1.23 – திருக்கோலக்கா ( பண் : தக்கராகம் )
பாடல் எண் : 1
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்,
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும், கீள்
உடையும் கொண்ட உருவம் என்-கொலோ.
பாடல் எண் : 2
பெண்-தான் பாகம் ஆகப், பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.
பாடல் எண் : 3
பூண் நல் பொறிகொள் அரவம், புன்-சடை
கோணல் பிறையன், குழகன் கோலக்கா
மாணப் பாடி, மறை-வல்லானையே
பேணப், பறையும் பிணிகள் ஆனவே.
பாடல் எண் : 4
தழுக்-கொள் பாவம் தளர வேண்டுவீர்,
மழுக்-கொள் செல்வன், மறி சேர் அங்கையான்,
குழுக்-கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.
பாடல் எண் : 5
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா-நிற்கப் பறையும் பாவமே.
பாடல் எண் : 6
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்,
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடிகொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.
பாடல் எண் : 7
நிழல் ஆர் சோலை நீல வண்டினம்
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.
பாடல் எண் : 8
எறி ஆர் கடல்-சூழ் இலங்கைக்-கோன்-தனை
முறி-ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி-தன்
குறி-ஆர் பண்-செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
பாடல் எண் : 9
நாற்ற மலர்-மேல் அயனும் நாகத்தில்
ஆற்றல் அணை-மேல்-அவனும் காண்கிலாக்,
கூற்றம் உதைத்த குழகன், கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.
பாடல் எண் : 10
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர்-தோய் உருவிலாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.
பாடல் எண் : 11
நலங்கொள் காழி ஞான-சம்பந்தன்
குலங்கொள் கோலக்கா உளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே.
——————-
Here is a reference in Sundarar thEvAram regarding Siva giving thALam to Sambandar
சுந்தரர் தேவாரம் – 7.62.8
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
.. ஞான சம்பந்தனுக்கு உலகவர்-முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும்
.. தன்மையாளனை, என் மனக்-கருத்தை,
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும்
.. அங்கணன்-தனை, எண்கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உளானைக்,
.. கோலக்காவினில் கண்டு-கொண்டேனே.