1.80 – கோயில் (சிதம்பரம்) – Chidambaram
பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
23) padhigam 1.80 – கோயில் (சிதம்பரம்) – Chidambaram
1.80 – கற்றாங்கு எரி ஓம்பி
Verses: 01_080 – katRAngu eri Ombi – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHazFZUU95cWl0dkE/view?usp=sharing
Discussion audio – Part-1: 01_080 01-03 katRAngu eri Ombi – Part-1 – 2015-11-21 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHMGRJOHJUb2s2TEE/view?usp=sharing
Discussion audio – Part-2: 01_080 04-11 katRAngu eri Ombi – Part-2 – 2015-12-05 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHZDE4cmlVdEZDOXc/view?usp=sharing
For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_080.HTM
Padhigam audio – 1.80 – கற்றாங்கு எரி ஓம்பி ( katRAngu eri Ombi): – as sung by Thiruththani Swaminathan Odhuvar: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-thillai-thiruppathikangal.htm
(The direct link is: கற்றாங்கெரி (Katrangeri): http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/thillai-thiruppathikangal/tis-tns-thillai-01-katrangeri-yombi.mp3 )
V. Subramanian
==================== ===============
பதிகம் 1.80 – கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )
சீகாழியினின்றும் புகலிவேந்தர் , அடியார்களும் , திருநீல கண்ட யாழ்ப்பாணரும் சிவபாத இருதயரும் உடன்வரத் தில்லை செல்லத் திருவுளங்கொண்டார்கள் . அவர்கள் அனைவரும் கொள்ளிடத்தைக் கடந்தார்கள் . தில்லையின் தெற்குவீதி அணுகினார்கள் . தில்லைவாழ் அந்தணர்கள் சிரபுரப் பிள்ளையாரை எதிர்கொண்டு அழைக்க , நகரை அலங்கரித்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்ப்புறத்தே வந்து , அழைத்துச் சென்றனர் . பிள்ளையார் திருவீதியைத் தொழுதனர் . எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கினர் . திருமுன்றில் திருமாளிகையையும் வலம்வந்து வணங்கிக்கொண்டு உட்புகுந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள் . சிந்தையில் ஆர்வம் பெருகிற்று . கண்கள் ஆனந்த பாஷ்பம் பொழிந்தன . செங்கை சிரம் மீது ஏறிக் குவிந்தது . இவ்வாறு உருகிய அன்பினராய் உட்புகுந்தார் . இறைவன் தமக்களித்த சிவஞானமே ஆன திருஅம்பலத்தையும் , அந்த ஞானத்தால் விளைந்த ஆனந்தமாகிய கூத்தப் பெருமானையும் கண்ணாரக் கண்டு கும்பிட்டார் . ஆனந்தக் கூத்தருக்கு உரிமையான தனிச் சிறப்பினையுடைய தில்லைவாழ் அந்தணரை முன் வைத்து, “கற்றாங் கெரி யோம்பி” என்னும் இப்பதிகத்தை ஏழிசையும் ஓங்க எடுத்தார் . திருக்கடைக்காப்பும் முடித்து , ஊனையும் உயிரையும் உருக்கும் ஒப்பற்ற கூத்தை வெட்டவெளியிற் கண்டு திளைத்துச் , சிவானந்தப் பேறமுதுண்ட பிள்ளையார் ஆனந்தமேலீட்டால் அழுதார் ..
“கோயில்” (சிதம்பரம்) – தலச்சிறப்பு :
http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg102/html/cg102t0551.htm
சோழ நாட்டு (வடகரை)த் தலம்.
‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
இக்கோயிலுள் 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம் 4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.
சிற்றம்பலம்: நடராசப் பெருமான் திருநடம்புரிந்தருளும் இடம்.
பொன்னம்பலம் (கனகசபை): நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள பகுதி.
பேரம்பலம் : இது தேவசபை எனப்படும். …. இங்குத்தான் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.
நிருத்த சபை : நடராசப் பெருமானின் கொடிமரத்துக்கு (துவஜஸ்தம்பத்திற்கு)த் தென்பால் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
இராச சபை : இஃது ஆயிரக்கால் மண்டபமாகும்.
——–
தில்லை – தில்லைமரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்ற யெர் பெற்றது.
சிதம்பரம் = சித் + அம்பரம் = (அறிவு – வெட்டவெளி) = ஞானாகாசம்.
பெரும் பற்றப் புலியூர் – புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) பூசித்தமையால் இது புலியூர் எனப்பெற்றது. மாமுனிவர்களுக்குப் பெரிய பற்றுக்கோடாய் உள்ளதாதலின் – பெரும்பற்றப்புலியூர் என்பர்.
இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.
———-
#2060 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 162
ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவா ழந்தணரை முன்வைத்தே,
யேழிசையு மோங்க வெடுத்தா ரெமையாளுங்
காழியர்தங் காவலனார் “கற்றாங் கெரியோம்பி”
————–
பதிகம் 1.80 – கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )
பாடல் எண் : 1
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
பாடல் எண் : 2
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மைய றீர்வாரே.
பாடல் எண் : 3
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.
பாடல் எண் : 4
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே.
பாடல் எண் : 5
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
பாடல் எண் : 6
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.
பாடல் எண் : 7
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச்
சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.
பாடல் எண் : 8
கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்த றிண்ணமே.
பாடல் எண் : 9
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.
பாடல் எண் : 10
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.
பாடல் எண் : 11
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.
============================= ============================
Word separated version:
#2060 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 162
ஊழி முதல்வர்க்கு உரிமைத்-தொழில் சிறப்பால்,
வாழி, திருத்-தில்லை-வாழ்-அந்தணரை முன் வைத்தே,
ஏழிசையும் ஓங்க எடுத்தார், எமை ஆளும்
காழியர்-தம் காவலனார், “கற்றாங்கு எரி ஓம்பி”.
————–
பதிகம் 1.80 – கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )
பாடல் எண் : 1
கற்று ஆங்கு எரி ஓம்பிக், கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய,
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
பாடல் எண் : 2
பறப்பைப் படுத்து எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய,
பிறப்பு இல் பெருமானைப், பின் தாழ் சடையானை
மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.
பாடல் எண் : 3
மை ஆர் ஒண்-கண்ணார் மாட நெடு-வீதிக்
கையால் பந்து ஓச்சும், கழி-சூழ் தில்லையுள்
பொய்யா-மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்
செய்யான் உறை கோயில் சிற்றம்பலம் தானே.
பாடல் எண் : 4
நிறை-வெண்-கொடி-மாடம் நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறை-வண்டு அறை ஓவாச் சிற்றம்பலம் மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.
பாடல் எண் : 5
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.
பாடல் எண் : 6
வரு-மாந்-தளிர்-மேனி மாது ஓர் பாகம் ஆம்
திரு-மாந்-தில்லையுள் சிற்றம்பலம் மேய
கருமான் உரி ஆடைக், கறை-சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.
பாடல் எண் : 7
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒரு பாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான், உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.
பாடல் எண் : 8
கூர்-வாள்-அரக்கன்தன் வலியைக் குறைவித்துச்
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர்-ஆர்-சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.
பாடல் எண் : 9
கோள்-நாகணையானும் குளிர்-தாமரையானும்
காணார் கழல் ஏத்தக் கனலாய் ஓங்கினான்,
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.
பாடல் எண் : 10
பட்டைத் துவர்-ஆடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,
சிட்டர் வாழ்-தில்லைச் சிற்றம்பலம் மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.
பாடல் எண் : 11
ஞாலத்து உயர்-காழி ஞான சம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்-மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.
================== ==========================