1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) No ratings yet.

1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – thirumudukundRam (Vriddachalam)

பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்

26) பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) thirumudukundRam (Vriddachalam):
சம்பந்தர் தேவாரம் – sambandar thevaram
1.93 – நின்று மலர்தூவி

Verses: 1.93 nindRu malar thUvi – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHb2ZnNl90WUN6SkE/view?usp=sharing

Discussion audio : 01_093 01-11 nindRu malar thUvi – 2016-01-16 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHaE9wNDlOellzaVk/view?usp=sharing

For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_093.HTM

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – விருத்தகிரீஸ்வரர் கோயில் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493

================

(Verses in original Tamil version & word separated Tamil / Devanagari / Roman scripts) – print only those pages you need)

 

பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : குறிஞ்சி )

 

Background:

சிதம்பரத்தைத் தரிசித்துத், திருஎருக்கத்தம்புலியூரை வணங்கிப் பதிகம் பாடித் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தைத் திருஞான சம்பந்தர் அடைந்தார் . திருமுதுகுன்றம் கோயிலை அடைந்து அங்கு வலம்வரும்போது பாடி அருளியது இப்பதிகம்.

——–

 

#2080 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 182

வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலங்கொள்வார்

தூந றுந்தமிழ்ச் சொல்லிருக் குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி,

ஞான போனகர் நம்பர்தங் கோயிலை நண்ணியங் குள்புக்குத்

தேன லம்புதண் கொன்றையார் சேவடி திளைத்தவன் பொடுதாழ்ந்தார்.

————–

 

பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : குறிஞ்சி )

 

பாடல் எண் : 1

நின்று மலர்தூவி

இன்று முதுகுன்றை

நன்று மேத்துவீர்க்

கென்று மின்பமே.

 

பாடல் எண் : 2

அத்தன் முதுகுன்றைப்

பத்தி யாகிநீர்

நித்த மேத்துவீர்க்

குய்த்தல் செல்வமே.

 

பாடல் எண் : 3

ஐயன் முதுகுன்றைப்

பொய்கள் கெடநின்று

கைகள் கூப்புவீர்

வைய முமதாமே.

 

பாடல் எண் : 4

ஈசன் முதுகுன்றை

நேச மாகிநீர்

வாச மலர்தூவப்

பாச வினைபோமே.

 

பாடல் எண் : 5

மணியார் முதுகுன்றைப்

பணிவா ரவர்கண்டீர்

பிணியா யினகெட்டுத்

தணிவா ருலகிலே.

 

பாடல் எண் : 6

மொய்யார் முதுகுன்றில்

ஐயா வெனவல்லார்

பொய்யா ரிரவோர்க்குச்

செய்யா ளணியாளே.

 

பாடல் எண் : 7

விடையான் முதுகுன்றை

இடையா தேத்துவார்

படையா யினசூழ

உடையா ருலகமே.

 

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைக்

கத்த விரலூன்றும்

அத்தன் முதுகுன்றை

மொய்த்துப் பணிமினே.

 

பாடல் எண் : 9

இருவ ரறியாத

ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள்

பெருகி நிகழ்வோரே.

 

பாடல் எண் : 10

தேர ரமணரும்

சேரும் வகையில்லான்

நேரில் முதுகுன்றை

நீர்நின் றுள்குமே.

 

பாடல் எண் : 11

நின்று முதுகுன்றை

நன்று சம்பந்தன்

ஒன்று முரைவல்லார்

என்று முயர்வோரே.

============================= ============================

 

 

Word separated version:

#2080 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 182

வான-நாயகர் திரு-முதுகுன்றினை வழிபட வலங்கொள்வார்,

தூ நறும் தமிழ்ச்சொல் இருக்குக்-குறள் துணை-மலர் மொழிந்து ஏத்தி,

ஞான-போனகர், நம்பர்-தம் கோயிலை நண்ணி, அங்கு உள்-புக்குத்,

தேன்-அலம்பு தண்-கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.

————–

 

பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : குறிஞ்சி )

 

பாடல் எண் : 1

நின்று மலர் தூவி

இன்று முதுகுன்றை

நன்றும் ஏத்துவீர்க்கு

என்றும் இன்பமே.

 

பாடல் எண் : 2

அத்தன் முதுகுன்றைப்

பத்தி ஆகி நீர்

நித்தம் ஏத்துவீர்க்கு

உய்த்தல் செல்வமே.

 

பாடல் எண் : 3

ஐயன் முதுகுன்றைப்

பொய்கள் கெட நின்று

கைகள் கூப்புவீர்;

வையம் உமது ஆமே.

 

பாடல் எண் : 4

ஈசன் முதுகுன்றை

நேசம் ஆகி நீர்

வாச-மலர் தூவப்,

பாச வினை போமே.

 

பாடல் எண் : 5

மணி ஆர் முதுகுன்றைப்

பணிவார்-அவர் கண்டீர்,

பிணி ஆயின கெட்டுத்,

தணிவார் உலகிலே.

 

பாடல் எண் : 6

மொய் ஆர் முதுகுன்றில்

“ஐயா” என வல்லார்,

பொய்யார் இரவோர்க்குச்,

செய்யாள் அணியாளே.

 

பாடல் எண் : 7

விடையான் முதுகுன்றை

இடையாது ஏத்துவார்

படை ஆயின சூழ

உடையார் உலகமே.

 

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைக்

கத்த விரல் ஊன்றும்

அத்தன் முதுகுன்றை

மொய்த்துப் பணிமினே.

 

பாடல் எண் : 9

இருவர் அறியாத

ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள்

பெருகி நிகழ்வோரே.

 

பாடல் எண் : 10

தேரர் அமணரும்

சேரும் வகை இல்லான்

நேர் இல் முதுகுன்றை

நீர் நின்று உள்குமே.

 

பாடல் எண் : 11

நின்று முதுகுன்றை

நன்று சம்பந்தன்

ஒன்றும் உரை வல்லார்

என்றும் உயர்வோரே.

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *