கயிலாய வாத்திய பயிற்சி குறிப்புகள்
கயிலாய வாத்தியம்
பஞ்ச வாத்தியம் எனப்படும் கயிலாய வாத்தியம் சிவவாத்தியம் என்றும் அழைக்கப்படும். ஐந்து வித வாத்திய கருவிகளால் இசைக்கப்படுவதால் பஞ்ச வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மட்டும் வாசிக்கப்படும் இந்த இசை, பூதகணங்களால் வாசிக்கப்படும். இதனால் இதை பூதகணஇசை என்றும் கூறுவர். திருநந்திதேவர் தலைமையில் பூதகணங்கள் வாத்தியம் இசைக்க, சிவபெருமான் நடமாடுவதை விரும்பாதவர் எவருமிலர். அதை நினைப்பதற்க்கும் காண்பதற்க்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவ்வாத்தியம் பயிற்சி எடுக்க, சில குறிப்புகள் விரைந்து கற்பதற்க்கு ஏதுவாக இருக்கும். அவை இங்கே பகிரப்படுகிறது. வாத்தியம் தாளத்தின் அடிப்படையில் அமைவதாகும். அந்த தாளத்தை வாய் வழியே சொல்லி முதலில் கற்றுக் கொண்டால், அதை இசை வடிவமாக திருவுடலிலும் தாளத்திலும் எளிதாக கொண்டு வந்து விடலாம். அவ்வாறு வாய் வழியே சொல்லி கற்பது வாய்பாடு எனப்படுகிறது. கயிலாய வாத்தியம் கற்க விரும்பும் மாணவர்கள், இந்த வாய்பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு, வாயில் சொல்லி பயிற்சி எடுத்து, அதை தொடையிலும், வீட்டில் நாற்காலியிலும் தட்டி பயிற்சி எடுத்துக் கொண்டு திருவுடலிலும் தாளத்திலும் முயற்சி செய்தால், விரைந்து கற்றுக் கொள்ளலாம். அதற்கான வாய்பாடு இங்கே.
வாய்பாடு
கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை
- மகுடம்
- முதல் மெட்டு
- இரண்டாம் மெட்டு
- மூன்றாம் மெட்டு
- நான்காம் மெட்டு
- காளி நடை 1
- காளி நடை 2
- நந்தி நடை 1
- நந்தி நடை 2
- ஐயாரப்பர் மெட்டு
- அண்ணாமலையார் மெட்டு
- புறப்பாடு மெட்டு
- நடராசர் மெட்டு
- முதல் மெட்டு மூன்று சுற்று
- நான்காம் மெட்டு மூன்று சுற்று
கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை
மேலும் வளரும்.
திருச்சிற்றம்பலம்.