நான் சைவ சமயத்திற்கு புதியவர். சைவ சமயம் பற்றி சொல்லுங்கள் ? 5/5 (3)

நான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி. நம் சமயம் பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக சொல்லுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.      
 

—- குறள் 67, மக்கட்பேறு.

என்பது தெய்வப்புலவர் வாக்கு. ஒரு தந்தை தன்னுடைய மகனுக்கு இவ்வுலகில் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு யாதெனில், அவனை கற்றவர்கள் இருக்கும் அவையில் முதல்வனாக இருக்க யாது செய்ய வேண்டுமோ, அதைச் செய்து கொடுப்பதே ஆகும். தந்தை மகனுக்கு பெரிய செல்வத்தைச் சம்பாதித்துக் கொடுத்தாலும் அது கரைந்து போக வாய்ப்புள்ளது. ஆனால், இருப்பதிலேயே கடினமானதும் பெருமையுடையதும் கற்றவர் அவையில் முதல்வனாக இருப்பதே. நம் முன்னோர்கள் நம் தந்தை. இன்று இப்பூமியில் உலவித் திரியும் நமக்கு நம் தந்தையாகிய முன்னோர்கள் தங்கள் கடமையை மிகச் சரியாகச் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த உலகில் தோன்றிய அத்தனை மனித பண்பாடுகளிலும் மிகவும் பெருமையுடையதும் தலையாயதும் ஆவது  நம் தமிழ்ப் பண்பாடு. இவ்வுலகையும், பிரபஞ்சத்தையும், இயற்கையையும், அதை உடைய இறைவனையும் பல ஆண்டுகள் காலம் தொடர்ந்து ஆய்ந்து அவனைப் பிடிக்கும் வழிகளைக் கண்டுபிடித்து அவனருள் பெற்று நாமும் நம் வருங்கால சந்ததிகளும் தொடர்ந்து இன்பமாக வாழத் தேவையான அறிவு/ஞானம் அனைத்தையும் தீட்டி நமக்குப் பெரிய புதையலாக கொடுத்து விட்டுத் தான் சென்றுள்ளார்கள். இந்த புதையலை நாம் அறியாது, பிறர் தூண்டுதலில் நம்மை நாமே இகழ்ந்து மேலை நாகரிகத்தில் மயங்கி நம் ஞான வைரங்களையும் இரத்தினங்களையும் சிதைத்துக் கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் உண்மை.

உலகமயமாக்கத்தில் பல்வேறு பண்பாடுகள் கலந்துவிட்ட நிலையில், இறைவனைப் பற்றி அறியாமல், பலர் திக்குத் தெரியாமல் அற்ப இன்பத்தில் அழுந்தி தம் பிறவியை வீணடித்து வருகின்றனர். அடிப்படையாக நாம் இன்பமாக வாழும் வழியை நாம் பல ஆயிரம் ஆண்டு ஆராய்ச்சியில் நன்கு கற்றிருந்தோம். அதை நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த அறிவு ஞானத்தை அறிந்து பின்பற்றி இன்பமாக வாழ முயற்சிப்பதே நம்மை நல்வழியில் சேர்க்கும்.

அப்படி நம் முன்னோர்கள் நமக்கு என்ன கொடுத்துவிட்டார்கள் என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழும்.  இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஆராய்ச்சியும், அதன் பல்வேறு பகுப்புகளும், அதன் தன்மைகளும், அதைக் கட்டிக்காக்கும் ஒருவனைப் பற்றியும், அதனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் வாழ்வின் குறிக்கோளை நாம் அறியவும், இனி, இப்பிறவியில் நாம்  யாது செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவும், அதனால் நாம் இன்பமாக வாழவும் வழி செய்து கொடுக்கும் ஞானமே நமக்கு அருளிச் சென்றுள்ளார்கள்.  ஓரிரவில் அவற்றைப் படித்துவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கேட்டு, உணர்ந்து. உய்வடைவதே சாத்தியமானது. அதற்கு நாம் என்ன தெரிய வேண்டும் ?
முதலில், இந்த பிரபஞ்சம் எப்படி அமைந்துள்ளது என்பதை அறிய வேண்டும். பசு, பதி, பாசம் என்ற மூன்று பொருளைத் தெரிய வேண்டும். அவற்றின் தன்மை அறிய வேண்டும். பதியாகிய இறைவன் யார் என்று அறிய வேண்டும். அவன் தன்மைகள் என்ன என்பதைத் தெரிய வேண்டும். நம் அறியாமைக்குக் காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். இறைவனுடைய செயல்கள் என்ன, நாம் யார், நம் தன்மை என்ன, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும். இவை மிகவும் அடிப்படையானவை. அந்த இறைவனை நமக்கு அடையாளம் காட்டிச் சென்ற நம் குருமார்கள் யாவர் ? அவர்கள் வரலாறு என்ன ? அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன ? அவர்கள் நமக்குக் காட்டிய வழிகள் என்ன என்பதை அறிய வேண்டும். அவர்கள் நமக்கு இறைவனை அறிய கொடுத்துள்ள கருவிகளாகிய நூல்கள் யாவை ? நம்மிடம் தற்போது இருக்கும் நூல்கள் எவை ?  எந்த நூல்களை நாம் கற்க வேண்டும் என்பதை அறிய வேண்டும். சைவ சமயத்தின் தொன்மையையும் வரலாற்றையும் அறிய வேண்டும். நம் கோவில்களில் உள்ள சூட்சுமங்கள் என்ன ? திருக்கோவில் வழிபாடு பற்றி ஒவ்வொரு குறிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பாடல் பெற்ற தலங்கள் எவை ? அவற்றைச் சென்று வழிபடல் வேண்டும்.  இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து செய்ய வேண்டும். இவையே நாம் சைவ சமய அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இன்றைய தினங்களில்,  கண்டும், கேட்டும் அறிவது மிகவும் எளிதாக உள்ளது. மற்றும் மிகவும் அதிவேகமாக கற்கவும் முடிகிறது. உதாரணமாக, சொற்பொழிவுகள் கேட்டல், யூடியூப் காணொளிகள் பார்த்தல், ஞானகுருவிடம் உரையாடல், முறையான ஆதீன வகுப்புகள் என்று பல்வேறு வழிகளில் மிகவும் விரைவாகப் பயிலும் வசதிகள் உள்ளன. அவை அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு விரைவாக கற்கலாம்.

இனி, இந்த சைவ சமய அடிப்படைகளும் மேலும் முன்னேறி அறிய சில சுட்டிகளும் கொடுக்கிறேன்.

விரைவான சுருக்கம்:        

சைவ சமய அடிப்படை நுட்பம் – http://www.saivasamayam.in/adippadai.html

காணொளி:

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 1 –


சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 2 –  

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 3 –

படம் பார்த்து கற்றல்:

சைவ சமய படக் காட்சி தொகுப்பு –  http://www.saivasamayam.in/சிவபெருமானின்-மகிமைகள்

புத்தகம்/இணையம் வாசிக்க:

சைவ சமயம் –  http://noolaham.net/project/18/1746/1746.pdf

சைவ சமயம் அறிமுகம் – http://noolaham.net/project/136/13535/13535.pdf

வினா விடை மூலம் கற்றல்  –  http://www.shaivam.org/siddhanta/shp_vinavidai.htm

பன்னிரு திருமுறைகள் படிக்க –  http://www.shaivam.org/siddhanta/thiru.html

பன்னிரு திருமுறைகள் பொழிப்புரையோடு –  http://www.thevaaram.org
       
63 நாயன்மார்கள் வரலாறு –   http://www.shaivam.org/baktas/nayanmar-tamil.htm

சைவ சித்தாந்தம் மிக எளிய விளக்கத்துடன்  http://temple.dinamalar.com/special.php?cat=581

சிவவழிபாடு புத்தகங்கள்   http://www.ssivf.com/ssivf_cms.php?page=203

மின் புத்தக தொகுப்பு   http://senthilvayal.com/e-books/

மிகப் பழைய அரிய நூல்கள்   http://www.noolaham.org

சிவபூசை செய்வது எப்படி http://chellathangatrust.org/SivaPoojai.html

உயிரைப் பறிக்க வந்த எமதூதர்கள், தடுத்த சிவகணங்கள்   http://rightmantra.com/?p=5102

நம் உயிர் உய்வு பெற உழவார்பணி   http://www.shaivam.org/uzhavaram/uzavara_pani.htm

மணிவாசகர் அருட்பணி மன்றம் பதிவுகள்  http://manivasagar.in/index.php

சைவ சமயம் வினாடி வினா  http://www.aruljyothi.com/2016/08/online-quiz-on-saiva-samayam.html

கேட்டு அறிய

பெரிய புராண சொற்பொழிவு –  https://drive.google.com/open?id=0B5oSXjiZfL5aNFJBU0ZDal9NNFE

சொற்பொழிவுகளும் திருமுறை பண் இசையும் – Shaivam.org Audio Gallery – http://www.shaivam.org/gallery/audio/audio.htm

24 மணி நேர ரேடியோ – Shaivam.org internet radio –  http://www.shaivam.org/radio/radio.htm

திருவாசகம் mp3  http://palaniappachettiar.com/?p=121

திருமுறைகளை பண்ணோடு இசைக்க இலவச பயிற்சி  http://www.shaivam.org/gallery/audio/tis_sat_cls.htm

அடுத்து செய்ய வேண்டியன:

        1. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகிய ஆதீனங்களால் திருமுறை வகுப்புகள், சைவ சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் நேரடியாகக் கலந்து கொண்டு பன்னிரு திருமுறைகளையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் குற்றமற கற்க வேண்டும்.

        2. சைவ நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கும்பாபிஷேகம், சிவபூசைகள், சைவ மாநாடுகள் என்று பல்வேறு சைவ நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கலந்து கொள்ள, மேலும் பல சிவனடியார்கள் தொடர்பும் கிட்டும்.

        3. 276 பாடல் பெற்ற தலங்களை அதன் வரலாறு அறிந்துப் பின்னர் சென்று வழிபடலாம்.

        4. உழவாரப் பணிகளில் கலந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு சிவ தொண்டை ஏற்று வழுவாமல் செய்து வாருங்கள்.

இறைவனின் திருவருள் இன்றி அவனை வணங்குதலும் கூட கைகூடாது. இறைவனின் திருவிளையாடல் மிகவும் ஆனந்தமானது. அற்புதமானது. அதனை அறிய நாம் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த மனித உடல் எதற்கு ? இந்த மானுட பிறவி நமக்கு எதற்கு ?  நாம் யார் ? நம் தலைவன் யார் ? என்பதை குற்றமற அறிந்து நம் பயணத்தைத் தொடங்குவோம்.

ஓம் நமசிவாய.

சைவ சமயத்தின் பெருமைகள்
திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *