கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள் 4/5 (2)

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள்

கோவை சகோதரர்களாகிய சிவதிரு சுப்ரமணியம் ஓதுவார் மற்றும் சிவதிரு தண்டபாணி ஓதுவார் ஆகியோரது இனிமையான குரலில் கொங்கு நாட்டு திருத்தலங்களில் பாடப் பெற்ற திருமுறை மற்றும் திருப்புகழ் ஆகிய பதிகங்களுக்கு புதிய நிழல்அசைவு படத்தோடு கேட்டும், உணர்ந்தும் உருகி மகிழ இந்த காணொளி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு கேட்டு உணர்ந்து உருகி மகிழுங்கள். திருச்சிற்றம்பலம்.

அனைத்து பாடல்களின் தொகுப்பு பட்டியல்

 

குறிப்பிட்ட சில பாடல்கள்

சுந்தரர் தேவாரம் மற்றுப் பற்றெனக்கின்றி

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் சுந்தரர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம் சிட்டனை சிவனை செழுஞ் சோதியை

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்  திருஞானசம்பந்தர் தேவாரம்

தொண்டெலாம் மலர் தூவி திருஞானசம்பந்தர் தேவாரம்

பெண்ணமர் மேனியானாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் திருஞானசம்பந்தர் தேவாரம்

எரிக்குங் கதிர்வேய் சுந்தரமூர்த்தி தேவாரம்

எற்றான் மறக்கேன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

பந்தார் விரன்மடவாள் திருஞானசம்பந்தர் தேவாரம்

அருணகிரிநாதர் திருப்புகழ்

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை

கொங்குநாடு திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம்

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

சைவ சமயமே சமயம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

உங்கள் சிவ நிகழ்ச்சிகளை இங்கே பதிவிட No ratings yet.

உங்கள் சிவ நிகழ்வுகளை இங்கே பதிவிடுங்கள்.

உங்கள் திருக்கூட்டத்தின் இனி வரும் நிகழ்வுகளை எனக்கு வாட்சேப்பிலோ மின்னஞ்சலிலோ அனுப்பி வைத்தால் நம் saivasamayam.in வலைதளத்தில் வெளியிடுவோம். தொடர்ந்து உங்கள் நிகழ்வுகளை அனுப்ப, மின்னஞ்சல்: saivasamayam.in@gmail.com

அழைப்பிதழ் இருப்பின் இணைத்து அனுப்பவும்.

உங்கள் நிகழ்வுகளை saivasamayam.in வலைதளத்தில் வெளியிட கீழ்கண்ட தகவல்களை நிரப்பி அனுப்பவும்:

திருக்கூட்டம் (அ) நிர்வாகத்தின் பெயர்:

நிகழ்ச்சி பெயர்:

எங்கு ?

எப்போது ?

அமைப்பாளர்:

தொடர்பு எண்:

தங்கும் வசதி:

வழித்தடம்:

பிற தகவல்கள் ஏதேனும்:

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 4.2/5 (5)

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 – 2019

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அயல் நாடுகளிலும் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் ஏன் சேர வேண்டும் ? இந்த வகுப்பு நமக்கு என்ன நன்மை தரும் ? இந்தப் பயிற்சியில் யார் சேரலாம் ? பயிற்சி காலம், பயிற்சி கட்டணம், தேர்வு மற்றும் சான்றிதழ் பற்றிய மேலும் பல செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள அறிக்கையைப் படிக்கவும்.

அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள மையங்களுக்கு சென்று இன்றே உங்கள் பெயரைப் பதிவிடுங்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

வகுப்பு நடைபெறும் அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1 No ratings yet.

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1

உமாபதிசிவம்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களுல் உமாபதிசிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி என்ற நூலிலிருந்து முதல் பாடலின் விளக்கத்தை இங்கு காண்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மதுரை சித்திரைத் திருவிழா No ratings yet.

மதுரை சித்திரைத் திருவிழா

        உ
சிவமயம்

மதுரை சித்திரை திருவிழா 2018

18/04/18 புதன்கிழமை
மீனாட்சி அம்மன் கோவில் கொடி ஏற்றம்.
கற்பகவிருட்ஷ சிம்ம வாகனம்

19/04/18 வியாழக்கிழமை
பூத அன்ன வாகனம்

20/04/18 வெள்ளிக்கிழமை
கயிலாச பர்வதம் –
காமதேணு வாகனம்

21/04/18 சனிக்கிழமை
தங்க பல்லாக்கு

22/04/18 ஞாயிற்றுக்கிழமை
வேடர் பரி லீலை

23/04/18 திங்கட்கிழமை
சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை –
ரிஷப வாகனம்

24/04/18 செவ்வாய்க்கிழமை
நந்திகேஷ்வரர் –
யாழி வாகனம்

25/04/18 புதன்கிழமை
பட்டாபிஷேகம் –
வெள்ளி சிம்ம வாகனம்

26/04/18 வியாழக்கிழமை
திக்விஜயம் –
இந்திர விமான உலா

27/04/18 வெள்ளிக்கிழமை
காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மாலை பூ (புஷ்ப) பல்லாக்கு

28/04/18 சனிக்கிழமை
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உலா

வாருங்கள். சிவனை நினைந்திருங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சென்னை புத்தகத் திருவிழா 2018 தற்போது நடைபெறுகிறது 10-22 No ratings yet.

சென்னை புத்தகத் திருவிழா 2018 இப்போது நடைபெற்று வருகிறது.

41 ஆவது புத்தகத் திருவிழா சென்னை புனித ஜார்ஜ் ஆங்லோ இண்டியன் மேல் நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) தற்போது நடைபெற்று வருகிறது. சனவரி 10 முதல் 22 ஆம் தேதி வரை.

இரண்டாம் நாளான இன்று (11-01-2018, வியாழக்கிழமை), தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை கோசை நகரான் குழுவினரின் கயிலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

எல்லா வகையான புத்தகங்களும் இந்த புத்தக கடலில் இருக்கிறது. அள்ளுபவர்கள் வந்து அள்ளுங்கள். குறிப்பாக, சைவ சமய நூல்கள் எண்ணற்றவை உள்ளன. குறிப்பான சில பதிப்பகங்களில் நம் சைவ சமய நூல்கள் கிடைக்கின்றன. சித்தர திருவிளையாடல், சித்திர பெரியபுராணம் புத்தகங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பதிப்பகத்திலும், அதை அடுத்து உள்ள கிரி டிரேடர்ஸ் கடைகளிலும் கிடைக்கிறது. உமா பதிப்பகம், சைவ சிந்தாந்த நூற்புக்கழகம், கிரி டிரேடர்ஸ், மணிவாசகர் பத போன்றவை சில. சைவ சமய புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் கீழே புகைப்படங்களில் கடை எண்ணோடு பதிவிடப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் விருப்பம் போல வாங்கி அள்ளி எடுத்துச் சென்று படித்து பயன்பெறுங்கள்.  எல்லா கடைகளிலும் 10%. சாரதா பதிப்பகம் 50%.

வலைதளம்: https://bapasi.com/

 

Please rate this

16 ஆவது சிவபூசை மாநாடு தமிழகச் சைவநெறிக் கழகம் No ratings yet.

தமிழகச் சைவ நெறிக் கழகத்தின் 16 ஆவது ஆண்டு மாபெரும் சிவபூசை மாநாடு

இடம்: சென்னை பள்ளிக்கரணை, எஸ். எஸ். மகால் திருமண மண்டபம்.

நாள்: சனவரி 27 மற்றும் 28

தீக்கை பெற்ற சிவனடியார்கள் செய்யும் சிவபூசையைக் காணுங்கள்.

புதிய நூல்கள் வெளியீடு

சொற்பொழிவுகள்

28 ஞாயிறு காலை 7:00 மணிக்கு திருமுறைகள், சாத்திரங்கள் உடன், 108 அடியார்கள் சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, கோலாட்டத்துடன் சிவனடியார்கள் புடைசூழ மாபெரும் சைவ எழுச்சி வீதி உலா நடைபெறும்.

தமிழகம் எங்குமிருந்து சிவனடியார்கள், சிவதொண்டர்கள், சிவநேசர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், சைவ பெருமக்கள் வருக தர இருக்கிறார்கள்.

அனைவரும் வருக வருக !!!

நிகழ்வுகள்:

அழைப்பிதழ்:

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

 

Please rate this

திருவையாற்றில் அப்பர் கயிலாய காட்சி No ratings yet.

திருவையாற்றில் அப்பர் கயிலாய காட்சி ஆடி புதுமதி நாளன்று

ஜூலை 23, 2017, ஆடி புதுமதி நாளன்று திருவையாற்று எங்கும் சிவனடியார்கள் சூழ, அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய காட்சி. அனைவரும் வாரீர்.

 

 

 

Please rate this

காரைக்கால் மாங்கனித் திருவிழா No ratings yet.

காரைக்கால் மாங்கனித் திருவிழா

காரைக்கால் – மாங்கனித் திருவிழா..2017 (08.07.2017–மாங்கனி  இறைத்தல்) அழைப்பிதழ்
 நிகழ்ச்சி  நிரல்:-
(ஜூன்)
04.06.2017 – பந்தக்கால் முகூர்த்தம்
.
ஜுலை
05.07.2017 – மாப்பிள்ளை அழைப்பு
06.07.2017 – திருக்கல்யாணம், பிரதோஷம், மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு
07.07.2017–மாலை 6 மணிக்கு பிச்சாண்டவர் அபிஷேக ஆராதனை
08.07.2017 – பவளக்கால் விமானத்தில் எம்பெருமான்எழுந்தருளல், வீதிகளில் மாங்கனி  இறைத்தல்
09.07.2017 – அம்மையார் பேயுருவில் கயிலைக்கு எழுதல், எம்பெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தல்
எல்லோரும் திருவிழாவுக்கு வந்திருந்து, சிறப்பித்து எம்பெருமானின் அருளைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்.!!
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29 No ratings yet.

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29

திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஹேவிளம்பி/2017ம் ஆண்டிற்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. ஜூலை 7ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா  ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது.
 அன்று முதல் தினந்தோறும் காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடக்கிறது.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் திருமலை பக்தி சொற்பொழிவு,
 ஜுலை 7ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.
வருக அருள்தரும் நெல்லையப்பர் உடனாய காந்திமதி அம்மை  அருள் பெறுக…..

Please rate this

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம் No ratings yet.

சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்

ஆனி 7 முதல் ஆனி 17 வரை  (21.06.2017 முதல் 01.07.2017 வரை)

அழைப்பிதழ்

Please rate this

பத்துகாஜா, பேராக், மலேசியா சிறுதொண்ட நாயனார் திருமுறை விழா No ratings yet.

பத்துகாஜா, பேராக், மலேசியா – சிறுதொண்ட நாயனார் திருமுறை விழா

Please rate this

தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தெய்வத்திருமண அழைப்பிதழ் No ratings yet.

தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் முதலாம் ஆண்டு தெய்வத் திருமண விழா அழைப்பிதழ்.

சிவனடியார்களும், சிவ பக்தர்களும் திருக்கூட்டமாக வருக வருக.

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஆவடி திருத்தொண்டர் திருவிழா No ratings yet.

ஆவடி திருத்தொண்டர் திருவிழா – திருமுறை ஞானத் திருச்சபை

அழைப்பிதழ்

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவில் பாதயாத்திரை No ratings yet.

பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவில் பாதயாத்திரை

சென்னை கிண்டியிலிருந்து பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவிலுக்கு பாதயாத்திரை.

Please rate this

மலேசிய சைவ நற்பணிக் கழகம் மாதாந்திர சொற்பொழிவு No ratings yet.

மலேசிய சைவ நற்பணிக் கழகம் – மாதாந்திர சொற்பொழிவு

11 ஜூன் 2017 ஞாயிறு, காலை 10 மணிக்கு

Auditorium Tan Sri K.R. Soma, Kuala Lumpur

தலைப்பு: ஆலய வழிபாடு

சொற்பொழிவாளர்: திருமுறைச் செம்மல் சித்தாந்த ரத்தினம் திரு நா. தர்மலிங்கம் M.A. ஐயா அவர்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

அறுபத்து மூவர் வீதிஉலா அழைப்பு No ratings yet.

அறுபத்து மூவர் வீதி உலா அழைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு டவுன், ஸ்ரீ பார்வதி சமேத  ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவம்  நாள்  வைகாசி மாதம் 20-ஆம்  நாள் 03:06:2017 சனிக்கிழமை காலை 8.30 மணியளவில்  ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அறுபத்து மூவர் நாயன்மார்கள் உற்சவர் விழா நடைபெறுகின்றது.எம்பெருமானின் திருக்கருணையால் ஈசன் அறுபத்துமூவர் நாயன்மார்கள் அனைவரையும் தொட்டு தோளில் சுமந்து திருவீதி பாரம் செய்யும் மிக அரிய வாய்ப்பை ஸ்ரீ பட்சிஸ்வரர் பெருமான் )  சிவனடியார்களாகிய நமக்கு வாய்ப்பு கொடுத்து திருக்கருணை புரிந்துள்ளார்.நாயன்மார்களை வீதியுலாவில் தோளில் சுமக்க விருப்பமுள்ள அனைத்து அடியார்களும் தவறாது கலந்து கொள்ளவும்.ஒரு சப்பரத்தில் 6நாயன்மார்கள் வீதம் 11சப்பரத்தை சுமப்பதற்குஅடியார் வே ண்டும். எம்பெருமான் திருவருளால் வாய்ப்புள்ள அடியார்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். திருக்கோயில் அருகே அடியார்கள் 02:06:2017 அன்று இரவு தங்குவதற்கு திருமணமண்டபமும் இரவு திருவமுதும் மற்றும் 03:06:2017விழா அன்று காலை மற்றும் மதியம் திருவமுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவனடியார்கள் திருக்கூட்டம்  கலந்து  கொண்டு விழா வை சிறப்பாக நடத்தி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
அன்புடன் அழைப்பு: :
ஸ்ரீதெய்வச் சேக்கிழார்  விழாகுழுவினர்,மற்றும் உலக சிவனடியார்கள் ஒன்றிணைப்பு திருக்கூட்டம் .
#திருக்கோவிலூர் மணிகண்டன்(சிவனுக்கு இனியவன்)8973036348:உசிஒ CUG.8300086838.
செய்யாறு.மு.யோகராஜா.9943789346****cug.8300086916
( திருக்கோவில் வழிதடம் செய்யாறு. காஞ்சிபுரம்,வந்தவாசி, ஆரணி வழி தடம் வழியாக வரலாம்   ,)
திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஆனாங்கூர் சொக்கநாதர் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா No ratings yet.

ஆனாங்கூர் சொக்கநாதர் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ்

திருக்கூட்டத்தின் பெயர்:  சொக்கநாதர் அருட்பணி மன்றம்.

ஆலயப்பெயர்:  மீனாட்சியம்மை் சொக்கநாதர்ஆலயம்.

ஊர்: ஆனாங்கூர்.

நிகழ்ச்சி: திருக்குடநன்னீராட்டுப் பெருவிழா.

நாள்: 01.06.2017.

நேரம்: காலை  8 மணி முதல் 9  வரை.

வழித்தடம்:  திண்டிவனம்  to செஞ்சி சாலையில் நாட்டார்மங்கலம் அருகில் ஆனாங்கூர்.

ஆலசிறப்பு:  சுமார் ஆயிரமாண்டு பழமையான சிவாலயம். சகலதோஷநிவர்த்தி. மேற்கு மற்றும் கிழக்கில் எழில்மிகு இராஜகோபுரம். 800 அடி திருச்சுற்றுமதில். மிகப்பெரிய மஹா வன்னிமரம். சோழர் காலத்து செம்பியன்மாதேவி திருப்பணி செய்தத்தளம் மற்றும் நாராயணநந்தசரசுவதி சுவாமிகளும் அருட்பணி செய்துள்ளனர். எனவே அன்பர்கள் யாவரும் வருக அருள் நலம் பருக.

இவன்

தி.சரவணன்.

தொடர்புஎண்:  9786407534

திருச்சிற்றம்பலம்.

Please rate this

செந்தமிழரசு கி.சிவகுமார் M.E. ஞானத்திரள் ஆசிரியர் மே 2017 5/5 (1)

ஞானத்திரள் ஆசிரியர்  செந்தமிழ் அரசு சிவதிரு கி. சிவகுமார் M.E. அவர்களின் மே 2017 மாத சொற்பொழிவு நிகழ்வுகளின் அட்டவணை.

Please rate this

அப்பிபட்டி தேனி மாவட்டம் சைவத் திருவிழா No ratings yet.

அப்பிபட்டி தேனி மாவட்டம் சைவத் திருவிழா

அடியார் பெருமக்கள் திருப்பாதம் போற்றி

சைவத் திருவிழா அழைப்பிதழ்

வருகின்ற 28 / 05 / 2017 அன்று

மீனாக்ஷியம்மை உடனமர் ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் திருவருளாலும்..

கமலாம்பிகை உடனமர் வீதிவிடங்கப் பெருமான் திருவருளாலும்

நம்மை ஆளும் நாயகர் சிவகாமியம்மை உடனாடு தில்லை அம்பலவாணர் திருவருளாலும்….

சமய குரவர்கள், சந்தான குரவர்கள், குருமார்கள் குருவருளாலும்.

தேனி மாவட்டம் அப்பிபட்டி கிராமத்தில்..

பாரில் சைவம் தழைக்கும் பொருட்டு.. உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டு

சீர்போற்றும் அடியார் வழிபாடு மற்றும் சமய சொற்பொழிவு நடத்த பெருமான் திருவுள்ளம் கூடியுள்ளது..

ஈரோடு நசியனூர் திருமுறை திருக்காவணம் அறக்கட்டளை தலைவர் சிவதிரு. ஹரிஹர தேசிகர் அய்யா அவர்கள் அருளுரை ஆற்றவுள்ளார்..

மேலும் பல ஓதுவார் மூர்த்திகள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்..

திருமுறை பண்ணிசை வழிபாடு நடத்தப்பெற உள்ளது…

ஆகையால் அடியார் பெருமக்கள் வந்திருந்து விழாவில் கலந்து கொண்டு மனம் , மொழி , மெய்யினால் வாழ்த்தி எல்லாம் வல்ல கருணைமாக்கடல் சிவபெருமானின் திருவருளை பெற வேண்டுகிறோம்…

அடியார் பெருமக்கள் , ஆன்மீக மெய்யன்பர்கள் எழுந்தருளுக..

வழி : –

தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம், குமுளி, செல்லும் பேருந்தில் ஏறி சின்னமனூர் நிறுத்தத்தில் இறங்கவும்…

அங்கிருந்து அப்பிப்பட்டி ஷேர் ஆட்டோ வசதி உண்டு..

அலைபேசி :

சிவ. விஜய் கர்ணல் : 9597364320
சிவ. வெங்கடேஷ் குமார் : 9688925987

Please rate this

185 ஆவது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு No ratings yet.

185 ஆவது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு

மே 28, 2017 ஞாயிறு அருள்மிகு கைலாசநாதர் கோவில் வானகரம்

Please rate this

வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா ? சிவபெருமானை வணங்குங்கள் 4.5/5 (2)

வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா ? சிவபெருமானை வணங்குங்கள்

சகல அண்ட புவனங்களையும் தன்னுள் கொண்டு காத்தருளும், தனக்கு நிகரற்ற தெய்வம் சிவபெருமானின் ஆணையின் கீழ், அனைத்துலகும் இயங்கி வருகிறது. எல்லா உயிர்க்குத் தேவையானவற்றையும், பொருளையும், இன்பத்தையும் தன் அளப்பரிய கருணையினால் தக்க சமயத்தில் கொடுத்து அருள எல்லா ஆலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவம் நம்மை உய்விக்கும் தெய்வம். ஆணவத்தை வேற்றுத்து நிகரற்ற பேரின்பத்தை எப்போதும் வழங்கும் தன்மையுடைய ஒரே கருணை தெய்வம் சிவபெருமான். திக்குத் தெரியாமல் தவித்துப் புலம்பும் எல்லா உயிர்களுக்கும் தெப்பமாக தானே வந்து காத்தருளி நம்மை உய்விக்கிறான். அவ்வாறு இவ்வுலக உயிர்களுக்கு வாழ்விற்க்குத் தேவையான செல்வங்கள் அனைத்தையும் மகாலட்சுமிக்கு அருளி, செல்வத்திற்கெல்லாம் தெய்வமாக அவளை நியமித்தருளினார். மகாலட்சுமி சிவபெருமானின் திருவருளால் எட்டு சக்திகளைப் பெற்றார். தனம், தான்யம், சந்தானம் உள்ளடக்கிய எட்டு சக்திகளையும் சங்கநிதி பதுமநிதி என இருவரிடம் ஒப்படைத்தார். இந்த செல்வங்கள் யாவையும் கணக்கு பார்த்து தேவையான செல்வத்தை தேவையானவர்களுக்கு வழங்க ஒருவர் வந்து சேர்ந்தார். அவரே குபேரன்.

குபேரன் யார் ?

திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்க்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் சொல்கிறது. சிவபிரானுக்கு இரண்டு நெருங்கிய தோழர்கள். ஒன்று சுந்தரமூர்த்தி நாயனார். இன்னொருவர் குபேரன். பிரம்மாவின் மனதில் தோன்றியவர் புலஸ்தியர். இவருடைய பிள்ளைகள் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பநகை, வீபீஷணன் மற்றும் குபேரன். குபேரனும் இராவணனும் சிறந்த சிவபக்தர்கள். குபேரன் சிவபிரானிடம் தவம் செய்து அருள் பெற்றார். மேலும் வடக்கு திசைக்கு உரிய அதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இந்த குபேரனிடம் தான் மகாலட்சுமி தான் சிவபெருமானிடம் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். குபேரன் அரசாட்சி செய்ய அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பி விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அதில் ஓர் அதிசய அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி மீன் ஆசனத்தில் போடப்பட்ட மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினார். கிரீடம், தங்க ஆபரணங்கள் அணிந்து முத்துக் குடையின் கீழ் அமர்ந்து கையில் அபய முத்திரை காட்டுகிறார். யார் யாருக்கு என்ன செல்வம் போய்ச் சேர வேண்டுமோ, அவற்றை சரியாக சமர்பிப்பதே இவர் வேலை. மேலும் பாவங்கள் செய்யாதிருப்பவர்களை கோடீஸ்வரானாக்குவதும் இவரது பணியாகும். இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும் இடதுபுறத்தில் பதுமநிதியும் அமர்ந்து உதவிபுரிவார்கள்.

சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர். இவரது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்களாகும்.

குபேரனின் சிறப்புகள்

குபேரனின் உருவ அமைப்பு

குபேரன், சிறுத்த சிவந்த உருவமும் பருத்த வடிவமும் கொண்டவர். இவரது துணைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து முத்துக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சிம்மாசனம் தாமரை மலர் மீது மீனாசனம் அமைத்து அதன் மேல் மெத்தை விரிக்கப்பட்டிருக்கும்.அவர் காலின் கீழ் அவரது வாகனமான குதிரை இருக்கும்.

குபேரனின் ஒரு கை அபயமுத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகும் என்பார்கள்.

அவர் தன் வாய் வழியே ரத்தினங்களை உமிழ்ந்து செல்வதாலேயே இது நடைபெறுகிறது. குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும் இடப்புறத்தில் பது மநிதியும் வீற்றிருக்கிறார்கள். கீழே உள்ள பாத்திரங்களில் நவரத்தினக் குவியல்கள் காணப்படும். அதோடு குபேர யந்திரத்துடன் குபேரன் காட்சியளிக்கிறார்.

குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர். குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுச் சென்று கொண்டிருந்தான். ஒரு முறை காவேரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகைமை கணங்களைக் காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன.

ஆகா, இந்த ஊர் எவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்தான். அவ்வளவு தான், அந்த விருப்பத்தை நிறைவேற்ற சிவபெருமானார் அவருக்கு ஒரு பிறவி கொடுத்து விட்டார். அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வெளியே எடுத்து முறையாக நீ என்னை வழி பட்டா யானால், உனக்கு அளவிலாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும் என்றவாறே சிவபெருமான் திடீரென குபேரன் முன் தோன்றினார்.

ஈசன் கூறியவாறே குபேரனும் அவரை வெளியே எடுத்து வழிபாடு செய்தான். தன் பெயர் அளகேசன் என்ற நாமம் கொண்டு விளங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டான். சிவனும் சம்மதித்தார். குபேரன் வழிபட்ட அந்தச் சிவன் கோவில் பவானியில் உள்ளது. அது பவானி சங்கமேஸ்வரர் கோவில். எனவே தீபாவளியன்று இத்தலத்தில் வழிபட்டால் அளவற்ற செல்வமும் அருளும் பெறலாம்.

ஆகவே, குபேரனை எண்ணத்தில் கொண்டு சிவபெருமானை தினம் வணங்கி வந்தால் உங்கள் இல்லத்தில் செல்வம் கொழிக்கும். புதிய வீடு, வாகனம் பெறுவீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வறுமையும் தரித்திரியமும் தெறித்து காணாமல் ஓடி விடும். கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் சிவபிரான். இந்த பிறவியில் செழித்து வாழ நல்ல செல்வமும் மறுபிறவி வேண்டாதவர்க்கு பிறவிப் பிணியை நீக்கி பேரின்ப முக்தியும் கொடுத்து அருளுவார். சிவபிரான் மீது அன்பு கொண்டு அவர் திருவடியை இறுக பற்றிக் கொள்ளுங்கள். ஓம் நமசிவாய.

 

Please rate this