அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை பௌர்ணமியில் கிரிவலம் வாருங்கள். No ratings yet.

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!!

அச்சிறுபாக்கம் – அச்சுமுறிப்பாக்கம் – சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை அச்சிறுப்பாக்கத்தில் மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ௧௫௰௰ (1500) ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு உறையும் பெருமான் மரகதாம்பிகை உடனுறை பசுபதீசுவரர் என்று அன்போடு காலம் காலமாக அழைக்கப்பட்டு வருபவர்.  அச்சிறுபாக்கத்தில் அமையப் பெற்றுள்ள பாடல் பெற்ற தலமான ஆட்சீசுவரர் கோவிலுக்கு உட்பட்டது தான் மலை உச்சியில் உள்ள பசுபதீசுவரர் கோவிலும் என்கிறார்கள். மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று செங்குத்தான படிக்கட்டு. இன்னொன்று மலையின் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

இந்த மலையை சுற்றி பல்லாண்டு காலமாக மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சிறிதே தடைபட்ட இந்த மலைவலம், பிறப்பு இறப்பு அற்ற எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய உலகின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளினாலும் அவர் விருப்பத்தினாலும் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.  மொத்தம் ௧௪ (14 km) கி.மீ. தூரம் உள்ள இந்த மலையைச் சுற்றி வரும் பாதையில் முழுநிலவு (பௌர்ணமி) அன்று கிரிவலம் வரப்படுகிறது.

மலைவலம் துவங்கும் இடம்:  அச்சிறுபாக்கம் பசுபதீசுவரர் கோவில் மலையடிவாரம்.

எல்லையற்ற கருணையும், ஆற்றலையும் கொண்டு, இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, ஒடுக்கி, அருள் புரிந்து வரும் சிவபெருமான் உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த உலகில் படைத்து அருளி காத்து வருகிறான். அவ்வாறாக, சிவபெருமானே, மலையின் வடிவில் அமைந்து அருள் பாலிப்பதாக நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு நாட்டின் அரசனுக்கு நாம் செய்யும் பணிகள் தான் எத்தனை எத்தனை ? அவனை வரவேற்று உபசரிக்கும் விதம் தான் எத்தனை எத்தனை ? இந்த ௨௨௪ (224) புவனங்களில் ஆயிரக்கணக்கான கோள்களையும் பரவெளியையும் படைத்து அருள் புரிந்து வரும் நம் ராஜாதி ராஜனான சிவபெருமானை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் ? எப்படி வணங்க வேண்டும் ? அவனை எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இந்த மலையிலும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் உள்ளன. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்திருந்த பூமியாக விளங்கியது இது. பெருமை மிக்க இந்த மலையில் மேவி அருள்பாலிக்கும் பசுபதீசுவரரை வணங்கியும் இந்த மலையை சிவபிரானாகவே எண்ணி மலைவலம் வருவதும் நாம் மிக்க புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திருவண்ணாமலைக்கு இணையாக இந்த மலையும் திகழ்வதால், திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் அதே புண்ணியமும், சிறப்பும், அருளும் இந்த மலையை வலம் வருவதால் கிடைக்கப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள், திருவண்ணாலை செல்வதோடு இந்த வஜ்ரகிரி மலையையும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த மலையை சீர் செய்யவும், வழிபாடுகள் சிறப்பாக அமையவும் பல உதவிகள் தேவைப்படுகிறது. இந்து உதவி அமைப்பினர் பல சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் கூட்டாக ஒன்று சேர்ந்து நம் பாரம்பரிய சொத்தான இந்த மலையை சீரமைத்து, கோவில்களையும் வழிபாடுகளையும் சிறப்பாக நடத்த இணைந்து செயல்பட வேண்டும்.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் அன்பர்கள் வஜ்ரகிரி மலைக்கும் கிரிவலம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இணையற்ற ஒப்பற்ற பெருமானின் திருவருள் மீண்டும் நம் பூமியில் பட்டு ஆன்மீக ஒளிப்பெருக்கு ஏற்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சென்னையில் ஒரு கிரிவலம் 4.75/5 (4)

சென்னையில் ஒரு கிரிவலம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழ் வழக்கு. ஆற்றல் உள்ள மலைகளை சிவமாகவே வணங்கி வலம் வருவதும் நம் மரபு. அவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மலைகளை சிவமாக வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு மலை சென்னை மாநகரிலும் உள்ளது.

சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை. இந்த மலையின் மீது பன்நெடுங்காலமாக சிவபெருமான் இலிங்க வடிவாய் எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார். நிறைய பக்தர்கள் இம்மலை மீது இருக்கும் சிவபெருமானைத் தரிசித்து அபிஷேக வழிபாடு செய்து வருகிறார்கள். இம்மலை மீது கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் முழுமதி/நிறைமதி/பௌர்ணமி தினத்தன்று மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு உள்ள இந்த மலையை ஒரு முறை வலம் செய்ய 1 மணி நேரம் 15 நிமிடங்களும் ஆகிறது. மலை மீது ஏற சுமார் 20-30 நிமிடமும், இறங்க சுமார் 15-20 நிமிடங்களும் ஆகிறது.

நீங்களும் முழுநிலவு நாளில் இந்த மலையை மலைவலம் (கிரிவலம்) வந்து பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானின் தரிசனத்தைக் கண்டு அவனருள் பெற வாருங்கள்.

ஒரு பெரும் குழு தற்போது ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் மலைவலம் செல்கிறது. இந்த குழுவோடு இணைந்து நீங்களும் மலைவலம் செல்ல நீங்கள் அரசன்கழனி கல்யாண பசுபதீசுவரர் கோவிலுக்கு சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடவும்.

கோவிலை அடையும் வழி

மேடவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 51B பேரூந்து சைதாப்பேட்டை, மேடவாக்கத்திலிருந்து அரசன்கழனி நிறுத்தத்தில் நிற்கும். இறங்க வேண்டிய இடம் அரசன்கழனி பஸ்டாப். தாம்பரத்திலிருந்து 51K பேரூந்து இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

ஒவ்வொரு முழுமதி அன்றும் வாருங்கள்.

அரசன்கழனி பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடம் – இதை சுட்டவும்

மேலும் தகவல்களுக்கு: +91-8122299938, +91-9382664059 அழைக்கவும்.

 

 

 

 

 

 

Please rate this

நாயன்மார்களின் நட்சத்திரமும் குருபூசையும் 4.7/5 (10)

நாயன்மார்களின் குருபூசை நட்சத்திரம்

திருச்சிற்றம்பலம்.

தாமாக அறியும் திறன் இன்றி, அறிவிக்க அறியும் திறனை உடைய நமக்கு, ஒவ்வொன்றையும் குருவாக ஒருவர் அறிவிக்க, அதைக் கற்று அறிகிறோம். அவ்வகையிலே, இறைவனை அறியவும் அவனின் திருவருளைப் பெறவும் நமக்கு வழி காட்டுபவர்களாய் இருப்பவர்கள் நம் குருமார்கள். சீடனுடைய அறியாமையை நீக்கி, இறைவனிடம் இட்டுச் செல்ல வல்லவரே குருவாவர். துன்பமின்றி வாழவும் இறைவன் திருவருள் பெற்று பேரின்பவீடு பெறவும் நமக்கு வழிகாட்டியார் இருப்போர் 63 நாயன்மார்கள். அத்தகையோரை நாம் கொண்டாட வேண்டாமா ? பூசை செய்ய வேண்டாமா ?
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
 
என்பது தெய்வப் புலவர் வாக்கு. நமக்கு இறைவனையும் அவனை அடையும் வழியையும் காட்டும் குருவிற்கு நாம் நன்றி சொல்ல மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  இறைவன் திருக்காட்சி கொடுத்து நாயன்மார்கள் முக்தி அடைந்த தினத்தை நாம் நாயன்மார் குருபூசையாக வணங்குகிறோம். நாயன்மார்களின் குருபூசை செய்வது நம் தொன்று தொட்டு செய்து வரும் மரபாகும். இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் நாயன்மார்களின் குருபூசை நிகழ்ந்து வருகிறது. குருவருளைப் பெற்றால், திருவருளை எளிதில் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு.

63 நாயன்மார்கள் முக்தியடைந்த நட்சத்திர நாளை நாம் அவர்களது குருபூசையாக வணங்கி வருகிறோம். எத்தனையோ உலகங்கள் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் தவித்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்தையும் இடத்தையும் மிக மிகத் துல்லியமாக அளக்கும் அளவைகளையும் வைத்து மிகவும் முன்னோடியான நாகரீகமாகத் திகழ்ந்தார்கள். ஆகையாலேயே, நாம் இன்றும் நம் நாயன்மார்களின் துல்லியமான முக்திநாளை கொண்டாடி குருபூசை செய்ய வேண்டும்.

சிவாயநம.

Please rate this

திருச்சி திருஆனைக்கா கோவிலில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு No ratings yet.

திருச்சி திருஆனைக்கா கோவிலில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

திருச்சியில் மிகவும் புகழ்பெற்ற சிவதலம் திருஆனைக்கா. பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாக விளங்குகிறது இந்த தலம். இங்கு சிவபெருமான் ஜம்புகேசுவரர் என்ற திருநாமத்தோடு அகிலாண்டேசுவரி அம்மையோடு எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இது தேவார பாடல் பெற்ற தலங்கள் 276 இல் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தாயுமானவர் ஆகியோர் இந்த தலத்து இறைவனைப் போற்றி பதிகம் பாடியுள்ளனர்.

இந்த கோவிலின் அன்னதானக்கூடம் அருகே ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, தங்க நாணய புதையலை இவர்கள் கண்டனர். சுமார் 500 க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள் கிடைத்தன. இன்றைய மதிப்பில் இது தோராயமாக 61 லட்சமாகும். இருப்பினும் இவை பழங்கால நாணயங்கள் என்பதால், இந்த தங்கத்தின் தரம் ஆகியவற்றைப் பொருத்து இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

இதைக் கேள்வியுற்ற ஸ்ரீரங்கம் காவல் துறையினர் விரைந்து வந்து இந்த தங்க நாணயங்களைக் கைப்பற்றி பத்திமாக எடுத்துச் சென்றனர். இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டு அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

Please rate this

வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு 4.75/5 (4)

வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு

வாட்சப்பில் பகிரக்கூடிய நம் சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளைக் கொண்ட சில படங்கள். இதை பதிவிறக்கம் செய்து வாட்சப்பில் நிலையாக வைத்துக் கொள்ளலாம்.

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் அறுதியிட்டுக் கூறுகிறது. முதலும் முடிவும் இல்லாத  பேரொளியாக திகழும் இறைவனுக்கு நாம் இட்ட பெயர் சிவன்.

தமிழர்களின் மரபு வழி அடையாளம் என்ன ? மொழி தமிழ், நாடு பாரதம், சமயம் சைவ சமயம் உள்ளடக்கிய இந்து மதம், தமிழ் வேதம் நான்கு, பன்னிரு திருமுறை, குரு நாயன்மார்கள், தலைவன் ஒருவனே சிவபெருமானே.

தமிழர்களின் புனித நூல் எது? தமிழ் வேதங்கள் நான்கு. 28 சிவ ஆகமங்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், பதினான்கு சாத்திரங்கள், இன்னும் எண்ணற்ற அருளாளர்களின் நூல்கள்.

தமிழர்களின் குருமார்கள் யாவர்? இறைவனே எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு உபதேசம் செய்தது வேதங்களும் ஆகமங்களும். அதன் வழிப்படி நின்று அந்த நெறிப்படி நமக்கு வாழ்ந்து காட்டி குருவாக திகழ்பவர்கள் நாயன்மார்கள், சமய குரவர்கள், சந்தான குரவர்களும் அவர்கள் ஞானப் பரம்பரையும் வரும் ஆச்சாரியர்களும் ஆவர்.

பன்னிரு திருமுறை நூல்கள் எவை ?

இறைவனை நாம் அடைவதற்க்குத் துணையாக நிற்கும் கருவிகள், திருநீறு, உருத்திராக்கம், ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம் ஆகும்.

கடவுள் என்று சொல்லக்கூடிய இறைவன் ஒருவனே. ஆனால், தெய்வங்கள் எண்ணற்றவை. தெய்வங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நானே கடவுள் என்று நம் நாட்டில் ஊருக்கு ஒருவன் சொல்லி ஏமாற்றி நன்றாக சம்பாதித்து காணாமல் போய் இருக்கிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்ல, சில நாடுகளில் இருந்து நானே மெய்யான தேவன் என்று உலகம் முழுவதும் சொல்லிப் பிழைக்கும் கூட்டமும் உண்டு. உயிர்கள் ஒரு போதும் இறைவனாகவே முடியாது. இறைவன் வேறு, உயிர்கள் வேறு.

இறைவனுடைய உண்மையான சொரூபம், உருவம், நிறம், பெயர் இல்லாமை. ஆனால், அத்தகைய இறைவனால் மக்களுக்கும் உயிர்களுக்கும் ஒரு நன்மையும் விளையாது. ஆகவே இறைவன் பெரும் கருணை கொண்டு, உயிர்களின் கண்களுக்குத் தெரிவது போல பல உருவங்கள் கொண்டு வருகிறான். எல்லாவற்றிற்க்கும், எல்லா உருவத்திற்க்கும் சொந்தக்காரன் அவனே.

இறைவனால் எந்த உருவமும் எடுக்க இயலும். அவனது உடல் வேறு. நமது உடல் வேறு. நமது உடல் மாயை என்ற அழுக்கிலிருந்து செய்யப்பட்டது. இறைவன் அழுக்கோடு கலவான். எனவே, இறைவனானவன் மனித உருக் கொண்டு வர இயலும். ஆனால், கருவுற்ற அன்னையில் வயிற்றில் மனிதனாக ஒரு போதும் பிறவான். அவனே பிறக்கமாட்டான் என்றால், அவனுக்கு குமாரன் என்ற தேவ குமாரன் எப்படி வருவான் ? விநாயக பெருமானையும், முருகப்பெருமானையும், வீரபத்திரரையும், பைரவரையும், இறைவனின் சக்திகளாகத் தான் நாம் காண்கிறோம். நம்முடைய எளிமையான புரிதலுக்காக, அவர்களை இறைவன் பிள்ளைகளாக பாவித்து சொல்கிறோமே ஒழிய, இறைவனுக்கு காமமும் கிடையாது. குழந்தை குட்டியும் கிடையாது.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

கம்போடியாவில் இராசேந்திர சோழருக்கு திருவுருவச்சிலை அமைத்து, திருக்குறளைப் பள்ளிப்பாடத்தில் இணைக்கவும் திட்டம் No ratings yet.

கம்போடியாவில் இராசேந்திர சோழருக்கு திருவுருவச்சிலை அமைத்து, திருக்குறளைப் பள்ளிப்பாடத்தில் இணைக்கவும் திட்டம்

அங்கோர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம் ஆகிய இரண்டும் கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் ஆகியவை இணைந்து  கம்போடியா நாட்டில் சியம் ரியாப் நகரில், இராசேந்திர சோழர் மற்றும் கமேர் மன்னன் முதலாம் சூரியவர்மன் திருவுருவச் சிலை அமைக்கவும், திருக்குறளை கமேர் மொழியில் மொழி பெயர்த்து பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. வரும் மே மாதம் 2022 இல் இந்த இரண்டு மன்னர்களின் நட்புறவைக் கொண்டாடி மகிழும் வண்ணம் இது திருக்குறள் மாநாடாகவும் நிகழவிருக்கிறது.

முதல் முறையாக, தமிழ் மொழியின் சங்க இலக்கியத்தின் முக்கிய நூலான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை கமேர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யவும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலகம் எங்கிலும் இருந்து 25,000 தமிழர்கள் கம்போடியா வர உள்ளனர். இந்த நிகழ்வு இந்தியா மற்றும் கம்போடிய நாட்டின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவி செய்யும்.

கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாடு அமைச்சகத்தில் பணிபுரியும் மோன் சாப்கீப் மற்றும் ப்ரோம் கமேரா ஆகியோர் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்க்கு வருகை புரிந்து, காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் வைகுண்டநாதர் கோவில், தஞ்சைப் பெரியகோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் மாமல்லபுரம் குகைக்கோவில் ஆகிய கோவில்களுக்குச் சென்று பார்வையிட்டனர். இந்தியாவில் நடைபெற்ற பல்லவர் ஆட்சிக்கும், கம்போடியாவில் நடைபெற்ற கமேர் ஆட்சிக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளுக்கான பல ஆதாரங்களை நேரடியாகக் கண்டனர். இந்த வரலாற்றுச் சின்னங்களைக் கண்ட இவர்கள், ஆறாம் நூற்றாண்டில் கம்போடியாவை ஆண்ட கமேர் அரசன் மகேந்திரவர்மன் இந்தியாவில் உள்ள பல்லவ பேரரசைச் சேர்ந்தவர் என்பதில் உறுதி மேற்கொண்டனர்.

Please rate this

மகாசிவராத்திரி வழிபாடு ஏன் மிகவும் சிறப்பானது ? 5/5 (1)

மகாசிவராத்திரி வழிபாடு ஏன் மிகவும் சிறப்பானது?

சைவ சமயத்தவரின் மிகுந்து போற்றும் திருநாள் மகாசிவராத்தியாகும். அந்த மகாசிவராத்திரி எப்போது வருகிறது, அதன் சிறப்பு யாது என்பதைக் காண்போம்.

மகா சிவராத்திரி எப்போது வருகிறது ?

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி (அதாவது பௌர்ணமியிலிருந்து 14 ஆவது நாள்) அன்று இரவு சிவராத்திரி ஆகும். அதாவது இதை மாத சிவராத்திரி என்பர். மகா சிவராத்திரி என்பது மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவாகும்.

மகா சிவராத்திரியின் சிறப்பு யாது ?

ஊழிக் காலம் என்பது பல்வேறு உலகங்களும் சிவபெருமானிடத்தே ஒடுங்கும் காலமாகும். பேரூழிக்காலம் என்பது, சிவபிரானைத் தவிர, மற்ற அனைத்துமே எம்பெருமானிடம் ஒடுங்கும் நிலையாகும். அவ்வாறு ஒரு முறை ஒடுங்கியிருந்த போது, மீண்டும் இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து உயிர்களைக் காத்து அருளுமாறு கருணை கொண்டு, சிவபிரானின் சக்தி வடிவான தேவியானவள் சிவபிரானை நோக்கி இடைவிடாது தவம் செய்தாள். அதனை ஏற்ற சிவபிரான், மீண்டும் உலகங்களை உண்டாகச் செய்து உயிர்களைக் காத்து அருளினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உமையவள் எம்பெருமானை ஓர் முழு இரவும் மனதில் தியானித்துப் போற்றிய நாளே மகாசிவராத்திரியாகும்.

மகாசிவராத்திரி அன்று பல்வேறு காலங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக பதிவிடப்பட்டிருக்கிறது. மற்றொரு யுகத்தில் அடிமுடி தேடிய வரலாறு நிகழ்ந்த போது, இறைவன் ஒளிப்பிளம்பாய் அண்ணாமலையாராய் தோன்றி அருளியது மகாசிவராத்திரி அன்று தான். பிரம்மனும் திருமாலும் அறியாமையினால், தாமே பெரியவர் என்று கர்வங் கொண்டு தமக்குள் வாதிட்டுக் கொண்டனர். அவர்களின் அறியாமையைப் போக்க எண்ணிய சிவபெருமானார் அவர்கள் முன்பு நெடும் ஒளிப்பிளம்பாகத் தோன்றி, அவர்களில் யார் ஒருவர் தனது கால் அடியையோ அல்லது தலை முடியையோ காண்பவரே வென்றவர் என்று சொல்ல, திருமால் பன்றி உருக்கொண்டு பூமியைத் துளைத்து இறைவனின் திருவடியைத் தேடிச் செல்லலானார். பிரம்மனோ, அன்னப்பறவை உருக்கொண்டு, இறைவனின் திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார். பல யுகங்கள் கடந்தும் இருவராலும் அடியையோ முடியையோ காண முடியாத நிலை தோன்றவே, சிவபெருமானின் தலையிலிருந்து வந்த தாழம்பூ மலரிடம் தான் இறைவனின் முடியைப் பார்த்ததாக பொய்ச்சாட்சி சொல்லக் கேட்க, அம்மலரும் பொய் சாட்சி சொல்லி, பிரம்மனுக்கும் தாழம்பூ மலருக்கும் இப்பூவுலகில் கோவில் மற்றும் வழிபாடு கிடையாது என்று சாபம் பெற்றனர். இவ்வாறு திருவண்ணாமலையில் அனைவரும் காண, ஒளிப்பிளம்பாய் நின்ற சிவபெருமான் தோன்றியது மகாசிவராத்திரி அன்றாகும்.

மற்றொரு காலத்தில், ஒரு காலத்தில் ஒரு குரங்கானது வில்வ மரத்தின் மீது அமர்ந்து இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துக் கீழே எறிந்தது. அம்மரத்தின் அடியின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. வில்வ இலைகள் எல்லாம் இலிங்கத்தின் மீது அர்ச்சனையாக விழுந்தது. எதேச்சையாக நிகழ்ந்தாலும், அகமகிழ்ந்த சிவபிரான் அந்த குரங்கிற்கு காட்சி கொடுத்து அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்குமாறு அருளிச் செய்தார். இவை அத்தனையும் எதிர்பார்த்திராத அந்த குரங்கானது, இறைவனிடம், தான் சக்கரவர்த்தியாக பிறக்கும் போது, தனது முகத்தை குரங்காகவே இருக்குமாறு அருளிச் செய்யுமாறு கேட்டது. இதைக் கேட்டு, தன் பழைய பிறப்புக்களையும் நிலையையும் மறவாதிருக்க குரங்கு அவ்வாறு கேட்டதையுணர்ந்த சிவபிரான் சிரித்துக் கொண்டு அவ்வாறே அருளிச் செய்தார். அந்தக் குரங்கே அடுத்த பிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறந்து சிறப்புற்றது.

இத்தகைய சிறப்பு மிகுந்த மகாசிவராத்திரி அன்று நாமும் சிவ வழிபாடு செய்து பலன் பெறுவோம்.

Please rate this

மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ? No ratings yet.

மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ?

மகா சிவராத்திரி அன்று கோவில்களில் எவ்வாறு வழிபாடு நடக்கிறது ?

மகா சிவராத்திரி இரவை நான்கு காலமாக பிரித்து ஒவ்வொரு காலமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு காலமும் எந்த திருவுருவத்திற்க்கு எந்த அபிஷேக அலங்காரப் பொருட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற தகவல்கள் இங்கே பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

சிவராத்திரி முதல் நாளன்று விரதத்தைத் துவக்க வேண்டும். அன்று முழுவதும் ஒரு வேளை உணவு உண்ணலாம். அன்று முழுவதும் சுகபோகங்களைத் தவிர்த்தும், சினிமா/டிவி பார்ப்ப்தைத் தவிர்த்தும் நம் சிந்தனையில் சிவத்தை நிறுத்தி சிவனோடு ஒன்றியும் சிவ மந்திரங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளை ஓதியும் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளும் போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும் போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனத்தை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூசைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மகா சிவராத்திரி அன்று நாம் எவ்வாறு வழிபடலாம் ?

சில காலம் முன்பு, சிவராத்திரி அன்று, இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்க்காக வீடுகளிலும் பொது இடங்களிலும் டிவிக்களில் சினிமா பார்ப்பதும், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளும் அரங்கேறின. இறைவனை சிந்தையில் நினையாது செய்யும் எந்த ஒரு காரியத்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. விரதம் இருப்பதே, நாம் தினமும் வழக்கமாக செய்யும் செயல்களைத் தவிர்த்து, உணவின்மையால் உடல் சிறிது தளர்ந்து, அந்தத் தளர்வின் காரணமாக, மனது அங்கும் இங்கும் எங்கும் அலையாமல், ஓரிடத்தே நிலை நிறுத்தப்பெறும் நிலையை எய்துவதால், அம் மனத்தை சிவபெருமானிடத்து சமர்ப்பித்து, அவனோடு இரண்டரக் கலந்து நிற்பதேயாகும்.

ஆகவே, மகா சிவராத்திரி அன்று காலை தொடங்கி, மறுநாள் காலை வரை விரதம் இருந்தும், திருக்கோவில்களிலும், இல்லங்களிலும் வழிபாடு செய்தும், திருமுறைகள் மற்றும் குறிப்பாக திருக்கேதீச்சரப் பதிகங்கள், திருவண்ணாமலைப் பதிகங்கள் ஆகியவற்றைக் கோவில்களிலும் இல்லங்களிலும் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். இயன்ற வரை, உங்களுக்கு அருகில் உள்ள கோவில்களிலோ, சிவாலயங்களிலோ சென்று அங்கே சிந்தையை இறைவனிடத்தில் செலுத்தி வழிபாடு செய்யுங்கள். சிவராத்திரி அன்று சிவாலய தரிசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சிவராத்திரி வழிபாட்டின் பலன்கள் யாது ?

சிவராத்திரி வழிபாட்டின் காரணமாக, உங்களுக்குத் தற்போது இருக்கும் கவலைகளும், வர இருக்கும் கவலைகளும் வலுவிழந்து நீங்கும். நீங்கள் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெறும். சிவாயநம என்று நம் சிந்தனையில் நிலைத்திருந்தால், வேறு அபாயம் நம்மை ஒரு போதும் நெருங்காது. எண்ணும் இடங்கள் எல்லாம் செல்லத்துடிக்கும் மனமானது மிகவும் இலகுவாக நம் கட்டுக்குள் வரும். இதனால், துன்பம் தரும் செயல்களில் வீழ்ந்திடாது, நன்மை தரும் செயல்களில் மட்டுமே நிலைத்திருந்து நமக்கு நன்மையே வந்து சேரும். இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களை வலுவிழக்கச் செய்து, நமக்கு நன்மையே அருளி, நம் தீவினைகளையும் சுட்டெரித்து, நமக்கு முக்தியும் தந்தருள்வார் சிவபெருமான்.

 

Please rate this

மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார் 5/5 (1)

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

கோச்செங்கட்சோழ நாயனார் குருபூசை: மாசி சதயம்

கோவில்களின் அமைப்புகள் ஏழு வகைப்படும். அதில் ஒன்று தான் மாடக்கோவில். பெருங்கோவில் என்றும் அழைக்கப்படும். இது யானைகள் ஏற இயலாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளுடன் பூமி மட்டத்திற்க்கு மேலே அமைக்கப்படுவதே மாடக் கோவிலாகும்.

திருஆனைக்கா கோவில் தல வரலாறு அனைவரும் அறிந்திருந்தாலும், அறியாவதவர்களுக்காக ஒரு சிறிய முன்னுரை. சிவபூத கணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபத்தினாலே ஒருவர் சிலந்தியாகவும் மற்றொருவர் யானையாகவும் பிறந்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர். திருச்சி அருகே திருஆனைக்கா ஊரில், வெண்நாவல் மரத்தின் அடியிலே மறைவிலிருந்து வெளிப்பட்ட சிவலிங்கத்தை இருவரும் பூசை செய்து வந்தனர். யானையானது தினமும் சிவலிங்கத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தது. சிலந்தியோ, மரத்தின் சருகுகள் இறைவன் திருமேனி மீது விழாத வண்ணம் இறைவருக்கு மேலே வலை பின்னியது. இதையும் தூசி என்று எண்ணி யானையானது தினமும் அந்த வலையை அகற்றி வழிபட்டது. சிலந்தியும் தளராமல் தினமும் வலை பின்னியது.

பொறுமை இழந்த சிலந்தி ஒரு நாள் யானையின் துதிக்கையின் உள்ளே நுழைந்து தன்னால் இயன்ற அளவு கடித்து வைக்க, இதை எதிர்பாராத யானை, தன் துதிக்கையைக் கீழே அடித்து அடித்து திணறியது. இதன் முடிவில் இரண்டும் உயிரிழந்தன. கயிலாயத்தை அடைந்த இரண்டும் சிவபெருமானை தியானித்து வந்தன.

சுபதேவன் என்ற ஒரு சோழ மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால், தனது மனைவி கமலவதியுடன் சிதம்பரம் சென்று ஆடல்வல்லானை வழிபாடு செய்து வந்தார். இறைவரின் திருவருளால் புத்திர பாக்கியம் பெற, இந்தப் பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூன்று உலகையும் அரசாள்வான் என்று சொல்ல, கமலவதியோ, தன்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள் என்று உத்தரவிட ஒரு நாழிகை கழித்துப் பிறந்தார் சிலந்தியாக இருந்த சிவகணம். இதனால், இவருடைய கண்கள் சிவந்து இருக்க, என் கோச்செங்கண்ணானோ என்று சொல்லிக்கொண்டே கமலவதி இறந்துவிட்டாள். சுபதேவன் தன் புதல்வனை வளர்த்து முடிசூட்டிப் பின்னர் சிவபதமும் அடைந்தார்.

கோச்செங்கட்சோழனோ, இறைவனாருடைய திருவருளினாலும், பூர்வ பிறப்பின் வாசனையாலும், சைவ நெறி தழைத்தோங்க பல சிவாலயங்களைக் கட்டுவிக்கத் துவங்கினான். அவை யானை ஏறாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளை உடையதான மாடக்கோவில்களாகக் கட்டுவித்தான்.

ஒன்றல்ல இரண்டல்ல, 70க்கும் மேற்பட்ட மாடக்கோவில்களைக் கட்டுவித்தார் கோச்செங்கட்சோழனார். இன்றைய காலகட்டத்தில் நம்மால் கற்பனையிலும் காண இயலாத இத்தகைய உயர்ந்த சிறப்பு மிக்க மாடக்கோவில்கள் சிவபெருமானின் கருணையினாலே கட்டப்பட்டு இன்றும் நம் கைகளில் தொட்டு வணங்கக் கூடிய விலைமதிப்பற்ற புதையலாக நம்மிடையே உள்ளது. சிவபெருமானின் கருணையையும், கோட்செங்கட்சோழ நாயனாரின் கருணையையும் என்னவென்று சொல்வது ? எத்தனை பெரிய பேறு பெற்றோம் நாம் ? விலைமதிப்பற்ற திருவருளால் நமக்குக் கிட்டிய இந்தக் கோவில்களைக் கட்டிக் காப்பதே நமது தலையாய கடமையன்றோ ?

பின்னர் தில்லையை அடைந்து ஆடல்நாயகனைத் தரிசித்து, அங்கு தில்லைவாழ் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டுவித்துக் கொடுத்தும், பல்வேறு சிவதொண்டுகள் செய்தும், சிவபெருமான் திருவடியை அடைந்தார்.

மாடக் கோவில்கள் இரண்டு, மூன்று, ஐந்து அல்லது ஒன்பது நிலைகளாக கட்டப்படுகின்றன. இரண்டு நிலை கோவில் அமைப்பானது, முதலில் தரைத்தளமும், பின்னர் தூண்களும் சுவர்களும் எழுப்பப்பட்டு, முதல் தளம் அமைக்கப்படுகிறது. பின்னர், சுவரும் இரண்டாவது தளமும் அமைக்கப்பட்டு அதன் மேலே கழுத்து, கூரை, கலசம் ஆகியன நிறுவப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் உள்ள நிலைகளுக்கு, அத்தகைய சுவரும் தளங்களும் அமைக்கப்படுகிறது.

திருச்சி அருகில் திருவானைக்கா கோவில், திருப்பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் கோவில், திருக்குடவாயில் திருக்கோனேசுவரர் திருக்கோவில், திருவைகல் மாடக்கோவில், திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோவில், திருக்கைச்சினம் திருக்கைச்சினநாதேசுவரர் திருக்கோவில், அம்பர் மாகாளேஸ்வரர் திருக்கோவில், ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில் என்று எழுபதுக்கும் மேற்பட்ட கோவில்களில் சிவபிரானார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் ஒரு முறையானும் இந்த கோவில்களுக்குச் சென்று அதன் கட்டமைப்புகளைக் கண்டும், இறைவனை முறையாக வழிபட்டும் திருவருள் பெற்றுத் திரும்புவோம். இப்போது இல்லையேல், எப்போதும் இல்லை. ஆகவே உடனே திட்டமிட்டு இக்கோவில்களுக்குச் சென்று வருவோம். 

 

Please rate this

தெப்பல் திருவிழா சென்னையில் ஓர் கிரிவலம் அரசன்கழனியில் 5/5 (1)

தெப்பல் திருவிழா சென்னையில் ஓர் கிரிவலம் அரசன்கழனியில்

சென்னையில் ஓர் கிரிவலம் என்றாலே அரசன்கழனி ஔடதசித்தர் மலை அருகில் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயம் தான் நினைவுக்கு வரும். இத் திருக்கோவிலில் இருந்து ஒவ்வொரு மாதமும் நிறைமதி நாள் தோறும் மாலை 5 மணிக்கு சில ஆயிரக்கணக்கானோர் இணைந்து தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளைத் தலையில் ஏந்தியும், சிவ வாத்தியம் இசைக்க ஔடதசித்தர் மலையைக் கிரிவலம் வரும் நிகழ்வு நடைெபற்று வருகிறது.

மலைவலம்

கடந்த தை மாதம் நடைபெற்ற நிறைமதி மலைவலத்தின் போது மாலை 5 மணிக்கே திரளான மக்கள் அரசன்கழனியில் குடி கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரரை வணங்கி வலம் வந்து மலைவலம் செல்வதற்க்காக காத்திருந்தனர்.  மலைவலம் துவங்கிய பின்னர், கயிலாய வாத்தியங்கள் முழங்க, சிவ பக்தர்கள் மிகவும் பக்தியுடனும் ஆர்வத்துடனும் வலம் வந்தனர். மலைவலத்தின் போது கிரிவலப் பாதையில் உள்ள விநாயகர் மற்றும் முருகர் ஆலயங்களிலும் தரிசனம் செய்து தங்கள் மலைவலத்தைத் தொடர்ந்தனர். மலையின் கிழக்குத் திசைக்கு வந்த போது தீபம் ஏற்றப்பட்டு, மலையின் மேலே குடிகொண்டிருக்கும் ஈசுவரனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.

தெப்பல் திருவிழா

மலைவலம் முடிந்த பின்னர், முதன் முறையாகத் தெப்பல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த தெப்பல் திருவிழாவைக் காண, மலைவலம் வந்த பக்தர்களும், ஊர் மக்களும் திரளாக குளத்தைச் சுற்றித் திரண்டிருந்தனர். கல்யாணபசுபதீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர்,  தெப்பலில் எழுந்தருளிய இறைவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவ பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.

ஏக இறைவனாம் பிறப்பு இறப்பு அற்ற சிவபெருமான் விடைக் கொடிகள் பறக்க, பக்தர்கள் படை சூழ, வாத்தியங்க முழங்க, திருமுறைகள் ஓத, திருக்குளத்தில் எழுந்தருளி குளத்தைச் சுற்றி வலம் வந்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியை  பல்லாயிரக் கணக்கானோர் கண்டு களித்து ஆனந்தம் அடைந்தனர். குளங்களின் அனைத்து பக்கங்களிலும் பக்தர்கள் குழுமியிருந்து இந்த விழாவினைக் கண்டு களித்தனர். பின்னர், பெண்கள் திரளாக வந்து குளத்தில் நீரில் விளக்கை ஏற்றினர். நூற்றுக்கணக்கான விளக்குகள் மிகவும் அழகான தீப ஒளியை ஒளிர்ந்து கொண்டு நீரில் ஆடிக் கொண்டே சென்றது காண்போருக்கு மிகவும் பேரானந்தத்தைக் கொடுத்து சொல்ல இயலாத புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

சிவபெருமானின் கொடையும் நன்றி உரைத்தலும்

சிவபெருமானின் திருக்கருணையினாலே, அவனது அருளே இயற்கை வளங்களாக நமக்குக் கொடையளித்துள்ளான். ஆகவே, அவற்றைப் பாதுகாப்பது மட்டுமின்றி அவற்றை இறைவன் திருவுவமாகவே பாவித்து பூசை செய்வது இறைவனே நமக்குக் காட்டிய மிக உயர்ந்த தத்துவமாகும். இத்தகைய வழிபாட்டு முறையினை நம் முன்னோர்கள் இடையராது கடைப்பிடித்தமையால் எவ்வித குறையுமின்றி நல்ல உணவு, நீர், காற்று என்று அத்தனை வளங்களும் வாய்க்கப் பெற்று சிறப்பாக வாழ்ந்தனர். நாம் மீண்டும் சிறப்பான வாழ்வு வாழ இறைவனின் கொடையை மறவாது, அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக திருவிழாக்களை இடையறாது கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மலைவலம் மற்றும் தெப்பல் திருவிழா ஏற்பாட்டுக் குழு

இந்த மலைவலத்தையும் தெப்பல் திருவிழாவையும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர், மலைவல ஏற்பாட்டுக் குழுவினர். கோவில் பணிகளில் துவங்கி, சாலைகளில் பக்தர்களை மிகவும் பத்திரமாக அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வரை, குழுவினர் மிகுந்த சிரத்தையோடும் ஆர்வத்தோடும், ஆத்மார்த்த பங்களிப்பு செய்கின்றனர். அக்குழுவினருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அந்த திருவிழாவில் இருந்து இங்கே சில காட்சிகள்.

தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருச்சிற்றம்பலம்.

 

 

 

Please rate this

காரி நாயனார் வரலாறு உணர்த்தும் வாழ்வியல் குறிப்புகள் 4.67/5 (3)

காரி நாயனார் வரலாறு உணர்த்தும் வாழ்வியல் குறிப்புகள்

காரி நாயனார் குருபூசை: மாசி பூராடம்

திருக்கடவூரிலே அந்தணர் குலத்தில் அவதரித்து சிவனின் பால் அன்பு பூண்டு திருத்தொண்டு புரிந்தவர் காரி நாயனர். காரி நாயனாரின் வரலாறு மிக சில வரிகளிலேயே படித்து விடலாம். சுருக்கமாகக் கூறினால், காரி நாயனார் தமிழின் மீது மிகுந்த அன்பு பூண்டு நல்ல தமிழ் வளமை பெற்று, வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து, நன்றாகச் சொல் விளங்கிப் பொருள் மறைய காரிகோவை என்ற நூலை இயற்றினார். இது ஒரு கோவைப் பாட்டாகும். வண் தமிழ் என்பது தமிழின் பல வளமையான பகுதிகளை நன்றாக அறிந்துணர்ந்து பயன்படுத்துவதாகும்.

காரிகோவை நூலை மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி எடுத்துக் கூறி, அம்மன்னர்களிடம் இருந்து பல்வேறு திரவியங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு, அவற்றை வைத்து பல சிவாலயங்களைக் கட்டுவித்தும், பிற சிவனடியார்களுக்கு உதவி செய்தும் வாழ்ந்து வந்தார். இறுதியில், இறைவனுடைய திருவருளினாலே, இந்த உடலோடு வடகயிலை அடையும் பாக்கியமும் பெற்றார்.

உலகியலில் உழன்று கொண்டு இறைவனை நினையாது சுற்றித் திரியும் ஆன்மாக்களை மிக வன்மையாகவே சாடுபவர் நம் திருநாவுக்கரசர் பெருமான். இறைவன் தன்னை இவ்வுலகில் விரும்புவோர்க்கு உணர்த்த, பல்வேறு வடிவங்களாகவும், திருவுருவங்களாகவும் வந்தும், விடைக்கொடி, திருநீறு, உருத்திராக்கம் என்று பல்வேறு கருவிகளை அருளியும், கோவில்களையும், இந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நெறிகளை உபதேசஞ் செய்தும்,  அந்த நெறிகளில் நின்று உணர்த்தியும், பல வேதங்கள் ஆகமங்கள் உபதேசஞ் செய்தாலும், எவற்றையுமே கவனிக்காமல், தம் ஞானப் பொறிகளை முடக்கித் திரிபவர்களை, உங்கள் மனம் ஏன் இறைவனிடத்தில் ஈடுபடவில்லை என்று வினவுவார் நாவுக்கரசர்.

அறம் பொருள் இன்பம் வீடு என்று நான்கு வேதங்களும் ஆகமங்கள் அருளியும், அந்த நெறிகளின் படி வாழ்ந்த எண்ணற்றவர்களில் ஒரு சிலரை நமக்கா நாயன்மார்களாகத் தொகுத்துக் கொடுத்து, வாழ்கை என்றால் இவ்வாறு தான் வாழ வேண்டும் என்றும் இறைவனார் காட்டிக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு நாயன்மார் வரலாறும் நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன.

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

திருத்தொண்டத்தொகை – சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

தெய்வம் பேசிய மொழியாம் தெய்வத் தமிழை நாம் அனைவரும் குற்றமற கற்க வேண்டும். ஆங்கிலத்தோடும் பிற மொழி கலப்போடும் பேசுவதையும் பயன்படுத்துவதையும் விட வேண்டும். அதற்கான முயற்சியை ஆரம்பித்து விட்டால், அதுவே தானாக நிறைவடைந்து விடும். இன்றைய சூழலில் காரிகோவை போன்ற நூலை எல்லோரும் எழுத இயலாது. ஆனால், அதற்கு முதல்படியாக நாம் அனைவரும் தூய தமிழில் எழுதவும் பேசவும் கற்பது இன்றியமையாதது. அதன் பின், தமிழின் மிக ஆழமான வளங்களையும் நம் செய்யுள்களையும் படித்துணர்ந்து அனுபவிக்கலாம். அந்த அனுபவத்தைப் பிறருக்கு பகிர்வதன் மூலம் அவர்களையும் தமிழ் கற்கத் தூண்டலாம்.

திருக்கோவில் அமைக்கும் பணி, மதிப்பு மிக்க பழங்கால சிவாலயங்களை சீர் திருத்தவும், உழவாரப் பணி செய்யவும், அவற்றை உரிய முறையில் பராமரிப்பதும் நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இன்றைய சூழலில் பழைய கோவில்களைப் போல ஒளி பொருந்திய ஆற்றல் பொருந்திய கோவில்களைக் கட்டுவிப்பது மிகவும் கடினமானதாகும். ஆனால், நாமோ, அளவற்ற பொக்கிஷமான பழந்திருக்கோவில்களைக் கண்டும் காணாததுமாகச் செல்கிறோம். பெருஞ் செல்வர்களும் அடியார் திருக்கூட்டங்களும் அவரவர் ஊரிலும் அருகிலுள்ள கோவில்களையும் உரிமை எடுத்து அவற்றைப் பராமரிக்கும் செயல்களில் இறங்க வேண்டும். உழவாரப் பணியின் மகிமையும், சிவாலயப் பணிகளின் மகிமையும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. இனி எத்தனை பிறவி எடுப்போம், எப்போது நமக்கு சிவாலய பணி செய்யும் பாக்கியம் கிட்டும் என்றெல்லாம் தெரியாது. இந்த பிறவியில் எத்தனை பணி செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து விட வேண்டும்.

சிவனடியார்களின் கஷ்டத்தைத் தனது கஷ்டமாக எண்ணி அவர்கட்கு உதவி செய்திடல் வேண்டும்.  வெறும் பொருள் உதவி மட்டுமன்று, பல வகைகளில் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யலாம். நீங்கள் வேலை கொடுப்பவராயின் சிவனடியார்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆலயங்களில் சிவனடியார்களின் பசிப்பிணியைப் போக்கலாம். இவ்வாறு எண்ணற்ற வகைகளில் அடியார்களுக்கு உதவலாம்.

இவையெல்லாம் செய்வதற்க்கு முன்னர் வாழ்வியல் நெறியை கடைப்பிடிக்க வேண்டும். வாழ்வியல் நெறி உரைக்கும் ஒழுக்கம் அறிய வேண்டும். எத்தனை புண்ணியங்கள் செய்தும் அடிப்படை ஒழுக்கம் இல்லையேல், கிணற்று நீரை இறைத்து இறைத்து ஓட்டைப் பானையில் ஊற்றியவாறு வீணாகிப் போகும்.

சிவபிரானை எப்பொழுதுஞ் சிந்தையில் வைத்து சிவப் பணிகளை செய்பவர்கள் உயர்ந்த நிலையை எய்துவர். உலகியல் வாழ்வில் எப்படி இருந்தாலும், சிவன் பால் அன்பு பூண்டு சிவப்பணிகளைச் செய்யும் போது உயர் நிலையை அடைகிறோம். சிவபிரானின் கருணைக்கும் அன்பிற்க்கும் ஆட்படுகிறோம். அவ்வகையிலே, மனம் போல உடலோடு கயிலை செல்ல வேண்டுமாயின் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் ?

காரி நாயனாரின் வரலாறு உணர்த்தும் எண்ணற்ற உயர் செயல்களில் ஒரு சில குறிப்புகளை அறிந்தோம்.  காரி நாயனாரின் திருவடித் தாமரைகளை வணங்கி மகிழ்ந்து அவர் வழியில் செல்வோம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ? 5/5 (1)

மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ?

இன்றைய உலகியலில் நாம் அறிந்தோ அறியாமலோ மகா பாதகங்கள் செய்வது மிக எளிதாகிப் போய்விட்டது. மனிதன் தன் அறிவு என்னும் பேரொளி விளங்கும் கோவிலை விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறான். இது விஞ்ஞான உலகம் என்கிறார்கள். விஞ்ஞானம் இத்தகைய மனிதர்களைக் கொடுக்கவா பிறந்தது ?

மரத்தை வெட்டுகிறான். ஆடு மாடுகளின் தோலை உரித்து எடுக்கிறான். விலங்குகளின் சதைகளைப் பிய்த்துத் தின்பதற்க்காகவே பண்ணை பண்ணையாய் உயிர்களின் சுதந்திரத்தைப் பறித்து அத்தனை பாதகங்களைச் செய்கிறான். சிறிய கூண்டுகளில் பல கோழிகளை அடைத்து அவற்றிற்க்கு ஊசி போட்டு உடலைப் பெருக்கச் செய்கிறான். மகா பாதகனும் செய்ய அஞ்சும் செயல்களை மனிதன் இன்று சர்வ சாதாரணமாகச் செய்து வருகிறான். இவனுக்குப் பெயர் பண்ணைக்காரன் அல்லது விவசாயியாம்.

கடலையாவது விட்டு வைத்தானா ? மீன்களின் மெலிதான நாக்குகளில் கூர்மையான ஊசியைக் குத்தியதும் அல்லாமல், அவற்றைத் தரதர வென்று அதோடு இழுத்தும் வருகிறான். கொதிக்கும் எண்ணையில் உயிரோடு போட்டு வடை சுடுகிறான். விலங்குகளைக் கொன்று பதமிடுவதற்க்காகவே பல்வேறு விஞ்ஞான கொலைகாரக் கருவிகளைப் படைத்துள்ளான். ஒரு விலங்கைக் கூட விட்டு வைக்க வில்லை. பல விலங்கினங்கள் இந்த உலகில் இருந்து நிரந்தரமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

பொய் சொல்வதற்க்குப் பயப்படுவதில்லை. கேட்டால், நான் அரிச்சந்திரனாக இருக்க முடியாது என்று ஒரு காரணம் வேறு. இன்று எந்த ஊடகங்கள் உண்மை சொல்கின்றன, எது பொய் சொல்கிறது என்று கணிக்கவே முடியாத நிலைக்குச் சென்று விட்டன. அரசியலில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் பொய்கள் ஊடுருவிவிட்டன.

போதை வஸ்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சுய மரியாதை என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகள் மது அருந்தி வலம் வரும் வீடியோக்களும் வந்து விட்டன. சுய மரியாதை இயக்கம் என்ற பெயரில் ஒழுக்கத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள் இன்று தைரியமாக பல பாதகச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. ஒழுக்கம் என்பது நாம் அனைவரும் நல்ல சமுதாயமாக இன்பமாக வாழ வகுத்த கட்டுப்பாடுகள் என்பதை யாரும் இக்காலக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதேயில்லை. கல்வியின் நோக்கம் எங்கோ திசை மாறிச் சென்று விட்டது. கல்வி என்ற பெயரில் கலன்களில் அச்சடிக்கப்படும் களிமண்ணாக குழந்தைகளை அமுக்கப்படுகின்றனர்.

சிந்தித்துப் பார்க்க இயலாத உறவுகள் எல்லாம் இங்கு நடக்கிறது. ஊடகங்களைத் திறந்தால், இதன் பட்டியலை வாசிக்கவே இவர்களுக்கு நேரம் போதவில்லை. இயற்கை வளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆறுகள், மலைகள், காடுகள் ஆகியவற்றின் சீவன்கள் அறுக்கப்படுகன்றன. அநியாயம், அட்டூழியம், எல்லாவற்றிலும் ஊழல் என்று அனைத்தும் தாண்டவமாடுகின்றன. இவர்களுக்கும் ஓர் அரசன் இருக்கிறான். பல மந்திரிகள் இருக்கிறார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாதகங்கள் வெகு சில. இங்கே நடந்து கொண்டிருக்கும், சொல்லவே வாய் கூசும் பாதகங்கள் இன்னும் பலப்பல. கள் அருந்துதல், பொய் சொல்லுதல், களவு செய்தல், கொலை செய்தல், குரு நிந்தனை செய்தல் ஆகிய ஐந்தும் மகா பாவங்களாக நம் சாத்திரங்கள் சொல்கின்றன. மேலும், பிற மாதர்களை இச்சித்தல், கோபம், கடுஞ்சொல் உயபோகித்தல், பொறாமை, பிறர் பொருளை அபகரித்தலும், அபகரிக்க எண்ணுதலும், மூர்க்கம், வஞ்சகம் செய்தல், ஒருவர் நமக்குச் செய்த உதவியை நன்றி மறத்தல், உயிர்களின் மேல் இரக்கம் இல்லாமை, நட்பைப் பிரித்தல் ஆகியவையும் மகா பாதகங்களாகும்.

இத்தனை பாதகங்களுக்கு மத்தியிலும் இவை அத்தனையிலும் சிக்காமல், இல்லற தர்மத்தோடும், பய பக்தியோடும் இறைவனை நோக்கிப் பயணிப்போரும் பலர் உளர். இந்த பாதகச் செயல்களை முதலில் பாவம் என்று உணர்ந்து அவற்றைச் செய்யாது தவிர்ப்பது தான் முதலில் செய்ய வேண்டிய ஒன்றாகும். பின்னர், முன்னர் செய்த பாதகங்களுக்கு வினை அறுக்க வேண்டும். நாம் செய்த அத்தனை பாதகங்களுக்கும் வினை அறுத்தே தீர வேண்டும். மேலும் பாதகங்கள் செய்யாமல் தடுக்கவும், செய்த பாதகங்களுக்கு வினைகளைக் குறைத்துக் கொடுக்கவும் இறைவன் அருளியது தான் உருத்திராக்கம், திருநீறு மற்றும் ஐந்தெழுத்து மந்திரங்களும். இந்த கருவிகளைப் பயன்படுத்தி, இனிமேல் மகா பாதகங்கள் செய்யாமல் தப்பித்து, செய்த பாவங்களையும் அறுத்து நாம் உய்வடைவோம். அபாயம் அகல நாம் சிவாயநம என்று சொல்லுவோம்.

பிற உயிர்களை மதிக்க வேண்டும். பிற உயிர்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பம் போல் கருத வேண்டும். ஞானிகள் அனைவருமே, பிற உயிர்களை நேசித்து அவர்களின் துன்பத்தைத் தன்னுடையதாக கருதுபவர்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
.

ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரை விட மேலானதாகக் கருதப்படும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

பிற உயிர்களைக் கொன்று அதன் சதையைப் பிய்த்துத் தின்னமால் புலால் மறுப்பவனை, அனைத்து உயிர்களும் தொழும்.

மகாபாதகங்களைச் செய்யாமல் அடிப்படை ஒழுக்கத்தோடு வாழ்வதை நம் சமய நூல்களும் வேத நூல்களும் வலியுறுத்திக் கூறுகின்றன. இவற்றின் அடிப்படையை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மார்கழி வீதிஉலா – உயிர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல் No ratings yet.

மார்கழி வீதிஉலா – உயிர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல்

தேவர் உலகில் மார்கழி மாதம் ஒரு பிரம்ம முகூர்த்த காலம் என்பார் பெரியோர். உயிர்களுக்கு மிகவும் உன்னதமான மாதமாகத் திகழ்கிறது மார்கழி மாதம். அதிகாலை எழுந்து  சுத்தமான பிராணவாயு நிரம்பியுள்ள காற்றை சுவாசிப்பதால் நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி, நம் ஆரோக்கியம் வலுப்பெற்று, நம் ஆயுளும் கூடும் என்பது இதன் பின்னால் இருக்கும் விஞ்ஞானமாக பெரியோர் கூறுவர். இந்த உன்னதமான மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து இவ்வுலகையும் நம்மையும் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக பெருமை மிகுந்த மார்கழியாக கொண்டாடுவது மரபு. இந்த மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், அது மிகுந்த பெருமை மிகுந்த பீடுடைய மார்கழியானது. இதனால், இந்த மாதத்தில் நம் இல்லங்களில் வரும் நிகழ்வுகளை தை மாதத்திற்க்கு தள்ளி வைத்து இம்மாதம் முழுவதுமாக இறை உணர்வில் திளைத்திருப்பது நம் மரபாகும்.

போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்கத் தூண்டும் சூழல் போலவே, உயிர்களை இந்த உலகியலில் இருக்கும் சிற்றின்பத்தில் ஆழ்த்தி திளைத்திருக்கச் செய்யும், ஆணவம் என்ற மலம். அதிலிருந்து விடுபட்டால் தான், நாம் நம்மை உணர்ந்து இறைவனை உணர்ந்து அவனை வழிபட்டு கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்ந்து பேரின்பத்தை அடைய இயலும்.

இரவு பகல் என்பது பூமிக்கும் மற்ற கோள்களுக்கு மட்டும் தானே. எல்லா நொடிப்பொழுதும் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்கு ஏது ஓய்வு ? அவன் சலிப்படையாதவன், சோர்வடையாதவன். ஆகவே, திருப்பள்ளியெழுச்சி என்பது ஆணவ மலத்தில் ஆழ்ந்து தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, ஆணவத்திலிருந்து விடுதலை கொடுத்து இறைவனை நோக்கி நெறிப்படுத்துவதேயாகும். ஆகவே,

மார்கழி என்றாலே இறை விழிப்புணர்ச்சி மாதம்.

திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடி இறைவனை தூக்கத்திலிருந்து எழுப்புவது போல, நம் உயிர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதே பள்ளி எழுச்சியாகும். எனவே, சிவபெருமானின் பெருமைகளை உணராத மக்கள் எண்ணற்றோர். அவனை அறியாமலும், அவனுடைய தன்மைகளை உணராமலும், அவன் நமக்குச் செய்யும் உதவிகளைக் காணாமலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமையாகும்.

அவ்வகையிலே, சென்னை பள்ளிக்கரணையிலே, மார்கழி 20 ஞாயிறன்று, காலை 5 மணிக்கு மல்லிகேசுவரர் நகர் அருள்மிகு மல்லிகேசுவரி உடனமர் மல்லிகேசுவரர் திருக்கோவிலில் இருந்து அருள்மிகு சாந்தநாயகி உடனமர் ஆதிபுரீசுவரர் திருக்கோவில் வரை, அருள்மிகு சிவகாமியம்மை உடனாய ஆனந்த நடராசர் உடன், மணிவாசகரும் இணைந்து, கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறைகள் ஏந்தி முன்னூறுக்கும் மேற்பட்ட சிவ அன்பர்களுடன் வீதிவலம் நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள் இங்கே.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

சிவாலயங்கள் அறிவோம். சிவாலயங்கள் செல்வோம். No ratings yet.

சிவாலயங்கள் அறிவோம். சிவாலயங்கள் செல்வோம்.

ஆறுகளையும் நீர் நிலைகளையும் மையமாகக் கொண்டே அன்றைய ஊர்கள் அமைந்தன. ஊர்களின் மைய பகுதியில் சிவாலயம் இருக்கும். அதாவது, சிவாலயத்தைச் சுற்றித் தான் ஊரே வடிவமைக்கப் பட்டிருக்கும். ஊரின் பெயரே அவ்வூரின் சிறப்பு மிக்க பெயரான சிவபெருமானின் திருநாமமாகத் தான் இருக்கும்.  ஆகையாலே, ஊரின் பெயரைச் சொன்னாலே, சிவபெருமானின் மந்திரத்தை ஓதியதற்க்கும் சமம். சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானின் பாடல்களில் ஊர்களின் பெயர்களைத் தொகுத்தே பாடல்களைக் காணலாம். ஆறாம் திருமுறையில், முழுப் பாடலுமே திருத்தலங்களின் பெயர்களைத் தொடுத்தே திருத்தல தாண்டகம் என்று பதிகமாக பாடியுள்ளார். அந்த பாடல் இங்கே:

ஆறாம் திருமுறை. திருநாவுக்கரசர் அருளிய திருத்தல திருத்தாண்டகம்

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிருறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீரார் காளத்தியும் கயிலாய நாதனையே காணலாமே.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும் கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப் பேருங் கயிலாய நாதனையே காணலாமே.

இடைமருது ஈங்கோ இராமேச்சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்கரூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டைகோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே.

எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பை யங்கோட்டூர் இறையாய் சேரி
அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுரை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
வெண்ணை அருட்டுரை தண்பெண்ணாடகம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே.

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப் பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக் காரோணத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைகாட்டுள்ளும்
மஞ்சார் பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் ஐயாறசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டங் கருகாவூருங் கயிலாய நாதனையே காணலாமே.

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் உற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாய நாதனையே காணலாமே.

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோ டெத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.

திருச்சிற்றம்பலம்.

ஆகவே, சிவபெருமான் குடிகொண்டு அருள் புரியும் தலங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தாலே, சிவபுண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

திருத்தலங்கள் சென்று வழிபடுவீர்

தேவார பாடல் பெற்ற தலங்கள், இன்று வரை நமக்குத் தெரிந்த 276 தலங்களில் சிவபெருமான் பல்வேறு திருநாமங்களோடு, அடியவர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார். திருவாசகத் தலங்கள், மலைகளின் மேலே உள்ள தலங்கள் என்று எண்ணற்ற தலங்களில் பெருமான் குடிகொண்டு அருள் பாலித்து வருகிறார். நாம் செய்திருக்கும் புண்ணியங்களைப் பொறுத்து நாம் இந்த தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட பெருமான் அருள் புரிவார். இந்த தலங்களை அறிந்து, இந்த தலங்களைப் பற்றி தகவல்களை எண்ணியும், சிவபெருமானையும் எண்ணிக் கொண்டிருந்தால், அவர் நிச்சயம் அந்தந்த கோவிலுக்கு உங்களை அழைப்பார். அருள் தருவார்.

தேவார பாடல் பெற்ற தலங்களை அறிந்து கொள்ள கீழேயுள்ள வலைதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.shivatemples.com

இந்த தலங்களையெல்லாம் கூகுள் வரைபடத்திலேயே காண:

https://shaivam.org/temples-special/thevara-paadal-petra-thiruthalangal

இந்த திருத்தலங்களை இணைத்து மிக இனிமையான கேட்க கேட்க திகட்டாமல், நம்முள் உள்ளே சென்று திருத்தலங்களை விதைக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதைக் கேட்க கேட்க, மனனமாகி, நமக்கு பல்வேறு தலங்களை நம் மனதில் நிற்கச் செய்து அங்கே இருக்கும் பெருமானிடம் விண்ணப்பம் கேட்டு அங்கே சென்று அவரைத் தரிசிக்கும் பாக்கியமும் சித்திக்கும். ஆகவே, இந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து? 4.46/5 (26)

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து?

குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ஒரு குழந்தை பாடுவதைப் போல ரசித்துக் கேட்பான். அதற்கான இரு தொகுப்புகள் இங்கே.

அச்சிட்டு, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் ஒரு பக்க பதிவாக PDF பதிவு இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

பஞ்ச புராணம் தொகுப்பு ௧

பஞ்ச புராணம் தொகுப்பு ௨

பஞ்ச புராணம் தொகுதி ௧

நால்வர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே

தேவராம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

திருவாசகம்

வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ,

வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே

திருப்பல்லாண்டு

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

பஞ்ச புராணம் தொகுதி ௨

குரு மரபு வாழ்த்து

கயிலாய பரம்பரையில் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ.

விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

தேவராம்

திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும் திருவெண்நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்சங்கர் ஊதா ஊரும் விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவைஎல்லாம் ஊர் அல்ல அடவி காடே.

திருவாசகம்

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு
ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்து ஆடும் நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கிஎனைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்து அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே

திருவிசைப்பா

அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம்

பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.

திருப்பல்லாண்டு

குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

Please rate this

பணத்தின் பின்னே ஒரு பயணம்… 4.67/5 (3)

பணத்தின் பின்னே ஒரு பயணம்…

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை

என்பது வள்ளுவர் பெருமான் வாக்கு. பொருள் இல்லாமல் இன்று வாழ இயலாது. குடிக்கும் தண்ணீர் கூட பணம் கொடுத்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆனால், எவ்வளவு பணம் தேவை ? இங்கு தான் யாருக்கும் தெளிவு ஏற்படுவதில்லை. பணத்தை ஈட்ட முயற்சி செய்யும் போது, பணம் வர வர, நமக்கு குஷியாகவும் இன்பமாகவும் இருக்கும். அவ்வாறு பணத்தின் மீது ஆசை வைத்து அதன் பின்னால் செல்ல ஆரம்பித்து விட்டால், மெல்ல மெல்ல அது நம்முடைய எசமானனாகவும், நாம் அதற்கு அடிமையாகவும் மாறி விடுவோம்.

மனமானது ஆசைப் பட்டுக் கொண்டே இருக்கும். அதனின் ஆசையை அளவுகோலால் அளக்க இயலாது. பணம் வர வர ஆசையும் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில், நாம் ஆசைப் படும் பணம் கிடைக்காது. அப்போது தான், நாம் வித்தியாசமாக நடந்து கொள்வோம். கோபம், இயலாமை, போன்ற உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறம், நியாயம், மனிதாபிமானம் ஆகியவற்றை இழக்கத் தயாராகிவிடுவோம். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலைக்கு அது நம்மைத் தள்ளி விடும். பலர் இந்த ஆரம்ப நிலையிலேயே அதை உணர்ந்து கொண்டு திருந்தி வாழ்வர். ஆனால், தொடர்ந்து பணத்தின் பின்னால் செல்பவர்கள், பல ஆண்டுகள் பாடுபட்டு கட்டிய தவம், புகழ், நற்பெயர் எனும் கோட்டைகள் அனைத்தும் ஒரே விநாடியில் நிலை குலைந்து, தகர்ந்து சுக்கு நூறாகிப் போகும். அதள பாதாளத்தில் விழுந்து விட்டதை உணர்வார்கள். நற்பெயரும் தவமும் ஒரு முறை இழந்து விட்டால், மீண்டும் இந்த பிறவியிலேயே அதை மீண்டும் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினம்.

 

ஆகவே, பணத்தின் பின்னால் சென்றால், அது நம்மைப் பாழுங்குழியில் தள்ளி விடும் என்பது கண்கூடாக காணும் உண்மை. மனிதனுக்கு 3 வேளை நல்ல உணவும், நல்ல தண்ணீரும், தூங்க நல்ல இடமும், உடுக்க நல் உடையும் இருந்தாலே போதும். அதற்கு மேல் அவனுக்குத் தேவையானது அனைத்தும் ஆடம்பரம் தான். ஆகவே, பணத்தை எது வரை பின்தொடர வேண்டும் என்பதை அறிந்து அது வரை மட்டுமே செல்ல வேண்டும். அதுவே உங்கள் வாழ்வை இனிதாக வைக்கும். அதிக பணம், நம் சிந்தனைகளை சிதறச் செய்வது மட்டுமின்றி, நம் செயல்பாடுகளையும் நம் வாழ்வின் நேரத்தையும் வீண் அலைச்சல்களில் அலைக்கழிக்கும். இப்பிறவியில் இவ்வுலகிலிருந்து பாவ புண்ணியங்களை மட்டுமே நாம் எடுத்துச் செல்ல முடியும். வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியாது.

தேவைக்கு அதிமாக இருக்கும் பணத்தை வைத்து புண்ணிய காரியங்கள் செய்யுங்கள். அன்னதானம், சிவாலய பணிக்கு உதவுதல், கோவில்களில் விளக்கிடுதல், பூசைக்கு வழியில்லாத கோவில்களுக்கு உதவுதல், கோ சாலைக்கு உதவுதல் போன்ற நற்பணிகள் செய்யுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 5/5 (1)

காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

எளிமையான சொற்களை மாலையாகக் கோர்த்து, உணர்வுகளை அப்படியே மிகுந்த வாசனையோடு கூடிய மணம் கமழ வைத்து, ஆழ்ந்த ஞானத்தையும் இடையே பொதித்து, படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டி சிவத்தை நோக்கி பாட, ஆட வைக்கும் திறமை தேனினும் இனிய திருவாசகத்திற்கு உரித்தாகும். அத்தகைய சுவையோடு ஞானமும் கலந்த திருவாசகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமானால் அதற்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை.

திருக்கழுக்குன்றத்திலே அடியார்களின் முன்னிலையிலேயே மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார் சிவபெருமானார். அந்த திருக்கழுக்குன்ற பதிகத்தை சற்றே சிந்தித்து பார்த்தால், உள்ளம் உருகும், சிவபெருமானிடம் இலயிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

 

Please rate this

நம் தமிழ் எண்கள் அறிவோம், பயன்படுத்துவோம் 4.33/5 (3)

நம் தமிழ் எண்கள் அறிவோம், பயன்படுத்துவோம்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

என்பார் ஔவையார்.

குறள் 392:.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. அத்தகைய கண்கள் போன்ற நம்முடைய தமிழ் எண்களை நாம் இன்று பயன்படுத்துகிறோமா ? முதலில் அந்த எண் வடிவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோமா ?  உலகின் மூத்த மொழி என்ற பெருமை உடைய நம் தமிழ் மொழியின் எண்களை நாமே பயன்படுத்தாவிட்டால், அமெரிக்கர்களும் உருஷ்யர்களுமா பயன்படுத்துவார்கள் ?  இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்கே கேட்டுக் கொண்டு, அதற்கான நம் கடமைகளை உணர்ந்து செய்ய வேண்டும். ஆகவே, தமிழ் எண்களின் உருவங்களை அறிந்து கொண்டு, அதை எளிதாக மனனம் செய்வதற்குரிய வழிகளைப் பின்பற்றி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், நம் எண்களுக்கு உயிர் வந்து விடும். இந்த முயற்சியை நம்மிலிருந்தே தொடங்குவோம். அதற்கான கருவி தான் இந்த காணொளியும், படங்களும்.

இந்த காணொளியில் பயன்படுத்தப்பட்ட படங்கள். எளிதாக கற்பதற்க்கும், பயிற்சி பெற்று பயன்படுத்துவதற்க்கும்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காலத்தை வென்ற நூல்கள் என்பது எத்தனை காலமானாலும் என்றும் பொருந்தி இருப்பதாகும். பன்னிரு திருமுறைகளின் பெருமை 4/5 (2)

காலத்தை வென்ற நூல்கள் – பன்னிரு திருமுறைகளின் பெருமை

காலத்தை வென்ற நூல்கள் என்றால் என்ன ?

நூல் செய்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் அப்படியே அந்த நூலின் பொருள் எக்காலத்தும் பொருந்துமாறு இருப்பது தான் காலத்தை வென்ற நூல்களாகும். இது போல காலத்தை வென்ற நூல்களை செய்வது எப்படி சாத்தியம் ? விஞ்ஞானம் நேற்று செய்த பொருள் இன்று புதிய வடிவம் (version) கொண்டு புதுப்பிக்கப்பட்டு (update) இவ்வுலகில் இருந்தே காணாமல் போய்விடுகிறது. ஆனால், பல ஆயிரம் காலங்கள் கடந்தும் ஒரு நூல் நிலைத்து நின்று, தற்காலத்திற்கும் இனி வரும் காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது எத்தனை பெரிய அதிசயம், ஆச்சரியம் என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
 
இன்றைய உலகில் இத்தனை பெரிய நூல்கள் செய்வது சாத்தியமா என்றால், என்ன பதில் கொடுப்போம் என்று எண்ணிப் பாருங்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நூல்கள் நிற்கிறது என்றால், அவை உண்மைப் பொருளைச் சொன்னால் மட்டுமே நிற்பது சாத்தியம். உண்மையல்லாதவை அழிந்து போகும். அத்தகைய நூலையோ பொருளையோ மனிதர்கள் செய்வது சாத்தியமா என்ற கேள்விக்கும் நாம் என்ன பதில் கூறுவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அத்தகைய நூல்கள் இறைவன் திருவருளினால் மட்டுமே செய்ய இயலும் என்பது இப்போது தெளிவாகும்.
 
வேகமாக மாறி வரும் இந்த விஞ்ஞான உலகிலும் காலத்தை வென்ற நூல்கள் இங்கு இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்தால் நமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட நூல்கள் இன்றும் அதன் தன்மை மாறால், உண்மைப் பொருள் மாறாமல் நிலைத்து நின்றால், அது அதிசயம் அல்லவோ ? அப்படி பல நூல்கள் உலகிலேயே இந்தியா என்னும் நாட்டின் தென்கோடியில் தமிழகம் என்ற பகுதியிலே உலகின் முதன்மொழியாக இன்றும் வழக்கில் இருக்கும் தமிழ் என்ற மொழியிலே உள்ளது என்றால் நமக்கு இன்ப அதிர்ச்சி தானே. உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் பல காலத்தை வென்ற நூல்கள் இல்லவே இல்லை. உலகிலேயே தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே மட்டும் தான் இருக்கிறது.  எனக்கு அந்த நூல்களைக் காண மிகவும் இப்போது ஆவலாக இருக்கிறது.
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவநாயனாரால் செய்யப்பட்ட திருக்குறள், பன்னிரு திருமுறை நூல்கள், இலக்கிய நூல்கள் என்று பல காலத்தை வென்ற நூல்கள் தமிழ் மொழியிலே உள்ளது. அத்தகைய நூற்களில் தலை சிறந்தது திருக்குறளும் பன்னிரு திருமுறை மற்றும் சித்தாந்த சாத்திர நூல்களும், இன்னும் பிற சைவ மரபு நூல்களுமாகும். நம் நூல்களின் பெருமை நமக்கே ஏனோ தெரிவதில்லை. அதை பாராட்டும் எண்ணமும் ஏனோ நமக்கே இருப்பதில்லை. அத்தகைய காலத்தை வென்ற நூல்களை நாம் எவ்வாறு போற்ற வேண்டும் ? எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ? அதை முதலில் நன்கு படித்து உள்வாங்கி உணர வேண்டும்.  அதற்கு சிறந்த ஞானாசிரியர்களின் துணையைப் பெற வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவத் திருமுறை நேர்முக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இத்தகைய பெரிய சிவபெருமானின் அருளைப் பெற்றவர் இவ்வுலகில் எத்தனை பேர் ?
 
இந்த நூல்கள் சில ஆயிரம் ஆண்டு காலத்தின் முன்னர் தான் தோன்றியதா என்ற கேள்வியை எழுப்பினால்… நூல் வடிவமாக சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தான் தோன்றியது. ஆனால், சொல் வடிவில் குருவின் உபதேசமாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதற்கு முன்னரும் இருந்துள்ளன ? இதை ஆராய்ந்து துல்லியமான பதிலைக் கூறத்தக்கவர் இங்கு எவரேனும் உளரோ ?
 
இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் செய்த அற்புதங்கள் எத்தனை எத்தனை ?  இந்த அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்தனவா என்று வியந்து கேட்பவர்கள் ஏனோ, சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டதை இக்கால மருத்துவர்கள் Its a medical miracle என்பதை மட்டும் அதே வினாவை எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.  நமக்குத் தெரியவில்லை என்ற காரணத்தினால் மட்டும், அந்த அற்புதங்கள் இன்றும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. இந்த அற்புதங்கள் நடந்ததற்க்கு சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன.  இந்த உலகைச் சுற்றி இன்னும் நிறைய சூக்குமங்கள் இருக்கின்றன, அதுவும் மனிதனின் அறிவிற்கும் கவனத்திற்க்கும் எட்டாமல் இன்னும் நிறைய இருக்கிறன்றன என்பதை உணர இயலும்.
 
முதலை உண்ட பாலகனை மூன்று ஆண்டுகள் கழித்து அதே வளர்ச்சியோடு மீண்டும் பெற்றது எத்தனை பெரிய அதிசயம் ?  ஆற்றில் விட்டதை குளத்தில் பெற்றது, செங்கல் தங்கக் கட்டியாக மாறியது, காவிரி ஆறு பிரிந்து வழிவிட்டது, இந்த பூத உடலோடு திருக்கயிலாயத்திற்கு வெள்ளை யானையின் மீது ஏறிச் சென்றது, கொலை செய்ய ஏவப்பட்ட மதம் பிடித்த யானை வணங்கி வலம் வந்தது, கல்லைக் கட்டி கடலில் போட்டும் கல் தெப்பமாக மிதந்து கரையேறி அதற்கு சான்றாக இன்றும் இருக்கும் கரையேரவிட்ட குப்பம் என்ற பகுதியும், கொடிய நஞ்சை பாலில் கலந்து உண்டும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிரோடு இருந்ததும், பாடல் பாடி இறைவனிடம் படிக்காசு பெற்றதும், கயிலையில் உள்ள ஏரியில் மூழ்கி, திருவையாற்றின் குளத்தில் எழுவதும், இறந்து போன இளைஞரையும், பூம்பாவையையும் உயிருடன் எழுப்பியதும் (மாண்டவரை மீட்டது), பதிகம் பாடி நோய்களை நீக்கி மனித குலத்தை மீட்பதும், அடேங்கப்பா எத்தனை எத்தனை அற்புதங்கள்.  எல்லாம் இறைவன் திருவருளினால் நம் அருளாளர்கள் செய்த அற்புதங்கள்.
 
எத்தனை பெரிய சிறப்புகள் இந்த நூல்களுக்கு இருக்கின்றன ? அவற்றையெல்லாம் அறிவதற்கு நமக்கு ஏனோ இன்று நேரமே இருப்பதில்லை. சுதந்திரம் பெற்ற பின் சில பத்தாண்டுகளில் விஞ்ஞானத்தைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று நம் பல்லாயிரம் ஆண்டு கால சிறப்புகளை இழிவுபடுத்தி நம்மிடம் உள்ள மாணிக்கத்தை நாமே தூக்கி எறிய வைத்த இழி செயல்கள் எத்தனை எத்தனை ? இன்னும் நாம் விழித்துக் கொண்டு, நம் பெருமைகளை உணர்ந்து, அவற்றை மற்றவர்களுக்கும் உலகிற்கும் அறிய செய்யும் செயல்களை நாம் செய்யவில்லை என்றால், இந்த ஞான பூமி நம்மை மன்னிக்காது.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில் No ratings yet.

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில்

இறைவனால் நமக்கு அருளப்பட்ட ஞான ரத்தினமாகிய திருமுறை மற்றும் சைவ சமயத்தை உலகெங்கும் மக்களின் நன்மைக்காக எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டில் அறத்தை நிலை நாட்டி மாமழை பெய்து மக்களை இன்பமாக வாழச் செய்யும் வழியாகும். அவ்வழியே, சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் (TNHB) அமைந்துள்ள அண்ணாமலையார் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்திலும் அதை ஒட்டியுள்ள விநாயகர் ஆலத்தில் குடமுழுக்கு 48 நாள் நிறைவு விழாவிலும் ஆனி 1 முழுமதி நாளன்று, சைவ சமயம் மற்றும் திருமுறை விழிப்புணர்வு வீதிஉலா நடத்தப்பெற்றது.

கயிலாய வாத்தியம் முழங்க திருமுறை வீதிஉலாவும், சைவ சமயம் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளும் அந்த கோவிலைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அறிவோம் சைவ சமயம் என்று நூலும் அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

 

Please rate this

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் No ratings yet.

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும்

கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்த வந்த குழந்தைகள், தீந்தமிழ் மற்றும் தெய்வீக திருமுறைகளைக் கற்றதுடன், சண்டிகேசுவரர் மேடை நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் குறுகிய காலத்தில் பயிற்சி செய்து நிறைவு விழா அன்று நிகழ்த்தினர்.

சண்டிகேசுவரர் நாயனார் மேடை நாடகம்

இந்த நாடகத்தின் காட்சி வசனம், நம் வலைதளத்தின் பதிவிறக்கம் பகுதியில் உள்ளது.

வில்லுப்பாட்டில் சைவ சமய விழிப்புணர்வு எவ்வாறு கொண்டு வரலாம் என்ற கேள்விக்கு விடையாக உருவாகியது இந்த சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டு. குழந்தைகளின் அருமையான முயற்சி பாராட்டத்தக்கது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா No ratings yet.

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா

சென்ற மே 26 ஆம் தேதி, திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய சிறுவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு நிறைவு விழா மற்றும் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக பள்ளிக்கரணை MTK மகாலில் நடைபெற்றது.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அனைத்து அடியார்களும் மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சிக்கு தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி முதலில் அம்மையப்பர் வழிபாட்டுடன் துவங்கியது.

சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் விழாவிற்கு வருகை தந்திருந்த சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மற்றும், தேவர்கள், பூதகணங்கள் என்று அனைவரையும் வரவேற்றும், கோடை விடுமுறை வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பட்டம் பெறும் சாதனையாளர்கள் என்று அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

பின்னர், கோடை விடுமுறை சிறப்பு தமிழ் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சண்டிகேசுவரர் நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வில்லுப்பாட்டும் நடைபெற்றது.

மேலே, சிவபிரான் சண்டிகேசுவரருக்கு கொன்றை மாலை அணிவித்து தொண்டர்களின் தலைவன் என்றும் சண்டிகேசுவர பட்டமும் அருளும் காட்சி.

பின்னர் சிறப்பு சொற்பொழிவாக, மயிலாடுதுறை சிவதிரு தீபன்ராஜ் அவர்கள் ஆளாவது எப்படியோ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிவதிரு சரவணன் ஐயா, தொண்டை மண்டல அடியார்கள் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார் சிவதிரு மீனாகுமார் அவர்கள். பின்னர், தென் சென்னை பகுதியிலும் மற்ற பிற பகுதிகளிலும் தன்னலமற்ற சிறப்பாக சிவபணி செய்த பல ஆயிரக்கணக்கானவர்களில் 28 பேரை தேர்ந்தெடுத்து சிறப்பு பட்டமளிப்பு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. அவர்கள் மேன் மேலும் சிறந்த சிவப்பணியாற்ற பெருமான் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.

பின்னர் கோடை சிறப்பு தமிழ் வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பஞ்சபுராணம் மற்றும் வாழ்த்து பாடலோடு விழா இனிதே நிறைவுற்றது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf 5/5 (4)

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf

நம்முடைய குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோர்கள் நமக்கு எவ்வளவு தூரம் நம் சமயத்தை நமக்குக் காட்டுகின்றனரோ, அத்தனை தூரத்திலிருந்து நம் ஆன்மீக பயணமானது துவங்குகிறது. அவ்வகையிலே, நாம் நம் வாழ்வில் பயணித்த தூரத்தையும் அனுபவத்தையும் நம் குழந்தைகளுக்குக் காட்டி வளர்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.  அவ்வகையிலே, சைவ சமயம் பற்றிய அடிப்படை நுட்பம் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும் என்ற வகையிலே அந்த அடிப்படை நுட்பத்தை அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் சிறு சிறு துளிகளாக சேர்க்கும் முயற்சியில் இந்த அறிவோம் சைவ சமயம் என்ற புத்தகமும் ஒரு அங்கமாக சேர்த்துள்ளோம்.

நாம் யார், நம் இறைவன் யார், நம் கடமைகள் என்ன என்பதை அறியாமலேயே நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்று தங்களுக்கு வேண்டியவற்றை இறைவனிடம் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சைவத்தின் ஞான ஒளி பெற்று நம் பிறப்பு இறப்பில்லாத சிவபிரானை என்னென்றும் ஏத்தும் வண்ணம் ஆகும் முயற்சியில் இந்த புத்தகமும் ஓர் அங்கமாகத் திகழ எண்ணம் கொண்டு இங்கு அதன் அச்சிடக்கூடிய PDF வடிவம் பகிரப்படுகிறது. இது அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இது நம் வலைதளத்தினஅ பதிவிறக்கம் பகுதியிலும் சுட்டப்பட்டுள்ளது.

அறிவோம் சைவ சமயம்  –  PDF

https://drive.google.com/open?id=1IRzrkHEyYMoXsOutU_MSoGLr82LmCw4g

குழந்தைகளுக்கான சிறுவர் நாடம் – சண்டிகேசுவரர் நாடகத்தின் வசனத்தினையும் இங்கே பதிவேற்றியுள்ளோம்.

சண்டிகேசுவரர் சிறுவர் நாடகம் – PDF

https://drive.google.com/open?id=10nddS3thvI81X7za-rUYBbyTDkq6i1fu

உலகின் வீதிகள் தோறும் சைவ பாட சாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கோடை விடுமுறைல தமிழ் திருமுறை சொல்லிக்கொடுங்க No ratings yet.

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தமிழ் திருமுறை சொல்லிக் கொடுங்க

உலகின் ஆன்மீக ஒளியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது நம் பாரத பூமி. இந்த பூமியில் தடுக்கி விழுந்தால் ஞானப் புதையலைப் பெறலாம். ஒவ்வொரு கோவிலும் ஞானப்புதையல். ஒவ்வொரு இல்லமும் ஞானப் புதையல். ஒவ்வொரு மலையும், நதியும், காற்றும் ஆகாயமும் ஞானப் புதையலாக நமக்கு பாடம் சொல்லித் தரும் குருவாக அமைந்துள்ளது. அத்தகைய புண்ணிய பூமியில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்?

கடந்த பல நூற்றாண்டுகளால் நாம் இழக்கப் பெற்ற ஞானத்தையும், இறை உணர்வையும் தற்போது மீட்டு பேரின்பமாக இவ்வுலகில் வாழும் முறையை அறிந்து கொண்டு, நம் தலைவனாகிய ஈசனை உணர்ந்து தொழுது ஏத்தி வணங்கி வாழ வேண்டும். தனி மனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கும், பொது ஒழுக்கம் என்று எங்கும் ஒழுக்கம் நிறைந்த பூமியை நாம்  மீண்டும் படைத்திட வேண்டும். ஒழுக்கம் இன்பமான வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக நிற்பது. ஒழுக்கம் இல்லாத வாழ்வும், ஒழுக்கமில்லாத எந்த அமைப்பும், வெளியிலிருந்து யாரும் கெடுக்காமலேயே கெட்டுப் போகும்.

தனிமனித சுதந்திரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தனி மனித சுதந்திரம் முழுக்க முழுக்க இருக்கும் ஒருவனே, தான் இன்பமாக வாழும் பொருட்டும், தன் குடும்பம் இன்பமாக வாழும் பொருட்டும், தன் தெரு, ஊர், நாட்டு மக்களும் இன்பமாக வாழும் பொருட்டும் தனக்குத் தானே சில விதிகளை விரும்பி கடைப்பிடிப்பதே ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க சிறிது சிரமம் தேவைப்பட்டாலும், அதனால் வரக்கூடிய நன்மைகள் பலப்பல. அந்த ஒழுக்கம் இல்லாவிட்டால், தனி மனிதனின் வாழ்வும், ஊரும், நாடும் கெட்டுப்போகும் என்பது வரலாற்றில் பல்லாயிரம் முறை நாம் கண்ட உண்மையாகும்.  இதை வலியுறுத்தவே,  தெய்வப்புலவர் வள்ளுவர் பெருமானும்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்றார். அத்தகைய இன்றியமையாத வாழ்வின் இருதயமாக இருக்கக்கூடிய ஒழுக்கத்தையும், வாழ்வில் நன்றாக இன்பமாக வாழும் முறையையும் ஏனோ இன்றைய கல்வி முறை புறக்கணித்துவிட்டு விஞ்ஞானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. இந்த நிலையிலிருந்து விலகி, நம் கல்வி, இன்பமாக வாழவும், எத்தகைய சூழலை கையாளவும், புதிய புதிய கருவிகள் கண்டுபிடிப்பதையும், விஞ்ஞானத்தோடு சேர்த்து மெய்ஞானத்தையும் புகட்ட வேண்டும். அன்று தான் அதற்கு அடுத்த தலைமுறைகள் இன்பமாக இனிமையாக வாழ இயலும்.

அதுவரை, அந்த பொறுப்பு பெற்றோர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தன் பிள்ளைக்கு இனிமையாக வாழும் வழிகளையும், நாம் யார், நம் மொழி என்ன, நம் சமயம் என்ன, நம் வரலாறு என்ன, நம் புராணங்கள் என்ன, நம் குருமார்களும் நமக்கு வழிகாட்டிகளும் யார் என்ற இன்றியமையாத செய்திகளையும் ஊட்டும் பொறுப்பு உடையவர்களாக இருக்கின்றனர்.

அவ்வகையிலே, கோடை விடுமுறையில், குழந்தைகளுக்கு இனிய விளையாட்டுகளோடு சேர்த்து, இந்த முக்கியமான கடமையை நிறைவேற்றுவது சிறப்பானதாகும். அதற்கு ஏற்றவாறு, அந்தந்த ஊரிலிருக்கும் சிறு அமைப்புகளும், சிவனடியார், முருகன் அடியார் திருக்கூட்டங்களும், அடுக்கக கூட்டமைப்புகளும் சேர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.

தமிழ் மொழியின் அடிப்படை, இலக்கணம், ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அற நூல்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், நாயன்மார்கள் வரலாறு, பக்திப் பாடல்கள், விளையாட்டு, நம் பழங்கால இசைக்கருவிகளை இயக்குவது, விடுகதைகள் என்று பல்சுவையோடு சேர்த்து அவர்களுக்கு நம் சமயம் மற்றும் தமிழ் மொழியின் அடிப்படைகளை ஊட்டினால், அவை அவர்களிடம் ஆழமாக பதிந்துவிடும். நீங்களும் இத்தகைய வகுப்புகளை உங்கள் ஊரில் நடத்தலாமே ?

 

பள்ளிக்கரணையில் இத்தகைய வகுப்பு வரும் ஏப்ரல் 15 லிருந்து மே 25 வரை நடைபெறும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்,

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

தமிழ் ஞானப்பரவல் – தமிழ் வேதம் திருமுறைகளை இல்லங்களுக்கு கொடுப்போம் No ratings yet.

தமிழ் ஞானப்பரவல் 

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதுவதற்கு ஊக்குவிக்கும் வண்ணமும், சைவ நெறிமுறைகளை அழுந்தி கடைப்பிடிக்கவும், திருமுறை தொகுப்பு புத்தகங்கள், நாயன்மார்கள் வரலாறு போன்ற புத்தகங்களை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கும் ஒரு சிறு முயற்சி.

அவ்வகையிலே, விளம்பி ஆண்டு மாசி மாத முழுநிலவு நன்நாளிலே, சென்னையில் ஒரு கிரிவலம்  அரசன்கழனி அருள்மிகு பெரியநாயகி உடனுறை பசுபதீசுவரர் ஆலயத்தில் ஔடதசித்தர் மலையை மலைவலம் (கிரிவலம்) வந்த அன்பர்களுக்கு குலுக்கல் முறையில் கரு முதல் திரு வரை திருமுறை தொகுப்பு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

இந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்

 

Please rate this

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள் 4/5 (2)

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள்

கோவை சகோதரர்களாகிய சிவதிரு சுப்ரமணியம் ஓதுவார் மற்றும் சிவதிரு தண்டபாணி ஓதுவார் ஆகியோரது இனிமையான குரலில் கொங்கு நாட்டு திருத்தலங்களில் பாடப் பெற்ற திருமுறை மற்றும் திருப்புகழ் ஆகிய பதிகங்களுக்கு புதிய நிழல்அசைவு படத்தோடு கேட்டும், உணர்ந்தும் உருகி மகிழ இந்த காணொளி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு கேட்டு உணர்ந்து உருகி மகிழுங்கள். திருச்சிற்றம்பலம்.

அனைத்து பாடல்களின் தொகுப்பு பட்டியல்

 

குறிப்பிட்ட சில பாடல்கள்

சுந்தரர் தேவாரம் மற்றுப் பற்றெனக்கின்றி

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் சுந்தரர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம் சிட்டனை சிவனை செழுஞ் சோதியை

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்  திருஞானசம்பந்தர் தேவாரம்

தொண்டெலாம் மலர் தூவி திருஞானசம்பந்தர் தேவாரம்

பெண்ணமர் மேனியானாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் திருஞானசம்பந்தர் தேவாரம்

எரிக்குங் கதிர்வேய் சுந்தரமூர்த்தி தேவாரம்

எற்றான் மறக்கேன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

பந்தார் விரன்மடவாள் திருஞானசம்பந்தர் தேவாரம்

அருணகிரிநாதர் திருப்புகழ்

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை

கொங்குநாடு திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம்

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

சைவ சமயமே சமயம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி 5/5 (1)

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி

திருச்சிற்றம்பலம்.

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை நம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மார்கழி மாதத்தில் அனைவரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராணம் ஆகிய பதிகங்களை முழுமையாக படித்து மனனமாக சொல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மாணவர்களுக்காக இந்த மூன்று பதிகங்களையும் படித்து ஒப்புவிக்கும் போட்டி கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

மிகவும் உன்னதமான மார்கழி மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து, இறைவனை அறியாமல் உலகியலில் உழன்று கொண்டிருக்கும் மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து எழுப்புவதே திருப்பள்ளியெழுச்சியாகும். அத்தகைய பெருமைமிகு மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடி சிவாலயங்களில் இறைவனை வழிபாடு செய்வது பல்லாயிரமாண்டு மரபு. அந்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியோடு சேர்த்து சிவபுராணமும் குழந்தைகள் இளவயதிலேயே கற்க வேண்டும் என்று நோக்கம் கொண்டு, *பீடுடைய மார்கழி போற்றி* என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பதிகம் ஒப்புவித்தல் போட்டி, பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் திருக்கோவிலில் 26-01-2019 அன்று மாலை 5 மணிக்கு திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. இதில் 5 வயது குழந்தைகள் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் வரை பலர் பங்கு பெற்று பரிசு பெற்றனர். இந்த போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கரணை மாணவர்களும் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தி சிறப்பித்தனர். நம் இயற்கையோடு இயைந்த பண்டைய கால சிறப்பான வாழ்க்கை முறையை நாமும் கடைப்பிடித்தால் நோயின்றி நலமாக நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது திண்ணம்.

இது போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து சிவனடியார்களும் தங்களது சிவாலயங்களிலும் மடங்களிலும் நடத்தி நம் குழந்தைகளுக்கு பன்னிரு திருமுறையையும் அதன் பெருமைகளையும் நிலைநிறுத்துவது மிக மிக அவசரமான அவசியமானதாகும். ஆகவே, இது போன்ற போட்டிகளும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இடைவிடாது அடிக்கடி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் சென்னை பள்ளிக்கரணையில் 4/5 (2)

திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் சென்னை பள்ளிக்கரணையில் ஆரம்பம்.

சிவமயம்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி!

நம் பள்ளிக்கரணையில் திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் ஆரம்பம் 2019-2020

நமது நீண்ட கால விண்ணப்பத்திற்கு அருள் கொடுக்கும் வண்ணம் அருள்மிகு ஆதிபுரீசுவரர் நமக்கெல்லாம் அருள் செய்து கரும்பினும் இனிய தித்திப்பான செய்தியை வழங்குகிறார். நம் பள்ளிக்கரணையில் 2019-2020 தொகுப்பிற்கான திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவங்க திருவருள் கூட்டியுள்ளது.

திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர் அருள் நமச்சிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், சந்தான குரவராகிய உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.

பிறப்பு இறப்பில்லாத சிவபெருமானார் நம் முன்னோர்கள் அருளாளர்கள் வழியாக, நமக்கெல்லாம் தானே வந்து அருள் செய்த தமிழ் வேதமாம் சைவ பன்னிரு திருமுறைகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் திருவாவடுதுறை ஆதீனம் உலகமெங்கும் நூற்றுக்கணக்கான சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதிலொரு புதிய மையமாக நம் பள்ளிக்கரணையில் நம் ஆதிபுரீசுவரர் திருவருளோடு, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்ட அடியார்களால் அமைக்கப்பெற்று நடத்தப்படும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் (முதல் ஞாயிறு காலை 9:30 முதல் 1 மணி வரை, மதிய உணவுடன்) இந்த வகுப்பு நம் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் நடைபெறும். திருமுறை பற்றிய வரலாறு, பதிகங்களை எப்படி பண்ணோடு பாட வேண்டும், பதிகங்களின் வரலாறு என்று இசை ஆசிரியர் ஒருவராலும், விளக்கவுரை ஆசிரியர் ஒருவராலும் விளக்கப்பெறும். 2019-2020 வகுப்புக்கான பாடத்திட்டம் (syllabus) வகுக்கப்பட்டு, அதற்குரிய பதிகங்களும், விளக்கவுரையும் புத்தகங்களாக இதில் இணையும் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இசை ஆசிரியரும், விளக்கவுரை ஆசிரியர் அவர்களும், சைவ இசை மற்றும் சாத்திர தோத்திரங்களில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பமாகவும் இவ்வகுப்பில் சேரலாம்.

நம் சமயங்களின் அடிப்படை செய்திகளை அறிய, ஆழ்ந்த சமய நுட்பங்களை உணர, ஆராய்ச்சிகள் செய்ய, இறைவனை அறிந்து உணர்ந்து போற்றியும் ஏத்தியும், சிவ புண்ணிய செயல்களிலும் ஈடுபடுவதை விட நமக்கு வேறு என்ன இறைவனால் அருளப்பெற முடியும் ? ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி இந்த வகுப்பில் இணையுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வகுப்பிற்கு அமைப்பாளராக, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் இருந்து நடத்தி கொடுக்க இசைந்துள்ளார்கள். இந்த வகுப்பில் இணையவும், இந்த வகுப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு அவரை அணுக 9840194190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இனிய செய்தியை குடும்பத்தார் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரோடு உடனே பகிர்ந்து கொண்டு நீங்கள் குடும்பமாக இந்த வகுப்பில் இணையுங்கள்.

சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலபாக்கம், சந்தோசபுரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், அரசன்கழனி, சோழிங்கநல்லூர், சு.குளத்தூர் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அன்பர்கள் இணையுங்கள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
பள்ளிக்கரணை, சென்னை.

 

Please rate this

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம் No ratings yet.

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம்

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் என்பது என் வாழ்விலேயே அடியேன் சிந்தித்துக் கூட பார்த்திராத ஒரு மாபெரும் நிகழ்வாகும். தன்னிறைவற்ற விஞ்ஞான அறிவும், மேற்கத்திய மோகமும் நம் தேசத்தை மெல்ல மெல்ல கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில்பற்றிக் கொள்ள, நம் பல்லாயிரம் ஆண்டுகளின் திரட்சியான மெய்ஞானமும், அந்த ஞானம் வழிகாட்டிய நம் வாழ்வு முறையும், சமயமும், சாத்திரங்களும், மாபெரும் ஒளி பொருந்திய சூரியனை மேகங்கள் சற்றே மறைப்பது போல மறைத்துவிட்டன. அந்த நிழலை சாதகமாக பயன்படுத்தியும், நம் பாரத தேச மக்களின் அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டும், அந்நிய பரசமயங்கள் தங்களின் சிறகுகளை வேகமாக பரப்பி வருகின்றன. இறைவன் திருவருளால், நம் குருமார்கள் நமக்கு அருளிச் சென்ற நம் சமய ஞானத்தையும், இறைவனை அடையும் வழிகளையும் நாம் வேகமாக நம் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்றி பரவும் சூழலில் இருக்கின்றோம்.

இத்தகு சூழலில், நம் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் திருமுறைகளுக்கே உரிய ஆழ்ந்த ஞானம், மெய்யுணர்வு, எளிமையாக பாடும் தன்மை என்று பல சிறப்புகளுடன் கூடியதை, நம் மக்களுக்கு பரவச் செய்வது என்பது மிகப்பெரிய திருவருள் கூடிய செயலாகும்.  அதுவும் எளிய தொடர்பு வசதியில்லாத நம் கிராமங்கள் அத்தனையும் சிந்தித்து பாருங்கள். அத்தகு மேம்பட்ட திருப்பணியில் முக்கிய பெரும் பங்களிப்பு செய்தவர் நம் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் ஐயா என்றால், அது மிகையாகாது. அவர்கள் முற்றோதல் செய்தலைத் தொடர்ந்து, அவர்களது திருக்கழுக்குன்ற இல்லத்தில் தொடர்ந்து 108 நாட்கள் திருவாசகம் முற்றோதல் நிகழச் செய்யும் நிகழ்வு தற்போது நிறைவு பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் சைவ மடம், மடாதிபதிகள் பல்வேறு துணையோடு செய்யும் செயற்கரிய செயலை ஐயா நம் சமய மேம்பாட்டிற்காக செய்கிறார்கள் என்றால், அது சிவபிரானின் சித்தமே ஆகும்.

அந்த 108 நாட்கள் திருவாசகம் முற்றோதலில் ஒரு நாளாக, சென்னை பள்ளிக்கரணை அடியார்கள் இணைந்து 97 ஆவது நாளில் ஐயாவின் திருக்கழுக்குன்றம் சிவசிவ இல்லத்தில் ஓதினர். திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் கைலாய வாத்திய இசையோடு மிகவும் சிறப்பாக முற்றோதல் இறைவன் திருவருளால் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோமல் கா. சேகர் ஐயாவும் இணைந்தது மிகவும் சிறப்பானது.

இந்த முற்றோதல் நிகழ்வு முழுமையடைந்து அதன் குறிக்கோளை அடையும் என்பது பிறப்பு இறப்பற்ற பெருங்கருணையாளின் திருவருள்.

திருச்சிற்றம்பலம்.

இந்த நிகழ்வு பற்றி கோமல் கா சேகர் ஐயாவின் பதிவு:

ஓம்
சிவ சிவ:
=====
மீண்டும் திருவாசக உலா !
=====. =====
19-12-18 திருக் கழுக் குன்றம் ஐயா இல்லத்தில் பள்ளிக் கரணை முற்றோதல் குழுவினரால் திரு வாசகம் ஓதப்பட்டது !
ஐயா அவர்கள் சுமார் 15- திருப் பதிகங்களை இறையாற்றல் வெளிப்படும் வண்ணம் உணர்ச்சி பொங்கப் பாடி , எல்லோரையும் மறந்தும் அயல் நினைவிற்கு இடமின்றி ஈர்த்து மகிழ்வித்தார் !
குழு அன்பர்கள் கிட்டத்தட்ட திருவாசகத்தையே மனப் பாடம் செய்திருந்தது அவர்கள் இசைத்து ஓதும் முறையில் உணர முடிந்தது!
குழுவில் உள்ள மகளிர்கள் சிற்ப்பாக ஆடிப் பாடியும் மகிழ்வித்தனர்.
108- நாள் முற்றோதல் 01-01-19 அன்று நிறைவெய்துகிறது !
திருவாசகத்தை மேலும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் சென்று அனைத்து இன் மக்களையெல்லாம்
சிவத்துக்கே ஆட்படுத்திட சிவ. தாமோதரன் ஐயா அவர்கள் ,எதிர் நிற்கும் தொடர் 10-ஆண்டுகளுக்குச் ஆற்ற வேண்டியப் பணிகள் குறித்து விவாதித்தோம்.
இனி ஆங்காங்கே முற்றோதல் செய்ய விழைவோர் ஐயா அவர்களைத் தொடர்பு கொள்க !
படங்கள் :~~ 19-12-18 முற்றோதல் நிகழ்வின் போது சிவ தாமோதரன் ஐயா அவர்களுடன் ,சிவ பழனி இராஜம்மாள் அம்மா மற்றும் கோமல் கா சேகர்.
திருச்சிற்றம்பலம்.

அந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

Please rate this

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு No ratings yet.

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு

சென்னை, மேடவாக்கம் அருகில் உள்ள ஊர் பெரும்பாக்கம். அங்கே, சைவத்தின் மேன்மைகளை எடுத்து இயம்பும் பொருட்டும், ஆதியும் அந்தமும் இல்லாத சைவ சமயத்தினை அனைவரும் தெரிந்து, வாழ்வில் கடைப்பிடித்து போற்றி உய்வடையும் பொருட்டும் பெரும்பாக்கம் இந்திரா நகரில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் அவர்களின் திருவடிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இது கார்த்திகை மாதம் 9 ஆம் நாள், நவம்பர் 25 ஞாயிறன்று நடைபெற்றது.

கயிலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமிக்கு அபிடேகம் செய்யப்பட்டது. பின்னர் பன்னிரு திருமுறை ஓதப்பட்டது. பன்னிரு திருமுறை நூல்களை சென்னியில் வைத்து வீதிஉலாவாக அடியார்கள் புடை சூழ, வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.  அடியார்களுக்கு காலை அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. அதிலிருந்து சில காட்சிகள் கீழே.

 

Please rate this

30 ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கரணையில் கார்த்திகை தீபம் ஏற்றல் No ratings yet.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் கார்த்திகை தீப விழா

இறைவன் ஒளியாக இருப்பதை நாம் தீபமாக ஏற்றி உணர்கிறோம். அடிமுடி தேடிய வரலாற்றில், பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான், சோதி உருவாக நெடும் பிளம்பாக எல்லையில்லா வண்ணமாக திரு அண்ணாமலையில் தோன்றினான்.  அந்த நாள் கார்த்திகை முழுமதி நாள். இந்த நிகழ்வை குறிக்கும் வண்ணம் இன்றும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. தீப ஒளியாக இறைவன் எழுந்தருளி பக்தகோடிகள் அனைவருக்கும் அருள் புரிகிறான்.

இதே நேரத்தில் உலகில் எல்லா இடங்களிலும், கோவில்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். அவ்வாறாக, சென்னை பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலிலும் அதன் எதிரில் உள்ள குளத்திலும் தீப வரிசைகள் பல்லாண்டு காலமாக ஏற்றப்பட்டு வந்தது.

இடையில் நுழைந்த மேற்கத்திய பண்பாட்டு தாக்கத்தினால், இந்த பழக்கம் பள்ளிக்கரணையில் நின்று போனது. சென்ற ஆண்டு இதை மீட்டெடுக்க திட்டமிட்டாலும், இந்த ஆண்டு தான் இது நிகழ வேண்டும் என எம்பெருமான் திருவருள் கூட்டியது. பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலின் தொண்டர்கள், பக்தர்கள், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியோர் இணைந்து இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை மாலை 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு விளக்கேற்றினர்.

கோவிலின் மதிற்சுவற்றிலும், குளத்தின் நான்கு திசைகளிலும் உள்ள படிக்கரையிலும், சாலையை ஒட்டியுள்ள குளக்கரையில் முழுவதுமாக விளக்குகள் அடுக்கப்பட்டு ஒளியேற்றப் பட்டன.  மீண்டும் இந்த புண்ணிய பூமி பிறந்துவிட்டது போன்ற ஒரு எல்லையில்லாத இனம் புரியாத இன்ப உணர்வு அத்தனை பக்தர்களுக்கும் ஏற்பட்டது.

இனி வரும் காலங்களில், இந்த தீபமேற்றும் விழா எவ்வித தடையின்றி நடைபெற பேரருளாளன் சிவபிரானின் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.

அதிலிருந்து சில காட்சிகள் இங்கே:

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழ் அன்னையைக் காப்போம் – கோமல் கா சேகர் No ratings yet.

தமிழ் அன்னையைக் காப்போம். கோமல் கா சேகர்:
ஓம்
சிவ சிவ :


தமிழ் அன்னையைக் காப்போம் !


அன்பர்கள் இந்தப் பதிவினை முழுவதும்
படிக்க வேண்டுகிறேன்.
சிவமே படைத்து மதுரையில் சங்கத் தலைவராகவும் அமர்ந்து புலவர் குழாத்துக்குப் போதித்தப் பெருமை உடையது நம் தாய் மொழி !
நுணுகி ஆய்ந்தால் இறைவனாரைத் தவிர எவரும் இந்தச் சீர் மிகு மந்திர ஆற்றல் உடைய மொழியைப் படைத்திருக்க முடியாது என்றக் கருத்தே எஞ்சும் ! தமிழன் என்ற நம் பண்பாட்டையும் , நாகரீக வாழ்வையும் காக்க ஆதாரம் நம் தாய் நமக்கு ஊட்டி வளர்த்த நம் தமிழன்னையே !
இப்படியே விட்டால் 20 ஆண்டுகளில் 50 சதவீதம் வரை பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு மொழியாகி நம் அழிவுக்கு ஏதுவாகி விடும் ! இது சிவத் துரோகமாகிவிடும் !
தமிழையே அறியாத நம் வழிமுறையினருக்கு எப்படி நம் திருமுறைகளையும் சங்க காலம் தொடங்கி நம் பெருமைகளைப் பறை சாற்றும் நூல்களையும் கற்பிக்க முடியும் ? நம் சிவ மொழிக்கும், சைவத்துக்கும் ஏதாவது செய்தேன் என்ற மன நிறைவு அடைய விழைவோர் ,இதனைப் படி எடுத்து ,தம் கருத்துக்ளையும் தனித் தாளில் பதிவு செய்து முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன் !
தனி நபராக நான் மட்டும் முயன்றால் பயன் கிடைக்காது என்பதை கருத்தில் கொள்க ! பங்காற்றுவோர் சிவத்தின் அருளுக்கு ஆளாவர் !

ஓம்

சிவ சிவ :


தமிழக முதல்வர் அவர்களுக்குத் தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என எழுதியத் திறந்த மடல்.


அனுப்புபவர் :

கோமல் கா. சேகர்.

103 , பெருமாள் கோயில் வீதி ,கோமல் அஞ்சல். ~609805 ,

நாகப்பட்டினம் மாவட்டம்./9791232555.

பெறுநர்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , தமிழ்நாடு அரசு ,கோட்டை , சென்னை.

நாள்:18-11-2018

~~~~~~~~~~

ஐயா ,

பொருள் : தமிழ் மொழி – ஆங்கில மொழியால் 35 சதம் வரைக் கலப்படம் ஆகியுள்ள இழி நிலை – உடன் மீட்டெடுக்க வேண்டிய நிலை – கருத்துரு சமர்ப்பித்தல்- தொடர்பாக .

பார்வை : தமிழக முதல்வருக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட 27-01-2010– நாளிட்ட அறிக்கை.

பார்வையில் கண்ட எனது கடிதத்தில் தமிழ் மொழியினை , 35 சத வீதம் வரை ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசும் அளவுக்கு மக்கள் தள்ளப் பட்டு விட்ட அவல நிலையைச் சுட்டி , இந்த அவல நிலையிலிருந்து , தமிழை மீட்டெடுக்க ,அரசுத் தரப்பிலிருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பித்து இருந்தேன்.

ஆனால் எந்த விதப் பயனுள்ள நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப் படவில்லை !

இந்த நிலைக்கு எவர் காரணம் என்பதையெல்லாம் ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவல்ல !

என்ன காரணம் என்பதை மட்டும் ஆய்ந்து , குறைகளைக் களைந்து தனித் தமிழை மீண்டும் நிலை நிறுத்துவதே தமிழர்களாகிய நம் கடமையாகும் .

தமிழை மீட்டெடுத்துத் தூய்மை செய்யும் அதிகாரம் முழுதும் இறைவன் திருவருளால் ,

தங்கள் கைகளில் இன்று குவிந்திருக்கிறது !

அதனால் அரசுக்கு தனி நிதிச் சுமையின்றி பல நற் பயன் விளைவிக்கும் சட்டங்களை இயற்ற எனது இந்த விரிவான அறிக்கையை தங்கள் கவனத்துக்குச் சமர்ப்பிக்கிறேன்.

இயற்ற வேண்டிய சட்டங்கள் !

01) தமிழ்நாடு தொலைக் காட்சி தமிழ் பயன் பாட்டுச் சட்டம் .

இன்று தொலைக் காட்சிகள் கிட்டத்தட்ட 90 சத வீத மக்களைச் சென்றடைகிறன.

அனைத்து வகை நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களும்,

35 சதம் வரை ஆங்கில மொழியைக் கலந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்கிறார்கள் என்பதை தமிழுலகம் அறியும்.

இதனால் கிராமப் புற மக்கள் வரை ,தாம் பேசுவதில் உள்ளப் பல சொற்கள் ஆங்கிலமா என்று கூட அறியாமல் கலப்பு மொழியில் பேசும் இழி நிலை உருவாகி விட்டது.

இன்று ஆண் பெண் இரு பாலருக்கும் ,

ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசினால்தான் சமூகத்தில் மரியாதை என்ற ஒரு தவறான எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளதும் இதன் விளைவே ஆகும்.

ஆகவே தனித் தமிழைப் பயன் படுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏதுவாக உரிய சட்டத்தினை உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும்.

இதனால் மக்கள் தொலைக் காட்சியைப் பார்க்க மாட்டோம் என்று நிறுத்தி விடப் போவதில்லை !

எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

செய்தி ஒலியை எழுத்து வடிவில் ,தொடராகக் கீழே எழுதும் போது நிறைய எழுத்துப் பிழைகளும் ,

இலக்கணப் பிழைகளும் மலிந்துள்ளன.

செய்திகளைப் படிப்போரும் ஒருமை ,பன்மை முதலான இலக்கணப் பிழைகளைகளையும் செய்கிறார்கள்.

இதனைத் தவிர்க்க , தமிழை முதன்மைப் பாடமாகப் பயின்றோரையே ,செய்தித் தயாரிப்பாளராகவும் ,படிப்போராகவும் ஒவ்வொரு தொலைக் காட்சியிலும் நியமனம் செய்ய வகை செய்ய வேண்டும். தனித் தமிழில் இயக்கப் படும் மக்கள் தொலைக் காட்சியைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

02) தமிழ்நாடு திரைப் படத்துறை தமிழ் பயன் பாட்டுச் சட்டம் ‌.

கிட்டத்தட்ட 1970 வரை

தமிழ்த் திரைப் படங்கள் தூயத் தமிழ் சொற் பதங்களைப் பயன் படுத்தியே தயாரிக்கப் பட்டன.

இதனால் தமிழ் நாட்டில் ஆங்காங்கே வழங்கி வந்த கொச்சைத் தமிழ் பேச்சு வழக்கம் பெருமளவு நீங்கி ,பேச்சு வழக்கில் தமிழகம் முழுதும் சம நிலை ஏற்பட்டது. இது தூயத் தமிழுக்கு ஏற்றம் தந்து பேருதவியாகவும் அமைந்தது !

இன்று பெருமளவு ஆங்கிலக் கலப்பும் ,கொச்சைத் தமிழ் உரையாடல்களுமே திரைப் படத்தில் துறையினரால் வலிந்துப் புகுத்தப்பட்டு ,இம் முறையானது பயன்பாட்டுக்கு வந்து ,தமிழ் சீரழிக்கப் பட்டு வருகிறது.

ஆகவே இந்த இழி நிலையை அறவே போக்க உரிய சட்டம் இயற்றப் பட வேண்டும்

முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு ,திரு . எம்‌ ஜி.ஆர் , செல்வி. ஜெயலலிதா ,மற்றும்சிவாஜி , ஜெமினி ,எஸ் எஸ் இராஜேந்திரன் ,

திருமதி கண்ணாம்பாள்

திருமதி விஜயகுமாரி , திருமதி பத்மினி,சாவித்திரி

போன்றோர் பேசியத் தூயத் தமிழ் வசனங்கள் இன்றும் மக்களால் விரும்பப் படுகின்றன என்பதையும் அறிவீர்கள் !

தூய தமிழை மட்டும் பயன்படுத்தி திரைப் படங்கள் எடுத்தால் ,திரைப் படமே பார்க்க மாட்டேன் என எவரும் தவிர்க்கவும் போவதில்லை!

ஆகவே தக்கவாறு ஆய்வு செய்து தூய்மையான தமிழ் உரையாடல்களைப் பயன் படுத்தியே ,திரைப் படங்கள் எடுக்க ஏதுவாகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

03) நாளிதழ் ,வார ,மாத இதழ்கள் தமிழ் பயன்பாட்டுச் சட்டம்.

இன்று

நாளிதழ்களிலும் , வார ,மாத இதழ்களிலும் ,

விளம்பரங்களிலும் , மிகவும் அதிக அளவு ஆங்கில மொழிக் கலப்பு இருப்பதையும் ,

இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதையும் ,கருத்தில் கொண்டு,தூய தமிழில் அவை வெளியிடப் பட வகை செய்திட உரிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

06) தமிழ் மொழிப் பட்ட வகுப்புப் படித்து , இன்று ஆயிரக் கணக்கானவர்கள் , அரசு மற்றும் தனியார் பணிகளின்றி உள்ளனர்.

தமிழக அரசுப் பணிகளான இள நிலை உதவியாளர் , உதவியாளர் பணியிடங்களுக்கு இவர்கள் தேர்வு செய்யப் பட ஏதுவாக உடனடியாக 50 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்க வேண்டும் !

எவ்விதத் தகுதியும் நோக்காமல் ,இப் பதவிகள் இவர்கள் எய்தியுள்ளத் தகுதிக்குக் குறைவான தகுதித் தேவை உடையனவாக இருப்பதால் முதுமை அடிப்படையில் உடன் நியமன ஆணைகள் வழங்க வேண்டும்.

07) பல அச்சகங்களில் அச்சிடப்படும் சிறு அறிவிப்புகள் , விளம்பரங்கள்

,பத்திரிகைகளில் எண்ணற்றப் பிழைகள் மலிந்துள்ளன !

அரசுத் துறை ,தனியார் துறை சார்ந்த வெளியீடுகளிலும் பிழைகள் மலிந்துள்ளன ! தனியார் வர்த்தக நிறுவன விளம்பரப் பலகைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன.

வட்ட அளவில் தமிழாசிரியர் குழுமம் அமைத்து உரிய கட்டணம் பெற்று பிழை நீக்கித்தான் வெளியீடுகள் செய்யப் பட வேண்டும் என்று கட்டுப் படுத்தலாம் !

இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ஊதியம் வழங்கலாம்.

அரசாணை , அறிவிப்பு இதர வெளியீடுகளில் பிழைகள் தவிர்க்க வட்டாட்சியர் ,

கோட்டாட்சியர் முதலான அலுவலகங்களுக்கு ஒவ்வொரு தமிழ்ப் புலவரை நியமனம் செய்யலாம் .

08) இன்று தனித் தமிழ் இளங்கலை ,முது கலைப் பாடத்திட்டங்கள் முழுமையான தமிழ் வல்லுனாராக்கும் வகையில் இல்லை !

வேலை வாய்ப்பின்மையைக் கருதி ,அதிக மதிப்பெண்கள் பெறும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் ,வேறு உயர் கல்விப் பட்டங்களைப் பெற முனைவதால் ,

குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களே தமிழ் இளங்கலை முதுகலை வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள் !

வேலை வாய்ப்பின்மையே முதன்மைக் காரணம்.

1100 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் தமிழ் படிக்க முன் வருவதில்லை .

மேல் நிலைக் கல்வி முடிந்த உடனேயே பேராசிரியர் ,மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ,உயர் நிலைப் பள்ளிப் பணிகளுக்கு

மதிப்பெண் அடிப்படையில் , இவர்கள் படித்து வெளி வரும்போது ஏற்பட உள்ள பணியிடங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்து, ஒருங்கிணைந்த எட்டாண்டு தமிழ்க் கல்வி பாடத் திட்டம் அமைத்து ,முழுப்

புலவராக்கி முனைவர் பட்டத்துடன் வெளிவரும்படி பயிற்றுவிக்க , முயற்சி மேற்கொண்டால் , மீண்டும்

நுண்மாண் நுழைபுலம் மிக்கப் புலவர்கள் தமிழகத்துக்குச் சொத்தாகக்

கிடைப்பார்கள்.

வேலை உறுதி இருந்தால் 95 சத வீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் ஆற்றல் மிக்க மாணவர்கள் விரும்பிக் தமிழ் படிக்க முன் வருவர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குழு அமைத்து இந்த இனம் ஆய்வு செய்யப் பட வேண்டும்.

09) இன்றைய நிலையில் இரண்டு தலைமுறை மாணவர்கள் , தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவோ ,

படிக்கவோ ,தனித்

தமிழில் பேசவோ இயலா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் !

முற்றிலும் முதல் வகுப்பிலிருந்து 12- ஆம் வகுப்பு வரையாது , கட்டாயத் தமிழ் வழி பயின்று முறையே இந்தச் சீர்கேட்டினை அகற்ற வல்லதாகும்.

இன்று ஆங்கில வழிப் பயிற்றுப் பள்ளிகளை மக்கள் நாடும் ஒரே காரணம் ,மேல் நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் போது தம் பிள்ளைகள் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் பேசவும் ,எழுதவும் வல்லவனாக வேண்டும் என்பது ஒன்றே அன்றி வேறு காரணம் எதுவும் இல்லை.

உயர் நிலைத் தொழிற் கல்வி பயின்ற மாணவர்களில் தங்கு தடையின்றி ஆங்கிலத்தைப் பேசும் மாணவர்களே பணிகளுக்கு விரும்பித் தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப் படுவதே , இதன் அடிப்படை .

பள்ளி இறுதி வகுப்பு நிறைவு செய்யும் 12 ஆண்டு காலத்துக்குள் மாணவர்களை ஒரு மொழியில் நன்கு பேசவும் ,எழுதவும் தயார் செய்ய முடியாது என்பது ஏற்புடையதன்று !

ஆங்கிலப் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துப் பேச்சுப் பயிற்சிக்கு தேவையான அளவு கால ஒதுக்கீடு செய்து பயிற்சி கொடுத்தால் இந்தக் குறைபாடு தீர்ந்துவிடும் !

மக்கள் தனியார் பள்ளிகளை நாடும் தேவையும் குறையும் .

இந்த கருத்துருவை ஆழ்ந்து ஆய்வு செய்யின் தமிழும் ஏற்றம் பெறும் ‌; ஆங்கிலத் தேவையும் மக்களுக்கு நிறைவேறும் !

அரசன் இறைவனால் நியமிக்கப் படுகிறான் ; முன்னைத் தவமின்றி ஒருவர் உயர் பதவியை எய்த முடியாது!

வரலாற்றிலேயே இல்லா அளவுக்கு ,இற்றை நாளில் நம் உயிரினும் மேலானத் தாய் மொழி கீழ்படுத்தப் பட்டுள்ளது.

இப்போதே முயன்றாலும் , இந்தச் சீர்குலைவில் இருந்து மீண்டும் தமிழ் தன் இயல்பு நிலையை அடைய முப்பது ஆண்டுகளாவது ஆகும்.

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இறைவனாரால் குவித்து வைக்கப் பட்டுள்ளது.

இந

்தத் திட்டங்களைச் செயல் படுத்துவதால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

மாறாக மக்களுக்குப் பெரும் பயன்களே விளையும் .

இறைவனாரால் சங்கத் தலைமை தாங்கி வளர்த்தெடுக்கப் பட்டது நம் தமிழ் மொழி !

இதனை மீட்டெடுக்கும் செயல் திட்டங்களைத் தாங்கள் தக்க ஆணைகளிட்டுச் செயலாக்கத்துக்குக் கொண்டு வந்தால் ,2000 ஆண்டு கால தமிழக வரலாற்றில் தங்கள் பெயர் பொன்

எழுத்துக்களால் பொறிக்கப் பெறும்.

“தமிழ்த் தாயை மீட்டெடுத்தத் தலைவன்” என்ற அழியாப் புகழுக்கு ஆளாவீர்கள்.

தங்கள் ஆட்சியும் புகழுக்குரியதாகும்‌ .

ஆகவே தமிழ் மற்றும் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஒரு வரலாற்றில் போற்றத்தக்க நல்ல முடிவை எடுத்து செயலாக்கம் செய்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள ,

( கோமல் கா சேகர்/ 18.11. 2018)

இணைப்பு:

தமிழக அரசுக்கு அனுப்பிய எனது 27-01-2010 நாளிட்டக் கடித நகல் :

நகல்கள் : —

01)மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்.

02) மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர்./03)பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

04)கல்வித் துறைச் செயலர் ,சென்னை. 05)இயக்குநர் ,தமிழ் வளர்ச்சித்துறை சென்னை,

06) துணை வேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தஞ்சாவூர்

07) தமிழ்த் துறைத் தலைவர்கள் ,

அனைத்துப் பல் கலைக் கழகங்கள்.

Please rate this

திருமுறை அறிவோம் திருமுறைகளின் பெருமை துண்டறிக்கை 4.71/5 (7)

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

கோவிலுக்கு வருபவர்களுக்கும், வீடு வீடாக சென்று திருமுறையின் பெருமைகளை துண்டறிக்கையாக கொடுப்பதற்கும் ஒரு பக்க அறிக்கை இங்கே உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, பத்தோ, ஐம்பதோ, நூறோ, ஆயிரமோ, லட்சமோ, உங்கள் வசதிக்கேற்ப அச்சிட்டு அனைவருக்கும் கொடுக்கலாம். திருச்சிற்றம்பலம்.

திருமுறை அறிவோம் – ஒரு பக்க துண்டறிக்கை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/open?id=1IsGc106rkSFMYekel1trMGpshA5jzU7r

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

        கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.

       பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில: பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. பாலை நிலம் நெய்தல் ஆனது. தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. ஆண் பனை பெண் பனையாயிற்று. எலும்பு பெண்ணாகியது. விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. நரி குதிரையாகியது. முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. பிறவி ஊமை பேசியது. சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

       பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.

       பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம். திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

சைவ சமய சாத்திர நூல்கள்

Please rate this

நெஞ்சுவிடுதூது – சிவசித்ரா, இசைஞானியார் திருக்கூட்டம் No ratings yet.

நெஞ்சுவிடுதூது – சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம்

நெஞ்சுவிடுதூது – பாகம் 1

நெஞ்சுவிடுதூது – பாகம் 2

நெஞ்சுவிடுதூது – பாகம் 3

நெஞ்சுவிடுதூது – பாகம் 4

நெஞ்சுவிடுதூது – பாகம் 5

நெஞ்சுவிடுதூது – பாகம் 6

நெஞ்சுவிடுதூது – பாகம் 7

 

உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம் 5/5 (1)

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்

ௐௐௐௐௐௐௐௐௐ
சிவ சிவ !
********************
முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் !
**************
பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா !
~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் ?

முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார்
களே !
~ ஆம் ! ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டியது நம் கடமை !
~ விளக்கம் செய்யுங்கள் ஐயா !
~ முப்புரி நூல் அந்தணர் , சத்திரியர் , வைசியர் ,சூத்திரர் என்ற நான்கு குலத்தவருக்குமே உரியது ! அது எல்லோருக்கும் தனி உரிமை !
~ சூத்திரர் என்பது இழிவான குலமா ஐயா ?
~ இவ்வளவு கற்றும் உனக்கு ஏன் இந்த ஐயப்பாடு ?
~ இல்லை , என ஓரளவு அறிவேன் ! ஐயா !
ஆயினும் தெளிய உணர்வதற்கும் , பிறர் அறிந்து தெளிந்து உணர்வதற்கும் , உணர்த்துங்கள் ஐயா !
~ இப் பெரும் பிரிவுகள் ,அவரவர் செய் தொழிலால் அமைந்தவை அல்லால் , சாதி குல ஏற்ற தாழ்வால் அல்ல !
~ விளக்கம் வேண்டும் ஐயா !
~ சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் எவர் உழைப்பால் உண்டு உடுத்து ,உறைந்து சுகித்து வாழ்கிறார்கள் ?
~ உணர்ந்தேன் ஐயா !
பிற குலத்தவர்கள் தான் தம் உடல் உழைப்பாலும் , அரிய செயல்களாலும் அவர்களைத் தாங்குகிறார்கள் !
~சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப் பட்டக் கடமைகள் என்ன ?
~ அகத் தூய்மை புறத் தூய்மைகளுடன் வாழ்ந்து ,வேத ,
ஆகமங்களை ஐயம் திரிபு அற ,அவர்கள் ஆச்சாரியார்களிடம் கற்று , சமய ,விசேட , நிர்வாண தீட்சைகள் ஏற்று ,நித்திய அக்னி வளர்த்து , சுவார்த்த பூசை எனப் படும் தனக்கு உரிய பூசைகள் இயற்றி , பின் ஆச்சாரிய அபிடேகம் செய்யப் பட்ட பிறகே , சிவாலயத்தில் கருவறையில் புகுந்து ,இறைவனை பூசை செய்யத் தகுதி உடையோராவர் !
~ சிவ சிவ !
~ அது மட்டுமல்ல ! ஒரு கன்னியை திருமணம் செய்த பிறகே பூசை செய்ய தகுதி பெறுவர் !
உடல் ஊனங்களும் ,தொடர் நோய் உடையோரும் , நல் ஒழுக்கங்கள் இல்லாதோரும் பூசிக்கத் தகுதி உடையோரல்ல !
~ திருமணம் இதர சுப ,அசுப காரியங்களும் இவர்கள் செய்யலாமா ?
~அவை அந்தணர்களுக்கு
*உள்ளேயே , சில உட்பிரிவினர்களுக்கே உரியவை !
~ சிவாச்சாரியார்கள் குலம் ,இறைவனாரின் ஐந்து முகங்களில் தோன்றிய முனிவர்கள் வழி வந்த மரபினர் என்பது சிவாகம முடிவு !
சிவத்தை மட்டுமே இறைவனாகக் கொண்ட கொள்கையால் அந்தணரினும் மேம்பட்டப் பெருமைகள் உடையோர் !
~ அவர்கள் இல்லற வருவாய்க்கு அரசு , தனியார் பணிகளுக்குச் செல்கிறார்களே ! ஐயா ?
~வகுக்கப் பட்ட நியதிகளை மீறுதல் ,சிவாச்சாரியார் என்ற குலப் பெருமைக்கு உகந்ததல்ல !
உடன் தகுதி இழப்பு ஏற்பட்டு விடும் !
~ போதும் ஐயா !*
அந்தணர்களின் குலப் பெருமைகளை அறிய அவா ஐயா !
அந்தணர்கள் வேதங்களில் வகுக்கப்பட்ட அறநெறிகளை வழுவாது கடைபிடித்துஏனைய குலத்தவருக்கெல்லாம் உதாரணமாக ,ஒரு தவ வாழ்க்கையை வாழக் கடமைப் பட்டோர் !
இவர்களுக்கு வகுக்கப் பட்ட வாழ்வியல் கடமைகள் என்ன ?
இறைவனார் அருளிச் செய்த நான்கு வேதங்களையும் ,ஐயம் திரிபு அறக் கற்க வேண்டும் !
அன்றாடம் முத்தீ வளர்த்து , சிவ பூசை இயற்றக் கடவர் !
~ வேதத்தின் ஞான பாத்த்தை ஆராய்ந்து வழிவழியாக வரும் வம்சத்தாருக்கு கற்பிக்கக் கடமை உடையோர் !
அவர்களில் சிலர் ஆச்சாரியர்களாக அவ் வினத்தவர்களுக்கு உரிய சுப , அசுப கடமைகளையும் , கரும காண்ட விதிப்படி ஆற்றுதற்கு உரியோர் ஆவர் !
ஞான பாதத்தை உணர்த்த ,அக் குலத்தவரில் தக்க ஆச்சாரியார்கள் இல்லா நிலை ஏற்படும் போது , பிற மூன்று குலத்தில் தோன்றிய வேத விற்பன்னர்களிடம் பயில அனுமதி உண்டு !

~ உதாரணம் வேண்டும் ஐயா ?
~ வேத வியாசர் யார் ?
~ பராசர முனிவர் வழி , சத்தியவதி என்ற
மீனவ குலப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பது வரலாறு !
~ மகா பாரதத்தை அருளியவர் யார் ?
~ வியாச மா முனிவர்! பராசர முனிவருக்கும் , சத்திய வதிக்கும் பிறந்தவர் !
இராமாயணத்தை யாத்த வான்மீகி முனிவர் யார் ?
~ சூத்திர குலத்தவர் என்பர் !
~18 புராணங்களையும் அருளிய சூத முனிவர் யார் ?
வியாச முனிவரின் சீடர் ! அவர் எக் குலத்தவர் ?
பிராமணருக்கும் , பிராமணல்லாருக்கும் பிறந்தவர் என்பதாலேயே , சூத முனிவர் எனப் படுவார் !
~ அவர் எவருக்கு 18 புராணங்களையும் போதித்தார் ?
~ நௌமி சாரண்ய பிராமண குலத்தவர் உள்ளிட்ட , முனிவர்கள் அவரை எதிர் கொண்டு ,வணங்கி வரவேற்று ,உபசரித்து ,உயர்ந்த ஆசனத்தில் இருத்தி ,தாங்கள் கீழே அமர்ந்து 18 புராணங்களையும் விரும்பி மீண்டும் மீண்டும் கேட்க ,அவர் , தன் ஆச்சாரியார் வியாசர் , தனக்கு உணர்த்தியவாறு எடுத்து உரைத்தது வரலாறு !
இப்படியாகப் பல வரலாறுகள் உள்ளன ! விரிப்பின் பெருகும் !
~ இறைவனார் சாதி குலப் ஏற்ற இரக்க சிந்தனைகளை , திருமுறை சாத்திரங்களிலும் , திருமுறை , சாத்திர குரு சீடர் உறவு முறையிலும் வைத்து , எல்லா இனத்தவரும் சம நிலையினரே என உணர்த்தியதை உய்த்து உணர்க !
~ பிராமணர்கள் வேறு தொழில் செய்யக் கூடாதா ? ஐயா !
செய்யக் கூடாது !
அவ்வாறு பிற குலத்தவருக்கு வகுக்கப்பட்டத் தொழில்களைச் செய்யின் , நெறிகள் கெடும் ; உலகிற்கே கேடு சூழும் !
இன்றைய நிலை முற்றிலும் மாற்றம் அடைந்திருக்கிறதே ?ஐயா !
அதனால்தான் பஞ்ச பூதங்கள் தம் செயல்களில் வழுவுவதால் வாழ்வியல் கேடுகள் சூழ்ந்து விட்டன !*இதற்கு யாரைக் குறை கூறுவது ஐயா ?
அரசு ,சமுதாயம் இரண்டுமே
குற்றவாளிகள் !
என்ன செய்தால் தீரும் ?
~ எல்லையைத் தாண்டி விட்டது !
இருப்பினும் ஓரளவு முன்னோர் வகுத்த நெறிக்குத் திரும்ப முயலலாம் !
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் !
~ சொல்லுங்கள் ஐயா !
~வேதாகம , தேவாரப் பாட சாலைகள் ஆங்காங்கே தொடங்க வேண்டும் !
சிவாச் சாரியார்களையும்*,
அந்தணர்களையும் ,
அனைத்து ஊர்களிலும் வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடி அமர்த்த வேண்டும் !
யோக நிலையில் நின்று ,ஞான காரியங்களை நிறைவேற்ற வேண்டிய அவர்களுக்கு இல்லத் தேவைகளைப் பற்றிய எந்த சிந்தையும் இல்லா அளவுக்கு ,தேவையான செல்வ வளங்களை அளித்துக் கண்ணின் மணிபோல் காக்க வேண்டும் !
பயன் என்ன விளையும் !
வானம் சுரக்கும் !
பஞ்ச பூதங்களுக்கான அதி தேவர்களும் , வேதங்களும் , திருமுறைகளும்* *சிவாலய பூசைகளும்,
விழாக்களும் போற்றுதல் செய்யப் படுவது கண்டு ,மகிந்து ஆசி வழங்குவர் !
மக்கள் பூமியிலேயே
துன்பமிலா வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைவர் !
~முன் உதாரணம் ஐயா ?
~சிவாலயத் திருப் பணிகளுக்காக கோவை வசந்த குமார் ஐயா அவர்களுடன் பட்டி தொட்டிகளெல்லாம் 12 ~ஆண்டுகள் அலைந்தவன் நான் !
~அதில் நாங்கள் உணர்ந்தது சோழர்கள் ஆலயங்களை எடுத்து ஆகம விதிகளின்படி
முறைமயாகப் பராமரித்ததும், இறைவனாரே நாட்டை அவர்கள் மேலோங்கி நின்று ,சுவர்க்க போகங்களை மக்களுக்கும் ,அருளிய தூய வரலாற்று நிலைதான் !
இது நடக்கக் கூடிய காரியமா ?
~ ஏன் முடியாது ?
அரசு அற நிலையங்களின் நிர்வாகத்தை பொது மக்களிடையே விட்டு , கண்காணிப்பாளர் என்ற முறையில் காத்தால் போதும் !
அரசு நிதி உதவியே ,மேற் கண்டவாறு மீண்ட சுவர்க்கம் காண்பதற்குத் தேவையில்லை ! ஆனால் சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் ,வேத ,உப நிடத ,சிவாகம சாத்திரங்களின் பிழிவே ,சைவத் திருமுறைகளும் , சாத்திரங்களும் என அறிந்தும் , அவற்றைப் போற்றிக் கொண்டாடததும் , இன்றைய நாளில் அருட் செல்வத்தை அவர்கள் இழந்ததற்குக் காரணம் என்பதை உணர்ந்து , இறைவனிடம் மன்னித்தருள வேண்டி இறைஞ்ச வேண்டும் !
அவைகளை உய்த்து உணர்ந்து , கற்று இறைவனாரைப் போற்றி பயன் பெற வேண்டும் !

ஐயா ! அந்தப் பூணூல் ?
~என்ன ஐயம் ? சாதி ஏற்ற தாழ்வுகளை இறைவனாரே உடைத்து எறிந்த வரலாறுகளைச் சொல்லியும் திருந்த மாட்டாயா ?
ஆதாரங்கள் கேட்பார்களே ஐயா ?*
* அதுவும் சரிதான் !*
*சிறுத் தொண்ட நாயனார் என்ன குலத்தவர் ?*
*~மாமாத்திரர் குலத்தவர் !*
*சூத்திர குலத்தவர் ; மருத்துவத் தொழிலினர் என்பது சிவக் கவி மணி ஐயா அவர்கள் முடிவு ;*
*வன்னிய குலத்தவர் என்பது தவத்திரு ஊரன் அடிகளார் முடிவு !*
*~ *இவர் முப்புரி நூல்*
*அணிந்திருந்த *வரலாறு* *சேக்கிழார் பெருமானால் குறிக்கப் பட்டுள்ளது !*
*சிறுத் தொண்டர் வரலாறு / பாடல் எண் 23 ~ ” முந் நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர் ” ~*
*மகிழ்ச்சி ஐயா !*
*ஆனாலும் ஆகமச் சான்று காட்டினால் ,எல்லா குலத்தவருமான அடியார்களும் , மேலும் , தெளிந்து , முப்புரி நூல் அணிவோம் ஐயா !*
*~ சரி ! மறை ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் !*
*சிவாகமக் கருத்துக்களைத் தொகுத்து 727 குறட்பாக்களாக அருளியுள்ளார் !*
*இதனைப் பதிப்பித்து உரையும் கண்டவர் , எல்லையில்லாப் பெருமைக்குரிய , யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் !*
*நூல் பெயர் ~சைவ சமய நெறி ~ உட் தலைப்பு ~ஆசாரியார் இலக்கணம் ~ பாடல் எண் -49 -ல் அந்தணர் ஏழு நூல் தரிக்கக் கடவர் என உணர்த்துகிறார் !*
*பாடல் எண் ~50 =*
*~ மன்னர்க்கு மூன்று அருகமாம் வசியருக்கு இரண்டாம் அன்னியருக்கே ஏகம்* *அருகம் ~ ; அருகம் = பூணூல் /*
*மன்னர்கள் மூன்று , வைசியர்கள் இரண்டும் ஏனைய சூத்திர குலத்தவர் முதலானோர்க்கு ஒரு பூணூலும் தரிக்கக் கடவர் என ஆகம விதியை உணர்த்துகிறார் !*
*சூத்திரர்கள் தரித்தற்குரிய காலம்* *வரையறை செய்தல் .: ~*
*~பாடல் எண் : ~52 -*
*~ தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க / விற் பயிலும் சூத்திரர் இந் நூல் ~*
*தர்ப்பண காலத்திலும்* ,
*அர்ச்சனை செய்யும் போதும் , அக்னி காரிய காலத்திலும் இப் பூணூலைத் தரிக்கக் கடவர் !*
*ஆகவே இவர்கள் பூசை செய்வதற்கும் , வேள்வி செய்வதற்கும் உரியர் என அறிக !*
*சூத்திரர்களுள் எக் காலத்திலும் ,பூணூல் தரிக்க உரிமை உடையோர் : ~~*
*~பாடல் எண் 53 ~*
*~இவருள் நைட்டிகன் எப்போதும் தரிக்க /* *அவனியிலும் ஆசை அறுத்தால் ~*
*சூத்திரருள் நைட்டிக பிரமாச்சாரியானவன்* , *மண்ணாசை* ,
*பொன்னாசை* ,
*பெண்ணாசை , ஆகிய மூவகை* *ஆசைகளையும் நீக்கி*
*இருப்பானாகில் எக் காலத்தும் தரிக்கக் கடவன்*.
*ஆக ,ஆகமங்களில் விதிக்கப் பட்டவாறு நால் வகை வருணத்தாரும் , முப்புரி நூல் தரித்தற்கு உரியர் என சிவ பெருமான் வகுத்த ,ஆகம நூல் அனுமதித்துள்ளது காண்க !*
*53 -ஆம் பாடலில் வகுத்த விதி , ஏனைய குலத்தவருக்கும் விலக்கு அன்று என ஊகித்து அறிக !*
*சிறுத் தொண்டர் இல்லறத்தவர் !*
*அவர் முப்புரி நூலணிந்தவர் !*
*ஆகவே , நம் பெருமான் அணியும் முப்புரி நூல் அடியார்களாகிய நாம் எக் குலத்தவராயினும் அணிய உரிமை உடையோம் எனத் தெளிக !*
*ஐயா !*
*குல ஏற்ற தாழ்வு இல்லை எனத் தெளிந்தோம் !* *ஆயினும் மேலும் சில உதாரணங்கள் வேண்டும் !*
*சாதி குல ,ஏற்ற தாழ்வு பார்க்கின்றவர்களுக்கு , சிவத்தின் முன் நிற்கத் தகுதி இல்லை என உணர்த்துவதே பெரிய புராணம் !*
*01 ~ மானக்கஞ்சாறர் புராணம் பாடல் எண் 01 ~ ” நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால் இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடிப் பதி மாறனார் ! ~'”*
*02 ~ ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாயனார் ~பாடல் – 02 ~*
*~03 ~மூர்த்தி நாயனார் / ” அப் பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மைச் / செப்பத் தகு சீர்க் குடி செய் தவம் செய்ய வந்தார் ” ~பாடல் 08 ~*
*~04 ~ திரு நாவுக் கரசு நாயனார் ~*
” *அனைத்து வித / நலத்தின் கண் வழுவாத நடை முறையில் குடி நாப் பண் / விலக்கில் மனை* *ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் / குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் ~* *பாடல் 15* ~*
*~05 ~ ” மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்துள்ளார் ” ~ சிறுத் தொண்ட நாயனார் புராணம் . பாடல் ~02 ~*
*06 ~ ” தொன்மை நீடிய சூத்திரத் தொல் குலம் / நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் ~ வாயிலார் நாயனார் புராணம் பாடல் 10~*
*இவை போதுமா ?*
*அந்தணராகிய *அப்பூதி *அடிகள் ,வேளாண் *குடியினரான* ,
*நாவுக்கரசர் பெருமான் திருவடியில் வீழ்ந்து* *வணங்கியதும் ,ஆதி சைவர் ஆகிய நம்பி ஆரூரர் , ஏயர் கோனார் திருவடியில் வீழ்ந்து வணங்கியமையும் நினைவில் கொள்க !*
*ஆக , சைவர்களுக்குள் குல ஏற்ற தாழ்ச்சியே இல்லை என்பது பெருமானே வகுத்த விதி என்பதையும் , முப்புரி நூல் எக்குல சைவருக்கும் உரியது எனவும் அறிக !*
*அடியார்கள் , திரு நீறு உருத்திராக்கத்துடன் முப்புரி நூலும் அணியாகக் கொள்க !*
~கோமல் கா சேகர் / 9791232555 /110817

Please rate this

சிவ காப்பு – சமய சின்னங்களை அணிவீர் No ratings yet.

சிவ காப்பு !

ௐௐௐ
சிவ சிவ :
========
சிவக் காப்பு !
============


சைவக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் கூட முழு நீறு அணிவதில்லை என்பது வியப்பளிக்கக் கூடியதாக உள்ளது .!


எழுத்து வடிவிலோ ,உரையாகச் சொன்னாலோ ,அணிந்து நற் பயன் கொள்ளார் என்பதாலேயே , உலகோருக்கு அது தோன்றாத் துணையாக நின்று காக்கும் சிவக் காப்பு என்பதை உணர்த்தும் முனைப்புடனும் , கருணையுடனும் , நம் ஞானாசிரியர் திருஞான சம்பந்தர் ஆலவாயான் திரு நீற்றைப் பாண்டியன் மீது தடவி ,அவர் வெப்பு நோயைத் தீர்த்ததும் , புறச் சமயத்தாரை வெற்றி கொண்டதும் அவர் நிகழ்திக் காட்டிய வரலாறு !


வேயுறு தோளி பங்கன் என எடுத்துப் படைத்த பத்தாவது பாடலில் ,அத் திருப் பதிகக் கட்டமைப்புக்கு மாறாகப் ,பத்தாவது பாடலில் தொடர்பின்றி ,(திருப் பதிகத்தை ஊன்றிக் கவனிக்கவும் )
“” புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே ” எனப் பின் நடக்கப் போகும் வரலாற்று நிகழ்வை , முக்காலம் உணர்ந்தவர் என்ற நிலையில் பதிவு செய்திருப்பதை ஊன்றி கவனித்தால் இந்த உண்மை விளங்கும். 


திரு மறைக்காட்டில் அருளிய இந்த மெய்த் திரு வாக்கு , பின் மதுரையில் வரலாற்று நிகழ்வானதை அன்பர்கள் சிந்திக்க வேண்டும் .
~ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் தேற்றித் தென்னன் உடலுற்ற தீப் பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே ” என பாண்டியனின் வெப்பு நோயை உலகோர் காண , நிறைவு செய்கிறார் . 


தென்னன் = பாண்டியன் ; தேற்றி = தெளிவித்து / பாண்டியனைத் தெளிவித்தது மட்டுமல்லாது உலகோரையும் தெளிவித்து என்பது பொருள் !
இதைவிட ஒரு ஞானாசிரியர் என்னதான் செய்ய இயலும் ?
முதலில் தன் குடும்பத்தின் நலனை நாடின் பெற்றோர்கள் அணிய வேண்டும் !


குழந்தைப் பருவம் தொடங்கி , பிள்ளைகளைப் பழக்கி வளர்த்தெடுக்க வேண்டும் !


கலவியுடன் ஆன்மீக உணர்வையும் தேச பக்தியையும் , ஊட்டி வளர்த்தால் தான் ,நல்ல மகனாக , நல்லொழுக்கம் உள்ளவனாக வளர்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நற் பயன் விளைவித்துத் தானும் துன்பமிலா வாழ்வு வாழ்வான் என்பதைச் சிந்தித்து செயல்பட வேண்டியது பெற்றோர்களது கடமை !


மிருக உடலில் புகப் பெய்த உயிரை உலகியல் கல்வி மட்டும் கற்ற மிருகமாக மட்டும் வளர்த்தெடுத்தல் தகுமா ?
சிந்தித்துத் தெளிந்துணர்வீர் !


அக மாற்றம் முதலில் பெற்றோருக்கு வேண்டும் !


~கோமல் கா சேகர் /9791232555/070618

Please rate this

வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் 5/5 (1)

வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல்

– ௐௐௐௐௐ-
– சிவ சிவ :
========
‘” வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் ” –
===== ===== =====
மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் – 03 )
அவதாரம் செய்தார் என்றக் குறிப்பு : ~
01 ) திருஞானசம்பந்தர் 02 )திரு நாவுக்கரசர்
03 ) வன் தொண்டர்
04) விறன் மிண்டர்
05)மானக்கஞ்சாறர்
06 )ஏயர் கோன் கலிக்காமர்.
07)கலிய நாயனார்.
+ 01)பரவையார். 02 ) சங்கிலியார் 03 )சீராளத் தேவர்.
×××× ×××× ××××
ஆரூரர் அறிமுகம்.
===== =====
காட்சி ~01 =
இடம் : ~கயிலை வரை .
உபமன்னிய முனிவர் தன் சீடர்களுடன் வீற்றிருக்கிறார் !
யார் இந்த உப மன்னிய முனிவர் ?
×××××××××
~பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் / மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் / ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் / பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே ~எனத் திருப் பல்லாண்டில்(09) சேந்தனாரால் குறிப்பிடப்பட்டவர்.
==============
திருமலைச் சிறப்பு :~
÷÷÷÷÷÷÷÷÷÷
– திருச் சிற்றம்பலம்
××××××××××
~ பொன்னின் வெண் திரு நீறு புனைந்தெனப் / பன்னு நீள் பனி மால் வரைப் பாலது / தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் / மன்னி வாழ் கயிலைத் திரு மாமலை ~ (01)
~ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் / நண்ணும் மூன்றுலகும் நான் மறைகளும் / எண்ணில் மா தவம் செய்ய வந்தெய்திய / புண்ணியம் திரண்டுள்ளது போல்வது – ( 02 )
~ நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி / இலகு தண் தளிராக எழுந்ததோர் / உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் / மலரும் வெண்மலர் போல்வது அம் மால் வரை ~ ( 03 )
×××××××××
அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து / இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் / தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் / உன்னருஞ் சீர் உபமன்னிய முனி ~ (13- )
இவர் பெருமைகள் :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
யாதவன் துவரைக்கு இறை ஆகிய /மாதவன் முடிமேல் அடி வைத்தவன் / பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு / ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் ~(14 )
+++++++++++
அத்தர் தந்த அருட்பால் கடல் உண்டு /சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் / பத்தராய முனிவர் பல் ஆயிரர் / சுத்த யோகிகள் சூழ இருந்துழி ~ (15)
×××××××××××
~ அங்கண் ஓரொலி ஆயிர ஞாயிறு /பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் / துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம் / ” இங்கிது என் கொல் அதிசயம் ?” ,என்றலும் .~ (16)
===========
அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் / சிந்தியா உணர்ந்து அம்முனி ” தென் திசை /வந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன் / எந்தையார் அருளால் அணைவான் ” என ~ (17 ) ×××××××××
~ கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை / மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் / செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி / ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் ~ (18 )
~~~~~~~~~~~~~
“”சம்புவின் அடித் தாமரைப் போதலால் / எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் ? “எனத் /
“”தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் / நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் “” ~ (19 )
×××××××××××
~என்று கூற இறைஞ்சி இயம்புவார் : / ” வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் / நன்று கேட்க விரும்பும் நசையினோம் / இன்று எமக்கு உரை செய்தருள் ” ,என்றலும் – ( 20 )
~ உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான் / ” வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய / வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் / அள்ளும் நீறும் எடுத்து அணைவானுளன் “- (21)
××××××××××××
– அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் / முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு / இன்னவாம் என நாள் மலர் கொய்திடத் / துன்னினான் நந்தனவனச் சூழலில் ~(22)
~அங்கு முன்னரே ஆளுடை நாயகி / கொங்கு சேர் குழற்கா மலர் கொய்திடத் / திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார் / பொங்குகின்ற கவினுடைப் பூவைமார் “‘ – (23)
~ ” அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் / கந்த மாலைக் கமலினி என்பவர் /கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி / வந்து வானவர் ஈசர் அருள் என ~ ” (24 )
~ ” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் / தீதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் / போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக் / காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் ~ (25 ) ~
( அவரவர் மலர் பறித்துக் கொண்டு தம் இடம் ஏகினர் )
~ ” ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே/” மாதர் மேல் மனம் வைத்தனை ; தென் புவி/ மீது தோன்றி அம் மெல்லியலாருடன் / காதல் இன்பம் கலந்து அணைவாய் ” என – (27 )
~ ” கைகள் அஞ்சலிக் கூப்பிக் கலங்கினான் / ” செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் / மையல் மானுடமாய் மயங்கும் வழி / ஐயனே தடுத்து ஆண்டு அருள் செய் ” என ”
( இறைவனார் அதற்கு இசைய ,முனிவர் வன் தொண்டர் அம் மகளிருடன் புவியில் பிறந்து இயற்றிய செயல்களை அவர்களுக்கு விரித்துரைத்தார் )
யோகியர் : ~ ” பந்த மானுடப் பாற்படு தென் திசை / இந்த வான் திசை எட்டினும் மேற்பட / வந்த புண்ணியம் யாது ? ”
முனிவர் : ~01 ) திரு ஆரூர் ( இதயக் கமலம் )
02 ) காஞ்சி ( அம்பிகை இறைவனைத் தவத்தால் எய்தியது )
03 ) ஐயாறு ( நந்தி தேவர் தவம் செய்து அருள் எய்தியது )
04 ) தோணிபுரம்
××××××××××××××
~ தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை / ஈசர் தோணிபுரத்துடன் எங்ஙணும் / பூசனைக்குப் பொருந்தும் இடம் பல / பேசில் அத் திசை ஒவ்வா பிற திசை ~ ( 36 )
~மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம் / புற்றிடத்து எம் புராணர் அருளினால் / சொற்ற மெய்த் திருத் தொண்டத் தொகை எனப்/ பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால் ~ (38)
~ அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை / நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி /புந்தி ஆரப் புகன்ற வகையினால் / வந்தவாறு வழாமல் இயம்புவாம் ~
~ திரு சிற்றம்பலம்.
ௐௐௐௐௐ
~ தடுத்தாட் கொண்ட புராணம் ~
=== ==== ===
~ திரு முனைப் பாடி நாடு ~
~ வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ~
~ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்/ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். ( 03)
சடையனார் / இசை ஞானியார் : ” ~ “~தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி ” ~ ( 04 )
***************
~ நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு மகன்மை கொண்டார் ~(05)
**********
வைதிக முறையிலும் வைகி , அருமறை முந்நூல் சாத்தி , அளவில் தொல் கலைகள் ஆய்ந்து ,சீர் மணப் பருவம் சார்ந்தார் . (06)
=============
புத்தூர் சடங்கவி மறையோன் மகளை , வேண்டி பெரியோர்களை அனுப்புதல் / அவர் மகிழ்ந்து உடன் படல் /
மண ஓலை இடல் / பெண் வீட்டில் திரு மணம் / அலங்கரித்தல் / திரு மண முதல் நாள் சுந்தரருக்குக் காப்பு நாண் இடல் ~ / மணக் கோலம் செய்வித்தல் ~
××××× ××××× ×××××
~ மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க / நன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் / தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திரு நீறு சாத்திப் / பொன்னணி மணியார் யோகப் புரவி மேல் கொண்டு போந்தார் ~ (19 ) ××××××××××××××
~ ” அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் / வருங் குல மறையோர் புத்தூர் மணம் வந்தப் புத்தூராமால் “” ~(23)
+++++++++++
( இறைவனார் வேதியர் வடிவில் வருதல் )
~ மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ / அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ / மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ / இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ~ (32 )
×××××××
( சபை முன் நின்று ) ~
இறை : ~ ” இந்த மொழி கேண்மின் யாவர்களும் ” (33)
ஆரூரரும் மறையோர்களும் : ~
“” நன்று உமது நல் வரவு நங்கள் தவம் “” ~~
“” நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது “‘- (34)
~ இறை : ~ ( ஆரூரரை நோக்கி ) ~ ” என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் / முன்னுடையதோர் பெரு வழக்கினை முடித்தே / நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி “” ( 35 )
ஆரூரர் : ~ ” “உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் / மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன் ; / முற்ற இது சொல்லுக “” (36)
இறை : ~ ” ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் / நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது “”
சபையோர் ஏனையோர் : ~ ” இவன் என நினைந்தான் கொல் ” ( என்று சென்றார் ,வெகுண்டார் ,சிரித்தார் ; )
ஆரூரர் : ~ ” நன்றால் மறையோன் மொழி ‘” எனச் சிரித்தார் .
~ நக்கான் முகம் நோக்கி நடுங்கி ,நுடங்கி யார்க்கும்/ மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற் சென்று : ~
இறை : ~ “அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள் ஓலை ஈதால் / இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட ” ( 39)
ஆரூரர் :~ ( சிரிப்பு நீங்கி ) ‘” ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் / பேச இன்று உன்னைக் கேட்டோம் ; பித்தனோ மறையோன் “” – ( 40)
இறை : ~ “” பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று / எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் / அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று / வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும் “” ~ (41 )
ஆரூரர் : ~ ” ஓலை காட்டுக ”
இறை : ~ ” நீ ஓலை காணற் பாலையோ ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை ‘”
( நாவல் ஆரூரர் விரைந்து சென்று ஓலையைப் பறிக்க முயலுதல் ; பந்தரின் கீழ் இறைவன் ஓடவும் பின் தொடர்ந்து ஓடி ஓலையைப் பற்றிப் பறித்தார் ஆரூரர் ;
“ஆரூரர் : ~ ” ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை ‘” , ( என்று கூறி ஓலையைக் கிழித்திட்டார் ; இறை முறையிட்டார் .(45 )
இறை : ~
“” முறையோ “” ?
அவையோர் : ~ ” இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திரு மறை முனிவரே ! நீர் எங்குளீர் செப்பும் ?
====+++ ====
இறை :~ இங்குளேன் ; இருப்பும் சேயதன்று ; இந்த வெண்ணெய் நல்லூர் ; அது நிற்க ; அறத்தாறின்றி / வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி / நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை “” ~ (47)
ஆரூரர் : ~ ” பழைய மன்றாடி போலும் ! ” , “” வெண்ணெய் நல்லூராயேல் உன் / பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் ” – (48)-
இறை : ~ “” வெண்ணெய் நல்லூரிலே நீ / போதினும் நன்று ; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் / ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமையாதல் சாதிப்பன் “”
( என்று தண்டு முன் தாங்கிச் சென்றான் )- (49)
( காந்தம் ஈர்ப்பது போல ஈர்க்கப்பட ஆரூரரும் , அவர் பின் விரைந்து சென்றார் ; ஏனையோரும் “இது என்னாம் ” ,என வியந்து வெண்ணை நல்லூர் அவையை அடைந்தனர் )
×××××× ××××××
திரு வெண்ணெய் நல்லூர் பேரவை ÷
+++++++++++++
இறை : ~ “” சொல்லும் நாவலூர் ஆரூரன்தான் / காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி / மூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு “” (51)
அவையோர் : ~ “மறையவர் அடிமையாதல் / இந்த மாநிலத்தில் இல்லை ; என் சொன்னாய் ஐயர் ? ”
இறை : ~ ” வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு ; இவன் கிழித்த ஓலை / தந்தை தன் தந்தை நேர்ந்தது “” -(52)
அவையோர் : ~ ( ஆரூரரிடம் )
” இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று / விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ ? , தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் ; / அசைவில் ஆரூரர் எண்ணம் என் ? -(53)
ஆரூரர் : ~ ” 🎂அனைத்து நூல் உணர்ந்தீர் ! ஆதி சைவன் என்று அறிவீர் !என்னைத் / தனக்கு வேறடிமை என்று இவ் வந்தணன் சாதித்தானேல் /மனத்தினால்
உணர்தற்கு எட்டா மாயை !என் சொல்லுகேன் யான் ? எனக்கு இது தெளிய ஒண்ணாது “”- (54)
அவையோர் : ~( இறையை நோக்கி )
“” இவ் வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற / வெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும் “‘- (55)
& “” ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் / காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் “”
இறை : ~ “” முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை ; மூல ஓலை / மாட்சியில் காட்ட வைத்தேன் “” – (56)
அவையோர் : ~ “வல்லையேல் காட்டு இங்கு “”
இறை :~ ” மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீராகில்↑+±+ காட்டுவேன். “” அவையோர் : ~ “”நாங்கள் தீங்குற ஒட்டோம். “” (57)
( ஆரூரர் தொழுது ஓலையை தொழுது வாங்கி சபையோர் முன் படிக்கிறார் )-(58)
~ ” அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை / பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் / வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை / இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து ” ~ (59)
( அவையோர் சாட்சியமிட்டோர் எழுத்தை நோக்கி அவை சரி என ஏற்றனர் )
அவையோர் : ~ (ஆரூரரிடம் ) “ஐயா மற்று உங்கள் பேரனார் தம் / தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்து அறிமின் ”
இறை : ~ “இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் ; / தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்துண்டாகில் / இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி / வந்தது மொழிமின் “” ~ (61)
( அவையோர் காப்பிலிருந்து ஒரு ஓலை அழைத்துடன் ஒப்பு நோக்கி )
அவையோர் : ~ (ஆரூரர் முன் ) ” இரணடும் ஒத்திருந்தது என்னே ! இனிச் செயல் இல்லை ” -(62)
‘” நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் !/ பான்மையின் ஏவல் செய்தல் கடன் ”
ஆரூரர் : ~ “” விதி முறை இதுவேயாகில் / யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ ? ” -(63)
அவையோர் : ~ ( இறையை நோக்கி )
“‘ அருமுனி ! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் / பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்வூரில் / வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக “(64)
இறை : ~ “என்னை ஒருவரும் அறியீராகில் போதும் ”
( பெருமறையவர் குழாமும் , நம்பியும் பின்னே செல்லத் / திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். (66)
ஆரூரர் : ~ ” இலங்கு நூல் மார்பர் எங்கள் / நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ ” -(66)
(அம்பிகையுடன் விடைமேல் தோன்றுதல் )
இறைவனார் : ~
” முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் / பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது / துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து / நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் ” (67)
~ ஆரூரர் : ~ “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது ” ~ (68)
இறைவனார் : ~
~ ” மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் / பெற்றனை ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க / அற்சனை பாட்டே ஆகும் :; ஆதலால் மண் மேல் நம்மைச் / சொற்றமிழ் பாடுக ” ~(70)
ஆரூரர் : ~ ‘” வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த / ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட / கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலை நாயேன் / யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் ? ” ~(72)
இறைவனார் : ~ ” முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே / என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் “” ~ (73)
~ கொத்தாரா மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் / மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலூர் பெருமான் / ” பித்தா பிறைசூடி ” ,எனப் பெரிதாந் திருப் பதிகம் / இத் தாரணி முதலாம் உலகெல்லாம் உய்ய எடுத்தார் ~ (74)
***** *****
07-01-01 / இந்தளம் ~
~ பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை / வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் / அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~
***** ***** *****
~ நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை /
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் / வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் / ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~ (02) ××××× ×××××
~ ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் / வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் / தேனார் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் / ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~(07)
××××× ×××××
இறைவனார் : ~ ” இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு “”-(76)
==========
~ அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் / செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் / உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் / பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் ~ (77)
××××× ××××× ×××××
பிற அகச் சான்றுகள் .
÷÷÷÷÷÷÷÷÷÷
~ கற்பகத்தினைக் கனக மால் வரையைக் காம கோபனைக் கண்ணுதலானைச் / சொற்பதப் பொருள் இருளறுத்தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் / அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட/ நற் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே ~
07- 68-06 / தக்கேசி ~
~ ××××× ×××××
~ அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங் காட்டி / நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு /ஒன்றினான் தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெடச் சீறும் / குன்ற வில்லியை மெல்லியயலுடனே கோலக்காவினில் கண்டு கொண்டேனே .
– 07-62-05/ தக்கேசி
×××××× ××××××
~ “வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட “” – 07-17-08
++++-++++
“” ஆவணம் செய்து ஆளுங் கொண்ட வரை ” – 07-05-10 ( ஓணகாந்தன் தளி )
=============
“” நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார் “” -07-19-02( திரு நின்றியூர் )
÷÷÷÷÷ ÷÷÷÷÷
“” ஒட்டி ஆட் கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை “”
~07-59-10( திருவாரூர் )
~~~~~ ~~~~~ ~~~~
” மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து எனை ஆண்டு கொண்டானே “”
~ 07- 70-02( திருவா வடுதுறை )
×××××××××××××××
திரு நாவலூர் திருத்தலம் ஏகுதல் / வழி படல் ~ அகச் சான்றுகள் உடைய பாடல்கள் ! /நட்டராகம் .
===== ===== =====
~ கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய / மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் / ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட / நாவலனார்க்கிடமாவது நந்திரு நாவலூரே “”-(07-17-01)
==========
~ தன்மையினால் அடியேனைத் தாம் ஆட் கொண்ட நாட் சபை முன் /வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் / புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னை போகம் புணர்த்த / நன்மையினார்க் கிடமாவது நந் திரு நாவலூரே ~07- 17-02
××××××××××
” வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்டு / நஞ்சம் கொண்டார்க்கிட மாவது
நந் திரு நாவலூரே ” ~ 07-17-04 –
============
“” ஓர் ஆவணத்தால் / எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட /நம் பிரானார்க்கிடமாவது நந் திரு நாவலூரே “”
~07-17-03 ~××××××× ×××××× ×××××
திருத் துறையூர் ஏகி தவ நெறி வேண்டுதல் ~
~ சிவன் உறையும் திருத் துறையூர் சென்றணைந்து ” தீ வினையால் / அவ நெறியில் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் / தவ நெறி தந்தருள் ” ,என்று தம்பிரான் முன் நின்று / பவ நெறிக்கு விலக்காகும் திருப் பதிகம் பாடினார் . ~(79)
××××× ××××××
07-13 / தக்க ராகம் ~
~ மலையார் அருவித் திரள் மா மணியுந்திக் / குலையாரக் கொணர்தெற்றி யோர் பெண்ணை வடபால் / கலையார் அல்குல் கன்னியராடும் துறையூர் / தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவ நெறியே ~01
+++++
~ செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன் / கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல் / பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் / மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே ~ 11-
————————–

~ புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளப் பெற்றார் ~(80)
தில்லையில் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு எண்ணினார் ~
பெண்ணை நதியைக் கடந்து ,மாலையில் திருவதிகைப் புறத் தணைந்தார் .(82)-
~ உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி / விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து /அடையுமதற் கஞ்சுவன் ” ,எனறந் நகரில் புகுதாதே /மடை வளர் தம் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார் (83)
அங்கு அடியவர்களுடன், வீரட்டானத்து இறைவர் தாள் விருப்புடன் நினைந்து , இரவில் பள்ளி கொண்டார் ~ (84)
*************
~ அது கண்டு வீரட்டத்து
அமர்ந்தருளும் அங்கணரும் /முது வடிவின் மறையவராய் முன்பொருவர் அறியாமே/ பொது மடத்தின் உட் புகுந்து பூந்தாரான் திரு முடிமேல் / பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் ~ (85)
ஆரூரர் :~ ((உணர்ந்து கண்டு ) ” அரு மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை ”
இறை : ~ “” திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண் ”
~ஆரூரர் அப்பால் சென்று துயிலல் ~(86)
அங்கும் அவர் திரு முடிமேல் மீண்டும் இறைவனார் தாள் நீட்டினார் ~
ஆரூரர் : ~ ( வெகுண்டு ) ” இங்கு என்னைப் பல காலும் மிதித்தனை நீ யார் ? ”
இறை : ~ “அறிந்திலையோ ”
(- என மறைந்தார் )(87)
~ ×××××× ××××××
~ ” செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் ” எனத் தெளிந்து / தம்மானை அறியாத சாதியார் உளரே ” ,என்று / அம்மானைத் திரு வதிகை வீரட்டானத்து அமர்ந்த / கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் .(88)
×××××××××××
07/38 ~ கொல்லிக் கௌவாணம் ~
~ தம்மானை யறியாத சாதியா ருளரே சடை மேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் / கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத் தெம்மான்றன் அடி கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் / எம்மானை எறி கெடில வட வீரட்டானத் துறைவானை இறை போதும் இகழ்வன் போல் யானே (01)
**************
தென் திசையில் கங்கை எனும் திருக் கெடில நதியில் திளைத்தாடி திரு மாணிக்குழி அடைந்தார்.
திருமாணிக்குழி இறைவனாரை வழிபட்டு , திருத்தினை நகரை அடைந்து பணிந்தவருக்கு வரந் தருவானைப் போற்றி வணங்கி வண் தமிழ் பாடினார் !
×××××× ×××××××
~ பிணி கொளாக்கை பிறப் பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணக்காள் / துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று / அணி கொள் வெஞ்சிலையாலுகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்துந் / திணியும் வார் பொழில் திருத் தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே -( 02)
××××× ××××× ×××××
*** தில்லை மருங்கணைதல் *****
“‘ தன் மருங்கு தொழுவார் தம் மும்மை / மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம் பதியின் எல்லை வணங்கி . – (92)
=====
“” பன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங் கமழ் தாரான். ” -(94)
“” மிகு சேண் செல ஓங்கும் தட மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் (95)
“” தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி . ( 97)
×××××××
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ / முன் பிறைஞ்சினர் யாவர் என்றறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து /”
~ திரு வீதி புகுந்தார்.( 98) ~
+++++++++++
~எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் / மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தனவாகிப் / புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பில் விளங்கும் /
அண்ணல் ஆடு திருவம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி (102)
÷÷÷÷÷÷÷÷÷÷
~ பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு / வருமுறை வலங் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் / அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த / திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் . (104)
=====+++ =====
~ வையகம் பொலிய மறைச் சிலம்பார்ப்ப மன்றுளே மாலயன் தேட / ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த / கைகளோ திளைத்தக் கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் / செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு . (105) ~
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
~ ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள , அளப்பரும் கரணங்கள் நான்கும் / சிந்தையே ஆகக் , குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக , / இந்து வாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் / வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் .- (106)
××××××××××××
~ ” தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடங் கும்பிடப் பெற்று / மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் “” ,என்று / கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் / பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் . -( 107 )
+++++++++++++
இறைவனார் :~ ( வான் வாக்கு ) ” தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி / மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் “”- (108)
÷÷÷÷÷÷÷÷
இறைவனாரிடம் விடை கொண்டு , அம்பலத்தை வலங் கொண்டு வணங்கி ,எழு நிலை கோபுரம் கடந்தார்.
நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி , அப் பதியின் தென் திசை வாயிலை வணங்கிப் பின் கொள்ளிடத் திரு நதியைக் கடந்தார் . ( 110 )
– திருச் சிற்றம்பலம் –
-ௐௐௐௐௐௐௐௐ-
கோமல் / 220618

Please rate this

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள் No ratings yet.

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள்

ௐௐௐௐௐ
சிவ சிவ :


~ குற்றம் ஒன்றும் செய்ததில்ல.! ~


சுந்தர மூர்த்தி சுவாமிகள்கள் திருக் கயிலை மீண்ட நாள் / சிறப்புப் பதிவு
======+======
~ விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் / குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் / எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் / மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே ~
~ 07-95-02 / திருவாரூர் / செந்துருத்தி ~
××××× ×××××
திருத் தரும புர ஆதீன உரையும் குறிப்புகளும். ~~
உரை : ~ அடிகளே ,நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் ,யான் ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கி விட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழியொன்றில்லை ; பன் முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத் தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !
~குறிப்புரை ; நம்பி ஆரூரர் செய்தது குற்றமாகாமை ,
“” பிழையுளன பொறுத்திடுவீர் என்றடியேன் பிழைத்தக்கால் ” (07-89-01)என்ற விடத்து விளக்கப்பட்டது .
அதனானே இங்கு ,””குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என்று அருளினார்.
” நீரே பழிப் பட்டீர் ” என்றதன் காரணமும் ,
அவ்விடத்தே , ” பழியதனைப் பாராதே ” என்றதன் விளக்கத்துட் காண்க .

ஐயா !
சுந்தர மூர்த்தி சுவாமிகள் எவ்வளவோ பாடி இருக்கும் போது , மேலும் இன்று வெள்ளானை மீது சிவலோகும் ஏகும் போது ,இந்தப் பாடலை சிறப்பாக எடுத்தக் காரணம் அறிய விரும்புகிறேன் !
இப் பாடல் எழுந்த சூழல் அறிவாயா ?
வலக் கண் அருளும் படி ஆரூர் பெருமானிடம் மனம் நொந்து வேண்டி பாடி அருளியது ஐயா !
ஆம் !
இந்தப் பாடலில் , தான் “” குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என இறைவன் முன் உறுதியாகச் சாற்றுவதும் , அவ்வாறு இருக்க , “எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் “” என வினவியதன் மூலம்
நமக்கு சிவ ஞானத்தின் எல்லையே உணர்த்தப் படுகிறது என அறிக !
புரிய வில்லை ஐயா ! பொழிப்புரை , குறிப்புரைகளிலும் விளக்கம் இல்லையே ;-நீங்கள் என்ன இல்லாததை விளக்கப் போகிறீர்கள் ?
இதை உரையளவில் புரிய வைப்பதைவிட , உரையாடல் மூலம் விளக்கலாம் என எண்ணுகிறேன்.
திருவருள் ; விளக்குங்கள் ஐயா !
****** ******
காட்சி :
சுவாமிகள் இறைவனாருக்கு , வலக் கண்ணின்றி அவர் படும் மனக் குமுறலையும் , அல்லல்களையும் ,
ஆரூரருக்கு உணர்த்துமாறு அகத் துறை உணர்வுடன் பறவைகளை நோக்கி விளித்து உருகிப் பாடி , பூங்கோயிலை அணைகிறார் ; ( ஒற்றைக் கண் இல்லாது எப்படி பரவையார் முன் தோன்ற முடியும் ;? அவர் வினவினால் என்ன விளக்கம் அளிக்க இயலும் ?) பூங்கோயிலார் முன் வீழ்ந்து , எழுந்து , கை தொழுது முன் நின்றே விம்முகிறார் ; “”ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளித் தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண் தாரும்””எனத் தாழ்கிறார் .
தியாகேசர் : ~ சுந்தரா ! வா ! என்ன பறவைகள் வழியெல்லாம் தூது விடுகிறாய் ! ஒரே துன்பப் புலம்பலாக இருக்கிறதே ?
ஆரூரன் : ~ “மீளா அடிமை ”
தியா : ~ ” ஆம் ! மீளா அடிமைதான் ; அதற்கென்ன ?
ஆரூரர் : ~ “”உமக்கே ஆளாய் “”
தியா : ~ ஆமாம் ! எனக்கு மட்டுமேதான் ஆள் !
ஆரூரர் : ~ ” பிறரை வேண்டாதே ” !
தியா : ~ ” எனக்கு ஆட்பட்ட பின்னும் , மதியிலாதவன் தான் பிறரை வேண்டுவான் ! ; அவன் கனவிலும் என்னை உணர முடியாது ” உனக்கென்ன ?
ஆரூரர் : ~ ” தெரியவில்லையா என் முக வாட்டம் ; உணர வில்லையா என் நெஞ்சகத்தே எழும் கனலை ?
உனக்கு அடிமைப் பட்ட நான் இது வரை எடுத்துரைத்த அல்லல்கள் எல்லாம் தங்கள் செவியில் ஏறவில்லையா ?
தியா : ~ ” என்ன எதிர்பார்கிறாய் ”
ஆரூரர் : ~ ” இவ்வளவு எடுத்துச் சொல்லியும் ,ஏதும் அருளாது இருப்பின் நீரே நன்றாக வாழ்வீராக !
தியா :~ ” சரி ! உன் விருப்பம் !
மேலே சொல் !
ஆரூரர் : ~ ( என்னை ) ” விற்றுக் கொள்வீர் ; ஒற்றி அல்லேன் !
தியா : ~ ஆம் ! நீ என் மீளா அடிமைதான் !
ஆரூரர் : ~
“” விரும்பி ஆட்பட்டேன்””
தியா : ~ ” நிறுத்து !
“”நான் உன்னை ஈர்த்து ஆட் கொண்டதால் அல்லவா விரும்பினாய் “”
ஆரூரர் : ~ ” ஆமாம் சாமி ! தானே வந்து என் உளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தீர்கள் ; உண்மைதான் ! அருள் பெற்ற நான் ,வேறு சிந்தை இன்றி உங்களையே விரும்பி ஆட் பட்டேன் ! ”
தியா : ~ ” சரி மேலே சொல் ”
ஆரூரர் : ~
” குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; கொத்தை ஆக்கினீர்”
தியா : ~ என்ன ! குற்றம் ஒன்றும் செய்ததில்லையா ?
ஆரூரர் : ~ ” “ஆமாம் ; செய்ததில்லை ! – எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் ; நீரே பழி பட்டீர் ! “”
தியா : ~;” நன்றாக இருக்கிறதே ! இதுதான் திருவாரூர் நியாயமா ? ”
” சங்கிலியைப் பிரிய மாட்டேன் என மகிழ மரத்திலிருந்த என் முன் , அவளுடன் வந்து சத்தியம் செய்தவன் நீ !
சூளுறவு செய்ததை மீறி ,அவளை வஞ்சித்து , ஏமாற்றி , திரு வொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் நீ “”
ஆரூரர் : ~ ‘”அடியாருக்கு சத்தியம் செய்து , நம்பும் படி வாக்குக் கொடுத்து மீறினால் கண் இரண்டும் போகும் என்ற ஞானத்தை உலகுக்கு உணர்த்த நான் தான் உங்களுக்குக் கிடைத்தேனா ?
தியா : ~ ;” “பிழையுளனப் பொறுத்திடுவீர் என்று அடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராமல் படலம் என் கண் மறைப்பித்தாய் “” என்று உன் பிழையை வெண்பாக்கத்தில் என் முன்பு ஒப்புக் கொண்டாய் அல்லவா ? ”
ஆரூரர் : ~”” ஆம் ஐயனே ! ”
தியா : ~ ” உன் கண்கள் போனதற்கு என் அடியாளிடம் ,என் முன் சூளுறவு செய்து ஏமாற்றிய தண்டனையிலிருந்து தப்ப முடியாத பாவமே காரணமாக இருக்க ,நான்தான் உன் கண்களை மறைத்ததாகப் பழி சுமத்துகிறாயே இது தகுமா ? “”
ஆரூரர் : ” அடியேன் பிழை செய்தேன் என ஒப்புக் கொண்டது தவறுதான் தலைவ !”‘
தியா ;~ ” மீண்டும் பொய்யா ? ”
ஆரூரர் : ~ “” அது என் செய்கை என நான் நினைத்தது தான் பொய் ஈசனே !”
தியா : ~ “” எங்கே விளக்கு ! உண்மையாயின் உறுதிப் படுத்து ! ”
ஆரூரர் : ~ “கயிலையில் நான் தங்கள் அடிமையாகத்தானே இருந்தேன் ? ”
தியா : ~ ” மலர் மாலை சாத்துவதும் , அள்ளும் நீறு ஏந்துவதும் உன் தொழில் ! ”
ஆரூரர் : ~ ” திருமண போக ஆசை உள்ள பெண்ணோ ஆணோ கயிலை புக முடியுமா ? சிவமே ! “”
தியா : ~ “கயிலையின் எல்லையைக் கூட எட்ட முடியாது “‘
ஆரூரர் : ~ ” ஆக எனக்கும் , கமலினி ,
அநிந்திதைக்கும் அந்த ஆசை இல்லைதானே ! ”
தியா : ~ ” ஆமாம் ; இல்லை தான் ! ‘”
ஆரூரர் : ~ ” ” “”நந்தவனச் சூழலில் நாங்கள் ,
பார்வையால் கவரப் பட்டு மயங்கியது எங்கள் செயல் அல்லதானே ! ”
தியா : ~ ” ஆம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் : ~ ” “உங்களுக்கு எண்ணில் கோடி உயிர்கள் மீது அளவற்ற இரக்கம் !
அவர்கள் எளிதில் தங்களைப் பற்றி உய்ய ,திருத் தொண்டத் தொகையைக் கொடுக்க வேண்டும் ;
அதற்கு ஒரு திரு விளையாடல் “‘
தியா : ~ ” என்ன சொல்ல வருகிறாய் ? விரிவாகச் சொல் ! ”
ஆரூரர் : ~ “”கயிலையில் அந்தப் பெண்கள் மீது எனக்கு மையல் ஏற்படுத்தியவர் நீரே !
பூமியில் பிறக்கச் செய்ததும் நீரே !
ஆரூரில் பரவையாரையும் என்னையும் எதிரெதிரே சந்திக்கச் செய்ததும் நீரே ”
‘”ஒருவரை ஒருவர் விரும்பச் செய்ததும் நீரே ! அடியார்கள் மூலம் மணம் செய்வித்ததும் நீரே !
திருவொற்றியூர் வரச் செய்ததும் நீரே !
அஞ்செழுத்து மனம் தொடுக்க , அலர் தொடுத்த அடியார்கள் தொண்டினை பார்த்து நான் அக மகிழும் போது ,நிலவு போல் சங்கிலியை தோன்றி மறையச் செய்ததும் நீரே !
உன்னிடம் இருந்து எனது நீங்கா சிந்தையின் இடை புகுந்து ,மலர் தொடுத்து என் உள்ளத் தொடை அவிழ்த்த அவளை , அது இடையீடின்றி உன்னை நினைப்பதற்கு இடையூறு எனினும் , அதையும் மீறி என் மனத்தை அலைத்து உன்னிடம் அவளை வேண்டி அருளுமாறு வினவும் அடங்கா வேட்கையை ஏற்படுத்தியதும் நீரே !””
தியா : ~ “”மேலும் தொடர்க !””
ஆரூரர் : ~ ” அது போதாதென்று சங்கிலியை விட்டுப் பிரியேன் என சூளுறவு செய்ய வைத்தத் திரு
விளையாடலுக்கு ஒப்புண்டா ? ”
” சங்கிலியோடு உன் முன் சத்தியம் செய்ய வரும் போது ஆலயத்தில் இருக்காதீர் ; போய் மகிழ்க் கீழ் இரும் என்று சொன்ன என்னை , அப்படிச் செய்வதாக ஒப்புக் கொண்டு ,
விளையாட்டு பொம்மை போல ஆட்டிச் சுழலவிட்டு , செயவதறியாமல் என்னை விழிக்க வைத்து மகிழ்க் கீழேயே சத்தியம் செய்ய வைத்தீரே !””
தியா : ~” ஆம் ! இதெல்லாம் எமக்கு சாதாரண விளையாட்டுகள் ; உயிர்களுக்கு விளையும் பயன் கருதி !”‘
ஆரூரர் : ~ “அத்தோடு விடாது அவளுடன் அடியார்கள் மூலம் திருமணம் செய்து வைத்ததும் நீரே ! ”
“ஆரூர் வசந்த விழாவை நினைப்பித்து என்னை ஏங்க வைத்ததும் நீரே ! ” “உன் மீது எனக்குள்ள ஆரா வேட்கையை மேன் மேலும் பெருக்கி மிக வைத்ததும் நீரே ! ”
” சத்தியத்தை மீறி ஒற்றியூர் எல்லையைத் தாண்ட வைத்ததும் நீரே ! ”
“இரு கண் பார்வையையும் மறைப்பித்ததும் நீரே ? “”
தியா : ~ “” ஆமாம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் ; ~ “அதற்கெனானவா ?””அவன் அன்றி அணுவும் அசையாது ” என்பது ஆன்றோர் வாக்கு !
“உயிருக்கென்று எச் செயலும் இல்லை ; எல்லாம் ஈசன் செயல் என்பதே ஞானம் ! ‘
தியா : ~ ” எனக்கே ஞான போதனையா ? ”
ஆரூரர் : ~ ” “மன்னியுங்கள் ஐயா !
ஆனால் அது தானே உயர் சிவ ஞானம் ”
நீ ஆட்டி வைத்தாய் ; நான் ஆடினேன் !
” நான் செய்த புண்ணியமோ பாவமோ எல்லாம் உன் செயலே ! ”
“என்னைக்
கருவியாக வைத்து உன் திருவுளப் படி செயலை எல்லாம் செய்து விட்டு , எதற்காக ஐயா என் கண்ணை மறைப்பித்தீர் ? “”
“” உலகியல் மனிதர் அறியாராயினும் ஞானிகள் உம் மீது பழியாக எண்ணாரோ ? “”
தியா : ~ ” “”உண்மைதான் சுந்தரா ! கயிலை தொடங்கி ,இதுவரை உன் இச்சைப்படி நீ செய்த செயல் ஏதுமில்லை ; எல்லாம் என் செயல் தான் ! எல்லா உயிர்களையும் ஆட்டிப் பக்குவப் படுத்தும் என் திரு விளையாடல்களுக்கு நீ என் கருவி ; அவ்வளவே ! ”
“” சங்கிலியை சத்தியத்தை மீறிப் பிரிகிறோமே என அதை உன் செயலாக எண்ணிப் பாவம் பழிகளை உன் மேல் ஏற்றிக் கொண்டாய் ; கண் பார்வை போயிற்று !
“” இப்போது எனதன்றி எவருக்கும் எச்செயலும் இல்லை என்று உயர் சிவ ஞானத்தை உணர்ந்தாய் ; அதனால் நீ குற்றம் ஒன்றும் செய்ததில்லை என ஞானமாக உரைத்தாய் ! குற்றம் அகன்றது ! ”
“இனி வலக் கண் பார்வையையும் அடைவாய் ! ”
” உலோகோரை செயல்களில் ஈடு படுத்தி , பக்குவம் அடையும் வரை இன்ப துன்பங்களில் உழலச் செய்து நானே கடைந்து செம்மைப் படுத்துகிறேன் என்று அறியாமல் , அவனவனும் , தானே எதையும் செய்வதாகக் கருதி புண்ணிய பாவங்களுக்குத் தாமே மூலமாக/ கர்த்தாவாகத் தம்மை எண்ணும் வரை பிறவிக் கடலில் தத்தளிக்கவே வேண்டும் ! “”
××××××××××××××
” ~ இவ்வளவு சிவ ஞான விளக்கங்கள் இந்தப் பாடலில் பொதிந்துள்ளன என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது ஐயா ! ”
” என்னவென்று ? சொல் ! ”
” ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு , தாம் திருமுறைகளைக் கரைத்துக் குடித்துவிட்டோம் என , மேலோட்டமான பொருள் கூட அறியாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போவோரைப் பார்த்து ! “‘
இவ்வளவு நேரம் இந்த ஞான வரலாற்றைக் கேட்டும் ,எல்லாம் இறைவனார் செயல் என அறியாமல் மீண்டும் பிதற்றத் தொடங்கி விட்டாயே ! “”
“””மன்னியுங்கள் ஐயா !
அந்த உயர் ஞானம் கேட்கும் போது புரிகிறது ; ஆனால் மனத்தில் நிலைப் படுத்த முடிய வில்லையே ஐயா ! “‘
உரிய பக்குவம் வரும் வரை ஆட்டி அலைக் கழிக்கப் படுவாய் ! பின் தெளிந்த நிலையில் இந்த உயர் ஞானம் நிலை பெறும் !””
” எல்லாம் அவன் செயல் !”
– திருச் சிற்றம்பலம் –
கோமல் கா சேகர் / 9791232555/200718

Please rate this

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு No ratings yet.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு

ௐௐௐ
சிவ சிவ :


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு


( சுந்தர மூர்த்தி சுவாமிகள் திரு அவதாரம் தொடங்கி ,
இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பட்ட வரலாற்றினை
உள்ளடக்கி , தில்லையை கண்டு களித்து ,வணங்கிப் போந்தது வரை / இரண்டு மணி நேரம் தொடர் விளக்கமளிக்க நான் வைத்துள்ளக் குறிப்பு / அன்பர்கள் பயின்று மகிழ்க / ஆடி சுவாதி 21-07-18 சிறப்பு வெளியீடு / கோமல் கா சேகர் 9791232555 )

========

‘” வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் ” –

===== ===== =====

மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் – 03 )

அவதாரம் செய்தார் என்றக் குறிப்பு : ~

01 ) திருஞானசம்பந்தர் 02 )திரு நாவுக்கரசர்

03 ) வன் தொண்டர்

04) விறன் மிண்டர்

05)மானக்கஞ்சாறர்

06 )ஏயர் கோன் கலிக்காமர்.

07)கலிய நாயனார்.

+ 01)பரவையார். 02 ) சங்கிலியார் 03 )சீராளத் தேவர்.

×××× ×××× ××××

ஆரூரர் அறிமுகம்.

===== =====

காட்சி ~01 =

இடம் : ~கயிலை வரை .

உபமன்னிய முனிவர் தன் சீடர்களுடன் வீற்றிருக்கிறார் !

யார் இந்த உப மன்னிய முனிவர் ?

×××××××××

~பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் / மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் / ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் / பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே ~எனத் திருப் பல்லாண்டில்(09) சேந்தனாரால் குறிப்பிடப்பட்டவர்.

==============

திருமலைச் சிறப்பு :~

÷÷÷÷÷÷÷÷÷÷

– திருச் சிற்றம்பலம்

××××××××××

~ பொன்னின் வெண் திரு நீறு புனைந்தெனப் / பன்னு நீள் பனி மால் வரைப் பாலது / தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் / மன்னி வாழ் கயிலைத் திரு மாமலை ~ (01)

~ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் / நண்ணும் மூன்றுலகும் நான் மறைகளும் / எண்ணில் மா தவம் செய்ய வந்தெய்திய / புண்ணியம் திரண்டுள்ளது போல்வது – ( 02 )

~ நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி / இலகு தண் தளிராக எழுந்ததோர் / உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் / மலரும் வெண்மலர் போல்வது அம் மால் வரை ~ ( 03 )

×××××××××

அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து / இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் / தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் / உன்னருஞ் சீர் உபமன்னிய முனி ~ (13- )

இவர் பெருமைகள் :

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

யாதவன் துவரைக்கு இறை ஆகிய /மாதவன் முடிமேல் அடி வைத்தவன் / பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு / ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் ~(14 )

+++++++++++

அத்தர் தந்த அருட்பால் கடல் உண்டு /சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் / பத்தராய முனிவர் பல் ஆயிரர் / சுத்த யோகிகள் சூழ இருந்துழி ~ (15)

×××××××××××

~ அங்கண் ஓரொலி ஆயிர ஞாயிறு /பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் / துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம் / ” இங்கிது என் கொல் அதிசயம் ?” ,என்றலும் .~ (16)

===========

அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் / சிந்தியா உணர்ந்து அம்முனி ” தென் திசை /வந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன் / எந்தையார் அருளால் அணைவான் ” என ~ (17 ) ×××××××××

~ கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை / மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் / செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி / ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் ~ (18 )

~~~~~~~~~~~~~

“”சம்புவின் அடித் தாமரைப் போதலால் / எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் ? “எனத் /

“”தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் / நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் “” ~ (19 )

×××××××××××

~என்று கூற இறைஞ்சி இயம்புவார் : / ” வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் / நன்று கேட்க விரும்பும் நசையினோம் / இன்று எமக்கு உரை செய்தருள் ” ,என்றலும் – ( 20 )

~ உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான் / ” வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய / வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் / அள்ளும் நீறும் எடுத்து அணைவானுளன் “- (21)

××××××××××××

– அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் / முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு / இன்னவாம் என நாள் மலர் கொய்திடத் / துன்னினான் நந்தனவனச் சூழலில் ~(22)

~அங்கு முன்னரே ஆளுடை நாயகி / கொங்கு சேர் குழற்கா மலர் கொய்திடத் / திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார் / பொங்குகின்ற கவினுடைப் பூவைமார் “‘ – (23)

~ ” அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் / கந்த மாலைக் கமலினி என்பவர் /கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி / வந்து வானவர் ஈசர் அருள் என ~ ” (24 )

~ ” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் / தீதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் / போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக் / காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் ~ (25 ) ~

( அவரவர் மலர் பறித்துக் கொண்டு தம் இடம் ஏகினர் )

~ ” ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே/” மாதர் மேல் மனம் வைத்தனை ; தென் புவி/ மீது தோன்றி அம் மெல்லியலாருடன் / காதல் இன்பம் கலந்து அணைவாய் ” என – (27 )

~ ” கைகள் அஞ்சலிக் கூப்பிக் கலங்கினான் / ” செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் / மையல் மானுடமாய் மயங்கும் வழி / ஐயனே தடுத்து ஆண்டு அருள் செய் ” என ”

( இறைவனார் அதற்கு இசைய ,முனிவர் வன் தொண்டர் அம் மகளிருடன் புவியில் பிறந்து இயற்றிய செயல்களை அவர்களுக்கு விரித்துரைத்தார் )

யோகியர் : ~ ” பந்த மானுடப் பாற்படு தென் திசை / இந்த வான் திசை எட்டினும் மேற்பட / வந்த புண்ணியம் யாது ? ”

முனிவர் : ~01 ) திரு ஆரூர் ( இதயக் கமலம் )

02 ) காஞ்சி ( அம்பிகை இறைவனைத் தவத்தால் எய்தியது )

03 ) ஐயாறு ( நந்தி தேவர் தவம் செய்து அருள் எய்தியது )

04 ) தோணிபுரம்

××××××××××××××

~ தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை / ஈசர் தோணிபுரத்துடன் எங்ஙணும் / பூசனைக்குப் பொருந்தும் இடம் பல / பேசில் அத் திசை ஒவ்வா பிற திசை ~ ( 36 )

~மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம் / புற்றிடத்து எம் புராணர் அருளினால் / சொற்ற மெய்த் திருத் தொண்டத் தொகை எனப்/ பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால் ~ (38)

~ அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை / நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி /புந்தி ஆரப் புகன்ற வகையினால் / வந்தவாறு வழாமல் இயம்புவாம் ~

~ திரு சிற்றம்பலம்.

ௐௐௐௐௐ

~ தடுத்தாட் கொண்ட புராணம் ~

=== ==== ===

~ திரு முனைப் பாடி நாடு ~

~ வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ~

~ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்/ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். ( 03)

சடையனார் / இசை ஞானியார் : ” ~ “~தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி ” ~ ( 04 )

***************

~ நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு மகன்மை கொண்டார் ~(05)

**********

வைதிக முறையிலும் வைகி , அருமறை முந்நூல் சாத்தி , அளவில் தொல் கலைகள் ஆய்ந்து ,சீர் மணப் பருவம் சார்ந்தார் . (06)

=============

புத்தூர் சடங்கவி மறையோன் மகளை , வேண்டி பெரியோர்களை அனுப்புதல் / அவர் மகிழ்ந்து உடன் படல் /

மண ஓலை இடல் / பெண் வீட்டில் திரு மணம் / அலங்கரித்தல் / திரு மண முதல் நாள் சுந்தரருக்குக் காப்பு நாண் இடல் ~ / மணக் கோலம் செய்வித்தல் ~

××××× ××××× ×××××

~ மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க / நன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் / தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திரு நீறு சாத்திப் / பொன்னணி மணியார் யோகப் புரவி மேல் கொண்டு போந்தார் ~ (19 ) ××××××××××××××

~ ” அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் / வருங் குல மறையோர் புத்தூர் மணம் வந்தப் புத்தூராமால் “” ~(23)

+++++++++++

( இறைவனார் வேதியர் வடிவில் வருதல் )

~ மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ / அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ / மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ / இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ~ (32 )

×××××××

( சபை முன் நின்று ) ~

இறை : ~ ” இந்த மொழி கேண்மின் யாவர்களும் ” (33)

ஆரூரரும் மறையோர்களும் : ~

“” நன்று உமது நல் வரவு நங்கள் தவம் “” ~~

“” நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது “‘- (34)

~ இறை : ~ ( ஆரூரரை நோக்கி ) ~ ” என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் / முன்னுடையதோர் பெரு வழக்கினை முடித்தே / நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி “” ( 35 )

ஆரூரர் : ~ ” “உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் / மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன் ; / முற்ற இது சொல்லுக “” (36)

இறை : ~ ” ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் / நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது “”

சபையோர் ஏனையோர் : ~ ” இவன் என நினைந்தான் கொல் ” ( என்று சென்றார் ,வெகுண்டார் ,சிரித்தார் ; )

ஆரூரர் : ~ ” நன்றால் மறையோன் மொழி ‘” எனச் சிரித்தார் .

~ நக்கான் முகம் நோக்கி நடுங்கி ,நுடங்கி யார்க்கும்/ மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற் சென்று : ~

இறை : ~ “அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள் ஓலை ஈதால் / இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட ” ( 39)

ஆரூரர் :~ ( சிரிப்பு நீங்கி ) ‘” ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் / பேச இன்று உன்னைக் கேட்டோம் ; பித்தனோ மறையோன் “” – ( 40)

இறை : ~ “” பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று / எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் / அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று / வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும் “” ~ (41 )

ஆரூரர் : ~ ” ஓலை காட்டுக ”

இறை : ~ ” நீ ஓலை காணற் பாலையோ ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை ‘”

( நாவல் ஆரூரர் விரைந்து சென்று ஓலையைப் பறிக்க முயலுதல் ; பந்தரின் கீழ் இறைவன் ஓடவும் பின் தொடர்ந்து ஓடி ஓலையைப் பற்றிப் பறித்தார் ஆரூரர் ;

“ஆரூரர் : ~ ” ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை ‘” , ( என்று கூறி ஓலையைக் கிழித்திட்டார் ; இறை முறையிட்டார் .(45 )

இறை : ~

“” முறையோ “” ?

அவையோர் : ~ ” இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திரு மறை முனிவரே ! நீர் எங்குளீர் செப்பும் ?

====+++ ====

இறை :~ இங்குளேன் ; இருப்பும் சேயதன்று ; இந்த வெண்ணெய் நல்லூர் ; அது நிற்க ; அறத்தாறின்றி / வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி / நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை “” ~ (47)

ஆரூரர் : ~ ” பழைய மன்றாடி போலும் ! ” , “” வெண்ணெய் நல்லூராயேல் உன் / பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் ” – (48)-

இறை : ~ “” வெண்ணெய் நல்லூரிலே நீ / போதினும் நன்று ; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் / ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமையாதல் சாதிப்பன் “”

( என்று தண்டு முன் தாங்கிச் சென்றான் )- (49)

( காந்தம் ஈர்ப்பது போல ஈர்க்கப்பட ஆரூரரும் , அவர் பின் விரைந்து சென்றார் ; ஏனையோரும் “இது என்னாம் ” ,என வியந்து வெண்ணை நல்லூர் அவையை அடைந்தனர் )

×××××× ××××××

திரு வெண்ணெய் நல்லூர் பேரவை ÷

+++++++++++++

இறை : ~ “” சொல்லும் நாவலூர் ஆரூரன்தான் / காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி / மூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு “” (51)

அவையோர் : ~ “மறையவர் அடிமையாதல் / இந்த மாநிலத்தில் இல்லை ; என் சொன்னாய் ஐயர் ? ”

இறை : ~ ” வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு ; இவன் கிழித்த ஓலை / தந்தை தன் தந்தை நேர்ந்தது “” -(52)

அவையோர் : ~ ( ஆரூரரிடம் )

” இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று / விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ ? , தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் ; / அசைவில் ஆரூரர் எண்ணம் என் ? -(53)

ஆரூரர் : ~ ” 🎂அனைத்து நூல் உணர்ந்தீர் ! ஆதி சைவன் என்று அறிவீர் !என்னைத் / தனக்கு வேறடிமை என்று இவ் வந்தணன் சாதித்தானேல் /மனத்தினால்

உணர்தற்கு எட்டா மாயை !என் சொல்லுகேன் யான் ? எனக்கு இது தெளிய ஒண்ணாது “”- (54)

அவையோர் : ~( இறையை நோக்கி )

“” இவ் வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற / வெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும் “‘- (55)

& “” ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் / காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் “”

இறை : ~ “” முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை ; மூல ஓலை / மாட்சியில் காட்ட வைத்தேன் “” – (56)

அவையோர் : ~ “வல்லையேல் காட்டு இங்கு “”

இறை :~ ” மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீராகில்↑+±+ காட்டுவேன். “” அவையோர் : ~ “”நாங்கள் தீங்குற ஒட்டோம். “” (57)

( ஆரூரர் தொழுது ஓலையை தொழுது வாங்கி சபையோர் முன் படிக்கிறார் )-(58)

~ ” அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை / பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் / வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை / இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து ” ~ (59)

( அவையோர் சாட்சியமிட்டோர் எழுத்தை நோக்கி அவை சரி என ஏற்றனர் )

அவையோர் : ~ (ஆரூரரிடம் ) “ஐயா மற்று உங்கள் பேரனார் தம் / தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்து அறிமின் ”

இறை : ~ “இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் ; / தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்துண்டாகில் / இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி / வந்தது மொழிமின் “” ~ (61)

( அவையோர் காப்பிலிருந்து ஒரு ஓலை அழைத்துடன் ஒப்பு நோக்கி )

அவையோர் : ~ (ஆரூரர் முன் ) ” இரணடும் ஒத்திருந்தது என்னே ! இனிச் செயல் இல்லை ” -(62)

‘” நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் !/ பான்மையின் ஏவல் செய்தல் கடன் ”

ஆரூரர் : ~ “” விதி முறை இதுவேயாகில் / யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ ? ” -(63)

அவையோர் : ~ ( இறையை நோக்கி )

“‘ அருமுனி ! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் / பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்வூரில் / வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக “(64)

இறை : ~ “என்னை ஒருவரும் அறியீராகில் போதும் ”

( பெருமறையவர் குழாமும் , நம்பியும் பின்னே செல்லத் / திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். (66)

ஆரூரர் : ~ ” இலங்கு நூல் மார்பர் எங்கள் / நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ ” -(66)

(அம்பிகையுடன் விடைமேல் தோன்றுதல் )

இறைவனார் : ~

” முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் / பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது / துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து / நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் ” (67)

~ ஆரூரர் : ~ “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது ” ~ (68)

இறைவனார் : ~

~ ” மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் / பெற்றனை ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க / அற்சனை பாட்டே ஆகும் :; ஆதலால் மண் மேல் நம்மைச் / சொற்றமிழ் பாடுக ” ~(70)

ஆரூரர் : ~ ‘” வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த / ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட / கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலை நாயேன் / யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் ? ” ~(72)

இறைவனார் : ~ ” முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே / என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் “” ~ (73)

~ கொத்தாரா மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் / மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலூர் பெருமான் / ” பித்தா பிறைசூடி ” ,எனப் பெரிதாந் திருப் பதிகம் / இத் தாரணி முதலாம் உலகெல்லாம் உய்ய எடுத்தார் ~ (74)

***** *****

07-01-01 / இந்தளம் ~

~ பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை / வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் / அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~

***** ***** *****

~ நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை /

பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் / வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் / ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~ (02) ××××× ×××××

~ ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் / வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் / தேனார் பெண்ணைத் தென்பால்

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் / ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~(07)

××××× ×××××

இறைவனார் : ~ ” இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு “”-(76)

==========

~ அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் / செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் / உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் / பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் ~ (77)

××××× ××××× ×××××

பிற அகச் சான்றுகள் .

÷÷÷÷÷÷÷÷÷÷

~ கற்பகத்தினைக் கனக மால் வரையைக் காம கோபனைக் கண்ணுதலானைச் / சொற்பதப் பொருள் இருளறுத்தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் / அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட/ நற் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே ~

07- 68-06 / தக்கேசி ~

~ ××××× ×××××

~ அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங் காட்டி / நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு /ஒன்றினான் தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெடச் சீறும் / குன்ற வில்லியை மெல்லியயலுடனே கோலக்காவினில் கண்டு கொண்டேனே .

– 07-62-05/ தக்கேசி

×××××× ××××××

~ “வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட “” – 07-17-08

++++-++++

“” ஆவணம் செய்து ஆளுங் கொண்ட வரை ” – 07-05-10 ( ஓணகாந்தன் தளி )

=============

“” நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார் “” -07-19-02( திரு நின்றியூர் )

÷÷÷÷÷ ÷÷÷÷÷

“” ஒட்டி ஆட் கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை “”

~07-59-10( திருவாரூர் )

~~~~~ ~~~~~ ~~~~

” மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து எனை ஆண்டு கொண்டானே “”

~ 07- 70-02( திருவா வடுதுறை )

×××××××××××××××

திரு நாவலூர் திருத்தலம் ஏகுதல் / வழி படல் ~ அகச் சான்றுகள் உடைய பாடல்கள் ! /நட்டராகம் .

===== ===== =====

~ கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய / மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் / ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட / நாவலனார்க்கிடமாவது நந்திரு நாவலூரே “”-(07-17-01)

==========

~ தன்மையினால் அடியேனைத் தாம் ஆட் கொண்ட நாட் சபை முன் /வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் / புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னை போகம் புணர்த்த / நன்மையினார்க் கிடமாவது நந் திரு நாவலூரே ~07- 17-02

××××××××××

” வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்டு / நஞ்சம் கொண்டார்க்கிட மாவது

நந் திரு நாவலூரே ” ~ 07-17-04 –

============

“” ஓர் ஆவணத்தால் / எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட /நம் பிரானார்க்கிடமாவது நந் திரு நாவலூரே “”

~07-17-03 ~××××××× ×××××× ×××××

திருத் துறையூர் ஏகி தவ நெறி வேண்டுதல் ~

~ சிவன் உறையும் திருத் துறையூர் சென்றணைந்து ” தீ வினையால் / அவ நெறியில் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் / தவ நெறி தந்தருள் ” ,என்று தம்பிரான் முன் நின்று / பவ நெறிக்கு விலக்காகும் திருப் பதிகம் பாடினார் . ~(79)

××××× ××××××

07-13 / தக்க ராகம் ~

~ மலையார் அருவித் திரள் மா மணியுந்திக் / குலையாரக் கொணர்தெற்றி யோர் பெண்ணை வடபால் / கலையார் அல்குல் கன்னியராடும் துறையூர் / தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவ நெறியே ~01

+++++

~ செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன் / கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல் / பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் / மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே ~ 11-

————————–

~ புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளப் பெற்றார் ~(80)

தில்லையில் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு எண்ணினார் ~

பெண்ணை நதியைக் கடந்து ,மாலையில் திருவதிகைப் புறத் தணைந்தார் .(82)-

~ உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி / விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து /அடையுமதற் கஞ்சுவன் ” ,எனறந் நகரில் புகுதாதே /மடை வளர் தம் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார் (83)

அங்கு அடியவர்களுடன், வீரட்டானத்து இறைவர் தாள் விருப்புடன் நினைந்து , இரவில் பள்ளி கொண்டார் ~ (84)

*************

~ அது கண்டு வீரட்டத்து

அமர்ந்தருளும் அங்கணரும் /முது வடிவின் மறையவராய் முன்பொருவர் அறியாமே/ பொது மடத்தின் உட் புகுந்து பூந்தாரான் திரு முடிமேல் / பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் ~ (85)

ஆரூரர் :~ ((உணர்ந்து கண்டு ) ” அரு மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை ”

இறை : ~ “” திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண் ”

~ஆரூரர் அப்பால் சென்று துயிலல் ~(86)

அங்கும் அவர் திரு முடிமேல் மீண்டும் இறைவனார் தாள் நீட்டினார் ~

ஆரூரர் : ~ ( வெகுண்டு ) ” இங்கு என்னைப் பல காலும் மிதித்தனை நீ யார் ? ”

இறை : ~ “அறிந்திலையோ ”

(- என மறைந்தார் )(87)

~ ×××××× ××××××

~ ” செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் ” எனத் தெளிந்து / தம்மானை அறியாத சாதியார் உளரே ” ,என்று / அம்மானைத் திரு வதிகை வீரட்டானத்து அமர்ந்த / கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் .(88)

×××××××××××

07/38 ~ கொல்லிக் கௌவாணம் ~

~ தம்மானை யறியாத சாதியா ருளரே சடை மேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் / கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத் தெம்மான்றன் அடி கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் / எம்மானை எறி கெடில வட வீரட்டானத் துறைவானை இறை போதும் இகழ்வன் போல் யானே (01)

**************

தென் திசையில் கங்கை எனும் திருக் கெடில நதியில் திளைத்தாடி திரு மாணிக்குழி அடைந்தார்.

திருமாணிக்குழி இறைவனாரை வழிபட்டு , திருத்தினை நகரை அடைந்து பணிந்தவருக்கு வரந் தருவானைப் போற்றி வணங்கி வண் தமிழ் பாடினார் !

×××××× ×××××××

~ பிணி கொளாக்கை பிறப் பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணக்காள் / துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று / அணி கொள் வெஞ்சிலையாலுகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்துந் / திணியும் வார் பொழில் திருத் தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே -( 02)

××××× ××××× ×××××

*** தில்லை மருங்கணைதல் *****

“‘ தன் மருங்கு தொழுவார் தம் மும்மை / மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம் பதியின் எல்லை வணங்கி . – (92)

=====

“” பன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங் கமழ் தாரான். ” -(94)

“” மிகு சேண் செல ஓங்கும் தட மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் (95)

“” தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி . ( 97)

×××××××

அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ / முன் பிறைஞ்சினர் யாவர் என்றறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து /”

~ திரு வீதி புகுந்தார்.( 98) ~

+++++++++++

~எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் / மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தனவாகிப் / புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பில் விளங்கும் /

அண்ணல் ஆடு திருவம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி (102)

÷÷÷÷÷÷÷÷÷÷

~ பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு / வருமுறை வலங் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் / அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த / திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் . (104)

=====+++ =====

~ வையகம் பொலிய மறைச் சிலம்பார்ப்ப மன்றுளே மாலயன் தேட / ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த / கைகளோ திளைத்தக் கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் / செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு . (105) ~

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

~ ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள , அளப்பரும் கரணங்கள் நான்கும் / சிந்தையே ஆகக் , குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக , / இந்து வாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் / வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் .- (106)

××××××××××××

~ ” தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடங் கும்பிடப் பெற்று / மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் “” ,என்று / கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் / பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் . -( 107 )

+++++++++++++

இறைவனார் :~ ( வான் வாக்கு ) ” தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி / மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் “”- (108)

÷÷÷÷÷÷÷÷

இறைவனாரிடம் விடை கொண்டு , அம்பலத்தை வலங் கொண்டு வணங்கி ,எழு நிலை கோபுரம் கடந்தார்.

நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி , அப் பதியின் தென் திசை வாயிலை வணங்கிப் பின் கொள்ளிடத் திரு நதியைக் கடந்தார் . ( 110 )

– திருச் சிற்றம்பலம் –

-ௐௐௐௐௐௐௐௐ-

கோமல் / 220618

Please rate this

உயிரின் நீள் பயணம் 4/5 (1)

உயிரின் நீள் பயணம்

ௐௐௐ
சிவ சிவ :


உயிரின் நீள் பயணம்


ஒவ்வொரு உயிரையும் , புல் பூண்டு ,விலங்குகள் எனப் பல்வேறு உடல்களில் புகுத்தி ,பல பிறவிகளை அளித்து ,மனிதப் பிறவியை அளிக்கப் பக்குவம் பெற்ற நிலையில் மனிதப் பிறவியை அளிக்கிறார் சிவனார் !


தொடர்ந்து மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தப் பல மனிதப் பிறவிகளையும் அளித்து ,அந்தந்த உயிர்களில் ஒன்றாய் ,உடனாய் ,
வேறாய் நின்று செயலாக்கம் செய்து வருகிறார்.
இந்தப் பிறவிகளில் உயிர்கள் ஈட்டும் நல் வினை தீ வினைகள் அவற்றின் தனித் தனி கணக்குகளில் ஏற்றப் படுகின்றன .
இந்த செயற் பாட்டின் தொடர்ச்சியாக , ஒரு உயிருக்கு மீண்டும் பிறப்பளிக்கும் முன் அது தன்னை நோக்கி எந்த அளவுக்குப் பயணப் பட்டிருக்கிறது என்றக் கணக்கீட்டின் அடிப்படையில் , மேலும் இன்பத் துன்பங்களில் உழலச் செய்து ,தன்னை நோக்கி வரச் செய்யும் கருணையோடு , அதற்கு ஆயுட் காலத்தை நிர்ணயம் செய்து ,அந்த ஆயுட் காலத்துக்குள் அது பண்பட வேண்டிய அளவுக்கு ,அந்த உயிர் ஈட்டியுள்ளப் புண்ணிய பாவங்களுக்கானக் கணக்கிலிருந்து ,
தேவையான அளவு மட்டும் நல் வினை தீ வினைகளை ஏற்றி , அந்த உயிரின் பக்குவ நிலைக்கு ஒத்த வினைகளுடைய இல்லத்தில் பிறக்கச் செய்கிறார். 


இது சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே அருட் சோதியான இறைவன் செய்யும் பின்னல் வேலையாகும்.
அதனாலேயே ஒரு சாதகப் படி ஒரு குடும்பத்தில் உள்ள ஏனையோர் விதிகளோடு தொடர்பு படுத்தி உயிர் வினைகளை ஊட்டி ஆட்டி வைக்கப் படுகிறது !


பல பிறவிகளில் உழலும் உயிர் உலகியல் நிலையாமையை உணர்ந்து ,சிவம் மட்டுமே இறை எனத் தெளிந்து ,அவரை நோக்கி உறுதியாகப் பயணிக்கத் தொடங்கி விட்டால் இப் பிறவியில் அதைப் பக்குவப் படுத்தி ஈர்க்க ஏற்றி அனுப் பட்ட தீ வினைகள் பயன் விளைவிக்காது அகலும்.
இதுவே உயிரின் பயண முறை . 


ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும் .


முழு நீறணிக ; அஞ்செழுத்து ஓதுக ; ஆலய வழிபாடுகள் செய்க ; அடியார் திருக் கூடடங்களோடு இணைக ! ஆலயம் தொடர்புடையத் திருத் தொண்டுகள் செய்க ; பூசைகள் இயற்றுக !
ஞான நூல்களை ஓதுக ; கற்க ; விளக்கம் செய்யும் பெரியோர் சொல் கேட்க ; சிந்திக்க; தெளிக !
திருவுருவத்தை மனத்தில் கொணர்க ; திருவடியை மனத்தால் சிக்கென உரிமையுடன் பற்றுக !
சிவனார் கை கொடுத்துத் தூக்கி அணைத்துக் கொள்வார் !
சைவத் திருமுறைகள் ,சாத்திர புராணங்களைக் கற்ற அளவு நான் தெளிந்த நிலை இதுவே !


ஒருவரே இறை !
அவர் சிவ பரம் பொருளே !


-திருச் சிற்றம்பலம் –
~கோமல் கா சேகர் /9791232555/020818

Please rate this

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணி No ratings yet.

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணிக்கு உதவுங்கள்

சிவாயநம…. ஆருரா தியாகேசா…

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்

எந்தை காக்கனேஸ்வரர் திருவருளால் இன்று அம்பாள் சன்னதியின் மேல் தளம் மூடப்பட்டது…. உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி….
மேலும் பெருமானின் ஆலய விமானப்பணிகளும் மஹா மண்டப திருப்பணி … 32 கால் கொண்ட கருங்கல் வசந்த மண்டப திருப்பணி மட்டுமே மீதம் உள்ளது .

ஆனால் திருப்பணி தொடர்ந்து நடத்திட போதுமான அளவு வசதி இல்லாத காரணத்தால் திருப்பணி தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் ..

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் திருப்பணி செய்து கொண்டு இருக்கிறோம்.. ஆனாலும் இன்னும் 50 சதவிகிதம் கூட நிறைவடைய வில்லை…

உதவும் உள்ளம் கொண்டவர்கள் ஏதேனும் ஒரு திருப்பணி முன்னின்று நடத்தி தரலாம் அல்லது ஒரு மூட்டை சிமென்ட்…. ஒரு செங்கல் … ஒரு நாள் கூலி என எப்படி வேண்டுமானாலும் உதவலாம்… உதவி செய்யுங்கள் தங்களின் காலில் விழுந்து கேட்கிறேன்.. உதவி செய்யுங்கள் உலகினை ஆளும் ஈசன் அமர நிழல் இல்லாமல் வெளியில் இருக்கிறார்… நம் அப்பன் ஆலயம் இல்லாமல் இருக்கிறார்….

பல ஆயிரம் காலத்திற்கு முன் முனிவர்களாலும் சித்தர்களாலும் ரிஷிகளாலும் மன்னர்களாலும் நம் முன்னோர்களாலும் பூஜித்து வழிபாடு செய்யப்பட்ட ஆலயம்… காலத்தின் கோலத்தால் சிதலமடைந்தது.. அந்த சிதலமடைந்த ஆலயத்தை திருப்பணி செய்து மீட்டெடுத்து மீண்டும் ஆலயம் வழிபாட்டிற்கு கொண்டுவருவதற்கு உதவி செய்யுங்கள்….

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கை ஏந்தி நிற்கின்றோம்🙏🙏 உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள் ..

தொடர்புக்கு

சிவ.எழில்
9080432395

விக்னேஸ்வரன்
9940037776
மணலுர்பேட்டை…

🙏மேன்மைக் கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம்….

Please rate this

சமுதாய தொண்டு ஒருவர் செய்ய வேண்டுமா ? No ratings yet.

இறைவனை மட்டும் வழிபட்டால் போதாதா ? ஒருவர் சமுதாய தொண்டும் செய்ய வேண்டுமா ?

ஒவ்வொரு உயிரும், தானே ‘தான் யார்’ என்று உணரவும், இறைவனை உணர்ந்து வழிபடவும் விழைந்தால், அந்த உண்மையினை உணர பல காலம், பிறவிகளாகும். அதற்காகக் தான் இறைவன், குருவாக உபதேசம் செய்கிறான், இன்னொருவர் மூலமாக நமக்கு தன்னை உணர்த்துகிறான், அருளாளர்களை நமக்கு அனுப்பி வைக்கிறான். அருளாளர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருந்து நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். இவையனைத்தும் இறையனார் அருளினால் ஆனது. அப்படியானால், இந்த சமுதாயமே நமக்கு இறைவனைக் காட்டுகிறது. இந்த சமுதாயமே பல கோவில்களைக் கட்டிக் கொடுத்துள்ளது. இன்று நாம் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். மயிலாப்பூரில் இருக்கும் கபாலீசுவரர் கோவிலை எத்தனை கைகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ? எந்தக் காலத்தில் இவை உழைத்து உருவாக்கியது ? இன்று நாம் அந்த கோவிலில் அமர்ந்து அதன் இறையனுபவத்தை உட்கிரகித்து உய்வடைகிறோம். அந்த தூண்களை செதுக்கிய கைகள் இப்போது நமக்கு முன்னர் வந்தால், அந்த கைகளை நாம் கும்பிட மாட்டோமா ? அந்த கோவில்களை கட்டிக் கொடுத்தவர்களின் திருவடியை வணங்க மாட்டோமா ? என்றோ எவரோ செய்த சமுதாய தொண்டினால் நாம் இன்று சிவானுபவத்தை அனுபவிக்கிறோம். உலகில் இருக்கும் ஒவ்வொரு கோவிலையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள். எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை மூளை எப்படி வேலை செய்து நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றுள்ளது ? நாம் பதிலுக்குக் கைமாறாக என்ன செய்யப் போகிறோம் ?

யான் பெற்ற இன்பமே போதும் என்று கருதி, மிக சுயநலவாதியாக திருமூலர் பெருமான் அன்று சிவானந்தத்தை அவர் மட்டுமே அனுபவித்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று தன்னுடைய சிவ அனுபவங்களையும், சிவாகமத்தையும் நமக்கு மெனக்கிட்டு செய்யுள்களாக, மந்திரமாக உருவாக்கிக் கொடுத்து சென்றுள்ளார். அவர் சுயநலவாதியாக அன்று இருந்திருந்தால், இத்தனை காலம் எத்தனை உயிர்கள் அதே சிவத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவித்திருக்க முடியும் ?

நாம் ஒவ்வொருவரும் இறைவனை உணர்ந்து நம் உயிரை மேம்படுத்த வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த இறைவனையும், கோவில்களையும் மற்றும் பலவாறு நன்மைகள் நமக்குப் புரிந்த இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ?

தன்னமில்லாமல் இந்த சமுதாயத்திற்கு தொண்டு செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப் பட்டிருக்கிறோம். வாழ்வில் சில காலமாவது நாம் அனைவரும் சமுதாயம் மேம்பட நாம் எதையும் எதிர்பார்க்காமல் தொண்டு செய்ய வேண்டும். இது நம்மை இறைவனுக்கு மிக அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகளில் நாம் பயணித்தாலும், நம் சக உயிர்களுக்கு அதே வழியில் பயணிக்க ஊக்குவிப்பது, உதவி செய்வதும், நம் கடமையாகும். ஒவ்வொரு உயிரின் உள்ளும் சிவம் குடி கொண்டிருக்கிறது. நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் அது எப்போதும் அறிந்து கொண்டே இருக்கிறது. ஆகேவ, தன்னலமற்ற சமய தொண்டினை நம் சமுதாயத்திற்கு நாம் முழு மனத்தோடு செய்ய வேண்டும். நிச்சயம் திருவருள் கைகூடும். திருநாவுக்கரசு பெருமானின் உழவாரப்பணியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Jpeg
Jpeg

Jpeg

Please rate this

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் No ratings yet.

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்

அன்புடையீர் வணக்கம்,

நம் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது முன்னோர்களின் கைவண்ணங்கள் நமது மண்ணிலே தெரிந்தும், தெரியாமலும் புதைந்து , சிதைந்து கிடக்கின்றன, அப்படி சிதைந்து கிடக்ககூடிய ஆலயம்தான் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது  என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதை கோட்டை என்றே அழைக்கிறார்கள்.

1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.

தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பிரதோஷம்,தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது. 

ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றது .ஆய்வு முழுவதும் நிறைவு பெற்றதும் புங்கம்பாடி கிராமம் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் முழு வரலாறு கிடைக்கப்பெறும்

கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 14 கி.மீ., சென்றால் புங்கம்பாடி கோயிலை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கரூரில் இருந்து ஆத்துமேடு செல்லும் நகர பேருந்து செல்கின்றது.
அல்லது

அரவக்குறிச்சியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ளது.

https://www.facebook.com/karurphotographer/posts/1028360567176671

இக் கோவில் பற்றி மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
சுகுமார்பூமாலை,
புங்கம்பாடி கிராமம்  
9962222962
திருச்சிற்றம்பலம்.

Please rate this

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வாருங்கள் No ratings yet.

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!!

அச்சிறுபாக்கம் – அச்சுமுறிப்பாக்கம் – சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை அச்சிறுப்பாக்கத்தில் மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ௧௫௰௰ (1500) ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு உறையும் பெருமான் மரகதாம்பிகை உடனுறை பசுபதீசுவரர் என்று அன்போடு காலம் காலமாக அழைக்கப்பட்டு வருபவர்.  அச்சிறுபாக்கத்தில் அமையப் பெற்றுள்ள பாடல் பெற்ற தலமான ஆட்சீசுவரர் கோவிலுக்கு உட்பட்டது தான் மலை உச்சியில் உள்ள பசுபதீசுவரர் கோவிலும் என்கிறார்கள். மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று செங்குத்தான படிக்கட்டு. இன்னொன்று மலையின் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

இந்த மலையை சுற்றி பல்லாண்டு காலமாக மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சிறிதே தடைபட்ட இந்த மலைவலம், பிறப்பு இறப்பு அற்ற எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய உலகின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளினாலும் அவர் விருப்பத்தினாலும் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.  மொத்தம் ௧௪ (14 km) கி.மீ. தூரம் உள்ள இந்த மலையைச் சுற்றி வரும் பாதையில் முழுநிலவு (பௌர்ணமி) அன்று கிரிவலம் வரப்படுகிறது.

மலைவலம் துவங்கும் இடம்:  அச்சிறுபாக்கம் பசுபதீசுவரர் கோவில் மலையடிவாரம்.

எல்லையற்ற கருணையும், ஆற்றலையும் கொண்டு, இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, ஒடுக்கி, அருள் புரிந்து வரும் சிவபெருமான் உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த உலகில் படைத்து அருளி காத்து வருகிறான். அவ்வாறாக, சிவபெருமானே, மலையின் வடிவில் அமைந்து அருள் பாலிப்பதாக நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு நாட்டின் அரசனுக்கு நாம் செய்யும் பணிகள் தான் எத்தனை எத்தனை ? அவனை வரவேற்று உபசரிக்கும் விதம் தான் எத்தனை எத்தனை ? இந்த ௨௨௪ (224) புவனங்களில் ஆயிரக்கணக்கான கோள்களையும் பரவெளியையும் படைத்து அருள் புரிந்து வரும் நம் ராஜாதி ராஜனான சிவபெருமானை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் ? எப்படி வணங்க வேண்டும் ? அவனை எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இந்த மலையிலும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் உள்ளன. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்திருந்த பூமியாக விளங்கியது இது. பெருமை மிக்க இந்த மலையில் மேவி அருள்பாலிக்கும் பசுபதீசுவரரை வணங்கியும் இந்த மலையை சிவபிரானாகவே எண்ணி மலைவலம் வருவதும் நாம் மிக்க புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திருவண்ணாமலைக்கு இணையாக இந்த மலையும் திகழ்வதால், திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் அதே புண்ணியமும், சிறப்பும், அருளும் இந்த மலையை வலம் வருவதால் கிடைக்கப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள், திருவண்ணாலை செல்வதோடு இந்த வஜ்ரகிரி மலையையும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த மலையை சீர் செய்யவும், வழிபாடுகள் சிறப்பாக அமையவும் பல உதவிகள் தேவைப்படுகிறது. இந்து உதவி அமைப்பினர் பல சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் கூட்டாக ஒன்று சேர்ந்து நம் பாரம்பரிய சொத்தான இந்த மலையை சீரமைத்து, கோவில்களையும் வழிபாடுகளையும் சிறப்பாக நடத்த இணைந்து செயல்பட வேண்டும்.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் அன்பர்கள் வஜ்ரகிரி மலைக்கும் கிரிவலம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இணையற்ற ஒப்பற்ற பெருமானின் திருவருள் மீண்டும் நம் பூமியில் பட்டு ஆன்மீக ஒளிப்பெருக்கு ஏற்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சம்பந்தர் தேவாரம் -இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம் 4/5 (1)

சம்பந்தர் தேவாரம்

இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம்
[1/76/1,11 – 29/06/18]

சிவதீபன் -📱9585756797

குறிப்பு: தேவலோக மங்கையாம் “அரம்பை வழிபட்டதால் அரம்பையங் கோட்டூர் எனப்பட்டு பின்னாளில் இலம்பைய்கோட்டூர் என்றழைக்கப் பெற்றது”

இது ஒரு தொண்டைநாட்டு தலம், திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்னும் திருவிற்கோலத்தில் இருந்து தென்மேற்கே 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது, திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம், அல்லது சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் இருப்பு பாதையில் கடம்பத்தூரில் இறங்கி பேரம்பாக்கம் சென்றும் செல்லலாம்

முப்புர சம்ஹாரத்தின் பொருட்டு சுவாமி தேரில் ஆரோஹணித்து செல்கையில் அவரது கொன்றைமாலை விழுந்த இடத்தில் உண்டான சுயம்பு லிங்கமே இத்தலத்து மூலமூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தேவர்களுக்கு உதவ சென்றமையால் இவருக்கு தெய்வநாதீஸ்வரர் என்றும் அரம்பை வழிபட்டதால் அரம்பேஸ்வரர் என்றும் பெயர்களாம், இத்தல அம்பிகை கோடேந்து முலையம்மை என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்

பிள்ளைப் பெருமானார் இத்திலத்திற்கு எழுந்தருளியது பற்றி ஒரு செவிவழிச் செய்தியும் இங்கு நிலவுகிறது, “எனதுரை தனதுரையாக” என்ற பெருமானது புகழ்பெற்ற வாக்கியம் இத்தலப் பதிகத்தில்தான் பாடல்தோறும் இடம்பெற்றுள்ளது

பெருமானார் பாடல்களில் வைப்பு தலங்களை குறிப்பது அரிது என்றாலும் இப்பதிகத்தில் முதல் பாடலிலேயே பருப்பதம் கயிலாயம் நெய்த்தானம் துருத்தி உள்ளிட்ட தலங்களை குறிப்பது எண்ணி மகிழத்தக்க ஒன்றாம்

பண்: குறிஞ்சி

பாடல்

மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.

பொருள்

கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?

மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

Please rate this

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1 No ratings yet.

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1

உமாபதிசிவம்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களுல் உமாபதிசிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி என்ற நூலிலிருந்து முதல் பாடலின் விளக்கத்தை இங்கு காண்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தேவாரத் திருத்தலங்கள் No ratings yet.

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

தேவாரத்தை பிடி! கயிறை பதி!!
தேவாரம் பாடல் நாட்டில் அமைந்துள்ளது பெண்ணாகடம் என்னும் ஒரு ஊர்.

இவ்வூரில் எழுநூறு ஆண்டுளுக்கும் முன்னால் அச்சுதக் களப்பாளர் என்ற வேளாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவர்  சைவசமயத்தைத் தழுவி வந்தவர். ஈசனிடம் மிகவும் பக்தி பூண்டவர். இவருக்கு நெடுநாட்களாக மக்கட் பேறு இல்லாமலிருந்ததால், வருத்தமுற்று மிகவும் மனம் கணத்திருந்தார்.

யார் யாரோரெல்லாம் குழந்தை பேறு வாய்க்க பரிகாரங்களைக் கூறினர். சொன்னவர்களின் யோசனைகளின்படி அத்தனை வகையான பரிகாரங்களைச் செய்ய நினைத்தார்.

ஆனால், பரிகாரங்களை செய்வதற்கு முன் தனது குருவைச் சந்தித்து தன் எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு அவர் ஆசியைப் பெற்று அதன்பிறகே பரிகாரங்களை மேற்கொள்ளலாம் என எண்ணியிருந்தார்.

அதன்படியே தம்முடைய குலகுருவாகிய  சகலாகம பண்டிதரிடம் போய் தம் குறை  நீங்க வழிகாட்டுமாறு கேட்டு நின்றார்.

குருவானர் அவர் உடனே தம்முடைய திருமுறைப் பாராயண கட்டுகளில் உள்ள தேவாரத்தை எடுத்து கயிறு சாத்திப் பார்த்தார்.

அந்தக் காலத்தில் நிலவி வந்த ஒரு ஜோதிட சாஸ்திர முறை இது. (கிளி ஜோசியம்போல) கயிறு சாத்திப் பார்த்தல் என்றும் இதைக் கூறுவர்.

அதாவது, தேவாரம் போன்ற நூலை எடுத்துக்கொண்டு, கண்களை  மூடிக்கொண்டு, ஒரு கயிறை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தில் கயிறை பதிக்க வேண்டும்.

கயிறு எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்தப் பக்கத்தைப் பிரித்துப் படித்தால் இறைவன் அருளால், அந்தப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பாட்டின் மூலம்  தீர்வு காணப்பெறுவர்.

பொதுவாக இந்தவகை சாஸ்திரம் அனைவருக்குமே தெரியும் என்றாலும், இப்படி குரு ஸ்தானத்தில் உள்ளவர் மூலமாகத் தீர்வு காண்பது  அப்போதைய வழக்கமாக இருந்து வந்தது.

அவ்வாறு கயிறு பதித்து பார்த்ததில், ‘பேயடையா பிரிவெய்தும்’ என்ற தேவாரப் பதிக பார்வைக்கு கிடைத்தது.

அதில் ‘பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம் பெறுவர்’ என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார்.

அச்சுதக் களப்பாளருடைய குறையும் பிள்ளை  இல்லை என்பதுதானே! அவர் குறைக்கு இறைவனே பரிகாரம் கொடுத்தது போல அந்தப் பாட்டு அமைந்திருந்தது.

அதைக் கண்ட பண்டிதரும் இறைவன்  திருவருளை நினைத்து அதிசயித்து, மகிழ்ந்து சொல்லொணாத ஆனந்தம் அடைந்தார்.

பின், நீ திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி, இறைவனை வழிபட்டுக் கொண்டு அங்கு சிலகாலம் தங்கும்படி களப்பாளரைப்  பணித்தார் சகலாகம பண்டிதகுரு.

தன் குருவின் கட்டளைபடி திருவெண்காடு சென்றார். யாவையும் செய்தார் களப்பாளர், தன் மனைவியுடன் ஊர் திரும்பினார்.

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு களப்பாளரின் மனைவி கருவுற்று, ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள்.

திருவெண்காட்டு  மூர்த்தியை வழிபட்டதன் பயனாகப் பிறந்த  குழந்தையாதலால் இதற்குச் ‘சுவேதனப் பெருமாள்’ என்று நாமத்தைச் சூட்டி பெற்றோர்கள் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.

இந்தக் குழந்தையே  பிற்காலத்தில் சிவஞானபோதம் என்னும் சைவ சாஸ்திர நூலை இயற்றியது.
சந்தானாசாரியர்களில் முதல்வராகத் திகழ்ந்த மெய்கண்டார் இவர் ஆவார்.

சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் யாவற்றிற்கும் மூலம், சிவஞானபோதம். அது பிறக்கக் காரணமூர்த்தியாக இருந்தவர் மெய்கண்டார்.

அவர் திருஅவதாரம் செய்ய  உறுதுணையாக இருந்தது, ‘பேய் அடையா பிரிவு எய்தும்’ என்று தொடங்கும் ஒரு தேவாரப்பாடல் ஆகும்.

இந்த தேவாரப் பாடலை சம்பந்தர் பெருமான் பாட உருவாக்கமானது எப்படி? என்பதை வாசியுங்கள்.

திருவெண்காடு தலத்திற்குச் சென்றாலே, ஆன்மிகச் சூழலான இங்கு, தீய எண்ணங்களெல்லாம் நம்மைத் தீண்டாது ஒழிந்து, நாம் இறைவனைச் சார்ந்த எண்ணங்களிலேயே லயிப்பதை உணர முடியும்.

ஒவ்வொரு தலத்தின் பயன்கள் கருதியே நம் நாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஆன்மிக வழிகாட்டல்கள் யாவையும் அமைந்திருக்கின்றன.

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த்  தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்கிறார்.
-தாயுமானவர்.

சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து விளங்கும் திருவெண்காடு, பழமையான தலங்களில் ஒன்று.

இங்கே சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி  தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த மூன்று தீர்த்தங்களே முக்குளத் தீர்த்தம் எனவாகும்.

புனிதமான இந்தத் தீர்த்தங்களில் மூழ்கி எழுவோர்க்கு, தாம் நினைத்த பல  பயன்களைப் பெறுவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்து வருகிறது.

ஒரு சமயம், திருவெண்காட்டிற்கு ஒருமுறை  திருஞான சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார்.

சம்பந்தரைப் பார்க்க பல ஊர்களிலிருந்தும் வந்தனர் பக்தர்கள். தங்கள் மனதிலுள்ள குறைகளை சம்பந்தரிடம்  சொல்லி, தங்கள் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தனர் ஒவ்வொருவரும்.

ஒரு பக்தர் சம்பந்தரிடம், என்னுடைய மனைவியை நெடுநாட்களாகப் பேய்  பிடித்து அழைக்கலைத்தது.

இதைப் பார்த்த ஒரு பெரியவர் எங்களிடம், நீ வெண்காட்டு முக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடு. சுவேதாரண்யேஸ்வரரையும்பிரும்மவித்தியா நாயகியையும் வழிபடு சரியாகிவிடும் என்று  சொன்னார்.

அவர் கூறியதை நம்பி நானும், இங்கே வந்து முக்குள நீரில் நீராடி இறைவனை வழிபட்டோம்.

பீடித்திருந்த பழைய தொல்லையிலிருந்து நீங்கி, இப்போது என் மனைவிக்கு யாதொரு குறையும் இன்றி, நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எல்லாம் இந்த ஈசன் செயல் என்றார்.

இதனால், நாற்பத்தெட்டு நாட்கள் எங்கள் சங்கல்பத்தை முடித்துக்கொள்ள எண்ணி இங்கு தங்கியிருக்கிறோம் என்றார்.

மற்றொருவரோ,…சம்பந்தரைப் பார்த்து, தங்களை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது, என்று கூறி அவரும் அவர் மனைவியும், சம்பந்தப் பெருமான் காலில் விழுந்து வணங்கினர்.

திருஞானசம்பந்தர் சுற்று முற்றும் பார்த்தார். அங்கு வேறு சில மகளிர்களும் பேயாடுவதைக் கண்டு மனம் போக கண்டார்.

மேலும் ஒருவரைப் பார்த்த சம்பந்தர்,….. உங்கள் குறை என்ன? அது நிறைவேறி விட்டதா? அல்லது நிறைவேற்ற வந்திருக்கிறீர்களா? என்று அன்புடன் கேட்டார் ஞானசம்பந்தர்.

அதற்கு அவர், நான் ஒரு பெரும் செல்வந்தன். எனக்கு பங்களா, நிலம் என ஏகப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறேன்.

ஆனால், இதனால் எனக்கு பயன் என்ன? எனக்குப் பின் இதை அனுபவிப்பதற்குத்  எனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் எண்ணைத் தூங்கவிடாமல் செய்தது.

தானங்கள் பல செய்தேன். ஊர் ஊராகச் சென்று பல கோயில்களைத் தரிசித்துத்  தவம் புரிந்தேன்.

கடைசியாக இங்கும் அங்கும் அலைந்து இறுதியில் இந்த திருவெண்காட்டுக்கு, என் மனைவியுடன் வந்து முக்குள நீரில் மூழ்கி சிலகாலம்  இருந்து இறைவன் இறைவியைத் தரிசித்து ஊர் திரும்பினோம்.

நாங்கள் ஊர் திரும்பிய ஓராண்டிலேயே என் மனைவி கருவுற்று, எங்களுக்கு ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

அந்தப் பிள்ளைக்கு ‘வெண்காடன்’ என்று பெயரிட்டோம். அந்தக்  குழந்தைக்கு இப்போது ஓராண்டு நிரம்பிவிட்டது.

இதனால் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில்  இக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு இப்போது இங்கு ஈசனைத் தரிசிப்பதற்க்காக இங்கு வந்திருக்கிறோம்.

குழந்தை செய்த பாக்கியம், தங்களையும்  இன்று வணங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று மகிழ்ந்து சொன்னார்.

இந்தச் செய்தியைக் கேட்டு தம்பதிகளையும், குழந்தையையும் வாழ்த்தி ஆசி கூறினார்  திருஞான சம்பந்தர்.

அடுத்து நிற்பவரிடம் குறைகளைக் கேட்டார்.

எனக்கு வெகு நாட்களாக, தீராத நோய் ஒன்று ஆட்டி வைத்தது. நம்பிக்கையுடன் நாமும் முக்குளம் சென்று நீராடி, இறைவனைத் தொழலாமே என்று  எண்ணினேன். இங்கு வந்து சிலகாலம் தங்கி நீராடினேன். என்ன ஆச்சரியம்! எனக்கு இருந்த நோய் முற்றிலும் மறைந்துவிட்டது, என்று வியப்பு மிக கூறினார்.

யாவற்றையும் கேட்டு அக மகிழ்ந்தார் சம்பந்தர்.

அன்பர்களைச் சந்தித்து  இவ்வளவு நேரம் அவர்களுடைய ஆனந்தமான அனுபவங்களைக் கேட்ட திருஞானசம்பந்தர், அவர்கள் பாவம் போக்கி  நினைத்தவற்றையெல்லாம் அருளும் முக்குளத்தையும், திருவெண்காட்டு அப்பனையும் கண்டு உருகி நின்றார்.

தாம் கண்டவற்றையும், கேட்டவற்றையும்மனதில் எழுப்பி ஈசனை அகத்தால் உணர்ந்து பாட முனைந்தார்.

அதனால் பிறந்தது ஒரு பதிகமே இது. இந்த பதிகமே அச்சுதகாப்பாளரின் குருவானவர், தேவார ஏட்டில் கயிறு பதித்து வழிகாட்டலை வாசித்துக் கூறினார்.

🔔 பேயடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் தோயாவாம் அவர்தம்மைத் தீவினையே! என்று.

🙏மூங்கிலைப்போல வழுவழுப்பும், பசுமை நிறமும் கொண்ட தோள்களைப் பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய  திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து ஆடும் செயலுடையாரைத் தீய செயல்கள் சாராது. அவர்களைப் பேய்கள் அண்டாது. முன்பே  அடைந்திருந்தாலும், அவை பிரிந்து நீங்கி விடும். பிள்ளை வேண்டுமென்றால் அதனையும், அதனோடு மனத்தில் வேறு எவற்றை நினைத்தார்களோ   அவற்றையும் பெறுவர். இவற்றை அடைவது பற்றி சிறிதும் ஐயுற வேண்டாம்.

திருச்சிற்றம்பலம்.

_____________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

Please rate this

சுந்தரரின் தமிழை விரும்பிய சிவபெருமான்….. 4/5 (1)

நமசிவாய_வாழ்க
சுந்தரரின் தமிழை சிவன் எப்படி விரும்பினார் என்று பாருங்கள்.சேரமான்பெருமான்நாயனார் திருக்கயிலாய ஞானவுலா பாடிய வரலாறு!

கொடுங்காளூரில் சேரர் குடியில் பெருமான் கோதையார் என்பவர் இளம் வயதிலேயே சிவபக்தி மிகுந்து அரச வாழ்வைத் துறந்து திருவஞ்சைக்களத்தில் ஆலயத் தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார்.அப்போது செங்கோற் பொறையன் என்றும் சேர மகாராஜாவுக்குத் திடீரென்று ஞானோதயம் ஏற்பட, அவன் மகுடத்தைத் துறந்து காட்டிற்குச் சென்று தவம் செய்யலானான். நாடு அரசன் இல்லாமல் இருக்க முடியுமா? அதனால் நாட்டின் அமைச்சர்கள் யாவரும் திருவஞ்சைக்களத்திற்குச் சென்று அங்கு சிவத்தொண்டில் ஈடுபட்டிருந்த பெருமான் கோதையாரை அரசுப் பொறுப்பை ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். அவர் “சிவபெருமான் உத்தரவு தந்தால் அரியணை ஏறத்தயார்’ என்று கூறிச் சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமானும் சிற்சில சகுனங்கள் மூலம் அவர் இசையை தெரிவிக்க ஒரு சுபயோக தினத்தில் முடி சூட்டிக் கொண்டார். தினந்தோறும் நெடுநேரம் சிவபூஜை செய்வதைத் தவிர்ப்பதில்லை.

ஒருநாள் யானை மீது அமர்ந்து சகல விருதுகளுடன் நகரைப் பவனி வரும்போது ஒரு சலவைத் தொழிலாளி உவர் மண்ணைச் சுமந்து வந்தான். அப்போது சிறிது மழை பெய்யவே உவர் மண் கரைந்து அவன் உடலில் ஒழுகிக் காய்ந்து உடலெங்கும் விபூதி பூசியதுபோல் தோன்றியது. அவ்வளவுதான்… இதனைக்கண்ட யானைமீது அமர்ந்திருந்த மன்னன் கிடுகிடுவென்று கீழே இறங்கிப்போய் அந்த நபரை வணங்கினார்! அந்த சலவைத் தொழிலாளியோ அரசர் தன்னை வணங்குவது கண்டு நடுநடுங்கி விட்டான்! அரசரை பலமுறை தொழுது கைகூப்பி, “”மன்னர் பெருமானே! என்ன இது… என்னை நீங்கள் வணங்கலாமா” என்றான். அது கேட்ட மன்னன் (சேரமான் பெருமாள் நாயனார்) நிவீர் திருநீற்று வடிவத்தை எனக்கு நினைவு படுத்தினீர். அடியேன் அடிச்சேரன். நிவீர் வருந்த வேண்டாம். போம்” என்று மறுமொழி கூறி அவனை அனுப்ப அமைச்சர் முதலானோர் மன்னர், சிவனடியார்கள் பால் காட்டும் பரிவையும் மரியாதையையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தனர்.

நாள்தோறும் தவறாமல் மன்னன் செய்யும் சிவபூசையின் முடிவில் #நடராஜப்_பெருமானின் #சிலம்பொலி கேட்கும்! அதனைக் கேட்டால்தான் மன்னனுக்கும் நிம்மதி. தான் நியமம் தவறாமல் பூஜை செய்திருக்கிறோம் என்று மனம் பூரிப்பான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் பூஜை முடிவில் சிவனது சிலம்பொலி #கேட்கவில்லை! உடனே சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வருத்தம்! இனி இவ்வுடல் இருந்து என்ன பயன்? என்று வாளை எடுத்துத் தன்னை #மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.

மறு நொடி சிவபெருமான் சிலம்பை ஒலிக்கச் செய்து, “”அன்பனே! அவசரப்பட்டுப் பிராணத் தியாகம் செய்து விடாதே. #சுந்தர மூர்த்தியின் #பாடலில் சற்று ஆடி அமிழ்ந்து விட்டோம். அதனால் வரத் தாமதமாகிவிட்டது!” என்று கூறி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமையை வெளிப்படுத்தினார்.

சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வியப்பு. சிவபெருமானின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட அந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளை நேரில் சென்று தரிசித்திட வேண்டும் என்று நினைத்து உடனே #திருவாரூருக்குச் சென்று சுவாமிகளை வணங்கி நின்றான்.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் மீது மிகவும் நட்பு பாராட்டிய சேரமான் பெருமான் நாயனார் அவரைத் தம்மோடு கொடுங்காளூருக்கு அழைத்துச் சென்று உபசரித்து மகிழ்ந்தார். பின்னர் சுந்தரர் ஆரூர் சென்றார். இருவரும் மாற்றி மாற்றி இவர் அங்கு சென்று தங்குவதும் அவர் இங்கு வந்து தங்குவதுமாய் இருவரின் நட்பும் மிகப் பலப்பட்டு விட்டது.

ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களம் சென்று சிவபெருமானைத் தரிசித்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். சிவபெருமான் ஒரு வெள்ளையானையை அனுப்பிச் சுந்தரரை அதில் ஏறிவரும்படி பணித்தார். சுந்தரரும் சிவனால் அனுப்பப்பட்ட அந்த வெள்ளை யானை மீது ஏறி அமர்ந்து திருக்கயிலாயம் நோக்கிச் செல்கையில், தன் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரை நினைத்து “”அடடா! அவரும் நம்மோடு இருந்தால் மிகச் சிறப்பாக இருக்குமே” என்று எண்ணினார்.

அப்போது கொடுங்காளூரில் அரண்மனையில் நீராடிக் கொண்டிருந்தார் சேரமான் பெருமாள். அந்த நிலையிலேயே தன்னைப்பற்றி சுந்தரர் நினைப்பது பளிச்சென்று அவருக்குப் புலப்பட்டது! உடனே, அப்படியே அருகிலிருந்த குதிரை மீது தாவி ஏறி திருவஞ்சைக்களம் சென்றார். இவர் சென்று அடைவதற்குள் சுந்தரர் ஐராவதத்தின்மீது ஏறி விண்ணில் சென்று கொண்டிருந்தார்.

அதைக் கண்ட சேரமான் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்தை (#நமசிவாய) ஓதினார். உடனே அக்குதிரை விருட்டென்று துள்ளித்தாவி விண்ணில் பாய்ந்து விரைவாகப் பறந்து சுந்தரமூர்த்தி நயனாரின் யானையை அடைந்து அதனை வலம் வந்து அதற்கு முன்னால் சென்றது! அதில் அமர்ந்தபடியே சேரமான் சுந்தரரை வணங்கிய படியே இருந்தார்.

இருவரும் கயிலாயத்தை அடைந்து கீழே இறங்கி பல வாயில்களைக் கடந்து பெருமாள் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தனர். அதன் வாயிலில் சேரமான் பெருமாள் நாயினார் தடுத்து நிறுத்தப்பட்டார். சுந்தரர் மட்டும் உள்ளே சென்று சிவபெருமான் முன் விழுந்து வணங்கித் துதித்துச் சேரர் கோன் வாயிலில் நிற்பதைக் கூறுகிறார்.

சிவபெருமான் புன்னகையுடன் சேரமானை உள்ளே அழைக்கிறார். “”இங்கே உம்மை நாம் அழையாதிருக்க எப்படி வந்தீர்?” என்று வினவ சேரமான் சிவனைப் பன்முறை விழுந்து வணங்கி, “”எனையாளும் எம் பெருமானே!

சுந்தர மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிச் சென்ற வெள்ளையானைக்கு முன் அவரைச் சேவித்துக் கொண்டே இங்கே வந்து விட்டேன். தேவரீரின் #ஐந்தெழுத்து மந்திரமே யான் ஏறிய புரவிக்கு அந்த மாயசக்தியைத் தந்து இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்ந்தது. தேவரீர் பொழியும் கருணை வெள்ளம் அடியேனை இங்கே கொண்டு வந்து ஒதுக்கியதால் இப்பேறு பெற்றேன். மலைமகள் நாயகனே! ஒரு விண்ணப்பம். அடியேன் தேவரீரது திருவருள் துணை கொண்டு திருவுலா ஒன்று பாடியுள்ளேன். அதனைக் கேட்டருள வேண்டும்!” என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

அப்பொழுது சிவபெருமான் இளம் புன்னகையுடன் “”அப்படியா… சரி… அதனைச் சொல்!” என்று திருவாய் மலர்ந்தருள, சேரமான் பெருமாள் நாயனார், உடனே திருக்கயிலாய ஞானவுலாவை ஆசுகவியாகப் பாடிப் பெருமானைக் கேட்கும்படி செய்தார்.

அதனைச் செவிமடுத்த சிவன் அகமகிழ்ந்து அருள் செய்து, “”நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு!” என்று பணித்தார். சேரமான் பெருமாள் நாயனாரும் சிவகண நாதராகிச் சிவமூர்த்திக்குத் தொண்டரானார்.

#சிவாயநம

Please rate this

எம்பிரான் திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம். 5/5 (1)

சிவாயநம.

திருச்சிற்றம்பலம்.

📚 எம்பிரான் திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்.

📕 மூன்றாம் திருமுறை

📖 67.திருப்பிரமபுரம்.

🎼 பண் : சாதாரி.

🎼 பாடல் எண் : 10

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா

ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்

கீழிசைகொண் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்

காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழிநகரே.

🔴 பொழிப்புரை :

பாழியில் தங்கும் , யானையை ஒத்த சமணர்களும் , கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள் . ஏழிசையும் , யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும் , மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும் , மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று , தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும் .

🔵 குறிப்புரை :

பாழி உறை – பாழியில் தங்கும் , வேழம் நிகர் – யானையை யொத்த , பாழ் அமணர் – பாழ்த்த அமணர்களும் . சூழும் – கூட்டமாக உள்ள , உடல் ஆளர் – உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் , உணரா – உணராத , ஏழின் இசை – ஏழு சுரங்களையுடைய , யாழின்மொழி – யாழ் போற் பேசுகின்ற , ஏழையவள் – பெண்ணாகிய அம்பிகையுடன் , வாழும் இறை – வாழ்பவராகிய சிவபெருமான் , தாழும் – தங்கும் , ( இடம் ஆம் ) கீழ் ( உலகில் ) கீழ் உலகில் , சூழ் – சூழ்ந்த அரசு – அரசர்களும் , இசைகொள் – புகழ்கொண்ட , மேல் உலகில் மேல் உலகத்தில் , வாழ் – வாழ்கின்ற , அரசு – அரசனாகிய இந்திரனும் ; வாழ – ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு , ஆழிய – ஆழ்ந்த , தோற்ற , சில்காழி – சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி , செய – தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற , அருள் பெற்ற செயல் ஏழுலகில் – சப்த லோகங்களிலும் , ஊழி – பல ஊழி காலமாக , வளர் – பெருகும் காழிநகர் .

🔥 சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.

அடியேன்.

📖 சிவ.விஜயகுமாா்.

Please rate this

சமயகுரவர் துதி சைவ சமயத்தை மீட்டெடுத்த நால்வர் துதி 5/5 (3)

சமயகுரவர் துதி

சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சமய குரவர் துதி. இது நால்வர் துதி என்றும் அழைக்கப்படும்.

சைவ சமயம் மற்றும் தமிழ் மொழியின் தொன்மையைப் பறை சாற்றும் எண்ணற்ற சான்றுகள் குமரிக் கண்டத்தில் இன்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. முதல் தமிழ் சங்கம், மற்றும் இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்றது குமரிக் கண்டத்தில். மூன்றாம் தமிழ் சங்கம் நடைபெற்றது இன்றைய திருஆலவாய் (மதுரை) இல். சங்க காலம் சைவ சமயத்தின் பொற்காலம். சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது. இது  2 முதல் 5 ஆம் நூற்றாண்டு காலமாகும். இந்த சமயத்தில் சைவம் மருவி, சிவ வழிபாடு குன்றியது. இது இருண்ட காலம் எனப்படும்.

அப்போதிருந்த மன்னர்கள் சமண சமயம் பௌத்த சமயம் ஆகியவற்றைத் தழுவியதால், மக்களும் அவர்களை பின்தொடர்ந்தனர். சமணர்களின் துறவறம் மக்களைக் கவர்ந்தது. சிவ ஆலயங்கள் வழிபாடுகள் இல்லாமல் குன்றியது. சமணர்கள் திருநீறு அணிபவர்களைக் கேவலமாக நடத்தினர். திருநீறு அணிந்த பூச்சாண்டிகளைப் பார்த்தாலே சிறைவாசம். இதற்கு கண்டுமுட்டு என்று பெயர்.  திருநீற்றை அணிந்தவரைப் பார்த்தேன் என்று ஒருவர் கூறியதை கேட்டவருக்கும் சிறை. இது கேட்டுமுட்டு என்று பெயர். இவ்வளவு கொடூரமான சமயத்தில், சைவ சமயத்தை மீட்டெடுக்க சிவபெருமானார் பெருங்கருணை கொண்டு அருளாளர்களை இங்கு அனுப்பி அருளிச் செய்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் பல நாயன்மார்கள் தோன்றி சைவ சமயத்தை மீட்டெடுத்து சிவ வழிபாட்டை இடையூறின்றி நடத்தினர். இவர்கள் நம் சமயத்தை மீட்டெடுத்ததால் இவர்களை சமயகுரவர் என்கிறோம்.

இந்த சமயகுரவர்களை துதித்து பின்னாளில் வந்த சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் எழுதிய பாடலை பண்ணிசை பாவலர் திரு தண்டபாணி அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை 5/5 (1)

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை

பதிவாசிரியர்: சிவதீபன்.
 
திருநாகைக்காரோணம் திருவிருத்தம்
 
குறிப்பு: நாகராசன் வழிபட்டமையால் “நாகை” என்றும் புண்டரீக முனிவரின் காயத்தை தம்மேல் ஆரோகணித்த பெருமான் உறைவதால் காயாரோகணம் என்றும் அழைக்கபபெற்று “நாகைக்காரோணம் எனப்படுகிறது
 
பரதவர்களும் வியாபாரிகளும் நிறைந்து வாழ்ந்த நெய்தல் நகரமாம் இது “பட்டினம்” ஆதலின் “நாகைப்பட்டினம்” என்று தற்காலத்தே வழங்கப்பெறுகிறது, “காரோணம்” என்ற பெயரில் ஆலயம் அழைக்கப்பெறுகிறது
 
“விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்த நாயனார் வாழ்ந்திருந்த பதியாம்” இதற்கு மூவர் தேவாரப்பாடல்களும் உண்டு
 
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வியலுக்கு தேவையான பொருட்கள் யாவையும் இத்தலத்தில் இறைவனிடம் வேண்டிப்பெறுகிறார்
 
ஒன்பது பாடல்களால் நிறைவடைந்துள்ள அப்பரடிகளது விருத்த செய்யுள்கள் இவை
 
பாடல்
 
வடிவுடை மாமலை மங்கை பங்கா கங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற்கப் பெரிய இடிகுரல் வெள்ளெருது ஏறும் இதென்னைகொல் எம்மிறையே.
 
கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன்று எடுக்கலுற்றான்
பெருந்தலை பத்து மிருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
 
பொருள்
 
அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ?
 
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: அப்பர் பெருமான் பாடியருளிய திருப்பதிகங்களில் “குறுந்தொகை” என்ற செய்யுளமைப்பில் அமைந்துள்ள பதிகங்கள் யாவும் ஐந்தாம் திருமுறையாக தொகுக்கப் பெற்றுள்ளது
 
அற்புதமான அறக்கருத்துக்களை எளிமையாக எடுத்தோதும் இத்திருமுறையில் சரியாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன
 
வேண்டினவெல்லாம் வழங்கு தில்லை மூதூரின் எல்லை பணிந்த எழுந்து மேனிலை மாடம் கைதொழுத அப்பர்பெருமான் கனகப்பொது எதிர் கண்ணுற்று கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிட்டு இருந்த காலத்தில் “அருட்பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம்பாலிக்கும் என்னும் திருக்குறுந்தொகைகள் பாடி திருவுழவாரம் செய்து பெருகுபேர் இன்பம் உற்றனர்
 
அன்னம் – சோறு – முத்தி, முத்திவழங்கும் தில்லை சிற்றம்பலம் என்பது நுதலிய பொருள் என்றாலும், “மண்ணுயிர்கள் யாவும் பசிநோயில் வாடாது நாளும் படியளக்கும் தில்லை சிற்றம்பலம்” என்றும் பொருள் கொள்வர் சான்றோர் இதனைக்காட்டவே “தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலத்து தெற்கு கோபுரத்தில் அன்னக்கொடியாம் காவிக்கொடி எப்போதும் பட்டொளி வீசிப்பறக்கிறது”
 
மகேசுர பூசையின் போது சீரடியார் பெருமக்கள் பாடிப்பரவும் பைந்தமிழ் மாலையும் இதுவேயாம்
 
பாடல்
 
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
 
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
 
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
 
பொருள்
 
பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும் . இத்தகைய திருச்சிற்றம்பலத்தை , மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு , பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னு
 
அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி , கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்
 
அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின்
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: திருவேட்களம், திரக்கழிப்பாலை விரும்பித் தொழுத கலைவாய்மை காவலராம் “அப்பர் தம்பிரானார்” நீடு திருப்புியூரை நினைந்து வழிகொண்டு விரைந்தனர்
 
“நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பலத்து நிருத்தனாரை திணைத்தனை போதும் மறந்துய்வனோ!?” என்று மனக்கோயில் வழிபாட்டை சிறப்பித்து பாடிய பதிகம் இது
 
பாடல்
 
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.
 
கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்டமாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்டனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
பொருள்
 
பனைபோன்ற கையையும் , மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் ; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன் ; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன் . இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ !
 
அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை , பேரின்ப வடிவினனை , சிவலோக நாயகனை , ஞான உருவினனை , உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை , அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும் , பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக் கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ ? மறவேன்
 
தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும் , கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும் , சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ ?
 
 
திருநெல்வாயில் அரத்துறை திருக்குறுந்தொகை
 
குறிப்பு: பெண்ணாகடத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறிக் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கித் தெற்கே 1 கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. அரத்துறை என்பது ஆலயத்தின் பெயர், நெல்வாயில் என்பது ஊர்பெயராம்
 
திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் இவைகளை அருளிய தலம் மூவர் பாடலும் பெற்றதாம்
 
 சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்குறள் கருத்துக்களையும், அடிகளையும் இவ்வூர் ஏழாம் திருப்பாடலில் எடுத்து ஆளுகின்றார். இத்தலத்துக்குத் திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் ஒன்று, அப்பரடிகள் பதிகம் ஒன்று, நம்பியார் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
 
இது அப்பர்பெருமான் பாடிய குறுந்தொகையாம்
 
பாடல்
 
கடவுளைக் கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பார் இலாதவெம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
கலையொப்பானைக் கற்றார்க்கோர் அமுதினை
மலையொப்பானை மணிமுடி ஊன்றிய
அலையொப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
பொருள்
 
நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே.
 
நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணிமுடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
 
 
திருப்பாசூர் குறுந்தொகை
 
குறிப்பு: பாசு என்றால் மூங்கில், மூங்கில் காடுகள் நிறைந்து இருந்தமையால் பாசூர் எனப்பட்டது, தொண்டைநாட்டு நலங்களுள் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் கடம்பத்தூர் அருகே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
இத்தல இறைவர் மூங்கில் காட்டிலிருந்து முளைத்த சுயம்பு மூர்த்தி, தீண்டாதிருமேனியர், அம்பிகையால் வழிபாடு செய்யப்பெற்றவர்
 
இத்தலத்தை பிள்ளை பெருமானாரும் அப்பர் பெருமானாரும் பாடிப்பரவியுள்ளனர், ஆனைக்காவில் வழிபட்ட சிலந்தி யானை பற்றிய செய்திகள் இவ்வூர் தாண்டகத்தில் வருவது எண்ணி மகிழத்தக்கது
 
இங்கு அப்பர் பெருமான் பாடிய குறுந்தொகையில் இருந்து ஒரு அழகிய பாடல் இது
 
பாடல்
 
வேதம் ஓதிவந்து இல்புகுந்தார் அவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி ஒன்றறியார் நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே.
 
பொருள்
 
பாதி வெண்பிறை அணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர், வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ; காதில் வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார்.
 
சற்குருநாத ஓதுவார் குரலில் கேட்டின்புறுங்கள்
 
 
திருவானைக்கா குறுந்தொகை0
 
குறிப்பு: “அப்பர் சுவாமிகள், மண்ணுயிர்கள் உய்யும் பொருட்டு சிவஞானபோதத்தை தேவாரத்தமிழாக விரித்தனர்”
 
அப்படி வேதம் தமிழாக விரிக்கையில் “மெய்யறிவு சிவமே” என்று உணராமல் உலகியலில் ஈடுபட்டுவரும் மக்களை கடுமையாக சாடி அழைத்து உபதேசம் செய்தல் அப்பரடிகளின் பண்பு
 
அவ்வகையில் உலகியலில் கண்ணெதிரே தோன்றுபவை நிகழ்பவை மட்டுமே உண்மை என்று கருதி, வினைக்கொள்கையையும் கடவுளையும் மறுத்து பொய்யறிவு பேசும் “நாத்திகக் கூட்டத்திற்கு சரியான உதாரணம் தந்து இடித்துரைக்கிறார்” சுவாமிகள் இப்பாடலில்
 
பாடல்
 
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன்று இன்றியே தன்னடைந்தார்க்கு எலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.
 
பொருள்
 
உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.
 
மயிலை ஓதுவார் பாடுகிறார் கேட்டின்புறுங்கள்
 
 
 
திருக்கோழம்பம் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள மங்கைநல்லூர் என்னும் ஊரில் இருந்து மேற்கே செல்லும் “கோமல் ரோடு” என்னும் சாலையில் 15கிமீ சென்றால் எஸ்புதூர் என்ற ஊர் வரும் அங்கிருந்து “திருக்கொழம்பியூர்” என்று கேட்டால் 1கிமீ தொலைவில் கிராமத்திற்குள் இருக்கும் கோயிலை அடையலாம்
 
திருவாவடுதுறை தலத்தில் இருந்தும் எளிதாக இத்தலத்தை அடையலாம், இங்கிருந்து தெற்கே 4 கிமீ செல்லவேண்டும், மயிலாடுதுறையில் இருந்து தனிவாகனம் அமைத்து கொண்டு செல்வது உத்தமம்
 
அம்பிகை பசுஉருவில் வழிபட்ட தலம் இது, பசுவின் குளம்படிபட்டு இறைத்திருமேனி வெளிப்பட்டமையால் *கோழம்பம்* எனப்பட்டதாம்
 
திருமால், அயன் உள்ளிட்டோருடன் சந்தன் என்ற வித்யாதரன் குயிலுருவில் வழிபட்ட தலமாகும்
 
அப்பரடிகளும் பிள்ளைப் பெருமானாரும்  பதிகம்பாடியுள்ளனர்
 
பாடல்
 
கயிலை நன்மலை ஆளுங் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில் பயில்பொழிற் கோழம்பம் மேயவென்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே
 
பொருள்
 
திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.
 
கேட்டின்புறுங்கள்
 
திருநீலக்குடி திருக்குறுந்தொகை
 
குறிப்பு: தென்னலக்குடி என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள “ஆடுதுறை” என்னும் இடத்தில் இருந்து தெற்கே 3கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் உள்ளிட்டோர் வழிபட்ட பதியாம் இதற்கு *தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,பிரம தீர்த்தம், க்ஷீரகுண்டம்* என்னும் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன
 
இத்தலத்தில் உள்ள பலாமரம் காய்க்கும் வேளையில் சுவாமிக்கு பலாச்சுளைகள் நிவேதனம் ஆகும், இது தீராநோய்களை தீர்க்கும் மருந்தாம், ஒருவேளை பலாப்பழத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் வெளியில் எடுத்து வந்துவிட்டால் பழம் எந்தநிலையில் இருந்தாலும் உள்ளே வண்டரித்து உண்ணத்தகாத ஒன்றாகிவிடும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது
 
இத்தல இறைவர் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ள அதிசய மூர்த்தியாவார், திலதைலம் என்னும் நல்லெண்ணெய் கொண்டு அபிசேகித்தால் எத்தனை குடம் தைலமாயினும் இலிங்க பாணத்தால் உறிஞ்சப்பட்டு விடுவது எங்கும் காணாத அதிசயமாம்
 
இத்தலத்து பதிகத்தில் நீலக்குடி அரனார் நாமம் நவிற்றுவோர் பெறும் பயன்கள் யாவை என்று விளக்கும் அப்பரடிகள், “அமணர்கள் தம்மை கல்லினோடு பூட்டி கடலில் இட்டபோது உதவியது நீலக்குடியரன் நாமம் என்று பதிவு செய்யும் பாடல் இது
 
பாடல்
 
கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.
 
பொருள்
 
கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக – நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .
 
தவறாமல் கேட்டின்புறுங்கள்
 
 
சிவதீபன்
📱9585756797
 

Please rate this

சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் 5/5 (5)

சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோயில்

சென்னையில் உள்ள சிவாலயங்களில் பார்க்க வேண்டிய கோவில்.
காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ளது பள்ளிக்கரணை என்ற ஊர். இங்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் கோவில். இது வேளச்சேரி – தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை குளம் எதிரில் அமைந்துள்ளது. பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த திருத்தலம்.
மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மழன், ‘தந்தையே! இறைவனை அடைய தவத்தினால் தானே முடியும்’ என்று கேட்டான். அதற்கு முனிவர், ‘தவம் செய்தால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிவ பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது’ என்றார்.
அது முதல் சிவபூஜை செய்ய தொடங்கினான் மழன். அதன் பயனாக மழன் முனிவர் என்று பெயர் பெற்றார். ஒரு முறை அவர் சிவபெருமானிடம் வேண்டினார். *‘என் வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். ஆகையால், சிவபூஜை செய்ய வில்வ இலைகளை பறிப்பதற்காக, வில்வ மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருப்பதற்காக என் கால்களை புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற அருள் செய்ய வேண்டும்’* என்று வேண்டினார். வேண்டியது போலவே மழன் முனிவரின் கால்கள் புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலியின் நகங்களாகவும் மாறிவிட்டன. புலியை, சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்று அழைப்பார்கள்.
எனவே சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற மழன் அன்று முன் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் வியாக்ரபாதர், வில்வ மரங்கள் அடர்ந்த சோலையை தேடிச் சென்றார். அப்படி அவர் வந்த இடம் வில்வ மரங்கள் நிறைந்து மனதிற்கு பிடித்த இடமாக இருந்தது. அந்த இடம்தான் பள்ளிக்கரணை.
வியாக்ரபாதர் இந்த பகுதியில் வில்வ இலைகளை பறித்து அர்ச்சனை செய்து செண்பக மலர் சூட்டி மகிழ்ந்தார்.
பிற்காலத்தில் சோழ மண்டலத்தில் உள்ள சுரது நாட்டு மன்னர் இந்த பகுதிக்கு வந்தபோது, வியாக்ர பாதர் பற்றி கேள்விப்பட்டு, இந்த பகுதியை புலியூர் கோட்டம் என்று அறிவித்ததுடன், பள்ளிக்கரணையில் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்.
இக்கோவில் ராஜகோபுரம் 39 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.
ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அம்பாள் சாந்தநாயகி தெற்கு நோக்கி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
ஆஞ்சநேயர் மேற்கு பார்த்தும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்.
ஆதிபுரீஸ்வரர் ஏகலிங்க பாண வடிவமாக உள்ளார். மேலும் இவர் நவக்கிரக நாயகராகவும் இருக்கிறார். எனவே ஆதிபுரீஸ்வரரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
கருவறையில் இறைவனோடு, அம்பாளும் உடனிருப்பது தனிச்சிறப்பாகும். இறைவனும் இறைவியும் சேர்ந்திருப்பதால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு ஆனந்த வாழ்வு கிடைக்கும்.
சாந்தநாயகி என்ற பெயரில் அம்மன் தெற்கு நோக்கி தனிச் சன்னிதி கொண்டுள்ளார். நின்ற கோலத்தில் அருள்புரியும் அம்மனை வணங்கும் பக்தர்களுக்கு எம பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன், செல்வ செழிப்பும் நிம்மதியும் வந்தடையும்.
அம்பாள் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் யானை மாலையுடன் உள்ள தோற்றம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் குடும்ப சகிதமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலையில் மட்டும் தான் குடும்ப சகிதமாக முருகப்பெருமான் உள்ளார். இந்த தலத்திலும் பழமுதிர்சோலையின் அம்சம் அப்படியே இருக்கிறது.
கருவறை மண்டப விதானத்தில் சூரியனை நாகம் விழுங்கும் காட்சி புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டபத்தை சுற்றிலும் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண் கொடுக்கும் காட்சி, மயில் சிவபெருமானுக்கு பூஜை செய்வது, நாகம் பூஜை செய்வது போன்றவை காட்சியளிக்கின்றன.
பஞ்ச வில்வம் என்று சொல்லப்படும் வில்வமரம், விளாமரம், நொச்சி, கிளுவை, மாவிலங்கம் ஆகிய மரங்கள் இத்தலத்தில் உள்ளன. மேலும் செண்பகம், பன்னீர், மந்தாரை, சென்றை மலர், செம்மரம், ருத்ராட்ச மரம், வெள்ளெருக்கு, அரசு, இலுப்பை, வேங்கை, மூங்கில், பாராய், அரளி, பாரிஜாதம், வன்னிமரம், வேம்பு, நாகலிங்கம், முல்லை, மகிழமரம் போன்றவை இங்கு தல விருட்சங்களாக இருக்கின்றன. இந்த கோவிலில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது.
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
 

 

Please rate this

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பாடல் விளக்கம் 5/5 (2)

மாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம்

சேரும் பொருளின் தன்மையைப் பெறுவது உயிர்களின் குணமாகும். ஆணவ மலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் உயிர்கள், அறிவின் மயக்கத்தால் இறைவனை மறந்து மாறிக் கொண்டே இருக்கும் சடப்பொருளின் மீது இலயித்துக் கிடக்கும். அவ்வாறு கிடக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, அவத்தை விட்டு சிவத்தைப் பிடிப்பதற்காக பாடும் பாடல் திருப்பள்ளியெழுச்சி.

இந்த பதிகத்தின் விளக்கங்களை அளிக்கிறார், சிவதீபன் அவர்கள்.

முதல் பாடல்

இரண்டாவது பாடல்

மூன்றாவது பாடல்

நான்காவது பாடல்

ஐந்தாவது பாடல்

ஆறாவது பாடல்

ஏழாவது பாடல்

எட்டாவது பாடல்

ஒன்பதாம் பாடல்

பத்தாம் பாடல்

அனைத்து பாடல்களையும் பார்க்க

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

திருமுறை என்னும் தேன் – துளி 1 4.75/5 (4)

திருமுறை என்னும் தேன் – துளி 1 

பதிவு ஆசிரியர்: சிவதீபன்

திருமூலர் திருமந்திரம்

பத்தாம் திருமுறை – தூல பஞ்சாக்கரம்

குறிப்பு: அப்பரடிகள் இறைவனை கனியினும் இனியன் என்பார், இங்கு திருமூலர் இறைவனது நாமத்தின் சுவை கனி போன்றது என்று பாடுகிறார்

இறை இன்பம் என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் முடியும் என்பதனை விளக்கும் மந்திரம் இது

பாடல்

ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும்
ஒன்று கண் டீர் உலகுக்குயிராவது
நன்றுகண்டீர் இனி நமச்சிவாயப்பழம்
தின்றுகண்டேற்கு இது தித்தித்தவாறே .

பொருள்

அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?

சற்குருநார் குரலில் கேட்டின்புறுங்கள்🙏🏻😊

ஒன்று கண்டீர்


தில்லை வாழ்அந்தணர்கள்

(சிவதீபன்)

எனக்கும் நம் “அன்பு” அன்பு தம்பிக்கும் நண்பர் சிவக்குமார் அவர்களுக்கும் *தில்லைகூத்த பிரான் மீது எத்தனை ஈடுபாடோ அதே போலவே பெருமானுக்கு ஸ்ரீகாரியம் செய்யும் “தில்லைவாழ் அந்தணர்கள்” மீதும் ஈடுபாடு உண்டு*


இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் காட்சி கடந்த திருவாதிரை விழாவில் தேரோட்டத்தின் போது வடக்கு வீதியில் நாங்கள் கண்ட காட்சி!!

*கூட்டத்தின் இடையில் சைக்கிளை தீட்சிதர் ஒருவர் செலுத்த, பின்னால் கேரியரில் அவரது இல்லத்தரசி அமர்ந்திருந்தார்* மற்றவர்களுக்கு எப்படியோ எங்களை பொறுத்த வரை அது *சாட்சாத் நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரியு